Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Feb 25, 2014

ஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating

ஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம்.
தனியார் வங்கிகள்...சாபம்.
அவைகள்,  ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘கோடாங்கிகள்’.


நேற்று  ‘ஸ்டேட் பேங்க்’ என்னை சிதறடித்தது.
நண்பனுக்கு அத்தியாவசிய தேவைக்காக 5000 ரூபாய் அனுப்ப முடியவில்லை.
புதுசு...புதுசா சட்டமும் திட்டமும் போட்டு வச்சுருக்கானுங்க!
அயோக்கியப்பயலுங்க!!


வட இந்திய தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை அனுப்ப ஸ்டேட் பேங்கைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
நாள் தோறும் படையெடுக்கிறார்கள்.
அந்த நெருக்கடியை, கொசுக்கடியாக எண்ணி திட்டம் போட்டு விட்டான் ஒரு உருப்படாத உலக்கை.
ஏசி ரூமில் உலகத்தை காணும் உருப்படாத பயல்களுக்கு,
மண் குடிசையின் நிலவரம் தெரியுமா!
கரெக்டாக கலவரம் மட்டும், ஏற்படுத்துவார்கள் இந்த கயவாளிகள்.
குடிசைக்கு, குண்டு வைப்பதில் ‘டாக்டரேட்’ செய்தவன்  ‘செட்டிநாட்டு செல்லாக்காசு’.


கோடி..கோடியா பணம் நாடு விட்டு நாடு போகுது.
அதுக்கு  ‘வெளக்கு பிடிக்குது’ ரிசர்வ் வங்கி.
ஏழை பாழை அனுப்பும் 500, 1000த்துக்கு சட்டம் போடுது...திட்டம் போடுது ரிசர்வ் வங்கி மங்குணிகள்.
மண்ணு மோகனும், செட்டிநாட்டு அரசனும் ஆட்சி செய்யும் போதுதான் ஏழைகளை ஏய்ச்சு பிழைக்கும் தொழிலை வளமாக செய்யும் வங்கிகள்.


ஏழையின் நலம் அறிந்த நல்லவர்கள் ஆட்சி செய்தால் இந்த நெருக்கடிக்கு அழகாக தீர்வு காண்பார்கள்.
ஒவ்வொரு ஏடிஎம்மிலும் பணம் போட, பணம் எடுக்க வகை செய்யும் மிஷினை வாங்கி வைப்பார்கள்.
பணம் வாங்கற மிஷினை தனியார் வங்கி [ ஐசிஐசிஐ] வச்சிருக்கான்.
அட்லீஸ்ட், அதையாவது உடனடியா வாங்கி வைங்களேண்டா... அப்ரண்டிசுகளா!


பத்தாயிரத்துக்கு கீழே பணம் அனுப்பப்போனால் தனியாரிடம் திருப்பி விடுகிறது ‘ஸ்டேட் பேங்க்’.
அவன் ஸ்டேட் பேங்கு பக்கத்திலேயே பொட்டிகடை மாதிரி தொறந்து வச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, சுளையா 100 ரூபாய் தண்டம் அழணுமாம்.
நூறு ரூபாய் ஒரு ஏழைக்கு மிகப்பெரிய தொகை.
அரசு வங்கியான ஸ்டேட் பேங்க், இவ்வளவு நாள் 25 ரூபாய் வாங்கிட்டு அனுப்பிகிட்டு...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!
அதை நீக்கிட்டு, தனியாரை விட்டு கொள்ளையடிக்க வச்ச,  ‘கொள்ளையில போவான்’ யாரு!

சரி...தனியார்கிட்ட அனுப்புறியே...
அந்த தனியார், பணத்தை ஆட்டையை போட்டுட்டா...
எங்க பணத்துக்கு யார் பொறுப்பு?

உதாரணமா...கார்த்தி சீதாம்பரம்னு ஒரு தனியார்,
பணம் வாங்கி அனுப்பற வேலையை செய்யுறான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, நூறு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் சேர்த்து வாங்கிட்டு, ஹோட்டல் மாதிரி ‘கம்ப்யூட்டர் பில்’ கொடுக்குறான்.
ஒரு நாள் பூரா, பல லட்சம் வசூல் பண்ணிட்டு,
மொத்த கலெக்‌ஷனையும் ஆட்டையை போட்டு,
கம்பி நீட்டிட்டான்னா...
ஏழைகளின் பணத்துக்கு யார் பொறுப்பு?

ஆன்லைன்லே அனுப்புறோம்னு சில பேர் இறுமாப்ல இருக்காங்க!
ஆன்லைன்ல அனுப்புனா, இலவசம்னு இண்ணைக்கு சொல்றான்.
நாளைக்கு, அதுக்கும் கட்டணம் போடுவான்.

இந்த சிதம்பரம்,  ‘சர்வீஸ் டேக்ஸ்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி  மண்டையில் மயிறு இருக்கறவன்...இல்லாதவன்னு...
எல்லோரையும் கட்ட வச்ச ஆளு.
ஏழைகளை எப்படி சுரண்டலாம்? என்பதை ஒரு நாளைக்கு நூறு முறை சிந்திக்கும் சிந்தனை சிற்பி சிதம்பரம்.
காரணம், வட்டி வாங்கி...வயிறு வளர்த்த பரம்பரை அவர்.

முன்னாடி, இது மாதிரி...ஏழைகள் வயித்திலடிக்கும் நடைமுறைக்கு, நடைபாதையில் நின்று போராடுவார்கள் கம்யூனிஸ்ட் கட்சி கடமை வீரர்கள்.
சிவப்பு கொடியை பிடிச்சுகிட்டு உசுரை கொடுத்து பத்து பேரு கத்துவாங்க!.
அந்த பாதையில் போற பத்தாயிரம் பேர் அதை பார்த்துருவாங்க!!.
பத்தாயிரம் பேர்கிட்ட இருந்து பல கோடி பேருக்கு செய்தி போய் சேர்ந்துரும்.

நம்ம நேரம்...அத்தகைய போராளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்.
நமக்கு வாய்ச்சது தா.பாண்டியன் வகையறாக்கள்.
அந்த தொகையறாகள், போயஸ் ரோடு தாரை நக்கி...
தாடை பெயர்ந்து கிடக்குதுகள்.

வாடி நிற்போர், வாட்டம் போக என்ன வழி?
ஏய்ச்சு பிழைப்பவனை, ஏறி மிதிக்க வந்து விட்டது தேர்தல்.
சீனாதானா போன்ற அம்பானி அடிவருடிகளை அறவே அழிப்போம்.
ஒழிப்போம்.
தெரு விளக்கில் படித்தவனை, நிதி மந்திரியாக்குவோம்.
ஏழைக்காக ஏணி ஏந்துபவனை, ஏற்றம் பெறச்செய்வோம்.
அது வரை வாடுவோம்...வதங்குவோம்...
அயோக்கியர்களை அழிக்க, அறம் பாடுவோம்.

May 19, 2013

பதிவுலகின் அஞ்சலி !


நண்பர்களே...
நேற்று சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று,
பதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
பதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.
பேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ்  போடும் பலர்,
நேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் நன்றி.

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலரை நான் நன்கு அறிவேன்.
பஹ்ரைனில் குண்டு வெடித்தால் பதறுவார்கள்.
பக்கத்து வீட்டில் இழவு விழுந்து கிடக்கும் போது, பாயசம் சாப்பிடுவார்கள்.
நேற்று ஒரு  ‘இலக்கிய வியாதி’ பதிவர், பதிவு போடும் போது...
அவர்,  ‘பாயாசம் சாப்பிடும் கோஷ்டியை’ சேர்ந்தவர் எனத்தெரிந்து கொண்டேன்.


‘முள்ளி வாய்க்காலில்’  விதைக்கப்பட்டவர்களுக்கு...
அஞ்சலியும்...வீர வணக்கமும் செலுத்துகிறேன்.

 ‘இளையராஜாவின்’ சாதனை பற்றி,
செழியன் எழுதிய தொடரின் நிறைவுப்பகுதி...
அடுத்தப்பதிவில் காண்க.  

May 17, 2013

நாளை ‘பட்டாபட்டிக்கு’ பதிவுலகினரின் அஞ்சலி.



நண்பர்களே...
நாளை  ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று, 
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள் 
எதுவும் வெளியிடாமல்... 
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என           
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Apr 27, 2012

அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...


எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர்.
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... என இழுத்திருக்கிறார்.

அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு..என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம்.
எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
 தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்...
திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை ...ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது.

Apr 12, 2012

சுனாமி வந்திருக்க வேண்டும்!


அடடா...ஏமாற்றி விட்டாயே! சுனாமி...

வந்திருக்க வேண்டும்...
கூடங்குளம் அணு உலையை சுருட்டியிருக்க வேண்டும்...
ஆபத்தில்லை என முழங்கிய எத்தர்களை விழுங்கியிருக்க வேண்டும்...

மின் வெட்டுக்கு காரணம் நீதான்...நீதான்...என மாற்றி மாற்றி சூ*******கள்
கு***யில் சுண்ணாம்பு பூசியிருக்க வேண்டும்...

அக்கா...அக்கா...அக்கா...
என்னடி... தங்கச்சி.... தங்கச்சி.... தங்கச்சி....
பசப்பும் பாச மலர்களை பொலி போட்டிருக்க வேண்டும்....

இதயம் இனித்த.....கண்கள் பனித்த...
 கோடீஸ்வர கோமான்களை வதைத்திருக்க வேண்டும்....
தீக்குளிப்பேன்...எனக் குதிக்கும் பராசக்தி பரந்தாமனை ...
எமனையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை ...
கொண்டு போயிருக்க வேண்டும்.

ஒண்ணுமே செய்ய... உன்னால் கூட, முடியாமல் போனால்...
ஷார்ட் கட்டில்... கோவை வந்து....
 உலகசினிமா ரசிகனையாவது கொண்டு போ...
வெந்ததை தின்று... விதி வந்து சாக அவனால் முடியாது.


Mar 21, 2012

கூடங்குளம் தீவிரவாதிகள்


கூடங்குளம் பாக்கிஸ்தானின் ஒரு பகுதி என நேயர்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரு சிறு தீவிர வாத கூட்டம் அறவழியில் மிக மோசமான முன்னுதாரணங்களோடு போராடி வருகிறது.
இதை எப்படி அனுமதிக்க முடியும்?.
முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தது போல் இந்த கூட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.
இந்தக்கலையில் வல்லவரான ராஜபக்‌ஷேவின் ஆலோசனையை அவசியம் பின்பற்ற வேண்டும் நமது அரசுகள்.

பிந்திரன்வாலேயின் தாயாதி வழி சொந்தக்காராரம் உதயகுமார் என சிபிஐ குறிப்பு சொல்கிறது.
இப்போது சாகும்வரை உண்ணாவிரதம் எனும் கொடிய பேரழிவு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவர் காந்தி எனும் படு பயங்கர தீவிரவாதி.
இதிலிருந்தே தெரிய வில்லையா! இந்தக்கும்பல் யாரை பின்பற்றுகிறது என்று...
இவர்களை அழித்தொழிக்கும் அறப்போராட்டத்திற்க்கு இந்தியர்களாகிய நாம் அணி திரள்வோம்.
அணு உலையை விட ஆபத்தானவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்கள்.
ஒரு நாளைக்கு 28 மணி நேரமும் தமிழ் நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் தரும் கூடங்குள அணு உலையை ஆதரிப்போம்....அணி திரள்வோம்....


Apr 22, 2011

படிக்கலாம் வாங்க-எதிர்ப்பும் எழுத்தும்

நான் பார்த்த உலகசினிமாக்களை உங்களிடம் அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.பொழுதுபோக்காக ஆரம்பித்த விசயம்...இன்று விடமுடியாத ‘பழக்கமாகி’ விட்டது. “இந்த கெட்ட பழக்கத்தை விட்டு ஒழிங்க”என இல்லத்தரசி அலறுகிறாள்.காது கேக்காதது போல் தப்பித்து வருகிறேன்.
சினிமா பார்ப்பது போல் எனக்கு மிகவும் பிடிப்பது புத்தகங்கள்.நான் படித்ததில் பிடித்த பகுதியை உங்களிடம் பகிர ஆசை. “.நான் இதெல்லாம் படிக்கிற ஆளு”என உங்களிடம் பீத்திக்கொள்வதுதான் முதன்மையான நோக்கம்.முதல் நூலாக உங்களிடம் பகிர்வது

எதிர்ப்பும் எழுத்தும் துணைத்தளபதி மார்க்கோஸ்

[விடியல் வெளியீடு]

மெக்சிகோவில் சியாபாஸ் என்ற பகுதியில் மக்களுக்கான போராட்டத்தில் எழுந்த எழுத்துக்கள் இவை.இதன் வீர்யம் குறையாமல் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியவர் எஸ்.பாலச்சந்திரன்.புத்தகம் வடிவில் பைபிளுக்கு அண்ணன்.குமுதம்,விகடன் மட்டும் படித்தவர்களுக்கு இந்த தமிழ் சிரமம்தான்.உயிர்மை,காலச்சுவடு,தமிழினி பத்து இதழ்களாவது படித்துவிட்டு வாருங்கள்.அப்போதுதான் கொஞ்சமாவது புரியும்.புதிய கலாச்சாரம் படிப்பவர்களுக்கு இந்நூல் லட்டு.பதிவுலகில் ‘வினவு’ வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு திருநெல்வேலி அல்வா போல் உள்ளே இறங்கும். மக்களுக்கு எழுச்சியூட்டும் பல குட்டிக்கதைகள் இதில் உள்ளன.அதில் எனக்கு பிடித்தது....
சுண்டெலியும் பூனைக்குட்டியும்
முன்பொரு காலத்தில் ஒரு சுண்டெலி இருந்தது.அது மிகவும் பசியோடிருந்தது.ஒரு சிறிய வீட்டின் சிறிய சமையலறையில் இருந்த,பாலாடைக்கட்டியின் ஒரு சிறிய துண்டை சாப்பிட விரும்பியது.உறுதியான இந்த முடிவோடு இந்த சுண்டெலி,பாலாடைக்கட்டியின் சிறிய துண்டை எடுப்பதற்க்காகச் சிறிய சமையலறைக்குச் சென்றது.ஆனால், அதன் வழியில் ஒரு பூனைக்குட்டி குறுக்கிட்டது. மிகவும் பயந்து போன சுண்டெலி,ஓடிவிட்டது.அதனால் சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டி எடுக்கமுடியவில்லை. அப்போது, சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டியை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

"எனக்குத்தெரியும்.ஒரு சிறிய தட்டில் பாலை ஊற்றி வைத்து விடுவேன். பூனைக்குட்டி பாலைக் குடிக்கப்போகிறது. ஏனென்றால்,பூனைக்குட்டிகள் பாலை மிகவும் விரும்புகின்றன. அப்போது பூனைக்குட்டி பாலைக்குடித்து கொண்டிருக்கும்போது, அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குள் சென்று, சிறிய பாலாடைக்கட்டியை எடுத்துச் சாப்பிடப்போகிறேன். இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது பாலை தேடிச்சென்றது.ஆனால்,பால் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் சுண்டெலி செல்ல விரும்பியபோது, பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் பாலை எடுக்க முடியவில்லை.அப்போது, சிறிய சமையலறையிலிருந்து பாலை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

“எனக்குத்தெரியும்.நான் ஒரு சிறிய மீனைத் தூரத்தில் வீசியெறியப்போகிறேன்.அந்தச்சிறிய மீனைச் சாப்பிடுவதற்க்காகப் பூனைக்குட்டி ஓடிவிடப்போகிறது. அப்போது, பூனைக்குட்டி சிறிய மீனைச் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது,அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குச்சென்று,சிறிய பாலாடைக்கட்டியை எடுத்து சாப்பிடப்போகிறேன்.இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது சிறிய மீனைத்தேடிச் சென்றது.ஆனால் சிறிய மீன் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் செல்வதற்க்குச் சுண்டெலி விரும்பியபோது பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் சிறிய மீனை எடுக்க முடியவில்லை.

அந்தச் சுண்டெலி தனக்கு தேவையான சிறிய பாலாடைக்கட்டி, பால், சிறிய மீன் ஆகிய அனைத்தும் சிறிய சமையலறையில்தான் இருக்கின்றன என்பதையும்,பூனை தன்னை விடாது என்பதால் தன்னால் சமையலறைக்குள் செல்லமுடியாது என்பதையும் அப்போதுதான் உணர்ந்தது.

“போதும்! போதும்!”என்று சொல்லிவிட்டு,இயந்திரத்துப்பாக்கியை எடுத்து பூனைக்குட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சிறிய சமையலறைக்குள் சென்று பார்த்தது.சிறிய மீன், பால், சிறிய பாலாடைக்கட்டி ஆகிய அனைத்தும் கெட்டுப்போயிருந்ததையும்,அவற்றை சாப்பிட முடியாது என்பதையும் கண்டது.எனவே பூனைக்குட்டி கிடந்த இடத்துக்கு திரும்ப வந்தது.அந்த பூனைக்குட்டியை துண்டுதுண்டாக வெட்டியது. அதை வறுவல் செய்தது. பிறகு, தனது நண்பர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தது.அவர்கள் அனைவரும்குட்டிப்பூனை வறுவலைச்சாப்பிட்டார்கள். பாடினார்கள்.ஆடினார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். முன்பொரு காலத்திலே....

கதையின் முடிவும் இக்கடிதத்தின் முடிவும் இதுதான்.நாடுகளுக்கிடையே உள்ள பிரிவுகள் “கள்ளக்கடத்தல்” என்னும் குற்றத்தை சித்தரிக்கவும், போருக்கு நியாயம் கற்பிக்கவும் மட்டுமே பயன்படும் என்று உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாடுகளுக்கிடையேயான எல்லைகளைக் காட்டிலும் மிகப்பெரியது என்று குறைந்தபட்சம் இரண்டையாவது குறிப்பிடமுடியும்:நவீனத்துவம் என்னும் மாறுவேடம் தரித்த குற்றம் இவற்றில் ஒன்று: இது வறுமையை உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது. இரண்டாவது குற்றம் வெட்க உணர்வு. வெட்கத்தை உணர்வது என்பது, நடனமாடும்போது ஒருவருக்கு ஏற்படும் தடுமாற்றத்தின் போது உண்டாவதுதானே தவிர, நாம் கண்ணாடியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதல்ல. முதலாவது விசயத்திற்க்கு [வறுமைக்கு] முடிவு கட்டுவதற்க்கும், இரண்டாவது விசயத்தை [வெட்க உணர்வை] செழிக்கச்செய்வதற்க்கும், சிறந்ததொரு வாழ்க்கைக்காக நாம் போராடுவது ஒன்றுதான் வழி. மற்ற அனைத்தும் இயல்பாக நடைபெறும். நூலகங்களையும் அருங்காட்சியகங்களையும் நிறைக்கக்கூடியவையாக அவை இருக்கும்.

உலகத்தை வென்றால் மட்டும் போதாது, அதைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.

படுக்கை என்பது காதலுக்கான ஒரு நொண்டிசாக்கு மட்டும்தான் என்பதையும், மெட்டு என்பது நடனத்திற்க்கான ஒரு ஒப்பனை மட்டும்தான் என்பதையும், தேசியம் என்பது போராட்டத்திற்கான ஒரு தற்செயலான பின்னணி மட்டும்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தென்கிழக்கு மெக்ஸிக மலைகளிலிருந்து,
லகாண்டன் காடுகளின் டான் டுரிட்டோ.
இது போன்ற குட்டிக்கதைகள் பொதிந்து வந்த கடிதங்கள் இந்நூலில் ஏராளம்...ஏராளம்.
இந்தக்கடிதம் உங்களுக்கு ஏற்படுத்திய அனுபவத்தை எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். நன்றி.