Apr 12, 2012

சுனாமி வந்திருக்க வேண்டும்!


அடடா...ஏமாற்றி விட்டாயே! சுனாமி...

வந்திருக்க வேண்டும்...
கூடங்குளம் அணு உலையை சுருட்டியிருக்க வேண்டும்...
ஆபத்தில்லை என முழங்கிய எத்தர்களை விழுங்கியிருக்க வேண்டும்...

மின் வெட்டுக்கு காரணம் நீதான்...நீதான்...என மாற்றி மாற்றி சூ*******கள்
கு***யில் சுண்ணாம்பு பூசியிருக்க வேண்டும்...

அக்கா...அக்கா...அக்கா...
என்னடி... தங்கச்சி.... தங்கச்சி.... தங்கச்சி....
பசப்பும் பாச மலர்களை பொலி போட்டிருக்க வேண்டும்....

இதயம் இனித்த.....கண்கள் பனித்த...
 கோடீஸ்வர கோமான்களை வதைத்திருக்க வேண்டும்....
தீக்குளிப்பேன்...எனக் குதிக்கும் பராசக்தி பரந்தாமனை ...
எமனையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை ...
கொண்டு போயிருக்க வேண்டும்.

ஒண்ணுமே செய்ய... உன்னால் கூட, முடியாமல் போனால்...
ஷார்ட் கட்டில்... கோவை வந்து....
 உலகசினிமா ரசிகனையாவது கொண்டு போ...
வெந்ததை தின்று... விதி வந்து சாக அவனால் முடியாது.


16 comments:

 1. என்ன சார்! இவ்வளவு உணர்ச்சிவசப் பட்டுட்டீங்க..

  (பீச்சோரமா 'சுனாமி வந்தா எப்படியிருக்கும்'னு எட்டிப்பார்த்துக்கிட்டிருந்த என்னை போகச் சொல்லித் துரத்தி விட்டதற்காகவாவது சுனாமி வந்திருக்கவேண்டும்!) அப்படீன்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன்..

  இவனுங்க அபாய அறிக்கை விட்டாலே.. சுனாமி கண்டிப்பா வராது.. பயத்துல மக்களுக்கு ________ தான் வரும்!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!
   பவர்கட்டில் டிவி பார்க்க முடியவில்லை.
   சென்னைக்கு செல்போன் செல்லவில்லை.
   கடற்கரையோரம் மிக அருகே குடியிருக்கும் நண்பர்களை நினைத்து தவித்துப்போனேன்.
   பகல் 2 மணியிலிருந்து சென்னை தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது.
   பவர்கட்டினால் வந்த தவிப்பு... ஏற்ப்படுத்திய கோபம்தான் இந்தப்பதிவு.

   Delete
 2. ithu ungalukkae ovara theriyalae?

  ReplyDelete
  Replies
  1. எது ஒவர்?உடன்குடி அனல் மின் நிலையம் கட்டுமானப்பணி துவக்கப்பட்டு விட்டது அறிக்கை விட்டு விட்டு...
   அஸ்திவாரம் கூடத்தோண்டாத அயோக்கிய சிகாமணிகளை கண்டமேனிக்கு திட்டாததுதான் ஒவர்.

   Delete
 3. ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல

  பொய்யாக பழகும் நண்பர்களை சுருட்டியிருக்க வேண்டும்
  காதல் என்ற பெயரில் ஆண்களை அவதிப்படுத்தும் பெண்களை கிழித்திருக்க வேண்டும்
  நல்லதை மேடை போட்டு பேசினால் மட்டுமே நம்பும் சிலரை உரித்திருக்க வேண்டும்
  தருகிறேன் என வாங்கிகொண்டு சென்று இன்னும் பயன்படுத்தாமல் இருப்பவர்களை இழுத்திருக்க வேண்டும்
  நேரமில்லை என்பவர்களை கவனித்திருக்க வேண்டும்
  கடைசி நேரத்தில் காலை வாருபவர்களை கண்டித்திருக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இரவில் 8-9,10-11,12-1,2-3,4-5 என தொடர்ந்து...
   இந்த நேரங்களில் பவர்கட்...
   எப்படி தூங்க முடியும்?
   [பகலில் 9-12,3-6 பவர்கட்]

   இரண்டு நாள் தொடர்ந்து தூங்கவில்லையென்றால்... மனநிலை பாதிக்கப்படும்.
   பாதிக்கப்பட்டவன்... கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிப்பான்.
   அப்புறம் கல் தூக்கி அடிப்பான்.

   நான் திட்டற ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன்.

   Delete
 4. அருமை நண்பரே..இதே போலொரு எண்ணம் எனக்கும் இருக்கிறது..கேடு கெட்டவர்களை இயற்கைகூட தண்டிக்காமல் விட்டு விடுகிறதே..!

  ReplyDelete
  Replies
  1. என் நண்பர் தீவிர கிருத்துவர்.
   அவர் அடிக்கடி...
   “காமராஜர் மாதிரி சாவு கருணாநிதிக்கு வந்தால்...
   நான் சர்ச்சுக்கு போவதையே நிறுத்தி விடுவேன்” என்பார்.

   அவர் தொடர்ந்து... சர்ச்சுக்கு போவது கருணாநிதி கையில் உள்ளது.

   Delete
 5. ஏனிந்த வெறி? சோகம்? சார்?

  ReplyDelete
  Replies
  1. 1977 முதல் கருணாநிதிக்குத்தான் ஒட்டு போட்டு வந்தேன்.
   முதன் முறையாக இந்த தேர்தலில் இரட்டை இலைக்கு போட்டேன்.

   நெறைய எதிர்பார்த்து...ஒன்றுமே நடக்காமல் வந்த கோபம்.

   Delete
 6. எங்கோ நடக்கும் அநியாயத்தைக் கண்டு உன் ரத்தம் கொதித்தால் நீயும் எனது தோழனே. யாரோ அல்ல சே சொன்னது.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாட்டில் சேகுவாரா,பிடல்,லெனின்,ஹோசிமின்,ஸ்டாலின்...
   அனைத்து சக்திகளும்... ஒன்று சேர்ந்த... மனிதன் வரவேண்டும்.

   இங்கே எதிரிகள் அவ்வளவு பலம் வாய்ந்தவர்கள்.

   Delete
 7. <<<<<< கூடங்குளம் அணு உலையை சுருட்டியிருக்க வேண்டும்...
  ஆபத்தில்லை என முழங்கிய எத்தர்களை விழுங்கியிருக்க வேண்டும்...
  மின் வெட்டுக்கு காரணம் நீதான்...நீதான்...என மாற்றி மாற்றி சூ*******கள்
  கு***யில் சுண்ணாம்பு பூசியிருக்க வேண்டும்...>>>>>

  NON-SENSE

  ReplyDelete
  Replies
  1. நான்... சென்ஸ்ஸோடுதான் எழுதி உள்ளேன்.

   முகமூடியை கழட்டி விட்டு முகவரியோடு வா...

   ஒண்-டூ-ஒண் டிபேட் வைப்போம்.
   மோதி பார்ப்போம்.

   Delete
 8. //இதயம் இனித்த.....கண்கள் பனித்த...
  கோடீஸ்வர கோமான்களை வதைத்திருக்க வேண்டும்....
  தீக்குளிப்பேன்...எனக் குதிக்கும் பராசக்தி பரந்தாமனை ...
  எமனையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை ...
  கொண்டு போயிருக்க வேண்டும்.//

  ஏன் பாஸ். அப்பறம் நமக்கு எது டைம் pass. இருக்கட்டும்..:))

  ReplyDelete
  Replies
  1. அட ஆமா! 'மெட்ராஸ் பவனுக்கு'
   காமெடி சப்ளை செய்யும் மொத்த குத்தகைதாரர் அவ்ர் அல்லவா...
   இந்தக்கும்பல் இல்லாத... மெட்ராஸ் பவன் களை இழந்து விடுமே..என்ன செய்யலாம்?

   விடுங்க பாஸ்...விஜயகாந்த இருக்காருல்ல...!

   Delete

Note: Only a member of this blog may post a comment.