Apr 10, 2012

CHUNGKING EXPRESS-ஜாலியான உலகசினிமா


'சங்கிங் எக்ஸ்பிரஸ்' கோணங்கள் பிலிம் சொசைட்டியில்...
'யூபிஎஸ்' புண்ணியத்தில் தடையின்றி திரையிடப்பட்டது.
படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு, புழுக்கத்தையும்...கொசுக்கடியையும் ...
தமிழக அரசு இலவச வசதியாக.... ஏற்ப்பாடு செய்திருந்தது.


இப்படத்தை இயக்கியது வோங்கார் வாய்[Wong Kar Wai].
இவரது மாஸ்டர் பீஸ் ‘இன் தி மூட் பார் லவ்’[In The Mood For Love]
 பார்த்து விட்டீர்களா?.
இன்னும் பார்க்கவில்லையென்றால்...உலகின் தலை சிறந்த காதல் காவியத்தை பார்க்காத பாவம் வந்து சேரும்.

ஆரம்பத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணி புரிந்து புகழையும்...பணத்தையும் சம்பாதித்தவர்.
ஆனால் தன் படங்களுக்கு திரைக்கதை எழுதாமல் சூட்டிங் புறப்பட்டு விடுவார்.
தனக்கு தோன்றுவதை எடுத்து தள்ளுவார்.
இந்த ஸ்டைலில் நமது கோலிவுட் இயக்குனர்களும் படமெடுத்து பிலிம் நெகட்டிவை தின்பார்கள்.
இவர்களுக்கும் வோங்கார் வாய்க்கும் என்ன வித்தியாசம்?.
எடிட்டிங் முடிந்து... இவரது படைப்பு... படமாக வரும்.
கோலிவுட்டில் பப்படமாக வரும்.....பிச்சைக்காரன் வாந்தி போல் இருக்கும்.
எனக்கு தெரிந்து கதை,திரைக்கதை பக்காவாக ரெடி செய்து ,பிலிம் நெகட்டிவை சிக்கனமாக செலவு செய்பவர்கள் மணிரத்னமும்,கமலும்தான்.

படத்தில் இரண்டு கதை இருக்கிறது.
ஒன்று முடிந்த பின்தான்... இரண்டாவது தொடர்கிறது.
படத்தின் கதாநாயகன் போலிஸ்காரன்.
அவனது மூன்று காதல்கள்தான் படமே...
படம் தொடக்கத்திலேயே முதல் காதல் பணால்.
இரண்டாவது காதல் முற்றும் இடத்தில்தான்.... இரண்டாவது கதை ஆரம்பம்.
மூன்றாவது காதலியாக வருபவள்தான்...படத்தின் நாயகி.

ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் இவள்....பால் குடிக்காத பூனை போல் தோற்றமளிக்கும் கவர்ச்சி கேடி...சுருக்கமாக ஜெனிலியா.
 போலிஸ்காரனது முதலிரண்டு காதலிகளுமே...
 இவனால் காதலிக்கப்பட்டவர்கள்.
மூன்றாவது காதலி....இவனை காதலித்தவள்.
இவனை மட்டுமே காதலித்தவள்.

இவளது பரிசுத்தமான காதலை புரிந்து கொண்டு, இவளை ஏற்க வருகையில்  நாட்டை விட்டே போய் விடுகிறாள்.
ஏன் போனாள்?
இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா?
இக்கேள்விக்கு விடை சொல்வதில்லை என வோங்கார்வாயிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.

'சங்கிங்' என்ற பகுதி ஹாங்காங்கில் உள்ள காங்கிரீட் காடு.
அங்கு சீனர்கள்,வெள்ளையர்கள்,கருப்பினத்தவர்கள்,இந்தியர்கள் எல்லாம் கலந்து கட்டி வாழும் பகுதி.
அன்பு-வெறுப்பு,
நம்பிக்கை-.துரோகம்,
நேர்மை-.கயமை
சரிவிகிதத்தில் இல்லாத பகுதி.
கடவுளை விட... சாத்தான் அல்லது ராஜபக்‌ஷே பவர்புல்லாக ஆட்சி செய்யுமிடம்.
வோங்கார்வாய்க்கு பேவரைட் சூட்டிங் ஸ்பாட்.
குறுகிய இடத்தில் வசிக்கும் விசாலமான மனங்களை...
 தனது வித்தியாசமான காமிரா கோண்ங்களில் படம் பிடித்து...
 நம்மை அந்த இடத்தில் வாடகை இல்லாமல் குடியமர்த்தி விடுகிறார்.
ஹாங்காங் போனால் எனது முதல் விசிட் சங்கிங்தான்.

உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.
இரண்டாவது காதலியை தேடி....கார்த்திகை மாதத்து நாயாவது நிச்சயம்.

22 comments:

 1. மீ த பஸ்ட்

  ///உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
  தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
  இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.///

  இப்போதே நண்பன் ஒருவனுக்கு forward செய்து விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. காதல் என்பதே...ஹார்மோன்களின் விளையாட்டு... என்பார் எனது குருநாதர் சுஜாதா.
   முதல் காதல் தோற்றால்...
   ஸ்வீட் எடு... கொண்டாடு...
   அடுத்த காதலுக்கு அடி போடு.

   நண்பருக்கு அடுத்த காதலி உடனே சித்திக்க வாழ்த்துக்கள்.

   Delete
 2. மூன்று காதலிகளா?

  இது தீராத விளையாட்டு பிள்ளைய சுட்டுடீங்களா?அவ்வ்வ்வ்வ்........

  ReplyDelete
  Replies
  1. தீராத விளையாட்டுப்பிள்ளை,சேரன் நடித்த ராமன் தேடிய சீதை ..சுட்டு இப்படத்தை எடுத்துள்ளார் வோங்கார் வாய்.
   ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
   எப்பூடி.

   Delete
 3. சிறப்பான விமர்சனம்..படத்தை இப்போதே டவுன்லோடு போட போகிறேன்.அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. தம்பி குமரனின் பாராட்டு சுறுக்...நறுக்....
  நன்றி.

  ReplyDelete
 5. "மூன்று ஹீரோயின்"னு சொல்லிட்டு அந்த ஹாங்காங் ஜெனீலியாவை மட்டுமே காட்டியிருக்கிறீர்களே..
  ஜாலியாக இருக்குமானால் நிச்சயம் பார்ப்பேன்!

  ReplyDelete
  Replies
  1. நான் பேரழகி படத்தை மட்டும்தான் தேர்ந்தெடுத்து போடுவேன்.
   முதலிரண்டு காதலிகள் வெறும் அழகிகள்.
   'ஹாங்காங் ஜெனிலியா' அழகே இல்லாதவள்.
   மார்பு கூட... மருந்துக்கும் இல்லாத பிளேகிரவுண்ட்.
   ஆனால் அவளது பரிசுத்த அன்பினால்...
   அந்த முகத்தில் விவரிக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கிறது.
   அதனால் அவள்...எனக்கு மட்டுமல்ல...
   படம் பார்க்கும் யாவருக்கும் அவள்தான் பேரழகியாக தெரிவாள்.

   Delete
 6. நன்றி பாஸ்! டவுன் லோட் போட்டுட்டேன்! அவசியம் நண்பன் ஒருவனுக்கு தேவை! பார்த்துவிட்டு முடிந்தால் எனது தளத்திலும் படம் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே!
   கட்டாயம்...உடனே படம் பார்த்து பதிவு போடுங்கள்.

   காதலில் தோற்பது முடிவுரை அல்ல....
   அடுத்த காதலுக்கு முன்னுரை.
   இதுவே வோங்கார் வாயின் பரப்புரை.

   Delete
 7. in the mood for love patri engeyo padithirukkiren. irandu padathaiyum paarthu vittu solkiren. your review is good

  ReplyDelete
  Replies
  1. 'இன் த மூட் பாஃர் லவ்' படத்துக்கு செழியன் ஆனந்தவிகடனில் அற்புத கட்டுரை படைத்திருந்தார்.
   அதை படித்திருப்பீர்கள்.

   பாராட்டுக்கு நன்றி நண்பரே!

   Delete
 8. recommend more fantastic movies. especially asian.

  ReplyDelete
  Replies
  1. ஆசியப்படங்களை படங்களை இனி அடிக்கடி எழுதுகிறேன்.
   ஊக்குவித்தமைக்கு நன்றி நண்பரே!

   Delete
 9. இன்னும் லவ் பண்ணவே ஆரம்பிக்கல. ஆனா லவ் சிக் பிடித்து சிக்கல்ல திரியுறேன். சீனக் கொரிய திரைப்படங்கள் மீது பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லை. ஆனால் இது கொஞ்சம் யுஸ் ஆகும் போலத் தெரியுது. எதிர்காலத்தில் பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இந்த நோய்க்கு உடனடி மாமருந்து....
   சங்கிங் எக்ஸ்பிரஸ்தான்.

   Delete
 10. தமிழ் சினிமாதான் ரோஜா செடி ஒருவட்டிதான் பூக்கும் அப்படி இப்படின்னு சொல்லி நம்மள கண்பூஸ் பண்றாங்க. உண்மையில் காதல் எத்தனை வாட்டி வந்தா என்ன நீ சந்தோசமா இறுகிய அது ரொம்ப முக்கியம். படம் பார்க்கலை இனிதான் பார்க்கணும் பகிருவுக்கு நன்றி

  ReplyDelete
 11. தமிழ் சினிமா காதலை புனிதப்படுத்தியே காசு பார்த்து வருகிறது.
  யதார்த்தங்களை அது ஏறெடுத்தும் பார்க்காது.
  காதலுக்கான தற்கொலைகளை ஊக்கப்படுத்துவதில் முதலிடம் தமிழ் சினிமாவுக்கே.
  வருகைக்கும்...கருத்துக்கும் ந்ன்றி நண்பரே!

  ReplyDelete
 12. Wong kar wai எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர்களுள் ஒருவர்.., இவரின் மூன்று படங்கள் பார்த்துவிட்டேன் இதுவும் சேர்த்து இவரின் படங்கள் எல்லாமே கேமராவால் எழுதப்படும் கவிதை..,

  ReplyDelete
  Replies
  1. வோங்கார் வாய் படம்...நான் இரண்டுதான் பார்த்துள்ளேன்.
   நீங்கள் என்னை விட அட்வான்சாக இருக்கிறீர்கள்.
   2046 பார்த்து விட்டு உங்களை சமன் செய்கிறேன். வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
  2. நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.

   Delete
 13. உங்கள் நண்பர் காதலில் தோல்வியுற்று....
  தேவதாஸ் இடத்தை பிடிக்க முயற்ச்சித்து கொண்டிருந்தால்....
  இப்படத்தை அவரிடம் காட்டுங்கள்.
  இரண்டாவது காதலியை தேடி....கார்த்திகை மாதத்து நாயாவது நிச்சயம்.//

  ரொம்பவும் ரசித்தேன்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.