Sep 29, 2010

The chorus-டீச்சருக்கு மரியாதை


கோரஸ் ஜாலியான 10000வாலா.....

நான் மிகவும் ரசித்த ப்ரெஞ்ச் படம்..இயக்கம் Christophe Barrtier.

இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி....

நீங்கள் படித்த பள்ளிக்கு கூட்டிச்செல்லும்..உங்கள் ஆசிரியரை ஞாபகப்படுத்தும்..

இப்படத்தின் வசியத்தன்மைக்கு...வெற்றிக்கு இதுதான் காரணம்...

நான் கல்விஅமைச்சரானால் இப்படத்தை எல்லா டீச்சர்களையும் பார்க்க ஆணையிடுவேன்..

குட் டீச்சர்..பேட் டீச்சர் இரண்டுக்குமே உதாரணம் இப்படத்தில் இருக்கிறது.

கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு ஸ்கூல்.அதற்க்கு நல்லாசிரியராக வருகிறார் நம்ம கதாநாயகன்.இம்மென்றால் அடி...ஏனென்றால் உதை கொடுக்கும் தலைமை ஆசிரியர்தான் வில்லன்...அத்தனை அராத்து மாணவர்களையும் இசையால் வசமாக்குகிறார் நம் நாயகன்..தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி மட்டும் பரிசாகப்பெறும் நாயகன் ஒரு மாணவனுக்கு வெற்றி விருந்தளிக்கிறார்...

இப்படம் என் ஆசிரியரை ஞாபகப்படுத்தி உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்க வைத்தது.என் வகுப்பில் என்னோடு ஆறு பேர் ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள்..35 மார்க் எடுத்தால்தான் பாஸென்ற கொடுமையான சட்டம் நிலவி வந்த அந்தக்கால SSLC நான்..15 நாள் எங்களை அவரது வீட்டில் சிறை வைத்து சாப்பாடும் போட்டு பாடம் எடுத்து பாஸாக்கினார் கடமை கண்ணியம் மிக்க எனது ஆசான் திரு.ராஜ்குமார்.

வருடாவருடம் மீசை,கிருதா கெட்டப் சேஞ்ச் செய்வார் கமல் மாதிரி..

அப்பாடா...கமலை கொண்டு வந்துவிட்டேன்..கமலைப்பற்றி பேசுவது... நினைப்பது... சுகம்..

சென்னையில் நானும் விக்ரம் தர்மாவும் பக்கத்துவீடு..மருதநாயகம் பற்றி பேசும் போது சொன்னார் இந்தச்செய்தி.....மலை உச்சியில் இருந்து குதித்து தண்ணீருக்குள் மறைந்து போவதாகக்காட்சி..லொக்கேசன் ஒகனேக்கல்..வெள்ளம் பெருக்கெடுத்துக்கொட்டும் அருவி...ஒயர் கட்டி டம்மி வைத்து ஒத்திகை பார்த்தால்..... ஒரே ஒரு இடத்தில்.....மட்டும்...... சரியாக குதித்தால்..... மேலே இருந்து விழுகின்ற வேகத்தை..... உள் வாங்குகின்ற ஆழம் இருந்தது .மற்ற இடத்தில் விழுந்தால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் பாறையில் மோதி மரணம் நிச்சயம்.டூப்பும் ரெடி..12 காமிராவும் ரெடி..டேக்கிற்க்கு ரெடியாகும் போது.... கமல், நான் ரெடி ...டூப் வேண்டாம்..... என்றார்..மொத்த யூனிட்டும் நடுங்கிவிட்டது...யார் சொல்லியும் கேட்காமல் குதித்தேவிட்டார்..அது மட்டுமல்ல...விழும் வேகத்தில் சற்று ஸ்விங் செய்து ஒரு பாறையில் காலை ஊன்றி மிதித்து....கரணம் போட்டு... சரியாக பள்ளத்தில் குதித்தார்..இன்றும் நம்மிடையே இருக்கிறார்..ஜாக்கிச்சான் கூட இந்த ஸ்டண்ட் செய்தது இல்லை..அனைத்து ஹாலிவுட் படத்துக்கும் இந்த ஒரு காட்சியில் சவால் விட்டிருந்தார்..எடிட் செய்து பார்த்தால் அத்தனை அழகு அந்தக்காட்சி.இந்தப்படம் வெளிவரவில்லையே என்று கலங்கினார் விக்ரம் தர்மா..

1991ம்வருடம்..... ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்.

20 comments:

 1. ஆஹா... இந்தப் படத்தின் கதையைப் பார்த்தால், இது ஹிந்தி மொஹப்பதேய்ன் படக்கதை போலவே இருக்கிறதே . . . இதையும் சுட்டுட்டாய்ங்களா?? :-)

  கமல் பற்றிய செய்தி நன்றாக இருந்தது.

  ReplyDelete
 2. I was recently recommended to read your blog posts. I very very much appreciate it. It has been great source of information. In fact, I would like to contact you for a little chat. Can you please pass your email address.

  Thanks
  Karthick

  ReplyDelete
 3. மிக நல்ல படத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் நன்றி!

  ReplyDelete
 4. மொஹபதேன் இது இல்லை.இதை விட்டு வைத்திருப்பற்க்கு காரணம் இதில் காதல் இல்லை.ஆனால் உலகிலேயே மிக மிக குட்டியான ஒரு ஹைக்கூ காதல் இருக்கிறது .கமல் பற்றிய என்னுடைய பதிவுக்கு நீங்கள்தான் காரணம்.நன்றி ராஜேஸ்...

  ReplyDelete
 5. கார்திக்...இதோ... என்னுடைய மெயில் அட்ரஸ்
  sppbhaskaran@yahoo.co.in

  ReplyDelete
 6. நண்பரே, விமர்சனம் வழக்கம் போல் அருமை. அதைவிட அருமை கமலைப் பற்றிய செய்தி. அவர் என்ன செய்தாலும், அதைப்பற்றி யார் எது சொன்னாலும் தமிழ் சினிமாவிற்கு கமல் நிச்சயம் தேவை. (எனது லிஸ்ட் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கூடிய விரையில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் :))

  ReplyDelete
 7. //ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்//
  சார்..இதுவரைக்கும் ஒண்ணும் கிளம்பலையா ???????...மக்களே...எல்லாரும் எங்க இருக்கீங்க...

  ReplyDelete
 8. பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..கொழந்தாய்...நல்லாத்தானே போய்கிட்டிருக்கு..அப்புறம்..ரஜினியின் டெடிகேசனுக்கு சூப்பர் மேட்டர் இருக்கு....

  ReplyDelete
 9. தலைவரே, படம் பார்த்திருக்கிறேன்,சிறந்த படம்,எனக்கு பள்ளிக்கூடம் படம் பார்க்கையிலும் இதே உணர்வு வந்தது,தங்கர் அபாரமாக மலரும் நினைவுகளை சிலுலாய்டில் பதிவதில் கைதேர்ந்தவர்.

  கமல் பற்றிய செய்தி நன்றாகவே இருந்தது.
  அதன் பின் அங்கே யூனிட் ஆசாமிகள் வாங்கிய வசவுகளையும் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்:))மருதநாயகம் கெட்டப் மிஷன் ராபர்ட் டிநீரோவின் பிரதி,நீங்கள் சொன்னவற்றை விட ராபர்ட் படத்தில் அதகளம் செய்திருப்பார்.

  ReplyDelete
 10. நண்பர் கீதப்பிரியனுக்கு...இது போன்ற ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் ஹாலிவுட் நடிகர்கள் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.கமல் இது போன்று ரிஸ்க் எடுத்து நெறைய காயங்கள் வாங்கி இருக்கிறார்.உடம்பில் நெறைய இடத்தில் ஸ்டீல் பிளேட் வைக்கப்பட்டுள்ளது

  ReplyDelete
 11. முதலில் நீங்கள் எழுதிய படங்களை அனுப்பச்சொல்லிக் கேட்பேன். நீங்களோ எழுதப்போகும் படத்தையும் அனுப்பிவிடுகிறீர்கள். நன்றி!

  //அந்தக்கால SSLC நான்//

  @கொழந்த, கருந்தேள்,

  70களில் வந்த பாப் இசை பற்றியும், எமர்ஜென்சி பற்றியும் தெரிந்துகொள்ள சரியான நபர்?!

  ReplyDelete
 12. தலைவரே
  நண்பர் கருந்தேள் சொன்னார்,நீங்க கமலின் உச்ச ரசிகர் என்று இனி கமலைப்பற்றி உங்களிடம் எதுவும் சொல்லமாட்டேன்.

  ReplyDelete
 13. நன்றி மோகன்..எமெர்ஜென்சி பற்றி படம் பண்ணும் அளவுக்கு அறிவேன்..ம்யூசிக் என்றால் எம்.எஸ்.வி,இளையராஜா மட்டும் கேட்டு வளர்ந்தவன்.70 களில் நான் கேட்ட இங்கிலீசு பாப் மியூசிக் பாபி,யாதோங்கி பாராத்,சோலே

  ReplyDelete
 14. கீதப்ரியன் நான் கமலின் ரசிகன் மட்டுமே..வெறியன் அல்ல..அவும் 1990 வரை மட்டுமே...ஹேராம்,ஆளவந்தான்,விருமாண்டி..... நடிகனாக என்னை வெறுப்பேற்றிய படங்கள்.இயக்கமும் இது வரை ஒன்று கூட திருப்தியளிக்கவில்லை.ஆனால் நல்ல சினிமா தமிழில் கொண்டுவர போராடும் அவரது பேராசைக்கு இன்றும் ரசிகன்..

  ReplyDelete
 15. தல,இந்தப்படத்தை சீக்கிரம் பார்க்கிறேன். Once upon a time in high school எனும் கொரியப் படத்தை பாருங்கள்.ஸ்கூல் சம்பந்தமான படம் என்றாலே நினைவுக்கு அது தான் வருகிறது. நான் பார்த்ததில், ஒரு மிலிடரி ஸ்கூல் பற்றிய,முகத்தில் அடித்தார் போல சொல்லும் படம் இதைப் போல் கிடையாது.இதை தெலுங்கில் கூட சுட்டு படமெடுத்து,பின்னர் தமிழிலும் வந்தது.பெயர் தான் நினைவில்லை.ஆனால் என்ன,இதில் பணக்கார ஹீரோ,ரவுடி காலேஜ்,பாசம் காட்டாத பெற்றோர்,boxing என்று குளறுபடி பண்ணி இருப்பார்கள்.

  ReplyDelete
 16. நல்லதொரு பகிர்வு.நன்றி சார். கமல் பற்றிய செய்திகள்
  மெய்யாலுமே ஆச்சரியமாக உள்ளது.

  ReplyDelete
 17. எங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் ஒன்னுக்கு விடுறத பாத்தாதேன் நேச்சுரலா இருக்குன்னு நம்புவோம். கமல் யாரு? வீணாப்போன இந்தியன் :)

  ReplyDelete
 18. மீண்டும் ஒரு நல்ல படம் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள். இதையும் பார்த்திருவோம்.. அப்புறம் கமல் பற்றி சொன்ன விஷயம் அருமை.

  ReplyDelete
 19. பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.