Sep 15, 2010

மதுரை புத்தக்திருவிழா&கமல்

சிறுஇடைவெளிக்கு காரணம் மதுரை புத்தகதிருவிழா.
உலகசினிமாவுக்காக முதன்முறையாக எனக்கு ஸ்டால் தந்தார்கள்.
சற்று அலட்ச்சியமாகத்தான் சென்றேன்...
சால்ட் 30டிவிடி : பதேர்பஞ்சலி 5டிவிடி என்ற விகிதத்தில்.
மதுரை மக்கள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்கள்.
விற்றது சால்ட் 10 பதேர்பஞ்சலி 50.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு விவசாயி வந்தார்.
எங்கே புனுவல்?எங்கே தியோஎஞ்சலோபோலிச்?என்று என்னை மிரட்டிவிட்டார்.
என் ஸ்டாலுக்கு எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,கலாப்ரியா,முத்துகிருஸ்ணன் ஆகியோர்வந்து வாங்கினார்கள்.
உலகசினிமா விற்பனை அபாரம்.
நன்றி மதுரை.....


இடைப்பட்டநாளில் கமல் பற்றி ஒரு உலகமகா யுத்தமே நடந்திருக்கிறது.
காட்பாதர்தான் தேவர்மகன்.
ஆனால் தரத்தில் காட்பாதருக்கு இணையானது.

அன்பேசிவத்தில் ஒரிஜினலை மிஞ்சியிருந்தார்.
ஒரிஜினலுக்கு ஏன் கிரிடிட் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு...
என் பதில் காப்பிரைட்தான் காரணம்.
ராயல்டி கொடுத்து மாளாது.
தமிழ்நாட்டையே எழுதிகேட்பார்கள் ஹாலிவுட் வியாபாரிகள்.

நூறாவது படமாக ராஜபார்வை எடுத்து ஹாமாம் வாங்க காசில்லாமல் தவித்தது சத்தியம்.
அவர் மட்டும் நடிக்காமல் இயக்கினால் அந்தப்படம் தமிழ்நாட்டுக்கு ஆஸ்கார்,கேன்ஸ் என்றுஅள்ளிக்கொண்டு வந்துவிடும்.

நடிப்புக்கு அவரது மெனக்கெடல் உலகில் எந்த நடிகனிடமும் கிடையாது.
உதாரணம் அபூர்வசகோதரர்கள்.
காலைமடக்கி இரும்புக்கம்பியால் கட்டி குள்ள அப்புவாக்கி நடித்து முடிந்தவுடன் சேரில் தூக்கி வைப்பார்கள்.
சூட்டிங் முடிந்து அனைவரும் சென்றுவிடுவார்கள்.
கமல் மட்டும் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார் ரத்தஓட்டம் சீராவதற்க்கு.
கமலது அவஸ்தை காணச்சகியாமல் ஆச்சிமனோரமா கதறியேவிட்டார்.

நான் கமலின் திரைஉலகவாழ்வை சகலகலாவல்லவர் என்ற பெயரில் ராஜ் டிவியில் 52 வாரம் தொடராக தயாரித்து வெளியிட்டேன்.
என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.

15 comments:

 1. அழகா சொல்லியிருக்கிங்க தல இரண்டையுமே...
  உங்களை மறுபடியும் சந்திக்கனும்...

  ReplyDelete
 2. முதல் பத்திக்காக மட்டும் இதை பஸ்ஸில் (google buzz) பகிர்கிறேன். :)

  தனிப்பட்ட வகையில் எனக்கு சந்தோஷமளித்த விஷயமிது.

  மற்றபடி பத்துமணி நேரம் மேக்கப் போட்டார், ஐந்து மணி நேரம் இரும்புக் கம்பியில் அமர்ந்திருந்தார் என்பதற்கெல்லாம் விருதோ அங்கீகாரமோ தர மாட்டார்கள். தம்முடைய படைப்பின் சிறந்த வெளிப்பாட்டிற்கான சிரத்தை என்கிற வகையில் வேண்டுமானாலும் பாராட்டாலாம். ஹாலிவுட்காரர்கள். அதிக துட்டு கேட்பார்கள் எனறெல்லாம் க்ரெட்டிட் கொடுக்காதததை நியாயப்படுத்த முடியாது

  ReplyDelete
 3. இப்பதான் நீங்க சொன்ன புத்தக விழா தகவல்களைப் பற்றித் தனிப்பதிவா போடுவேன்னு என்னோட சைட்ல எழுதினேன்.. எழுதிட்டு வந்து பார்த்தா, நீங்க அதைப்பத்தி எழுதி வெச்சிருக்கீங்க ;-) .. நானும் அதை எழுதியே தீருவேன்.. ;-)

  ReplyDelete
 4. சுரேஸ்...காப்பிரைட் வாங்காமல் எத்தனை ஹாலிவுட் படங்கள் அயல்நாட்டு படங்களை தழுவி இருக்கிறார்கள்....லிஸ்ட் தரவா...அவர்கள் வசதிக்கு இப்படி செய்வதுதான் குற்றம்

  ReplyDelete
 5. நண்பர் ராஜேஸ்...கமல் சிறந்த நடிகர் அவ்வளவுதான்..ரே,கதக் போன்று ஒரு படைப்பாவது தருவார் என்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
 6. மதுரை புத்தக சந்தையில் உலக சினிமா ஸ்டால் இந்தாண்டு இருப்பதாய் அறிந்ததும் அத்தனை நிறைவு.நீண்ட நாள் வாங்க பிரிய பட்ட "Children Of Heaven " ,"சாருலதா' மற்றும் "Grand voyage" டி.வி.டிகளை அங்கு தான் வாங்கினேன்.நன்றி.

  ReplyDelete
 7. சார்..
  உங்ககிட்ட வாங்குன படங்களையே மறந்திட்டேன். அவசரமாக அதற்கு அடுத்த நாளே ஊருக்கு போயிட்டேன். இன்னைக்கு கண்டிப்பா பார்த்திருவேன்.

  நீங்க அன்று ரொம்ப பரபரப்பாக வேலையில் இருந்ததால் பேசி தொல்லை பண்ணக்கூடாதுனு கிளம்பிட்டேன். அன்னைக்கு இருந்த காசுளையும் புத்தகங்கள் நிறைய வாங்கிட்டேன். உங்கள் கடையை அங்கே எதிர்ப்பார்கவில்லை. கொரியர்ல அனுப்பி வைக்க முடியுமா..

  ReplyDelete
 8. நன்றி லேகா..மதுரை மக்கள் கொடுத்த உற்ச்சாகத்தில் அடுத்த ஆண்டு இன்னும் அதிக கலெக்சனோடு வருவேன்.

  ReplyDelete
 9. கொழந்தை.... லிஸ்ட் அனுப்புங்கள்.குரியரில் அனுப்புகிறேன்

  ReplyDelete
 10. சார்..உங்க ஸ்டாலில் நா எடுத்த போட்டோக்களுடன் கொஞ்சம் எழுதியிருக்கேன்(போட்டோ கொஞ்சம் out of Focusஆ போயிருச்சு). பார்த்துட்டு சொல்லுங்க

  ReplyDelete
 11. http://saravanaganesh18.blogspot.com/2010/09/blog-post_17.html

  இதைப்பாருங்கள் ;-) .. உங்கள் புகைப்படத்துடன் நம்ம கொழந்தை உங்கள் மதிரை ஸ்டாலைப் பற்றி எழுதியிருக்கிறார் ;-) அருமையாக இருக்கிறது

  ReplyDelete
 12. மதுரை பக்கமிருந்து அதிகமான இயக்குனர்கள் உருவாகியிருப்பதால், நீங்கள் மதுரையைப் பற்றி குறைவாக மதிப்பிட்டிருக்கக் கூடாது:-)என்னைப் பொறுத்த வரை மதுரை மக்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள்.ஆனால் அவர்கள் நினைப்பதே, மொத்த தமிழ்நாட்டின் குரலாக மாறுவது இப்ப வரைக்கும் புரிய முடியாத விசயம்:-)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நண்பரே..சென்னை பொய்தவ கங்காட்சிக்கும் வருவீகளா? மதுர விசயங்கள பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. வணக்கம்,
  மதுரை புத்தக கண்காட்சியில் இருந்த உங்கள் அரங்குக்கு வந்து நிறைய உலக சினிமா d v d களை வாங்கினேன். உங்கள் சிபாரிசில் வாங்கிய The Way Home பார்த்து அப்படியே பேஸ்தடித்து போய் விட்டேன். படம் முடிந்ததும் கொஞ்ச நேரத்துக்கு மனதை என்னவோ செய்தது. இறந்து போன என் பாட்டி கிராமத்துக்கு சின்ன வயதில் சென்றதெல்லாம் நினைவுக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் nostalgic மனநிலையில் இருந்தேன். இப்படி அழகாக ஒரு சின்ன பையன், ஒரு பாட்டி மற்றும் ஒரு சின்ன வீட்டை வைத்துகொண்டு ஒரு படம் பண்ணி அசர வைக்க முடியுமா? நம்ம ஊருல சிவகாசி, சாத்தூர்,சுறா , கொக்குன்னெல்லாம் கோடி கோடியா கொட்டி படம் எடுக்குற பசங்க இந்த மாதிரி படைப்புகள பாக்கணும் சார். வேணாம் வேணாம் ... அதையும் சுட்டு பாட்டிய வச்சு நாலு குத்து பாட்டு, பைட்டு,கிராபிக்ஸ், செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் சேர்த்து கதைய சாகடிச்சுடுவானுங்க. நம்ம விதி இதுதான்.
  உங்க ஸ்டால்ல இருந்த மாதிரி இவ்வளவு varietyla சினிமா collections நான் பார்த்ததில்ல. உங்கள் ஸ்டால்ல மட்டும் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல இருந்தும் ஆசை தீர இன்னும் எல்லா dvd களையும் பார்த்து வாங்க முடியல ...அவ்வளவு collections மற்றும் கூட்டம். மீண்டும் உங்கள் ஸ்டால் மதுரையில் வரும் நாளை எதிர்பார்கிறேன் !

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.