Jul 22, 2010

Nazarin -Spanish \ வாழும் மகாத்மாNazarin[நாஸரின்]

இயக்கம் லுயி புனுவேல்

இவர் ஒரு மார்க்சியவாதி..நூறு சதவீத நாத்திகர்..இயக்குனர்களில் அக்மார்க் கலகக்காரர்.

முதல் இரண்டு படங்கள் சல்வெடார் டாலியுடன் இணைந்து பணியாற்றினார்.இவரது நாத்திக வெப்பம் தாங்காமல் டாலி வெளியேறினார்.இவரது எல்லா படங்களிலுமே சர்ரியலிசம் இருக்கும்.

இந்த முன்னுரையோடு இப்படத்தை அணுகுங்கள்.இந்த கவிதையின் உட்கூறுகள் பிடிபடும்.

இயேசுவை ஜெராக்ஸ் எடுத்து வாழும் இளம் பாதிரியார்தான் இப்படத்தின் நாயகன்.இருப்பதை கொடுத்து சிறப்புடன் வாழும் இலக்கணமாய் இருக்கிறார்.விளிம்புநிலை மக்களோடு வாழ்கிறார்.கொடுப்பதற்க்கு எதுவும் இல்லா சூழலில் அடைக்கலம் தேடி வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி.இங்கிருந்து துவங்குகிறது ஏழரைச்சனி.விரட்டி அடிக்கிறது திருச்சபையும் அதிகாரவர்க்கமும்.சமூகமும் இவரை சிலுவையில் தினமும் அறைகிறது .மனிதனாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர்த்தி விடை பெறுகிறது படம்.

இந்த மனித ஆத்மாவின் அழுத்தமான முகத்தை அற்புதமாக கேமரா பதிவு செய்துள்ளது.

அகத்தோற்றத்தில் நாத்திகத்தை பதிவு செய்த இப்படத்திற்க்கு வாடிகன் பரிசளித்தது .இதற்க்கு புனுவலின் பதில்.....Thank God.... நான் இன்னும் நாத்திகனாக இருக்கிறேன்..

நமக்கு இப்படி ஒரு சாமியார் இல்லையே என்ற ஏக்கம் எழுவதை தவிற்க்கமுடியவில்லை.நமக்கு வாய்த்தது எல்லாம் நித்தியானந்தாவாக இருக்கிறது.........ஹூம்.......

Jul 21, 2010

THE WHITE RIBBON - 2009 \ B / W வண்ணக்காவியம்


ஓய்ட் ரிப்பன் -2009 [ஜெர்மன்]
கதை,திரைக்கதை,இயக்கம் மைக்கேல் ஹெண்கே [Michael Haneke]
இப்படம் பிளாக்&ஒயிட்டில் எடுக்கப்பட்ட வண்ணக்காவியம்.
கீவ்லாஸ்கியின் ஒயிட், விஸ்காண்டியின் ஒயிட் னைட்ஸ்,ஜாபர் பனாகியின் ஒயிட் பலூன் வரிசையில் கொண்டாட வேண்டிய படம்...
வயதான ஆசிரியர் பிளாக்ஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.........
முதல் உலகப்போர் முந்தையகளத்தில் ஜெர்மானியர்களது அவஸ்தகளை அலசுகிறது.
அடுத்தடுத்து துன்பியல் சம்பவங்கள் கிராமத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன..
ஏன்?எதற்கு?எப்படி என்று அலைபாயும் கதாபாத்திரங்களோடு நாமும் அலைபாய்கிறோம்.
எல்லா திருமணங்களும் உடனடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் தாமதித்தாவது வெறுத்துவிடும்..அவ்வெறுப்பின் விளிம்பில் இருக்கும் ஜமீண்தார் மனைவி....
உலகத்தையே மலக்குழியாக வெறுக்கும் இளைஞன்....
சட்டம் போட்டே ஒழுக்கத்தை நிலைநிறுத்த போராடும் பாதிரியார்...
நேர்மையான ஆசிரியரை தூய்மையாக காதலிக்கும் காதலி...
அக்காதலை நாகரிகமாக தள்ளிப்போடும் காதலியின் தகப்பனார்...
இப்படி நம் வாழ்வை அர்த்தப்படுத்தும் பாத்திரங்கள் அனேகம்....
ஆனந்தத்தை விட மகத்தானது துன்பம் என்பதை போதித்து விடைபெறுகிறது படம்..
இயக்குனரை , வாய்யா தமிழுக்கு.... என்று மனசு அடிச்சுக்குது....
வந்தா “ சிங்கம்” எடுக்க வைத்து விடுவார்கள் நம் கலை வியாபாரிகள்

Jul 20, 2010

yi yi - Taiwan \ திருமணம் To திருமரணம்


yi yi


தாய்வான் நாட்டு சிறுகதை தொகுப்பு...
இயக்கம் எட்வர்ட் யாங்க்
திருமணத்தில் துவங்கி திருமரணத்தில் முடிவடைகிறது இப்படம்.
திருமரணம் என்று குறிப்பிட்டதற்க்கு விடை.... படத்தில் ...........
வாழ்வின் இன்பதுன்பங்களை அங்கதச்சுவையோடு காட்சிபடுத்தி இருக்கிறார் இயக்குனர்.முதல்காட்சி திருமணமாக அமைத்து முக்கிய கதாபாத்திரங்களை
அறிமுகப்படுத்திவிடுகிறார். [ இதே உத்தி காட்பாதரில் கொப்பல்லோ கையாண்டிருப்பார் ]
எத்தனை கதாபாத்திரங்கள்??????????
தாய்வான் டெலிபோன் டைரக்டரி ஜெராக்ஸ் எடுத்து இறக்கி விட்டு,
ஒவ்வொருவருக்கும் ஒரு கதை... so.... ஏகப்பட்ட சிறுகதை.
ஒன்று சுஜாதா
ஒன்று ஜெயமோகன்
ஒன்று சாருநிவேதிதா
அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் நடமாடும் அனைவரும் நம்மை மிரட்டுகின்றனர்...
உருக வைக்கின்றனர்....கலவரப்படுத்துகின்றனர்..
தலைவாழ்ஐ இலை போட்டு பிஸா..பர்கர்...பரிமாறச்சொல்லும் கலந்து கட்டி கலாச்சாரத்தில் உழல்வதை நச்சென்று போட்டு தாக்கியிருக்கிறார் இயக்குனர்.
எல்லா வேதனைகளுக்கிடையிலும் கட்டுப்பாடான தன்னம்பிக்கையோடு ஜெயிப்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
யாருமே கதாநாயகன்..நாயகி...என இனம் காட்டப்படவில்லை.
ஒரளவுக்கு கதாநாயகன் போல் உலவி வரும் சிறுவன் நம்மை வசியப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறான்
இயக்குனரது பரிவாரங்கள் நம்மை நயவஞ்சகமாக வசீகரிப்பதில் போட்டி போட்டு வென்றிருக்கிறார்கள்.
இப்படம் பிடிக்கவில்லையென்றால் நல்லதா நாலு டிவிடி என் சிபாரிசு
1 பெண்சிங்கம்
2 சுறா
3 அசல்
4 கந்தசாமி

Jul 16, 2010

மச்சூக்காமச்சூக்கா சிலி நாட்டு சில்லி சிக்கன்........
இயக்கம் அண்ட்ரிஸ் வுட்
இரண்டு நண்பர்களுக்கிடையே பூக்கும் நட்புதான் இப்படம்.
பூ விரியும் பின்புலத்தில் சிலி நாட்டு அரசியல்,கலாச்சாரம்,அழிந்து வரும் மனிதநேயம்,மதம்.........இன்னும் பிற.......அனைத்தையும் பார்க்க முடிகிறது...
இதுதான் உண்மையான வரலாற்றுப்படம்.
மதறாஸ் பட்டணம் பம்மாத்து படம்...
பணக்கார பசங்க படிக்கும் பள்ளியில் ஏழ்மையில் வாடும் மாணவர்களை கலந்து படிக்க வைக்கிறார் ஒரு பாதிரியார்[தலைமை ஆசிரியர்]. அதில் ஒருவன்தான் மச்சூக்கா...
அனைவரது எதிர்ப்பையும் மீறி செயல்படுகிறார் சேகுவேரா உருவெடுத்த பாதிரியார்..இங்கே தொடங்கும் இந்த ஜெட் வேகப்படம் முடியும் வரை வேகம்தான்.
வாழ்க்கை வசதிக்காக சோரம் போகும் மச்சூக்காவின் நண்பனின் பணக்கார தாய்..
சேரியில் வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மச்சூக்காவின் தாய்.....
இப்படி முரண்பட்ட கதாபாத்திரங்கள் நெறெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய..........
அலெண்டெ என்ற புரட்சியாளன் வீழ்ந்த வரலாறும் வருகிறது.....
இப்படம் என்னை மிகவும் கொதிக்க வைத்து விட்டது..அடங்க ஆறு மாசமாகும்.......
மிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...
பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா???????????

Jul 14, 2010

LE PAPPION - France \ பட்டாம் பூச்சியும்...முரட்டுக்குழந்தையும்.பட்டாம்பூச்சி ஒரு ப்ரெஞ்ச் கவிதை....
இயக்கம் பிலிப் முயில்.

கதாநாயகி எல்சா இந்த உலகத்தை கேள்விகளால் அறிய துடிக்கும் சின்னஞ்சிறு சிறுமி.
பதின்வயதில்...ஒரு கன்னித்தாய்... பெற்றெடுத்த மகள்.

 ‘மிடில் கிளாஸ்’ தாயும், எல்சாவும்...
அப்பார்ட்மெண்ட்ஒன்றில் குடியேற வருகிறார்கள்.

அபார்ட்மெண்ட் மாடியில்... ‘தனிமை விரும்பி’ முதியவர்.
பட்டாம்பூச்சிகளை வளர்த்து... கொன்று....
கலைப்பொருளாக்கி... விற்று வளமாக இருக்கிறார்.

அவரிடம்...எல்சா  ‘வேண்டாத விருந்தாளியாய்’ ஒட்டிக்கொள்கிறாள் பட்டாம்பூச்சி வேட்டைக்கு போகும்போது...
எல்சா...அந்த முரட்டு குழந்தையை...  முழு மனிதனாக...
பரிணாம வளர்ச்சியடைய வைக்கிறாள்.

எல்சாவின் கேள்விகள் நம்மை வசீகரிக்கின்றன.
ஒவ்வொன்றும் கிருஷணா ஸ்வீட் ரகம்தான்.
பட்டாம்பூச்சி வேட்டைக்காக இவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.
பயணத்தின் முடிவில் கற்றுக்கொள்கிறோம்.

தமிழில் இது போன்ற படங்கள் வராதா என்ற ஏக்கத்துடன் முடிக்கிறேன்

Jul 5, 2010

Top 10 Films - எனக்குப்பிடித்தது

புதிதாக உலகசினிமா பார்ப்பவர்களுக்கு, நான் பார்த்த உலகசினிமாவில்...
எனக்கு மிகவும் பிடித்த... சிறந்த பத்து படங்களின் தேர்வு இதோ.......

1.Children of Heaven


2. Way home3.Bicycle Thief


4. La Strada


5.Blow up6.Tokyo story
7.Breathless
8. Pather Panchali9.Life is Beautiful10.Roshomon[ இந்த படங்களின் அறிமுகம்.... மிகச்சிறப்பாக ,திரு.செழியன் ஆனந்தவிகடனில் எழுதி உள்ளார்.அதன் தொகுப்பு ”உலகசினிமா”என்ற நூலாக கிடைக்கிறது ]
இந்த பு த்தகத்தை படித்து விட்டு,
உலக சினிமா இந்த வரிசையில் பார்க்க ஆரம்பிப்பது நலம்.முதன் முதலாக உ.சி பார்ப்பவர்கள் பெர்க்மன் போன்ற ஜாம்பவான்களை தவிர்ப்பது உத்தமம்.இவர் படங்களும் கமல் பேசுவதும் ஒன்று...புரியாது...புரிந்து விட்டால் உங்களுக்கு உலக சினிமாவில் டாக்டர் பட்டம்.
இந்த பத்து படங்களும் பார்த்து விட்டு மேலும் வேண்டும் என்று பசியெடுத்தால்...
வாருங்கள்...welcome to world cinema

தமிழில் டாப் 10 படங்கள்

1 உதிரிப்பூக்கள்
2 முதல் மரியாதை
3 அவள் அப்படித்தான்
4 நாயகன்5 வீடு

6 பருத்திவீரன்


7 சுப்பிரமணியபுரம்


8 அங்காடி தெரு9 காதல்10 தேவர்மகன்


5000 தமிழ் படங்களில் 10 படம் தேற்றுவதற்க்குள் மூச்சு திணறி விட்டது..ஆனால் 10 நூறூ ஆகும்..சமீபத்திய நம்பிக்கை..களவாணி...