Jun 1, 2013

RUN LOLA RUN \ 'நேரம்' திரைப்படத்தின் மூலம் \ பாகம் - 1


RUN LOLA RUN \ 1998 \ GERMAN \ Directed by : TOM TYKWER.  
நண்பர்களே...
சமீபத்தில் வெளியான  'நேரம்' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை அமைப்புக்காக பாராட்டப்பட்டது.
‘ரன் லோலா ரன்’ &  ‘நேரம்’ திரைப்படங்களை பார்த்தவர்கள்...
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை நன்கு புரிந்திருக்க முடியும்.
 'நேரம்' படத்தின் கதையை ‘ரன் லோலா ரன்’ படத்தின் பாதிப்பில்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார்  'நேரம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
மூன்று விதமாக சொல்லப்பட்ட  'ரன் லோலா ரன்' திரைக்கதையை,
 ‘நேரத்தில்’ ஒரே நேர் கோட்டில் சொல்லி வித்தியாசப்படுத்தி விட்டார் 'இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்’.

 ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்திற்குள்,
உடனடியாக போவதற்கு பதிலாக...
சற்று வரலாற்றின் பக்கம் போய் விட்டு வருவோம்.
1880 ஆம் ஆண்டில்தான்  'கேமரா' கண்டு பிடிக்கப்பட்டு  'சினிமா' வளர்ந்தது.
சரியாக பத்து வருடம் கழித்து,
1890 ஆம் ஆண்டில்  'சைக்கோஅனாலைசிஸ்' [ Psychoanalysis ] கோட்பாட்டை,
‘சிக்மண்ட் பிராய்ட்’ [ Sigmund freud ] உலகிற்கு வழங்கினார்.
இதன் தாக்கம் இலக்கிய உலகிலும் நிகழ்ந்தது.

Modernist literature attempts to take into account changing ideas about reality developed by DarwinMachFreudEinsteinNietzscheBergson and others. 
From this developed innovative literary techniques such as stream-of-consciousness, interior monologue, as well as the use of multiple points-of-view. 
This can reflect doubts about the philosophical basis of realism, 
or alternatively an expansion of our understanding of what is meant by realism. 
So that, for example the use of stream-of-consciousness, 
or interior monologue reflects the need for greater psychological realism. 
World War I, and the disillusionment that followed, 
further shaped modernist views of human nature.

மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்...

இலக்கிய உலகில் நிகழ்ந்த தாக்கத்தை உலக சினிமாக்கள் பிரதிபலித்து வருகிறது .
அதில் குறிப்பிடத்தக்க ஒன்றே...‘ரன் லோலா ரன்’. ‘இயக்குனர் டாம் டிக்கர்’ உருவாக்கிய ‘ரன் லோலா ரன்’ 
ஒரு ‘போஸ்ட் மாடர்ன் பிலிம்’
இதன் கதை,திரைக்கதையை ‘பிராபப்பிலிட்டி தியரி’ [Probability Theory] அடிப்படையில் உருவாக்கி உள்ளார்.
வழக்கமான ஹாலிவுட் பாணியான ‘அரிஸ்டாட்டில் பார்மிலிருந்து’ விலகி
இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.

ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து காதலர்கள் ஜெயித்தார்களா? இல்லையா ?
என்பதை மூன்று விதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
மூன்றுக்குமே அடிப்படை ஒன்றுதான்.
அடிப்படையை முதலில் பார்ப்போம்.


மானி சிறிய அளவில் கிரிமினல் வேலைகளை செய்பவன்.
மானி, தன் காதலி லோலாவுக்கு போன் செய்கிறான்.
 ‘நீ சரியான நேரத்துக்கு வராததால்  எல்லாமே பாழாக போய் விட்டது’ எனக்கதறுகிறான்.


“ சிகரெட் வாங்க கடைக்கு போகும் போது தனது மொபட்டை ஒருவன் திருடிக்கொண்டு ஓடி விட்டான்.
அவனை பிடிக்கவே முடியவில்லை.
அதனால் வர முடியவில்லை” என சமாதானம் சொல்கிறாள் லோலா.

“ திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து பணம் கிட்டியது.
நீ வராததால் சப்-வே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ரயிலில் ஏறினேன்.
ரயிலுக்குள் காவலர்கள் வந்ததால் நைசாக இறங்கி நடந்தேன்.
அப்போதுதான் பணப்பையை ரயிலிலேயே விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதை எடுக்கத்திரும்பும் போது காவலர்கள் மடக்கி விட்டார்கள்.
அந்தப்பையை ரயிலில் இருந்த  ‘குப்பை பொறுக்குபவன்’ எடுத்து விட்டான்.
அவன் இந்நேரம் வெளிநாடு போயிருப்பான்.
இன்னும் 20 நிமிடங்களுக்குள் ஒரு லட்சம்  ‘மார்க்’ பணத்தை ஒப்படைக்காவிட்டால் ‘ரோனியின் மாபியா கேங்’ என்னைக்கொன்று விடும்” என்கிறான் மானி.

லோலா : எங்கேயாவது ஓடி விடு.

மானி : ரோனிகிட்ட இருந்து தப்ப முடியாது.
‘நீ முன்னாடி ஒரு தடவை சொன்னியே...
 “காதல் எல்லாம் செய்யும்னு”
இப்ப 1,00,000 மார்க்... 20 நிமிஷத்துல வேணும். 

லோலா : “சரி... நான் பணத்துடன் வருகிறேன். காத்திரு.” 

  மானி : “ 20 நிமிடத்துக்குள் வராவிட்டால் எதிரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க போகிறேன் ”

போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.
ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக அமருகிறது.

பணம் கிடைத்ததா ?
20 நிமிடத்துக்குள் மானியிடம் சேர்க்க முடிந்ததா ??

இதுதான் அடிப்படைப்பிரச்சனை.
இப்பிரச்சனைக்கு லோலா தீர்வு காண்பதை,
மூன்று விதங்களாக ‘பிராபப்பிலிட்டி தியரியில் ’ சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
அதை அடுத்த பதிவில் காண்போம்.

ரன் லோலா ரன் காணொளியை காண்க...

  

2 comments:

 1. ஆவலைத்தூண்டுகிறது...சீக்கிரம்...

  ReplyDelete
  Replies
  1. /// ஆவலைத்தூண்டுகிறது...சீக்கிரம்...///

   ‘ரன் லோலா ரன்’ இது வரை நான் எழுதிய பதிவுகளில் மிகவும் சேலங்சிங்கான பதிவாக இருக்கிறது.
   விக்கிப்பீடீயாவிலும், இன்னும் பிற ஆங்கில ஜாம்பவான்கள் எழுதிய விமர்சனங்களும் ‘மிகவும் கம்மியாக’ இருக்கிறது.
   காரணம் மிக நுட்பமான ஆய்வு, நேரம் தேவைப்படும் பதிவு இது.
   நேயர்களின் ஆதரவு இருந்தால் விரிவாக செய்வேன்.

   வருகைக்கும்...ஆதரவிற்கும் நன்றி ஜீவா.

   Delete

Note: Only a member of this blog may post a comment.