Showing posts with label ஜெர்மனி. Show all posts
Showing posts with label ஜெர்மனி. Show all posts

Jul 15, 2013

AMEN - ஆடுவோமே... பள்ளுப்பாடுவோமே... ஆனந்தமா... சுதந்திரமா... கொல்வோமே!


நண்பர்களே...இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்.
அவர் ஆட்சிக்காலத்தில் போட்ட நலத்திட்டங்கள்தான்
தமிழ்நாட்டை இன்றும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
அவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்.
ஹிட்லர் யூதர்களை அழித்தான்.
இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அழித்து வருகிறார்கள்.
இதில் ஒருவர், ஹிட்லருக்கே கற்றுக்கொடுக்கும் கலைஞராக வளர்ந்து விட்டார்.

மதுவை ஊற்றிக்கொடுத்து தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே ஊற்றி மூடி விட்டார்கள்.
கல்வியை வியாபாரமாக்கி ஏழைகள் கண் முழியை பிதுக்கி விட்டார்கள்.
குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாட்டையே முடமாக்கினார்கள்.
இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து,
இலஞ்சத்தை  ‘நாட்டுடமை’  ஆக்கி விட்டார்கள்.

வாருங்கள்...
நாற்றமெடுத்த தமிழக அரசியலை விட்டு விட்டு...
‘ஆமெனுக்குள்’ செல்வோம்.


AMEN \ 2002 \ German, Romanian, French \ Directed by : Costa - Gavras \ Part - 4

 'உலக நாடுகள் சங்கத்தில்',
‘யூத முத்துக்குமார்’ தற்கொலை செய்ததை பார்த்தோம்.
அதிர்ச்சியில் உறைய வைத்த அக்காட்சி,
‘ஆடம்பர பிரச்சார ஊர்வலத்தில்’ கரைந்து விடுகிறது.
‘பப்பரப்பாங்’ என பிரமாண்ட பேண்ட் வாத்தியங்கள் முழங்க,
அதற்கு பிரம்மாண்ட நாஜிக்கொடிகள் தலையசைத்து ஆட,
சிறுவர்களும் சின்னஞ்சிறு கொடியை தூக்கி ஊர்வலத்தை எதிர் கொண்டு, ஆடிக்கொண்டு... கும்மாளமிட்டு ஓட,
மக்களை மதி மயக்கும் உற்சாக காட்சியாக உருவெடுக்கிறது.


_________________________________________________________________________________

நாஜிக்கொள்கைகளை அப்படியே பின்பற்றினார்கள் நம் அரசியல் வியாதிகள்.
இது போன்ற  ‘ஊர்வலம்’ கான்செப்டை,
 ‘கருந்தேள் பாணியில்’ சொல்வதென்றால்,
ஊர்வலத்தை  ‘காப்பியடித்து’...
‘பிரம்மாண்ட பேரணி’ என்ற படத்தை உருவாக்கினார்கள் திராவிடக்கட்சிகள்.
அட..கொடியைக்கூட ‘நாஜிக்கொடியில்’ இருந்துதான் உருவாக்கினார்கள் போலும்.


_________________________________________________________________________________

ஊர்வலத்தை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்
‘மன வளர்ச்சியில்லாத’ சிறுவர்கள்,சிறுமிகள்.
அவர்களை அங்கிருந்து அகற்றி,
வரிசையாக நிற்க வைக்கிறார்கள் ‘கன்னியாஸ்த்ரீகள்’.


அங்கே ‘சிரித்த முகத்துடன்’ கருணை வழிய ஒரு டாக்டர் அனைவரையும்
தேர்வு செய்கிறார்.
எதற்கு? 

இந்த டாக்டர் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவரை வைத்துதான் கிளைமாக்சை அமைத்திருக்கிறார்
இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

‘அதாண்டா...இதாண்டா...அருணாச்சலம் நாந்தாண்டா...’
என ஆர்ப்பாட்ட அதிரடிகள் இல்லாமல்,
வெகு சாதாரணமாக ஒரு டெய்லர் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் ஹீரோ ‘கர்ஷைன்’.


தனது அளவுக்கேற்ப தைக்கப்பட்ட ஆடையை போட்டு ‘டிரையல்’ பார்க்கிறார் கர்ஷைன்.
‘ஹிட்லர் பாணி’ ராணுவ சல்யூட் வைக்க சொல்கிறான் டெய்லர்.
ஒப்புக்கு சப்பாணியாக ‘அரைகுறை’ சல்யூட் வைக்கிறார் கர்ஷைன்.
அந்த சல்யூட்டில் திருப்தியில்லாத டெய்லர்,
அதே சல்யூட்டை பவர்புல்லாக செய்து காட்டுகிறான்.


அவனை பின்பற்றி ‘சல்யூட்’ செய்கிறார்.
 ‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.

ஒரே காட்சியில்...
# 1 . ‘ஹிட்லர் பாணியை பின்பற்ற விருப்பமில்லாத ஜெர்மானியன்.
# 2. ஹிட்லர் பாணியை வேத வாக்காக கடைப்பிடிக்கும் ஜெர்மானியன்.
# 3.ஹிட்லர் பாணியை கடைப்பிடித்தால் ‘கிழிந்து விடும்’.
என ‘சட்டையர்’ செய்த காஸ்டா கவ்ராஸை,
‘இயக்குனர் இமயம்’ என கொண்டாடியது சரிதானே!


‘கர்ஷைன்’ ஒரு நிஜ ஹீரோ.
இவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்,
‘ஆமென்’ திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க உதவும்.
ஜெயமோகன் பாணியில்,
ஆமென் திரைப்படத்தின் ‘உள்ளொளியை’ தரிசிப்பீர்கள்.
எனவே கர்ஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

மனநலம் வளர்ச்சியில்லாத குழந்தைகள் கதியை பார்க்க,
‘கல் நெஞ்சத்தோடு’ வாருங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 15, 2013

மூன்று ஓட்டங்களில் எது நிஜம் ?


நண்பர்களே...
‘ரன் லோலா ரன்’ ஆய்வை, லோலாவோடு ஓடி செய்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த உற்சாகத்தில்... இப்பணியை எளிதாக செய்து முடித்து விட்டேன்.

RUN LOLA RUN \ 1998 \ German \ Directed by TOM TYKWER \ Part - 5 [ Final ] . 



சிட்பீல்டு வகுத்த  ‘திரை இலக்கணத்தை’ குழி தோண்டி புதைத்து சமாதியாக்கி ஒரு பொக்கே வைத்தார் இயக்குனர் டாம் டிக்கர்.
பொக்கேயின் பெயர் ‘ரன் லோலா ரன்’. 

“ Every Second We Ripe and Ripe. 
   Every Hour by Hour We Rot and Rot ” = ஷேக்ஸ்பியர்.

அதற்குள் எதை சாதித்து விடப்போகிறோம் ?

நாம் இது வரை பார்த்தது ‘ரன் லோலா ரன்’ ஆரம்பப்பகுதி.
ஏனைய பகுதிகளை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிளைமாக்ஸ் பகுதியை மட்டும், விளக்க அனுமதியுங்கள்.
_________________________________________________________________________________

லோலாவின் முதல் ஓட்டத்தில் தந்தையிடம் பணம் கிடைக்கவில்லை.
வெறுங்கையாகத்தான் ஓடி வருகிறாள் லோலா.
மணி 12 ஆகி விட்டது.
லோலா வராததால் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க கிளம்பி விட்டான் மானி.
அவனோடு சேர்ந்து, தாமதமாக வந்து சேர்ந்த லோலாவும் கொள்ளையில் பங்கு பெறத்தொடங்குகிறாள்.

கொள்ளையடித்த பணத்தோடு தப்பிச்செல்கையில் போலிஸ் சுற்றி வளைக்கிறது.
அதில் ஒரு போலிஸ் இளைஞன்,
 ‘பதட்டத்தில்’ லோலாவை சுட்டு விடுகிறான்.
நிகழ் காலம் = லோலா சாய்கிறாள்.


பிளாஷ்பார்வேர்டு காட்சி விரிகிறது.

லோலாவும் மானியும் படுக்கையில் காதல் மொழி பேசுகிறார்கள்.

லோலா : மானி...நீ என்ன லவ் பண்றியா ?

மானி : கண்டிப்பா, நான் பண்றேன்.

லோலா : எப்படி ஷ்யூரா சொல்ற ?

மானி : ஐ டோண்ட் நோ...ஆனா பண்றேன்.

இவ்வாறாக இருவரும் காதலை மையமாக வைத்து தொடர்ந்து உரையாடுகிறார்கள்.
இறுதியாக...

லோலா : இப்ப உன் மனசு என்ன நெனக்குது ?

மானி : இதை விட யாரும் முட்டாள்தனமான கேள்வி கேட்க முடியாதுன்னு...

லோலா : என்னை நீ சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கிற.

மானி : லோலா, உனக்கு என்ன ஆச்சு ?

[ இடைவெளி விட்டு ]

என்னை விட்டு பிரிஞ்சு போகணுமா ?

லோலா : எனக்குத்தெரியாது நான் ஒரு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன்.

பிளாஷ்பார்வேர்டு  முடிவுறுகிறது.

நிகழ் காலம் = குண்டடிபட்டு விழுந்து கிடக்கும் லோலா தனக்குள் சொல்கிறாள்.
 “ ஆனா, மாட்டேன்.
உன்னை விட்டு பிரிய மாட்டேன்.
ஸ்டாப்.

இக்காட்சியின் காணொளி காண்க...



_________________________________________________________________________________

முதல் நிகழ்வை மாற்றி அமைக்க விரும்புகிறாள்.
காதலனை பிரிந்து இறக்க விரும்பவில்லை லோலா.
எனவே ‘பிராபப்லிட்டியாக ’...
இரண்டாவது ஓட்டம் ஆரம்பிக்கிறது.

படிக்கட்டில் உருண்டு... அடிபட்டதால்... நொண்டியபடி சிறிது தூரம் ஓடும் நிலைக்கு ஆளாகிறாள் லோலா.
எனவே, இதன் பின்னர் மொத்த நிகழ்வுமே  ‘ஒரு நொடி’ பிந்துகிறது.
ஓட்டத்தின் இறுதியில்,
தந்தை வேலை பார்க்கும் வங்கியில் கொள்ளையடித்த பணத்துடன் வந்து சேருகிறாள் லோலா.
துப்பாக்கியுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நோக்கி நகரும் மானியை...
“ மானி”... என கூச்சலிட்டு கத்தி தடுத்து நிறுத்தி விடுகிறாள்.
லோலாவை திரும்பிப்பார்க்கிறான் மானி.
அவளை நோக்கி வரும் போது, மரணம் அவனை நோக்கி வருகிறது.
எதிர்பாராதவிதமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்து மோதுகிறது.

நிகழ் காலம் = மானி நடு ரோட்டில் சாய்கிறான்.
ரத்தம் தோய்ந்த மானியின் முகத்தை இரு கைகளாலும் ஏந்துகிறாள் லோலா.


 பிளாஷ்பார்வேர்டு விரிகிறது.

காதலர்கள் படுக்கையில் பேசுகிறார்கள்.

மானி : நான் செத்து போய்ட்டா என்ன செய்வ ?

லோலா : நான் ஒன்ன சாக விட மாட்டேன்.

மானி : சரி...நல்லது.

[ இடைவெளி விட்டு ]

எனக்கு உடம்பு சரியில்லன்னா...

லோலா : நான் ஒரு வழிய கண்டுபிடிப்பேன்.

மானி : நான் கோமால இருந்து...
டாக்டர்  ‘இன்னும் ஒரு நாள்தான்னு’ சொன்னா ?  

லோலா : நான் உன்னை கடல்ல வீசி விடுவேன்.
ஷாக் தெரபி.

இவ்வாறாக, காதலர்கள் உரையாடல் ‘ மரணத்தை’ மையமாக வைத்து அமைகிறது.
இறுதியாக...

லோலா : மானி...

மானி : என்ன ?

லோலா : நீ இன்னும் சாகல இல்லயா ?

பிளாஷ்பார்வேர்டு  முடிவுறுகிறது.

ரத்தம் தோய்ந்த மானியின் முகத்தை ஏந்திய லோலாவின் கரங்கள் 
‘ரிவர்ஸ்சில்’ விலகுகிறது.

நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மானி ‘நோ’ எனச்சொல்கிறான்.

இக்காட்சியின் காணொளி காண்க...


_________________________________________________________________________________

காதலன் இறந்து போவதை விரும்பவில்லை லோலா.
திரும்பவும் ‘நிகழ்வை’ மாற்றி அமைக்கிறாள்.

எனவே, நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மானி  ‘நோ’ எனச்சொல்லுகிறான்.

மூன்றாவது ஓட்டம் பிராபப்பிலிட்டியாக ஆரம்பிக்கிறது.

இரண்டாம் ஓட்டத்தை  துவங்கிய அதே நேரத்தில்...அதே நொடியில்... மூன்றாவது ஓட்டத்தை ஆரம்பிக்கிறாள் லோலா.
ஆனால், லோலா படிக்கட்டில் நாயைத்தாண்டி ஓடுவது...
லொகேஷன்கள் மிஸ்ஸிங்...என  நிகழ்வுகள் அனைத்தும்  லோலா
‘சில நொடிகள் முந்துவதை’ துரிதப்படுத்துகிறது.

லொக்கேஷன் மிஸ்ஸிங் = ஸ்பைரல் படிக்கட்டு ஒரே ஒரு சுற்றாக குறைக்கப்படுவது...
முதல் & இரண்டாம் ஓட்டத்தில் லோலா ஏறி ஓடும் நடைபாதை மேம்பாலம் மூன்றாம் ஓட்டத்தில் இல்லை.

தந்தையும், மேயரும்  காரில் ஏறிப்போய் விடுகின்றனர்.
லோலா தந்தையை சந்திக்கவே முடியவில்லை.
எனவே,ஒரு கிளப்பில்  ‘சூதாடி’ ...
வேண்டிய பணத்திற்கு மேலாக சம்பாதிக்கிறாள் லோலா.

சைக்கிளை விலைக்கு வாங்கி,
உலகம் பிறந்தது எனக்காக...
   ஓடும் நதிகளும் எனக்காக...”
பாடிக்கொண்டே ஓட்டி வருகிறான்  ‘குப்பை பொறுக்கி’.


அப்போது வசமாக மானியிடம் சிக்குகிறான்.
துப்பாக்கி முனையில் அவனிடமிருந்து பணத்தை கைப்பற்றுகிறான் மானி.
இருந்தாலும் மானியிடமிருந்து ‘கை மாத்தாக’ துப்பாக்கியை
கெஞ்சிப்பெற்றுக்கொண்டு...
“ மாமா...டவுசர் கயண்டுச்சே...
   ஆமா...டவுசர் அவுந்துச்சே...” 
எனப்பாடிக்கொண்டு  போகிறான் ‘குப்பைப்பொறுக்கி’.

ஒப்பந்தப்படி சரியான நேரத்திற்கு,
மாபியா கும்பலிடம் பணத்தை ஓப்படைத்து விட்டு வருகிறான் மானி.
முன்னரே வந்து காத்திருக்கும் லோலாவை சந்திக்கிறான் மானி.

மானி : ஹே...

என்னாச்சு ஒனக்கு ? 




நீ ஓடியா வந்த ? 

கவலப்படாதே...எல்லாம் சரியாயிடுச்சு...

கமான்.

இடைவெளி விட்டு...இடைவெளி விட்டு... மானி மட்டுமே பேசுகிறான்.


இறுதியில் காதலர்கள் ஜோடியாக கை கோர்த்துக்கொண்டு நடக்கிறார்கள்.
லோலாவின் கையில் இருக்கும் பையை பார்த்து கேட்கிறான் மானி .

மானி : “ இந்தப்பையில் என்ன இருக்கு ? ” 

இப்போது அவர்கள் கையில் காசு, பணம், துட்டு, Money, Money
நெறைய இருக்கிறது.
லோலாவின் இதழில் சிறு புன்னகை பரவ...
இந்த இமைஜை ‘ப்ரீஸ்’ செய்து படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர்.
சுபம்.

இக்காட்சியின் காணொளி காண்க...


_________________________________________________________________________________

[ 1 ] மூன்றாவது ஓட்ட முடிவில் அனைத்துமே சுபமாக இருக்கிறது.
பார்வையாளர்களுக்கும் இந்த முடிவு இதமானதாக இருக்கும்.
பின்னணி இசையை மூன்றாவது ஓட்டத்தில்,
இந்திய கிளாசிகல் இசையில் அமைத்து இருப்பது செவிக்கு சுகமாக இருக்கிறது.
How The World is...என்ற விளைவை விட,
How The World can be... என்ற முடிவு சுகமானதாக இருக்கும்.
எல்லா இலக்கியங்களும் இப்படித்தான் இயங்குகிறது. 

[ 2 ] மூன்று ஓட்டங்களிலும்  'டெஸ்டினியோடு' [ Destiny ] போராடி 
‘காதல்’ மட்டுமே இயங்குகிறது....வெல்கிறது.

இப்படத்தில் காதலர்களை சேர்த்து வைக்க,
‘பிராபப்பிலிட்டி தியரியும்’ [ Probability Theory ] இயங்குகிறது.

காதல் ‘டெஸ்டினியை’ மாற்றி விடுகிறது.

[ 3 ] மூன்று ஓட்டங்களில் எது நிஜம்? என்ற கேள்வியை பார்வையாளர்கள் எழுப்பினால்...
எதுவுமே நிஜமில்லை என்பதே... நிஜம்.

[ 4 ] இயக்குனர்...பார்வையாளரிடம் நேரிடையாக தனது கருத்தாக்கத்தை
முன் வைக்கிறார்.
காரெக்டர் வழியாக பேசவில்லை.
எந்த காரெக்டருடனும்... பார்வையாளர்கள் ‘ஐடெண்டிபை’ ஆக முடியாது.
 'Emotional Distance' இருக்கிறது. 

சூது கவ்வும்’ படத்தில்  'Parody' வழியாக... 
' Emotional Distance ' போக்கு இருக்கிறது.

[ 5 ] ‘ ரன் லோலா ரன் ’  போஸ்ட் மாடர்ன் பிலிம்.
ஆனால், முற்போக்கு மார்க்சிய சித்தாந்தத்துக்கு எதிராக இயங்குகிற  படம்.
ஏனென்றால் இப்படம்,
சமூக இயலில் இருக்கிற மர்ம முடிச்சுகளை 
அறிவதற்கான ‘தர்க்கவாதத்தை’ [ Logic ] மொண்ணையாக்கி விடுகிறது.
‘மனித ஊக்கம்’ [ Human Volition ] என்பதே இல்லாமல் போய் விடுகிறது.

இந்த ஆபத்தை தமிழில் ‘சூது கவ்வும்’ படமும் விளைவித்திருக்கிறது.

உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக இருக்கும் இப்படம், 
நல்ல படம்தான்...
ஆனால் இதில் இருக்கும் கருத்தாக்கம் ???

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.      

Jun 13, 2013

சைக்கிளை திருடு...காதலியை ஓட்டு.



“ ஒரு நொடி மாறுவதால் வாழ்க்கையின் ஒரு இருபது நிமிடத்தில்
என்னென்ன விஷயங்கள் நடந்து விடுகின்றன என மூன்று விதமாக கற்பனை செய்து பார்க்கும் இப்படம் உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பையும் விருதுகளையும் பெற்றது.

தெருவில் கடக்கும் மனிதர்களின் கதையை போட்டாக்களால் சொல்வதும்,
கருப்பு - வெள்ளை, கார்ட்டூன், கிராபிக்ஸ், ஸ்லோமோஷன் என்று திரைப்படத்துக்கே உரிய அனைத்து தொழில் நுட்பங்களையும் அழகாக பயன்படுத்தி இருப்பதும் இப்படத்தின் சிறப்பு.” - செழியன்.

நூல் : உலக சினிமா [ பாகம் - 1 ] \ இரண்டாம் பதிப்பு \ 2008
வெளியிடு : விகடன் பிரசுரம்.

RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by : TOM TYKWER \ பாகம் - 5.

உலக சினிமாவை என்னுள் விதைத்த துரோணர் ‘செழியன்’ அவர்களது முன்னுரையோடு இப்பதிவை துவங்குவதில் பெருமை கொள்கிறேன்.
_________________________________________________________________________________

[ 1 ] முதலில் லோலாவின் ஓட்டத்தோடு நம்மை இணைத்துக்கொள்வோம்.


முதல் ஓட்டம் : 
மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.

இரண்டாம் ஓட்டம் : 
மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.
ஆனால் கேமரா கோணங்களால் இக்காட்சி மாறுபடுத்தப்பட்டு உள்ளது.

மூன்றாம் ஓட்டம் : 
லோலா பிளாட்பாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
லோலா ஓடும் பிளாட்பாரத்தின் உயரத்திற்கும் சற்றுக்குறைவான தளத்தில், 
தரைத்தளத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் அடுத்த ஷாட்டில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.

இயக்குனர் டாம் டிக்கர் மூன்று ஓட்டங்களில் உள்ள ‘நேர வேறுபாட்டை’
மெட்ரோ டிரெய்ன் மூலமாக விளக்குகிறார்.
முதல் ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் பாலத்தில் பாதியில் வந்து கொண்டிருக்கும்.
இரண்டாவது ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் முதல் ஓட்டத்தில் இருந்த தூரத்தை விட சற்று அட்வான்சாக இருக்கும்.
காரணம் லோலா நொண்டியபடி சற்று தூரம் ஓடியதால் சில நொடிகள் லேட்டாக வருகிறாள்.
மூன்றாவது ஓட்டத்தில் ‘நாயைத்தாண்டி’ வேகமாக ஓடி வந்ததால் அட்வான்சாக வந்து விடுகிறாள்.
எனவே முதல் ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் காட்டப்பட்ட தூரத்திற்கு டிரெய்ன் சில நொடி லேட்டாக வந்து சேருவதை காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.
ஹேட்ஸ் ஆப் டாம் டிக்கர்.
_________________________________________________________________________________
[ 2 ] மெட்ரோ ரயில் பாலத்துக்குப்பிறகு, 
ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் ஓடுகிறாள்.
இந்த ஓட்டம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலாம் ஓட்டம் : 
லோலா ஓடுவதை காமிரா அவளது ஓட்டத்திற்கு இணையாக பக்கவாட்டில் நகர்ந்து படம் பிடித்திருக்கிறது. 
எனவே நதியின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
லோலாவின் ஓட்டம் சில ஷாட்டுகள் ‘ஸ்லோ மோஷனலில்’ காட்டப்பட்டுள்ளது.
லோலா ஓடுவது ‘க்ரீன் மேட்’ மெத்தடில் ஸ்டூடியோவில் படம் பிடிக்கப்பட்டு பின்புலக்காட்சியாக ‘நதிப்பாலத்தை’ இணைத்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.
எடிட்டிங் மூலமாக... வேண்டுமென்றே பார்வையாளனை வதைக்கும் வகையில் ‘டிஸ்டர்ப்’ செய்கிறார் இயக்குனர்.

இரண்டாம் ஓட்டம் : 
காமிரா கோணங்களை மாற்றி அமைத்து மிகுந்த அழகியலோடு லோலாவின் ஓட்டத்தையும்...பின்புலத்தில் நதியின் தோற்றத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.



மூன்றாம் ஓட்டம் : 
கேமரா, லோலாவின் முன்புறமாக இருந்து... 
அவளது ஓட்டத்திற்கு இணையாக பின்புறம் வேகமாக நகர்ந்து காட்சிப்படுத்தியுள்ளது.
எனவே நதியின் தோற்றம் ‘பிரேமிற்குள்’ வரவில்லை.
லோலாவின் ஓட்டமும்...பாலமும் மட்டுமே...காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
_________________________________________________________________________________

[ 3 ] அடுத்து வரும் காட்சியில்,
முதலாம் ஓட்டத்தில், 
நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி, சம வயது ஆணிடம் உரையாடுகிறாள்.
[ சம வயது ஆண், லோலாவின் தந்தை என்பது பின்னால் வரும் காட்சியின் மூலம் தெரிய வரும்.]
அவள், தங்கள் காதலை உலகறியச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும்...
காதலை மறைத்து வாழும் கொடுமையை ஆதங்கமாகவும் 
தனது உரையாடலில் கொட்டித்தீர்க்கிறாள்.

இரண்டாம் ஓட்டத்தில் ஒருவர் காரில் காத்திருக்கிறார்.
அவரது கார் காரேஜின் ‘ஆட்டமடிக் டோர்’ மெலெழுகிறது.
[ இவர்  ‘மேயர்’ என்பதும், லோலாவின் தந்தையின் நண்பர் என்பதும் மூன்றாவது ஓட்டத்தில் பின்னர் ஒரு காட்சியில் விளக்கப்படுகிறது.]

மூன்றாவது ஓட்டத்தில் இது போன்ற எந்தக்காட்சியும் வரவில்லை.
பதிலாக லோலா போக்குவரத்து அதிகமில்லாத சாலையை கடக்கும் ஷாட் வரும்.
இந்த ஷாட்டுக்கு நேரிடையாக போய்விடுகிறார் இயக்குனர்.
இக்காட்சியை கேமரா கிரேனில் மேலிருந்து கீழாக இறங்கி படம் பிடித்திருக்கிறது.
பிளாட்பாரத்தின் ஓரமாக கிரேன் மையம் கொண்டு இக்காட்சியை படம் பிடித்துள்ளது.

இரண்டாவது ஓட்டத்தில், 
இந்த ஷாட்...
அதாவது லோலா போக்குவரத்து அதிகமில்லாத சிறிய சாலையை கடப்பது...
காமிரா சாலையின் குறுக்காக ‘டிராக் & டிராலியில் பயணித்து படம் பிடித்துள்ளது.

முதலாவது ஓட்டத்தில் காமிரா கிரேனில் நடு ரோட்டில் மையம் கொண்டு மேலிருந்து கீழிறங்கி படம் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________
[ 4 ] அடுத்தக்காட்சி...கன்னியாஸ்த்ரீகள்.



முதலாம் ஓட்டம் : பிளாட்பாரத்தில் கன்னியாஸ்த்ரீகள் கூட்டமாக வருகின்றனர்.
லோலா அவர்களுக்கு மத்தியில் ஓடி கடக்கிறாள்.

இரண்டாம் ஓட்டம் : பிளாட்பாரத்தில் கன்னியாஸ்த்ரீகள் கூட்டமாக வருகின்றனர்.
லோலா அவர்களுக்கு மத்தியில் ஓடி கடக்கும் போது,
கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்த கன்னியாஸ்த்ரீயை மட்டும்  
‘அனிச்சை செயலாக’ திரும்பி பார்த்து விட்டு ஓடுவாள்.

மூன்றாவது ஓட்டம் : கன்னியாஸ்த்ரீகளை பார்த்து விலகி சாலையில் இறங்கி ஓடுகிறாள்.
_________________________________________________________________________________
[ 5 ] அடுத்தக்காட்சி ...சைக்கிள்காரன்.

      
முதலாம் ஓட்டம் : ஒரு அழகிய வாலிபன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருகிறான்.

சைக்கிள்காரன் : “ஹே உனக்கு சைக்கிள் வேணுமா ?

திரும்பி அவனை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சைக்கிள்காரன் : “ 50 மார்க்...புத்தம் புதுசு” 
[ மார்க் = ஜெர்மன் காசு, பணம்,துட்டு, MONEY...MONEY ]

 'நோ' எனச்சொல்லி விட்டு தொடர்ந்து ஓடுகிறாள்.



சைக்கிள்காரனுக்கு ‘பிளாஷ் பார்வேர்டு’ காட்சிகள், 
‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக காட்சியளிக்கிறது.

ராபிட்ஃபயர் ஷாட் : 
சைக்கிளில் செல்பவனை இரண்டு தடியர்கள் துரத்துகின்றனர்.
சைக்கிளோடு அவனை கீழே தள்ளுகின்றனர்.
அடிஅடியென அடி பின்னுகிறார்கள்.
காயம் ஓரளவு ஆறிய நிலையில் நர்சோடு ஒன்றாக அமர்ந்து ரெஸ்டாரண்டில் உண்கிறான்.
இருவரும் காதல் மொழி பேசுகின்றனர்.
அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
ஐரோப்பிய பாரம்பரிய திருமண ஆடையுன் இருவரும் கேமராவிற்கு  போஸ் கொடுக்கின்றனர்.

இரண்டாவது ஓட்டம் : 
அழகிய வாலிபன் சைக்கிளை ஓட்டி வருகிறான்.

சைக்கிள்காரன் : ஹேய் சைக்கிள் வேணுமா ?

லோலா : [ ஓடிக்கொண்டே ] வேண்டாம்.

சைக்கிள்காரன் : 50 மார்க்... புதுசை விட நல்லது.

லோலா : ஆனா திருடியது...

[ எனச்சொல்லி விட்டு அவனை லட்சியம் செய்யாமல் ஓடுவாள்.]

ராபிட் ஃபயர் ஷாட் :
பிளாட்பார ஓரத்தில் கிடக்கிறான்.
வறுமை, அவன் தோற்றத்தில் பரிபூரணமாக குடியேறி  இருக்கிறது.
பசி மயக்கத்தில் சாய்ந்து கிடக்கிறான்.
தாடியுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறான்.
பார்க்கில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணோடு பேச விழைகிறான்.
அவள் அவனை புறக்கணித்து எழுந்து செல்கிறாள்.
பப்ளிக் டாய்லட்டில் தரையில் உட்கார்ந்து கொண்டு போதை ஊசியை கையில் ஏற்றுகிறான்.
மரணத்தை தழுவுகிறான்.

மூன்றாவது ஓட்டம் : 
கன்னியாஸ்த்ரிகளுக்கு நடுவில் ஓடாமல்,
சாலையில் இறங்கி ஓடும் போது சைக்கிள்காரனுடன் மோதுவது போல் ஒரு நிலை ஏற்படும்.

சைக்கிள்காரன் : ஹே...பார்த்து...

லோலா மோதாமல் சமாளித்து ‘ஸாரி’ சொல்லி விட்டு ஓடுவாள்.

சைக்கிள்காரன் வேகமாக சைக்கிளை மிதித்து, 
லோலாவை தாண்டி முந்துவான்.

பின் லோலா ஓடும் திசைக்கு எதிர்புறம் செல்லும் சாலையில், 
சைக்கிளை திருப்பி சென்று விடுவான். 

மூன்றாவது ஓட்டத்தில், ராபிட் ஃபயர் ஷாட்டுகள் இல்லை.

மாறாக, 
அவன் ஒரு ‘பாஸ்ட் புட் ரெஸ்டாரண்ட்’ கடைக்கு சென்று 
உணவை ஆர்டர் செய்கிறான்.
அங்கே, மானியின் பணத்தை மெட்ரோ ரயிலில் எடுத்துச்சென்ற 
‘குப்பைப்பொறுக்குபவன்’ இருக்கிறான்.

அவன் சைக்கிள்காரனை பார்த்து...

“ எனக்கும் ஒரு நேரம் பாரேன்.
வாழ்க்கை சில நேரம் காமெடியா இருக்கு.

வா...உனக்கு ஒரு டிரிங்ஸ் வாங்கித்தாரேன்” என்கிறான்.

சைக்கிள்காரன் : ஒனக்கு சைக்கிள் வேணுமா ?
ஸ்பெஷல் விலை....70 மார்க்தான்.

குப்பை பொறுக்குபவன் சைக்கிளை பார்ப்பதுடன் இக்காட்சி முடிவடைகிறது.

_________________________________________________________________________________

லோலாவின் ஓட்டத்தில் எதிர்ப்படும் சில கதாபாத்திரங்களுக்கு,
‘எதிர்காலத்தை’ வடிவமைத்ததில் இயக்குனர்   ‘அரிஸ்டாட்டில் மெத்தடில்’ காஸ் & எபெக்ட்ஸை மெய்ண்டெய்ன் செய்திருக்கிறார்.
அதை மனோ வேகத்தில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
இது மிகவும் அபூர்வம்.

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.
ரன் லோலா ரன் அடுத்தப்பதிவில் முடிவடையும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 9, 2013

RUN LOLA RUN \ திரைக்கதை எழுதுவது இப்படியுமல்ல...அப்படியுமல்ல. \ பாகம் - 4


நண்பர்களே...
திரைக்கதை எழுதுவது இப்படி...அப்படி... என உலக சினிமாக்களுக்கு
இலக்கணம் கற்பிக்க முடியாது.
விதிகளை மீறி பயணிப்பதையே இலட்சியமாக கொண்டவர்கள் அப்படைப்பாளிகள்.
‘ரன் லோலா ரன்’ படைப்பாளி  ‘டாம் டிக்கர்’ வெற்றிகரமாக விதிகளை மீறி சமீபத்தில் சாதனை படைத்தவர்.

RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by Tom Tykwer 

லோலாவின் மூன்று ஓட்டங்களிலும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை இப்போது பார்ப்போம்.
லோலா, பில்டிங்கிலிருந்து காம்பவுண்ட் கேட்  வரைக்கும் ஓடி வருவதை காமிரா கிரேனிலிருந்து மேலிருந்து கீழாக இறங்கி பதிவு செய்துள்ளது.
இந்த  ‘ஷாட் கம்போசிஷேன்’, 
மூன்று ஓட்டங்களிலும் பொதுவாக இருந்தாலும்,
இரண்டாவது ஓட்டத்தில் லோலா நொண்டிக்கொண்டு ஓடுகிறாள்.

அடுத்து லோலா, 
சாலைகளில் ஓடும் பல் வேறு ஷாட்கள் 
மூன்று ஓட்டங்களிலும் மாறுபட்ட காமிரா கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு திருப்பத்தில் ஓடி வரும் லோலா, 
குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்
ஒரு தாயை எதிர் கொள்கிறாள்.
இக்காட்சி மூன்று ஓட்டங்களிலும் மாறுபடுகிறது.
அந்தத்தாயின் எதிர் காலத்தை ‘பிளாஷ் பார்வேர்டு’ உத்தியில்,
‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக’ அடுக்கி படுவேகமாக காட்டுகிறார் இயக்குனர்.
இந்த யுக்தி மிகவும் புதுமையானது.
இந்த யுக்தியை பயன்படுத்தி படத்தில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களின் எதிர்காலத்தை ‘நொடிகளில்’ சொல்லி சாதனை படைத்துள்ளார் இயக்குனர்.  

முதல் ஓட்டம் : லோலா ஓடி வரும் போது லேசாக அந்தத்தாயை இடித்து விடுகிறாள்.
“ ஹே...பாத்துப்போ...
நாயி...” என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
குழந்தையின் தாய் போதையில் கணவனுடன் சண்டையிடுகிறாள்.
’சமுதாயக்காவலர்கள்’ குழந்தையை வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து எடுத்துச்செல்கிறார்கள்.
குழந்தையை பிரிந்த துக்கத்தில் தாய் தரையில் விழுந்து புரண்டு அழுகிறாள்.
கணவன் அவளை கட்டியணைத்து சமாதானப்படுத்துகிறான்.
அவள் பித்து பிடித்த நிலையில் இன்னொருவர் குழந்தையை திருடிக்கொண்டு ஓடுகிறாள்.
அக்குழந்தையின் தகப்பன் வெறி கொண்டு துரத்துகிறான்.

இரண்டாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா, அந்தத்தாயின் மீது வேகமாக மோதி விடுகிறாள்.
“ பாத்துப்போ...அறிவு கெட்ட மாடே...
பொட்டக்கழுதை என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
லாட்டரி சீட்டு வாங்குகிறாள் தாய்.
பரிசு விழுகிறது.
டிவியில் ரிசல்ட் பார்த்து குதுகலிக்கின்றாள் கனவனுடன்.
புதிய பங்களா, பென்ஸ் காருடன் காட்சியளிக்கின்றனர் தம்பதியர்.
அழகிய ஸ்விம்மிங் பூல்...
பச்சைபசேல் புல்வெளி பின்னணியில்... 
கணவனுடன் ‘பியர்’ அருந்தி ‘சியர்ஸ்’ சொல்கிறாள்.
‘பரிசு பெற்ற தம்பதி’ என பத்திரிக்கையில் போட்டாவுடன் செய்தி வருகிறது.

மூன்றாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா அந்ததாயை மோதாமல் தவிர்த்து விலகி ஓடுகிறாள்.
இருந்தும் அந்ததாய் லோலாவை பார்த்து ‘அழகு’ காட்டுகிறாள்.

ரேபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
தனது குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறாள் தாய்.
நடை பாதை ஓரத்தில்,
குழந்தை படம் போட்ட புத்தகத்தை காட்டிக்கொண்டு நிற்கும் ஒரு பெண்மணியை பார்க்கிறாள்.
தாய் சர்ச்சில் உட்கார்ந்து ஜெபம் செய்கிறாள்.
கிருத்துவ மதத்தில் தீவிரமாக ஈடுபடுகிறாள்.
ஒரு பாதிரியார் அந்ததாய்க்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டு மத பிரச்சார நூல்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.  
‘ஆல்டர்நேட்டிவ் ஸ்கிரிப்ட் ரைட்டிங்’ என்ற ஆங்கில புத்தகத்தில்
‘ரன் லோலா ரன்’ விதிகளை உடைத்து கட்டப்பட்டிருப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள் .

Alternative Scriptwriting : Successfully Breaking the Rules \ 2007 [ Fourth Edition] \ English \ 
Ken Dancyger & Jeff Rush

திரைப்படக்கலை ஆசிரியர் Ken Dancyger பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...


 On = Run Lola Run = Pages = 143,152,153

Identification and empathy characterize our relationship with the main character in the classic genres.

In voice-oriented genres, ( in films like: RUN LOLA RUN .1998) identification and empathy must be replaced with emotional distance…

The main character in these genres is the vehicle for the story but not the emotional core.

Structure in (such) experimental narrative tends to the non-linear.

‘LOLA’ tries to save  her boyfriend, Mani, three times, each with a different outcome, 
in “Run Lola Run”. 
Because time is advanced or retarded, the outcome varies each time.

The ‘tone’ of (such a) experimental film (RUN LOLA RUN .1998) is important and tends to add to our involvement in the film…And “Run Lola Run” has energy to burn.

Playful about filmic conventions, Tom Tykwer uses a ‘plot device’ as an excuse for energizing the film.


 ‘ரன் லோலா ரன்’ படத்தின் முக்கியமான கருத்தாக்கமாக கீழ்க்கண்டவற்றை நாம் கருதலாம்...
Tom Tykwer  improvises in his own way and uses the character, 
structure and tone in the film to reach out to the audience..
and they are thrilled to make more direct contact with the writer and his ideas: 
( In “Run Lola Run” = ‘LOVE’ CAN DISTORT ‘REALITY’ in terms of ‘SPACE AND TIME’ TO IT’S (PSYCHO) ‘LOGICAL’ COMFORTS, OVER FATE AND  DESTINY.)

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 8, 2013

RUN LOLA RUN \ ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். \ பாகம் - 3


RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by Tom Tykwer \ Part - 3 
நண்பர்களே...
‘ரன் லோலா ரன்’ திரைப்படம் உருவான காலகட்டத்தில்...
ஹாலிவுட் ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ என்ற படத்தை உருவாக்கி 1998லேயே வெளியிட்டது.
இரண்டுமே திரைக்கதை பாணி  ஒத்திருந்தாலும், கட்டமைப்பு, உருவாக்கம் ஆகிய  விதங்களில் ‘ரன் லோலா ரன்’ காவியத்தன்மை பெற்றது.

 ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ பாதிப்பில் தமிழில் ‘12 பி’ உருவாகியது.
தரத்தில், இரண்டுமே ‘ரன் லோலா ரன்’ படத்தை நெருங்க முடியவில்லை.
மூன்று படங்களையும், புலி, பூனை,பூச்சாண்டி என்று  வகைப்படுத்தலாம்.

SLIDING DOORS \ 1998 \ English \ Directed by : Peter Howitt

12 B \ 2001 \ Tamil \ Directed by : Jeeva.


லோலா, தனது தாய் இருக்கும் அறையை தாண்டி ஓடுகிறாள்.
தாயார், போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.
எதிர் தரப்பில் பேசுவது, ஆடியன்சுக்கு சொல்லப்படவில்லை.
அறையில் இருக்கும் டிவியில், லோலா படிக்கட்டில் ஓடுவது கார்டூன் சித்திரமாக காட்டப்படுகிறது
.

இக்காட்சி மூன்று ஓட்டங்களிலுமே மாற்றமில்லாமல் காட்டப்படுகிறது.

அடுத்த ஷாட் லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் இறங்கி ஓடுவது ‘2டி கிராபிக்ஸ்’ காட்சிகளாக காட்டப்படுகிறது.


முதலாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில், 
மூன்று சுற்று ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
நாய் வெறி கொண்டு குலைத்து கடிக்க வருகிறது.
கடிபடாமல் தப்பித்து ஓடுகிறாள்.
அந்த பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.
கிராபிக்ஸ் காட்சி இத்துடன் முடிவடைகிறது.



இரண்டாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் 
இரண்டு சுற்று ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
லோலாவை பார்த்து ‘இளிக்கிறான்’.
தங்கப்பல் மின்னுகிறது.
நாய் வெறி கொண்டு குலைக்கிறது.
அவன் குறுக்கே காலை நீட்டி லோலாவை விழ வைக்கிறான்.
லோலா படிக்கட்டில் தடுமாறி விழுந்து உருண்டு பிறண்டு வருகிறாள்.
இத்துடன் கிராபிக்ஸ் காட்சி முடிவடைகிறது.

தரையோடு தரையாக விழுந்து கிடக்கிறாள்.
மெல்ல எழுந்து நொண்டிக்கொண்டே வந்து,
அந்த பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.

மூன்றாம் ஓட்டம் : லோலா ‘ஸ்பைரல்’ வடிவ படிக்கட்டுகளில் 
ஒரு சுற்று மட்டும் ஓடுவதாக காட்டப்படுகிறது.
படிக்கட்டின் மூலையில் நாயுடன் ஒருவன் இருக்கிறான்.
நாய் வெறி கொண்டு குலைக்கிறது.
லோலா நாயை ‘ஜம்ப்’ பண்ணித்தாண்டி ஓடுகிறாள்.
அந்தப்பில்டிங்கின் வெளிப்புறக்கதவை திறக்கிறாள்.
கிராபிக்ஸ் காட்சி இத்துடன் முடிகிறது.

நண்பர்களே...
இப்படம் யதார்தத்தை கூறுகிறதா...மறுக்கிறதா ?
என்ற கேள்வியோடு தேடாதீர்கள்.
விடை கிடைக்காது.
ஏனென்றால் வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 1, 2013

RUN LOLA RUN \ 'நேரம்' திரைப்படத்தின் மூலம் \ பாகம் - 1


RUN LOLA RUN \ 1998 \ GERMAN \ Directed by : TOM TYKWER.  
நண்பர்களே...
சமீபத்தில் வெளியான  'நேரம்' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை அமைப்புக்காக பாராட்டப்பட்டது.
‘ரன் லோலா ரன்’ &  ‘நேரம்’ திரைப்படங்களை பார்த்தவர்கள்...
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை நன்கு புரிந்திருக்க முடியும்.
 'நேரம்' படத்தின் கதையை ‘ரன் லோலா ரன்’ படத்தின் பாதிப்பில்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார்  'நேரம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
மூன்று விதமாக சொல்லப்பட்ட  'ரன் லோலா ரன்' திரைக்கதையை,
 ‘நேரத்தில்’ ஒரே நேர் கோட்டில் சொல்லி வித்தியாசப்படுத்தி விட்டார் 'இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்’.

 ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்திற்குள்,
உடனடியாக போவதற்கு பதிலாக...
சற்று வரலாற்றின் பக்கம் போய் விட்டு வருவோம்.
1880 ஆம் ஆண்டில்தான்  'கேமரா' கண்டு பிடிக்கப்பட்டு  'சினிமா' வளர்ந்தது.
சரியாக பத்து வருடம் கழித்து,
1890 ஆம் ஆண்டில்  'சைக்கோஅனாலைசிஸ்' [ Psychoanalysis ] கோட்பாட்டை,
‘சிக்மண்ட் பிராய்ட்’ [ Sigmund freud ] உலகிற்கு வழங்கினார்.
இதன் தாக்கம் இலக்கிய உலகிலும் நிகழ்ந்தது.

Modernist literature attempts to take into account changing ideas about reality developed by DarwinMachFreudEinsteinNietzscheBergson and others. 
From this developed innovative literary techniques such as stream-of-consciousness, interior monologue, as well as the use of multiple points-of-view. 
This can reflect doubts about the philosophical basis of realism, 
or alternatively an expansion of our understanding of what is meant by realism. 
So that, for example the use of stream-of-consciousness, 
or interior monologue reflects the need for greater psychological realism. 
World War I, and the disillusionment that followed, 
further shaped modernist views of human nature.

மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்...

இலக்கிய உலகில் நிகழ்ந்த தாக்கத்தை உலக சினிமாக்கள் பிரதிபலித்து வருகிறது .
அதில் குறிப்பிடத்தக்க ஒன்றே...‘ரன் லோலா ரன்’.



 ‘இயக்குனர் டாம் டிக்கர்’ உருவாக்கிய ‘ரன் லோலா ரன்’ 
ஒரு ‘போஸ்ட் மாடர்ன் பிலிம்’
இதன் கதை,திரைக்கதையை ‘பிராபப்பிலிட்டி தியரி’ [Probability Theory] அடிப்படையில் உருவாக்கி உள்ளார்.
வழக்கமான ஹாலிவுட் பாணியான ‘அரிஸ்டாட்டில் பார்மிலிருந்து’ விலகி
இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.

ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து காதலர்கள் ஜெயித்தார்களா? இல்லையா ?
என்பதை மூன்று விதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
மூன்றுக்குமே அடிப்படை ஒன்றுதான்.
அடிப்படையை முதலில் பார்ப்போம்.


மானி சிறிய அளவில் கிரிமினல் வேலைகளை செய்பவன்.
மானி, தன் காதலி லோலாவுக்கு போன் செய்கிறான்.
 ‘நீ சரியான நேரத்துக்கு வராததால்  எல்லாமே பாழாக போய் விட்டது’ எனக்கதறுகிறான்.


“ சிகரெட் வாங்க கடைக்கு போகும் போது தனது மொபட்டை ஒருவன் திருடிக்கொண்டு ஓடி விட்டான்.
அவனை பிடிக்கவே முடியவில்லை.
அதனால் வர முடியவில்லை” என சமாதானம் சொல்கிறாள் லோலா.

“ திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து பணம் கிட்டியது.
நீ வராததால் சப்-வே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ரயிலில் ஏறினேன்.
ரயிலுக்குள் காவலர்கள் வந்ததால் நைசாக இறங்கி நடந்தேன்.
அப்போதுதான் பணப்பையை ரயிலிலேயே விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதை எடுக்கத்திரும்பும் போது காவலர்கள் மடக்கி விட்டார்கள்.
அந்தப்பையை ரயிலில் இருந்த  ‘குப்பை பொறுக்குபவன்’ எடுத்து விட்டான்.
அவன் இந்நேரம் வெளிநாடு போயிருப்பான்.
இன்னும் 20 நிமிடங்களுக்குள் ஒரு லட்சம்  ‘மார்க்’ பணத்தை ஒப்படைக்காவிட்டால் ‘ரோனியின் மாபியா கேங்’ என்னைக்கொன்று விடும்” என்கிறான் மானி.

லோலா : எங்கேயாவது ஓடி விடு.

மானி : ரோனிகிட்ட இருந்து தப்ப முடியாது.
‘நீ முன்னாடி ஒரு தடவை சொன்னியே...
 “காதல் எல்லாம் செய்யும்னு”
இப்ப 1,00,000 மார்க்... 20 நிமிஷத்துல வேணும். 

லோலா : “சரி... நான் பணத்துடன் வருகிறேன். காத்திரு.” 

  மானி : “ 20 நிமிடத்துக்குள் வராவிட்டால் எதிரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க போகிறேன் ”

போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.
ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக அமருகிறது.

பணம் கிடைத்ததா ?
20 நிமிடத்துக்குள் மானியிடம் சேர்க்க முடிந்ததா ??

இதுதான் அடிப்படைப்பிரச்சனை.
இப்பிரச்சனைக்கு லோலா தீர்வு காண்பதை,
மூன்று விதங்களாக ‘பிராபப்பிலிட்டி தியரியில் ’ சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
அதை அடுத்த பதிவில் காண்போம்.

ரன் லோலா ரன் காணொளியை காண்க...

  

Apr 13, 2011

Der Baader Meinhof Komplex -2008[German] மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான்.

டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பற்றி எரிகிறது.தூதரகம் வெடித்து சிதறுகிறது.விமானம் கடத்தப்படுகிறது.வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகிறது.அதிகார வர்க்கத்தை குறி வைத்து சுடுகின்றன துப்பாக்கிகள்.இவையனைத்தும் நடந்தது பல்வேறு இடங்களில்...நாடுகளில்.ஆனால் நடத்தியது ஒரு சொல்...R.A.F
                      
R.A.F என்றால் என்ன?
இதைத்தான் படம் எடுத்து காட்டியிருக்கிறார் இயக்குனர் Uli Edel.
அதுவும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வேகத்தில்.
சும்மா படம் பறக்கிறது ஜெட் வேகத்தில்.
இத்தனை சூப்பர் பாஸ்ட் வேகத்தில் ஒரு உலகசினிமா நான் பார்த்ததேயில்லை.


R.A.F ஒரு மந்திரச்சொல் மாணவர்கள் மத்தியில்...
எழுபதுகளில் ஐரோப்பா முழுவதும் ஆட்டி படைத்த இயக்கம்.
R.A.F என்றாலே, அதிகாரவர்க்கம்.... ஆசனவாயில் ஆயிரம் டைனமைட் வெடித்தது போல் அலறுவார்கள்.ரஷ்யா மற்றும் சீனாவில் கம்யூனிசம் தோன்றி தழைத்த காலத்தில்....
அது  ஐரோப்பாவில் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய   தாக்கத்தை  ஏற்படுத்தியது.அதன் தீவிர பரிமாணம்தான் R.A.F. இதன் மிகப்பெரிய போராட்ட வரலாற்றின் கேப்ஸ்யூல் வடிவம்தான் இப்படம்.



ஈரான் மன்னர் ஷா  ஜெர்மன் வருகையின் போது அவரது எதேச்சதிகார அடக்குமுறையை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி...கோஷங்கள் எழுப்பி இளைஞர் கூட்டம் அற வழியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். பொறுக்குமா அதிகார வர்க்கம்?ஷாவின் பாதுகாப்பு படையும் ஜெர்மானிய காவல் துறையும் சேர்ந்து வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தி அப்பாவி மக்களை துவம்சம் செய்கின்றன.வெடித்த துப்பாக்கி ஒரு உயிரையே குடித்து விடுகிறது.இந்த அக்கிரமத்தை..அராஜகத்தை எழுத்தில் பதிவு செய்கிறார் ஒரு பெண் எழுத்தாளர்.அவர்தான்   உரிக்கா மெயினாப்.

இந்த வன்முறைக்காட்சிகளில், ஒளிப்பதிவும்...எடிட்டிங்கும்...பின்னணி இசையும் போட்டி போட்டு நம்மை பதற வைக்கிறது.

வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியம்...சேகுவேரா  என்கவுண்டர்... கென்னடி படுகொலை என பல சரித்திர நிகழ்வுகளை இப்படத்தில் மிகச்சரியான இடத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார் இயக்குனர்.

ஷா வருகை வன்முறைப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, நடத்தும் ஆப்பரேசன்கள் அனைத்திலும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. முதல் நிலைப்போராளிகள் கைதாகி சிறையில் சீரழியும்போது இரண்டாம் நிலைப்போராளிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள்.இருந்தாலும்  தத்துவரீதியான....ஆனால்  போர்க்குணம் வாய்ந்த இந்த ஆயுதப்போராட்டம் அடக்கப்படுகிறது.

இப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும்  பார்க்க வைத்தால் போதும்.நம்ம ஊரு ஊழல்...அராஜக அரசியல்வாதிகளை அவர்களே களையெடுத்து விடுவார்கள்.