Nov 28, 2012

சாருவுக்கு ‘சினிமாவும்’ தெரியாது.

நண்பர்களே...

எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் குருதிப்புனல் படத்தை பற்றியும்,
கமலை பற்றியும் அபத்தமாக பேசிய உரையை காணொளியாக காண நேரிட்டது.
அப்பதிவை இட்டவரே,
செப்டம்பர் 30 அன்று ஒரு மொட்டை மாடியில் நடந்த
‘மாபெரும் பொதுக்கூட்டத்தில்’ சாரு பேசியதை அன்றே ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் அந்த அபத்தத்தை காணொளியாக போட்டதன்
‘உள் நோக்கம்’ அப்பட்டமாக தெரிகிறது.


சாரு  ‘குருதிப்புனல்’ படத்தை,வெளியான காலத்தில் இருந்து எதிர்த்து வருகிறார்.
இப்போதும் குருதிப்புனலை மட்டரகமாக பேசியதைக்கேட்டதும்
‘இந்த மனுஷன் இன்னுமா வளரவில்லை’ என ஆச்சரியப்பட்டேன்.

குருதிப்புனல் பற்றி சாருவின் பொய் பரப்புரையின் ஒரு முள்ளையாவது முறிப்பதே இப்பதிவின் நோக்கம்.

இந்தியத்திரை மேதைகளுள் ஒருவரான கோவிந்த் நிகாலனி உருவாக்கிய ‘துரோக்கால்’ என்ற திரைப்படத்தின் கதையை வாங்கி கமல் திரைக்கதை அமைத்து வெளியிட்ட படம்தான்  ‘குருதிப்புனல்’.
இயக்கம் & ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.
பாடல்கள் இல்லாமலும், முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ [ 4 டிராக்] ஒலியுடனும் தயாரித்து வெளியிட்டார் கமல்.

குருதிப்புனல் நக்சலைட்டுகளை மோசமாக சித்தரித்து உள்ளது என நோட்டிஸ் ஒன்றை தயார் செய்து, தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்தாராம் சாரு.
கமலை திட்டி, அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கலாட்டா செய்தாராம்.
கமல் ரசிகர்கள் போட்டு சாத்தி விட்டார்களாம்.
அன்று கமல் ரசிகர்கள் கொடுத்த அடிக்கு இன்று வரை கதறிக்கொண்டு இருக்கிறார் போலும்.

சாருவின் அபத்த உரையிலிருந்து ஒரு துளி விஷம்...

\\\ சாரு : குருதிப்புனல் படத்தில் நக்சலைட் ஒருவன் தன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் பணத்தை செருகிச்செல்வான்.
இப்படி ஒரு காட்சி \\\

நக்சலைட் இயக்கத்தில் மிக உயர்வான பொறுப்பில் இருப்பவன்,
டூரிங் தியேட்டர் திரைக்குப்பின்னால் தனது காதல் மனைவியை சந்தித்து பேச வருவான்.
அவன் மிக அழகாக இருப்பான்.
அவன் காதல் மனைவி தோற்றத்தில் மிகச்சாதரணமாக இருப்பாள்.
ஆனால் நக்சலைட் போராளிக்கு,  அவள் ஐஸ்வர்யா ராய் போல் தோற்றமளிப்பதாக அந்த காரெக்டை மிக உயர்வாக சித்தரித்து இருந்தார் கமல்.
அரசியல்,இலக்கியம், வாழ்க்கை என எல்லாவற்றிலுமே
வெளித்தோற்றத்தில் மயங்காமல்  ‘உள் அழகை’தரிசிப்பவர்கள், 
‘நக்சலைட் போராளிகள்’ என்ற உண்மையை பறை சாற்றவே
அக்காட்சியும், அந்த காரெக்டரும் படைக்கப்பட்டிருக்கிறது.
அவள் கொண்டு வந்த மீன் குழம்பை,
போராளி ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ஒன்றே போதும்.
அவள் வெக்கப்பட்டு சிரிக்கும் போது, அப்படியே குழைவான் போராளி.
கவுதமியிடம் கமல் குழையும் காட்சி ஒன்று வரும்.
எனக்கு அந்தக்காட்சி சரியாக நினைவில் இல்லை.
காரணம், போராளியின் காதல் காட்சியையே எனது மூளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
எனவே, நக்சலைட் போராளியின் காதல் காட்சி  ‘ஷாட் பை ஷாட்’
இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது.
காதலும் காமமும் கலந்து கவிதையாக ஜொலித்தக்காட்சியை எப்படி மறக்க முடியும் ?

ஹலோ மிஸ்டர் சாரு,
முதலில் பெண்களின் ஜாக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள்.
குருதிப்புனலில், இந்து போலிஸ் ஆபிசரை விட உயர்வாக
இஸ்லாமிய போலிஸ் ஆபிசர் படைக்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியும்.
இஸ்லாமியச்சிறுமியின் கற்பு பறி போவதை தடுக்க, ஒரு இந்துப்பெண் தனது கற்பை பறி கொடுக்க முன் வரும் தியாகம் புரியும்.

குருதிப்புனல் படம் நக்சலைட்டை தவறாக சித்தரிக்கிறது என்ற
பொய் பிரச்சாரத்தை கேள்விப்பட்டு கமல் அப்போது மிகவும் வருத்தமுற்றார்.
“ எனது பேனாவில் ஒரு துளி மை கூட அவர்களை தவறாக சித்தரிக்கவில்லை.
மாறாக படத்தில் எனது காரெக்டர்தான்  'சோரம்' போவதாக சித்தரித்திருக்கிறேன்.
கடமையில் தவறாத கண்ணியவான்களாக  நாசர், அர்ஜூன் காரெக்டர்களை
படைத்துள்ளேன்” என குறிப்பிட்டார் கமல்.

திரு. சாரு அவர்களே...
நீங்கள் பெண் அவயங்களை பச்சையாகக்குறிப்பிட்டு  ‘சரோஜா தேவி’ படைப்புகளை உங்கள் பக்தர்களுக்கு படையுங்கள்.
உங்களுக்கு தெரியாத சினிமா பற்றி பேசவோ எழுதவோ செய்யாதீர்கள்.
ஏற்கெனவே பல விவகாரங்களில் உடைந்த மூக்கு கொஞ்சமாவது மிஞ்சட்டும்.

நண்பர்களே...
சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட குருதிப்புனலுக்கும் நிறைய படித்து
ஆய்வு செய்துதான் எழுத முடியும்.
நீங்கள் ஊக்கமளித்தால் எழுதுகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Nov 27, 2012

கமல் நிகழ்த்திய ‘உன்னதங்கள்’ \ Hey Ram \ 2000 \ India \ ஹேராம் = 031

நண்பர்களே...
கடந்த ஹேராம் பதிவை படித்து விட்டு பதிவர் ஒருவர் போன் செய்து சில சந்தேகங்களை எழுப்பினார். [ அவர் பெயர் வேண்டாமே ]
கிட்டத்தட்ட இந்தப்பதிவில் நான் எழுத திட்டமிட்டிருந்தவைகளில் பெரும்பாலானவைகளை கேள்விகளாக்கி விட்டார்.
அவரின் கேள்விக்கான பதில்கள் அனைத்தும் கமல் நிகழ்த்திய உன்னதங்கள்.
எனவே,அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் பாணியில் இப்பதிவை வடிவமைத்து விட்டேன்.


ஹேராமின் ஆரம்ப பதிவில்,
ரோலன் பார்த்தை [ ROLAND BARTHES ] குறிப்பிட்டிருந்தேன்.
இப்பதிவை உள் வாங்க ரோலன் பார்த்தை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
ஆங்கில இலக்கியங்களையும், அதிலுள்ள கோட்பாடுகளையும், தத்துவங்களையும் ஆய்வு செய்தவர்களில் மிக முக்கியமானவர்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  ரோலன் பார்த்.

ஒரு புகைப்படத்துக்கு...ரோலன் பார்த் ‘அர்த்தங்களை கட்டமைப்பதை’
[ Constructing Meaning ] பார்ப்போம்.

Roland Barthes: Mythologies

Barthes writes:

The whole of France is steeped in this anonymous ideology: our press, our cinema, our theatre, our popular literature, our ceremonies, our Justice, our diplomacy, our conversations, our remarks on the weather, the crimes we try, the wedding we are moved by, the cooking we dream of, the clothes we wear, everything, in our everyday life, contributes to the representation that the bourgeoisie makes for itself and for us of the relationships between man and the world.


Paris Match photo of black soldier saluting the flag:I am at the barber's, and a copy of Paris-Match is offered to me. On the cover, a young Negro in a French uniform is saluting, with his eyes uplifted, probably fixed on a fold of the tricolour. All this is the meaning of the picture. But, whether naively or not, I see very well what it signifies to me: that France is a great Empire, that all her sons, without any colour discrimination, faithfully serve under her flag, and that there is no better answer to the detractors of an alleged colonialism than the zeal shown by this Negro in serving his so-called oppressors. I am therefore again faced with a greater semiological system: there is a signifier, itself already formed with a previous system (a black soldier is giving the French salute); there is a signified (it is here a purposeful mixture of Frenchness and militariness); finally, there is a presence of the signified through the signifier.ரோலன் பார்த்தை அறிந்திருந்ததால்தான்,
 கமல் ஹேராமில் காட்சிக்கு காட்சி...
 ‘ஷாட் பை ஷாட்’ அர்த்தங்களை புதைத்திருக்கிறார்.


போன பதிவில் பார்த்த காட்சியை இப்பதிவில்  ‘ரோலன் பார்த் பாணியில்’
அர்த்தங்களை கட்டமைத்து பார்ப்போம்.

பதிவரின் கேள்வி : சாமான் ஏற்றப்பட்ட வண்டி ' பச்சை வண்ணத்தில்' இருக்க காரணம் என்ன ?

சாகேத் ராம் கல்கத்தா வீட்டை காலி செய்து புறப்படுகிறான்.
வீட்டு சாமான்கள் ஏற்றப்பட்ட வண்டி  ‘கரும் பச்சை வண்ணத்தில்’ இருக்கிறது.

இந்துவாகிய ராம், ‘கரும் பச்சை வண்ண’ வண்டியை வாடகைக்கு அமர்த்தியிருப்பது...
#   'இஸ்லாமியர் வண்டி' சாலையில் ஓடும்
சகஜ நிலைமைக்கு திரும்பி விட்டது.
ராமின் மனதில்  ‘இஸ்லாமியர் மேல் இருந்த பழி உணர்ச்சி ’
முடிந்து நீங்கி விட்டது என  உணர்த்துகிறது.

பதிவரின் கேள்வி : கஷ்டப்பட்டு பியானோவை இறக்கும் போது,
ராம் அவசர அவசரமாக ஓடக்காரணம் என்ன ?

இக்கேள்விக்கான பதிலை...எளிதில் விளக்குவது கடினமான சவால்.

பியானோவை இறக்கும் போது ‘ டாப் ரஷ்யன் ஆங்கிளில் ’
பியானோவை ‘ஃபோர்கிரவுண்டில்’ பிரம்மாண்டமாகவும்...
சாகேத்ராமை ஃபேக்கிரவுண்டில்’ சிறிதாகவும்...
ஒரு ஷாட் கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

காதல் வாழ்க்கையின்’ நினைவுச்சின்னமாக பியானோவை தன்னோடு எடுத்துச்செல்ல விழைகிறான் ராம்.

பியானோ இறக்கப்படும்போது ஆபத்தான நிலையில் ஊசலாடுகிறது.

கலாசி தொழிலாளர்கள் : பாத்து பாத்து...மோதப்போகுது ! 
[ Watch it!... lt's going to crash! ]

‘மோதப்போகுது’ என்ற தொழிலாளர்களின்  ‘எச்சரிக்கை குரல்’ ,
ராமை நிலை குலைய வைக்கிறது.

இப்போது பியானோ இறக்கப்படும் போது...
1 நடக்கின்ற நிஜ நிகழ்வில்  ‘ஏதோ’ முறிகின்ற நிஜ ஒலியும் +
2 ராமின் நனவோடையில் [ Stream Of Consciousness ] 
பியானோவில் தலை மோதும் போது எழுந்த
'அபஸ்வர நனவோடை ஒலியும்'
‘கண நேரத்திற்கு’ ஒருங்கே ஒலிக்கின்றன.

 ‘கண நேரத்திற்கு’ = Psychological Realism = Sight & Sound
பியானோவில் எழுந்த அபஸ்வர ஒலியாக ராமின் மனதில் எழுவது =
அபர்னா கற்பழிக்கப்படும் போது,
பியானோவில் தான் கட்டப்பட்டு கையறு நிலையில் கிடந்தது...+
பியானோ கட்டைகளில் தலை மோதியது...+
அதனால் எழுந்த பியானோ அபஸ்வர ஒலி...
சுக்கு நூறாகி விட்டது வாழ்க்கை.
இவை எல்லாமே ராமின் மனதில் ஓடியிருக்க வேண்டும்.

நிஜ ஒலி + நினைவு கூறும் நனவோடை ஒலி = இரண்டு ஒலிகளையும் ஒருங்கே ஒலிக்க வைத்து பார்வையாளர்களுக்கு சவால் வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.


‘நனவோடை ஒலி’ ராமை புரட்டிப்போட்டிருக்க வேண்டும்.
எனவேதான்  ‘எதுவுமே வேண்டாம்’ என முடிவு செய்து  ‘எல்லாவற்றையும்’ விட்டு விட்டு ராம்  ‘அப்ரியாக்‌ஷனாக’
[ ABREACTION ] புறப்படுகிறான்.
சாகேத்ராம் - அபர்னா மண வாழ்க்கை சுக்கு நூறாகி விட்டது.
SELF - PITY AND  'UNFORTUNATE' SERENDIPITY ? SURVIVAL INSTINCTS .

பதிவர் கேள்வி : டாக்ஸி டிரைவரிடம் திடீரென்று தமிழில் பேசக்காரணம் ?

\\\ ராம் : கெஞ்சுகின்ற குரலில் ] டிரைவர் சலோ .

டிரைவர் : மோல் பொத்தர் கேலா...[ Your Luggage...]

ராம் : ஐயா...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்யா...
என்னை இங்கே இருந்து கொண்டு போய்டு...

டிரைவர் : ஜீ...

ராம் : ப்ளீஸ் கெட் மீ அவுட் ஆப் ஹியர்...ப்ளீஸ்...\\\

ராம் ‘மைண்ட் அப்ரியாக்‌ஷனாக’ செயல்படுவதால்  'பெங்காலி டிரைவரிடம்' தாய் மொழியான தமிழில் பேசுகிறான்.
 எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் ‘அப்ரியாக்‌ஷன் சிச்சுவேஷனில்’
தாய் மொழிதான் பிரதானமாக செயல்படும்.

[ இரண்டாம் உலகப்போரில் கைது செய்யப்பட்ட உளவாளிகளை  ‘அப்ரியாக்‌ஷனாக’ செயல்பட வைத்து,
தாய் மொழியில் பேச வைத்து...
உளவாளி எந்த நாட்டை சேர்ந்தவன் ? என்பதை கண்டு பிடித்தார்கள்.]

பதிவர் கேள்வி : பியானோ கீழே விழுந்த பிறகு திரை முழுவதும் இருள் பரவுவதற்கு என்ன அர்த்தம் ?

ராமன் காட்டுக்கு போவதை காணச்சகியாமல்,
அயோத்தி  மாநகர கொடிகளெல்லாம் தலை குனிந்து கிடந்தன என கம்பர் வர்ணிப்பதைப்போல...
உடையவன் ராம் தன்னை புறக்கணித்துப்போனதால்,
பியானோவும் கீழே விழுந்து இறந்து போகிறது.

பியானோ கீழே விழுந்து நொறுங்கிய பிறகு,
மெல்ல திரை  ‘பிளாக் டிரான்ஸிசன் ’ [ BLACK TRANSITION ] ஆகிறது.

பொதுவாக இயக்குனர்கள் காலத்தை கடக்க ‘பிளாக் டிரான்ஸிசன்’ யுக்தியை மவுனப்படங்களின் காலம் முதல் பயன்படுத்தி வந்தார்கள்.
இங்கே ‘நனவோடையில்’ கதாபாத்திரம் கடந்த காலத்தை கடக்க முயற்சித்தது என,
 ‘பிளாக் டிரான்ஸிசன்’ பழைய உத்தியை,
புதிய பாணியில் செயல் பட வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.

அதே நேரத்தில், ‘நடிகர் கமல்’ பாத்திரத்தின் தன்மைக்கு மேல் போகவில்லை.
ஆனால் ‘இயக்குனர் கமலோ’ மரபை மாற்றி புதிய பாணியில் அர்த்த புஷ்டியுள்ள ஷாட்களை  அடுக்கி வைத்திருக்கிறார்.

டிராமாவில், நடிகருக்கு நடிப்புத்திறமையை காட்ட வாய்ப்பு மிக மிக அதிகம்.
சினிமாவில்,  'MISE -EN- SCENE' சிச்சுவேஷனில்தான் நடிக்க ஸ்கோப் கிடைக்கும்.
ஹேராமில், ரஷ்ய திரை மேதை  ‘ஐஸன்ஸ்டைன் மாண்டேஜ் தியரியை’ தனது மெத்தட் ஆக்டிங்கிற்குள் கொண்டு வந்து ஷாட் பை ஷாட் கொடுத்திருக்கிறார்  ‘நடிகர் கமல்’.
அதை கச்சிதமாக தொகுத்து ‘ஸ்கீரின் ஆக்டிங்காக’
ஒரு படி மேல் உயர்த்தி தந்திருக்கிறார் ‘ இயக்குனர் கமல்’.
சான்ஸே இல்லை கமல்ஜீ ! கிரேட் !!

திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த ரஷ்ய மாமேதைகளுள் முக்கிய ஒருவரான ‘ஐஸன்ஸ்டைன்’ வகுத்த  'மாண்டேஜ் தியரியில்’ வரும் இலக்கணத்தை எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

ஒரே ஷாட்டுக்குள் :
1 காட்சி ரூபத்தில் ஒரு அர்த்தம் கொடுக்கும்.
2 ஒலி ரூபத்தில் ஒரு அர்த்தம் கொடுக்கும்.
3 இரண்டும் இணைந்தோ அல்லது முரண்பட்டோ மற்றொரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.

இரண்டு ஷாட்டுகளுக்கு இடையில் :
  'A' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும்,
 'B' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும் தொகுக்கும் போது...
 'C' என்ற புதிய அர்த்தம் உருவாகும்.

இந்த இலக்கணங்களை இக்காட்சியில்  ‘நடிகர் கமலின்’ நடிப்போடு
பொருத்திப்பாருங்கள்.

பதிவர் கேள்வி : அங்குசத்தை தும்பிக்கையில் தூக்கிச்செல்லும் 
 ‘மத யானையை’ பார்த்து ராம் கண்களை மூடிக்கொள்வது ஏன் ?

 ‘கல்கத்தா கலவரம்’ மற்ற பிரதேசங்களுக்கு பரவியது, என்ற சரித்திரத்தின் கசப்பான பக்கங்களை...
 ‘பிளாக் டிரான்ஸிசன்’ முடியும் போது,
‘மத யானை’ அங்குசத்தை தூக்கி பிடித்து நடந்து போகும் ஷாட்டைப்போட்டு அர்த்தப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கமல்.

காரிலிருந்து ராம் மத யானையை பார்த்ததும்...
‘நனவோடையில்’ ஆயிரக்கணக்கான அபர்னாக்களும்,
அப்பாவி முஸ்லீம்களும் அநியாயமாக பலியாகப்போவதை  கண்டு
நடுங்கி கண்ணை இறுக மூடுகிறான்.

பதிவர் கேள்வி : இரண்டாவதாகவும் ‘பிளாக் டிரான்ஸிசன்’ வருகிறதே ஏன் ?
யானையை கரிய உருவத்தை, குளோசப்பில்  ‘கண நேரம்’ காட்டி...
மெதுவாக மீண்டும் திரையை  ‘பிளாக் டிரான்ஸிசன்’ செய்கிறார்
இயக்குனர் கமல்.
இங்கே  ‘பிளாக் டிரான்ஸிசனை’ காலத்தை கடக்க பயன் படுத்தி உள்ளார்  ‘இயக்குனர் கமல்’.
அதுவும் ஆறு மாத காலத்தை கடந்ததை சாகேத்ராம் டயலாக் மூலமாகவும்,
ராமின் ஏகமாய் வளர்ந்த முடி, தாடி, மீசையின் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம்.

ராம் : ம்...என் பொண்டாட்டியும்,தோப்பனாரும் செத்து ஆறு மாசங்கூட ஆகல.
அதுக்குள்ள பொண்ணு பாக்க போய்ண்ருக்கேன். 

 'There is a presence of the signified through the signifier'.

மன்னார்குடியில் ராம் பொண்ணு பார்க்க காரில் போகும் காட்சியை மட்டும்,
ஹேராம் ரீலிசுக்கு முன்பே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அதைப்பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

Nov 25, 2012

ரம்யா கிருஷ்ணன் கைதாவாரா ?

நண்பர்களே...
தினத்தந்தியில் [ 25- 11- 2012 ]
 ‘ எனது திருமணத்துக்காக நகை திருடினேன்’
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் திருடிய வேலைக்காரி வாக்குமூலம்
- என தலைப்பிட்ட செய்தியை படித்தேன்.


அதிலுள்ள முக்கிய அம்சம்...
ஆந்திர மாநிலம் குண்டூரைச்சேர்ந்த ஜோதி என்ற 21 வயதுப்பெண்,
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்திருக்கிறார்.
கடந்த 18ம் தேதி ஊருக்கு போய் விட்டார்.
அவர் சென்றதும் வீட்டு பீரோவில் இருந்த 30 பவுண் நகை திருட்டு போயிருந்ததைக்கண்டு ரம்யா கிருஷ்ணன் பெற்றோர் கண்டு பிடித்து போலிசில் புகார் செய்தனர்.

போலிசார் ஜோதியை கைது செய்து விசாரித்தனர்.
ஜோதி போலிசாரிடம் சொன்ன வாக்குமூலம்...
நான் 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.
எனக்கு சம்பளம் கிடையாது.
சாப்பாடு போட்டு ,துணிகள் வாங்கித்தருவார்கள்.
ஊருக்கு போகும் போது பணம் தருவார்கள்.
எனது வீட்டில் எனக்கு திருமணம் செய்ய திட்டமிட்டனர்.
இதற்கு பணம், நகை தேவைப்பட்டது.
இதனால் ரம்யா கிருஷ்ணன் வீட்டிலிருந்து சிறுக சிறுக நகைகளை திருடினேன் ” .

ஜோதி 14 வயதில் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால்,
ரம்யா கிருஷ்ணன் மீது.
‘குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டப்படி’
[ CHILD LABOUR PROHIBITION & REGULATION ACT 1986 ] நடவடிக்கை எடுக்கலாம்.

The Child Labour (Prohibition and Regulation) Act, 
1986 is one the most debated acts regarding children in India. 
It outlines where and how children can work and where they can not. 
The provisions of the act are meant to be acted upon immediately after the publication of the act, 
except for part III that discusses the conditions in which a child may work. 
Part III can only come into effect as per a date appointed by the Central Government (which was decided as 26th of May, 1993).

The act defines a child as any person who has not completed his fourteenth year of age. 

7 ஆண்டுகளாக முறையான சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கி ‘உழைப்பை திருடியதற்காக’ ,
 ‘ தொழிலாளர் சட்டப்படி’ குற்றம் சாட்டி நிரூபித்து ரம்யா கிருஷ்ணனுக்கு தண்டனை வழங்கலாம்.
இந்திய தொழிலாளர் சட்டம் பற்றிய விக்கிப்பீடீயா செய்தி....

Individual labour law

All India Organisation of Employers points out that there are more than 55 central labour laws and over 100 state labour laws.[1]
  • The Contract Labour Act (1970) aims at regulating employment of contract labour so as to place it at par with labour employed directly.[4] Women are now permitted to work night shifts too ( 10pm to 6am).[4]
  • Minimum Wages Act 1948
  • Weekly Holidays Act 1942
  • The Payment of Wages Act, 1936
  • The Workmen’s Compensation Act, 1923
திருடியதாக  குற்றம் சாட்டப்பட்ட ஜோதி மீது,
பாய்ந்து நடவடிக்கை எடுத்த போலிஸ்...
ரம்யா கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா ?
சட்டம் ஒரு இருட்டறை என்ற வாதத்திற்கு வலு சேர்க்குமா ?

நடிகை ரம்யா கிருஷ்ணன்  ‘பிராம்மண’ வகுப்பை சார்ந்தவ்ர்.
மேலும் திரு.சோ அவர்களது அக்கா மகளும் ஆவார்...
என்ற செய்தியைச்சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

Nov 23, 2012

மதங்கொண்ட வேழம் \ HEY RAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 030

நண்பர்களே...
‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த  ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும்.
ஒரு ராகத்தின் மொத்ததிலிருந்துதான் ஒரு ஸ்வரத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு வாக்கியத்தின் மொத்ததிலிருந்துதான் ஒரு சொல்லை விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த, அடிப்படையில்தான், ஒரு மொத்தப்படத்தில்  ‘தனித்த ஒரு ஷாட்டின்’ பங்கு என்பதும் அமைந்துள்ளது.
‘தனித்த ஷாட்டுகள்’ தங்களுக்குள்ளே மறைந்திருக்கக்கூடிய அர்த்தங்களை
பொதிந்து வைத்திருக்கலாம்.
இந்த அர்த்தங்களெல்லாம் இன்னொரு ஷாட்டுடன் இணைக்கப்படும் போதுதான் மின்பொறி போல வெளிப்படும்’ - என  திரை மேதை ‘பேலபெலாஸ்’ தான் எழுதிய  ‘சினிமா கோட்பாடு’ என்ற நூலில் குறிப்பிட்டிருப்பார்.
இந்த இலக்கணத்துக்கு, இயக்குனர் கமல் எழுதிய விஷுவல் உரையை இப்பதிவில் காண்போம். ஹேராமில்,
ராம் இப்போது கல்கத்தா வீட்டை காலி செய்து புறப்படத்தயாராகிறான்.
ராமின் பொருட்கள் திணிக்கப்பட்ட வாடகைக்கார் தயாராக நிற்கிறது.
இதர தட்டு முட்டு சாமான்கள் அனைத்தும் இன்னொரு வண்டியில் ஏற்றப்பட்டு இருக்கிறது.
அந்த வண்டியின் வர்ணம்  ‘கரும் பச்சை நிறத்தில்’ இருக்கிறது.
 ‘கரும் பச்சை வண்டியில்’ தலையை கவிழ்ந்து கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருக்கும் ராம்,
தொழிலாளர்களின்  கூச்சல் கேட்டு நிமிர்கிறான்.

கலாசி தொழிலாளர்கள் : Slowly...Slowly...

பால்கனியிலிருந்து, பியானோ இறக்கப்படுவதை கவலையோடு கவனிக்கிறான் ராம்.
பியானோஆபத்தான நிலையில் ஊசலாடுகிறது.

கலாசி தொழிலாளர்கள் : Watch it!... lt's going to crash!

அதிலிருந்து எழும்  'அவல ஓசை' ராமை நிலை குலைய வைக்கிறது.
ராம் - அபர்னா இணைந்து வாசித்த காதல் புத்தகமல்லவா அந்த பியானோ!

பியானோ உடைந்து நொறுங்குவதை காணப்பிடிக்காமல் பதட்டத்துடன்  அவசரமாய் காரில் ஏறி...

ராம் : [ கெஞ்சுகின்ற குரலில் ] டிரைவர் சலோ .

டிரைவர் : மோல் பொத்தர் கேலா...[ Your Luggage...]

ராம் : ஐயா...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்யா...
என்னை இங்கே இருந்து கொண்டு போய்டு...

டிரைவர் : ஜீ...

ராம் : ப்ளீஸ் கெட் மீ அவுட் ஆப் ஹியர்...ப்ளீஸ்...
உடைந்து நொறுங்கிய உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளில் கண்ணீர் கசிந்திருப்பதை காண முடிகிறது.

கார் நகர்கிறது.
பியானோ தடாலென விழுந்து, தன் கடைசி சங்கீதத்தை சிதறுகிறது...
பியானோவும் இறந்து விட்டது.
திரை முழுக்க இருள் பரவுகிறது.


திரையில் இருள் விலகி...
 மதம் கொண்ட யானை தும்பிக்கையில் அங்குசத்தை தூக்கி பிடித்துக்கொண்டு வேகமாக நடை போடுகிறது.
ராம் காருக்குள்ளிருந்து யானையை உற்று பார்க்கிறான்.
இக்காட்சிக்கு பின்னணியாக ‘ஆழ்வார் பாசுரம்’ ஒலிக்கிறது.

‘பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை
மாவுத்தன் அவனும் இன்றி
கதம் கொண்டு துளைக்கும் வெய்ய
அங்குசம் அதுவும் இன்றி...’

On foot my life proceeds
without a mahout. 
Nor goad to pierce
and direct me about.

 ‘மத யானை’ தும்பிக்கையில் அங்குசத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு  
 நடை போடுகிறது = வன்முறை அருகாமை பிரதேசங்களுக்கு பரவியது.

*********************************************************************************
கல்கத்தா கலவரத்தின்,  ‘தொடர் வினையாக’ நவகாளியிலும், பீகாரிலும்,மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளிலும் வன்முறை நிகழ்ந்தது.
விக்கிப்பீடியாவில் விபரம் காண்க.
நவகாளி கலவரம் பற்றி தெரிந்து கொள்ள... 

பீகார் மற்றும் இதர பகுதிகளில் பரவிய கலவரங்கள் பற்றி விக்கிப்பீடீயா செய்திகள் இதோ...
As a reaction to the Noakhali Genocide, a riot rocked Bihar towards the end of 1946.
Between 30 October and 7 November, mass communal massacres in Bihar brought Partition closer to inevitability.
Severe violence broke out in Chhapra and Saran district, between 25 and 28 October.
Very soon Patna, Munger and Bhagalpur also became the sites of serious turbulance.
Begun as a reprisal for the Noakhali riot,
it was difficult for authorities to deal with because it was spread out over a large area of scattered villages,
and the number of casualties was impossible to establish accurately: "According to a subsequent statement in the British Parliament,
the death-toll amounted to 5,000.
The Statesman's estimate was between 7,500 and 10,000;
the Congress party admitted to 2,000;
Mr. Jinnah claimed about 30,000."
However, By 3 November, the official estimate put the figure of death at only 445.
According to some independent source, the death toll was around 8000 human lives.

Some worst riot also took place in Garhmukteshwar in United Provinces where a massacre occurred in November 1946 in which "Hindu pilgrims, at the annual religious fair,
set upon and exterminated Muslims,
not only on the festival grounds but in the adjacent town" while the police did little or nothing; the deaths were estimated at between 1,000 and 2,000.
*********************************************************************************
 ‘அங்குசம் அதுவும் இன்றி’ என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்கும் போது யானையின் கரிய உடல் மட்டும் திரையில் வியாபித்திருக்க...
ராம் கண்களை இறுக மூட...
மெல்ல இருள் திரை முழுவதும் பரவுகிறது.

இருள் விலகி,
பெருமாள் கோவிலின் கோபுரம் குளோசப்பில் தெரிகிறது.
பின்னணியாக கீழ்க்கண்ட வரிகள் மந்திரம் போல் ஒலிக்கிறது.
கூடவே இளயராஜாவின் மங்களகரமான இசையும் கலக்கும் போது அமைதியான சூழலை உணர முடிகிறது.

மதங்கொண்ட வேழம் போல
திரிகின்றேன்... பண்டு நான்கு
விதம் கொண்ட மறைகள் போற்றும்
அரங்கமா நகரு ளானே’.  

Like a demented rogue elephant.
l roam. 
O'lord of Sriranga praised in
the four Vedas since times unknown. 
Unto thee l surrender.


காமிரா, 
‘வைஷ்ணவ நாமம்’ கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரத்தை  ‘அண்மைக்காட்சியாக’ காட்டி,
மெ
ல்


கீ
ழேங்
கி,
 ‘பெருமாள் உற்சவ மூர்த்தியாக’ நகர்வலம் புறப்படுவதை காட்சிப்படுத்துகிறது.
யானை அமைதியாக நின்று கொண்டு இருக்கிறது.

வடக்கே வீசிய வன்முறைப்புயலை,
மதயானை மூலம் காட்சிப்படுத்தி...
தெற்கே வீசிய தென்றலை...
குறிப்பாக தமிழகத்தில் அமைதியான சூழல் இருந்ததை வேறொரு யானையின் மூலமாகவே காட்சிப்படுத்தியது  இயக்குனர் கமலின் அசகாய வேலை.

மதம் பிடித்த யானை ஷாட்டிலிருந்து...
அமைதியான யானை ஷாட்டிற்கு காட்சியை தொகுத்த விதம் 
 ‘கன்செப்சுவல் பார்ம் கட்டிங்’ [ Conceptual Form Cutting ] எனப்படும்.
இது பற்றி விளக்கமாக  ‘ஹேராம் = 018’ பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.


அடுத்த பதிவில் சந்திப்போம்.

இக்காட்சி காணொளியில் கிடைத்தால் தெரியப்படுத்தவும்.Nov 21, 2012

மணிரத்னம் V \ S கோவைத்தம்பி...யார் சரி ?

நண்பர்களே...
 ' CONVERSATION WITH MANI RATHNAM' என்ற நூலை...
திரு.பரத்வாஜ் ரங்கன் [ஹிந்து பத்திரிக்கையாளர்] உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.
திரு. மணிரத்னத்தை பேட்டி கண்டு...அவரது படைப்புகளை பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதியிருக்கிறார் நூலின் ஆசிரியர்..


வந்தது வினை...எதிர்வினை.
இந்த மாதம்...தயாரிப்பாளர்கள் V \ S படைப்பாளிகள் மாதம் போல் இருக்கிறது.
திரு.முக்தா சீனிவாசனின் தொடர்ச்சியாக கோவைத்தம்பி பொங்கியிருக்கிறார்.
தினத்தந்தியில் [ 20 - 11 - 2012 ] அவரது அறிக்கை வெளி வந்திருக்கிறது.

கோவைத்தம்பியின் அறிக்கையிலிருந்து....
"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. 
அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 
28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். 

எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். 
அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். 

சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. 
என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். 
ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," .\\\ சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது \\\ கோவைத்தம்பியின் இவ்வரிகளை...மவுன ராகம், நாயகன்,அஞ்சலி, இதயத்தை திருடாதே, தளபதி,ரோஜா, பம்பாய், அலைபாயுதே,உயிரே, குரு, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள்...
 “அடங்கப்பா...இது உலக காமெடிடா” என சிரித்து கும்மாளமிட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கிறதாம். 

\\\ அந்த காலகட்டத்தில், 
தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது \\\

மணிரத்னத்துக்கு இதயக்கோயில் நாலாவது படம். 
1 பல்லவி அனுபல்லவி [ கன்னடம் ]
2 உணரு [ மலையாளம் ]
3 பகல் நிலவு [ தமிழ் ]
தனது முதல் தமிழ் படமான பகல் நிலவு படத்திலேயே தனி முத்திரை பதித்து
தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர்.
கோவைத்தம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
கோவைத்தம்பி தான்தான் தமிழ்நாடு என்ற நினைப்பில் வாழ்கிறார் போலும்.

\\\ திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது \\\


மணிரத்னம் படைப்பிலேயே மாஸ்டர்பீஸ் இருவர்தான்.

உலகசினிமா ரசிகர்களும், சினிமா மொழி தெரிந்த திராவிட இயக்க பற்றாளர்களும் இருவர் படத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
திராவிட இயக்கதின் இரண்டு தலைவர்களின் நட்பையும், அதையொட்டிய வாழ்க்கையையும் பதிவு செய்த படம் இருவர்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் லோகோவை  அதிமுக வண்ணத்தில் காட்டி காசு பார்த்தவ்ர் என உங்களைத்தான் கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
திராவிட இயக்கத்தலைவர்களில் ஒருவர்  வரலாற்றையாவது  படமாக்கியிருந்தீர்கள் என்றால்...
அந்த நன்றிக்கடனுக்காக இக்கட்டுரையையே எழுதி இருக்க மாட்டேன்.

சர்ச்சைக்குறிய இதயக்கோயில் படம் பற்றி நான் கேள்விப்பட்ட
சில விவரங்களை கூறுகிறேன்.
இதயக்கோயில் படத்திற்கு கதை தயார் செய்து விட்டு...
அக்கதையை திரைக்கதையாக்கி இயக்க   ‘வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு’ வலை வீசி தேடினார்கள்.
அதில் ஒருவர் பாண்டியராஜன்.
பாண்டியராஜன்  ‘கன்னிராசி’ என்ற படத்தில் அறிமுக இயக்குனராக ஜெயித்த நேரம்.
கோவைத்தம்பி அதிமுகவில் செல்வாக்கோடு இருந்ததால்...
அவரது பட இயக்குனர்கள் அனைவரையும்  ‘படுத்துவார்’ என கோடம்பாக்கம் முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவரது படங்களை இயக்கியதில்...
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் [ பயணங்கள் முடிவதில்லை,நான் பாடும் பாடல்],
இயக்குனர் மணிவண்ணன் [இளமைக்காலங்கள்] முக்கியமானவர்கள்.

கோவைத்தம்பியின் வீர தீர பராக்கிரமங்கள் தமிழ்த்திரையுலகில் எல்லோருக்கும் தெரியும்.
பாண்டியராஜனுக்கு தெரியாதா ?...அவர் சிக்கவில்லை.
மணிரத்னம் மாட்டினார்... ‘அடி மாட்டு ’ சம்பளத்தில்.
கொத்தடிமையாகத்தான் மணிரத்னம் இதயக்கோயிலில் பணியாற்றினார்.

உச்ச கட்ட அராஜகம் ஒன்றை...இதயக்கோயில்  படம் வெளியான பிறகு கோவைத்தம்பி நடத்தி காட்டினார்.
படம் தியேட்டரில் வெளியான பிறகு கவுண்டமணி - செந்தில் காமெடியை மணிரத்னத்துக்கு தெரியாமல் ஷூட் செய்து இணைத்து விட்டார்.
பட விளம்பரத்திலும் கவுண்ட மணி- செந்தில் காமெடியை பிரதானப்படுத்தினார்.
ஒரு படத்தில் இயக்குனருக்கு தெரியாமல்  ‘ஒரு பிரேமை’ கூட நீக்கவோ சேர்க்கவோ எவனுக்கும் உரிமை கிடையாது....படத்தயாரிப்பாளர் உட்பட.
இந்த நியாய தர்மம் எல்லாம் ‘பிச்சைக்காரன்களுக்கு’ தெரியாது.

இப்போது கூட நீங்கள் அப்படத்தை பார்க்கும் போது...
கவுண்ட மணி  ‘காமெடி டிராக்’...
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட  ‘டெக்னிக்கல் தரம்’
படு மோசமாக இருப்பதை உணரலாம்.

கோவைத்தம்பி வீழ்ந்ததுக்கு காரணம் மணிரத்னம் இல்லை.
அவரது செயல்பாடுகள்தான்.
அவரது படங்களில் முதுகெலும்பாக இருந்த இளையராஜாவை புறக்கணித்தார்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியின் எந்தப்படமும் வெற்றிகரமாக ஓடவில்லை.
எல்லாமே அடிதான்.

ஒரு தயாரிப்பாளராக... திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு
அவர் தயாரித்த படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடின.

படம் ஓடியதே தன்னால்தான் என்ற மண்டைக்கனம் யாருக்கு வருகிறோதோ அவர்கள் அத்தனை பேரும் ‘தொலைந்து போவார்கள்’ .
இந்த விதி,  தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும்.


கோவைத்தம்பிக்கு மரண அடி கொடுத்தது மணிரத்னம் அல்ல... புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.யார் அவர்கள்தானாம்.
தனது கட்சியில் இருக்கும் நபர்கள் அராஜகம் செய்தால்...
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும்  ‘காயடித்து’ விடுவாராம்.
கோவைத்தம்பிக்கும்  ‘அது’ நடந்ததாம்..
ஒரு பிரபல தியேட்டரை வாங்க அதன் உரிமையாளரை உருட்டி மிரட்டினாராம் கோவைத்தம்பி.
தியேட்டர் அதிபர் புரட்சித்தலைவரிடம் அடைக்கலம் போனாராம்.
எம்ஜியார்... கோவைத்தம்பியை அழைத்து நைசாக விசாரித்தாராம்.

“என்ன விலைக்கு வாங்கலாம் ? ”

“ பணத்தை என்னிடம் கொடு...
நானே அந்த தியேட்டரை வாங்கித்தருகிறேன் ” .

பணத்தை கொடுத்து காத்திருந்தாராம் கோவைத்தம்பி.
எந்த தகவலும் வராததால்...
நேரடியாக போய் கேட்டாராம்  கோவைத்தம்பி .
எம்ஜியார்... திருப்பி கேட்டாராம்...
எந்த பணம் ? எந்த தியேட்டர் ?
தியேட்டர்காரருக்கு பிரசனை தீர்ந்தது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் பாணியே தனிதான்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இதயக்கோயில் பாடலை காணொளியில் காண்க...
Nov 19, 2012

இயக்குனர் கமலுக்கு ' HATS OFF ' \ Hey Ram \ 2000 \ India \ ஹேராம் = 029

நண்பர்களே...
 “ஒரு திரைப்படத்தை அதில் உள்ள கூட்டக்காட்சியில் வரும் ஏராளமான துணை நடிகர்களை வைத்தோ அல்லது அப்படத்திற்காக அமைக்கப்பட்ட மாபெரும் அரங்கத்தை வைத்தோ பிரமாண்டமான படமாக ஆக்க முடியாது.
மாறாக அத்திரைப்படத்தின் கருத்துப்பொருளின் கனம் காரணமாகவும் அத்திரைப்படக்கதாநாயகனின் மனிதத்தன்மை காரணமாகவும்தான் அதை பிரமாண்ட ஒன்றாக ஆக்க முடியும்” என்று  ‘சினிமா கோட்பாடு’ எனும் திரைப்பட இலக்கண நூலில்  
திரை மேதை ‘பெலே பெலாஸ்’ குறிப்பிட்டிருப்பார்.

ஹேராமில்  ‘பெலே பெலாஸ்’ குறிப்பிட்டதைப்போல ஒரு  ‘பிரமாண்ட ஷாட்’ வருகிறது.
கடந்த பதிவில் மேற்படி ஷாட்டை சரி வர எழுத முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
கமலின் மாஸ்டர்பீஸ் ஷாட்டை... 
இப்பதிவில் மிகச்சரியாக ஆய்வு செய்து எழுதி உள்ளதாக கருதுகிறேன்.
உலகின் தலை சிறந்த பத்து இயக்குனர்களின் படங்களில் கூட இதற்கு இணையான ஷாட் 
நான் கண்டதில்லை...என நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.
இப்பதிவையும்...காட்சியையும் நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
என் நண்பர் சொன்னது மிகையில்லை என உங்களுக்கே தோன்றும். 
ஒரே ஷாட்டில்... பல்வேறு அர்த்தங்களை அடுக்கடுக்காக அடுக்கி வித்தை புரிந்ததை  
என்னால் முடிந்த வரை விளக்கி உள்ளேன்.

அபயங்கர் உரையாடலை தனி வண்ணத்திலும்...
சாகேத்ராம் உரையாடலை தனி வண்ணத்திலும் கொடுத்து உள்ளேன்.

அபயங்கர் : “ லிசன்...குத்தம் செஞ்சாத்தான் தண்டனை...
கடமையை செஞ்சா தண்டனை கிடையாது.
கொலை குத்தம்னா...யுத்தமும் குத்தம்.
பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது... 
கொலை எப்படி குத்தமாகும்? ”.
***************************************************************************
இந்த உரையாடல்கள்,
1939ல் இரண்டாம் உலகப்போரில்,
பிரிட்டனை  ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ நிபந்தனையுடன் ஆதரித்தது...

இதை ஏற்காமல் சுபாஷ் சந்திர போஸ்  ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கொள்கைப்படி பிரிட்டனுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்து
‘இந்திய தேசிய ராணுவத்தை’ நிறுவி போரிட்டது...
1942ல், காந்திஜி  ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கி பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுத்தது...
ரஷ்யாவுக்கு ஆதரவாக,
இரண்டாம் உலகப்போரை...மக்கள் போராட்டமாக அறிவித்து,
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்...
இந்தியாவைச்சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் பங்கெடுக்க மறுத்தது என வரலாற்றின் பல்வேறு பக்கங்களை புரட்டி பார்க்க வைக்கிறது.
***************************************************************************
போலிஸ்காரர்கள் நிரம்பிய ஜீப் வருவதைக்கண்டு அபயங்கர்,
ராமை இழுத்துக்கொண்டு டிராமில் ஏறுகிறான்.

போலிஸ் ஜீப் வரும் போது,
பார்வையாளராகிய நாம் நுட்பமாக கவனித்தால்...
கீழ் வரும்  ‘காட்சி சித்தரிப்புகள்’ காண முடியும்.

போலிஸ் ஜீப் வரும் போது ரோட்டின் இடது புறம்,
‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு கிடக்கிறது.
மாட்டு வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
வண்டியிலிருந்த மூடைகள் சிதறி கிடக்கிறது.

டிராமில் கணிசமான மக்கள் இருக்கிறார்கள்.
அபயங்கர் உரையாடல் தொடர்கிறது.
 அபயங்கர் : “ பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது கொலை எப்படி குத்தமாகும் ?.

 ராம் : “ நான் பட்டாளத்துக்காரனில்ல...நான் வெறும் சிவிலியன்”

அபயங்கர் : “ திஸ் ஈஸ் சிவில் வார் பிரதர்”
மேற்கண்ட அபயங்கர் - ராம் உரையாடலின்போது  டிராம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும்.
போலிஸ் ஜீப் வரும் போது பின் புலத்தில் இருந்த...  
‘தொலைவுக்காட்சி சித்தரிப்புகள்’...
ராம் - அபயங்கர் பின் புலமாக  ‘அண்மைக்காட்சி சித்தரிப்புகளாக’தெளிவாக காண முடிகிறது.

வன்முறையில் ‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு  ‘பல நாட்கள்’ ஆகி விட்டது..
மாட்டு வண்டி  ‘தலை கீழாக’குடை சாய்ந்து கிடக்கிறது.
வண்டியிலுள்ள மூட்டைகள் சிதறி கிடக்கின்றது.
பூதாகரமாக உப்பிக்கிடக்கும் மாட்டு வயிற்றினுள்ளே...
ஒரு நாய் மாட்டின் சதையை தின்று கொண்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய காட்சியில் காட்டப்பட்ட நாயும்...
இதுவும் வெவ்வேறு.
அது கருப்பு...இது வெள்ளை.
அதாவது, உயிரோடு இருக்கும் ‘வெள்ளை நாய் தின்று கொண்டு இருக்கிறது’.
ஊர் ரெண்டு பட்டது...வெள்ளைக்கார கூத்தாடி நாய்க்கு கொண்டாட்டம்.
‘வெள்ளை நாய்’ குலைத்து நமது கவனத்தை ஈர்க்கிறது.
இது இயக்குனர் கமலின் சாமர்த்திய உத்தியாகும்.

அபயங்கரும், ராமும்  ‘துர்நாற்றத்தை’ உணர்வதை...
இருவரது  ‘உடல் மொழி’ மூலம் தெளிவாக உண்ர்கிறோம்.
‘கலவரத்தின் கால அளவை’ ‘துர்நாற்றத்தின்’ மூலமாக பார்வையாளருக்கு உணர்த்தியது...
இயக்குனர் கமலின்  ‘மாஸ்டர்பீஸ்’ பங்களிப்பு.

செத்துக்கிடக்கும் மாடு, பலநாள்கள் கடந்தும் அகற்றாமல் கிடக்கிறது.
 அரசு நிர்வாகம்  ‘குடை சாய்ந்து’ விட்டது.
‘விரைந்து செல்லும்  போலிஸ் ஜீப்’...
அரசு நிர்வாகம் மெல்ல மெல்ல நிலமையை கையகப்படுத்துவதற்கு சாட்சி.
 ‘டிராமில் கணிசமாக  பயணிக்கும் மக்கள்’....
கலவரம் சகஜ நிலைக்கு மீள்கின்ற தன்மையை சொல்கிறது.

மேலும் இக்காட்சியில் அறியப்படுவது...
கவிழ்ந்து கிடக்கும் ‘இந்திய மாட்டு வண்டி’ = சகோதர்களான 
இந்து -முஸ்லிமை மோத விட்டு வேடிக்கை பார்த்த வெள்ளை அரசின் சதிக்கு பலியாகி கவிழ்ந்து போன  ‘ஷராவர்தி’ பொம்மை அரசு.

ஓடிக்கொண்டிருக்கும் ‘வெள்ளையரின்  டிராம்’ =  ‘அதிகார வெள்ளைக்கார அரசு’ பாதிப்பில்லாமல் இயங்குவது.

செத்து கிடக்கும் மாடு,
துர்நாற்றம்,
உயிரோடு இருக்கும்  ‘வெள்ளை நாய்’,
தலை கீழாக கவிழ்ந்த வண்டி,
சிதறிக்கிடக்கும் மூட்டைகள்...மூலமாக
கலவரத்தின் கடந்த கால நிலையையும்.......

இயங்கிக்கொண்டிருக்கும் டிராம்,
பயணிக்கும் மக்கள்,
சாகேத் ராம்,
அபயங்கர்,
போலிஸ் நடவடிக்கை...மூலமாக
கலவரத்தின் நிகழ் கால நிலையையும்
ஒரே ஷாட்டில் கையகப்படுத்தியது இயக்குனர் கமலின் கை வண்ணம்.
உலகசினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது புது விருந்து.
அடர்த்தியான அர்த்தங்களை ஒரே ஷாட்டில் பொதிந்துரைத்த
இயக்குனர் கமலுக்கு  'HATS OFF'.

அபயங்கர் : “ நாடு இருக்கிற சிச்சுவேஷன்லே நாம எல்லோருமே சோல்ஜர்ஸ்தான்” 

“ இந்த புக்கை படி- இது தடை செய்யப்பட்ட புஸ்தகம்.
அட்டையை பிரிக்காம படி.
இது வீர சா...”
இந்த டயலாக் முழுமை பெறாமல் முடிவடைகிறது.
இந்த  ‘சாமர்த்தியத்திற்கு’ காரணம் இயக்குனரா...சென்சாரா தெரியவில்லை.
ஆனால், ‘வீர சாவர்க்கர்’  என்று...
ஹேராம் திரைக்கதை புத்தகத்தில் இருக்கிறது.
வீர சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களில் முக்கியமானவர்.
அவரை பற்றி விளக்கமாக விக்கிபீடியாவில் காண்க.
வீர சாவர்க்கர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

அபயங்கர் : “ பொழச்சிருந்தா மறுபடியும் சந்திப்போம்...
வந்தே மாதரம் !”.
டிராமை போலிசார் வளைக்கின்றனர்.
முற்றுகையிடுவதைக்கண்டு அபயங்கர்
கங்கையில் பாய்ந்து தப்பிக்கிறான்.
போலிசார் சுடுகின்றனர்.
THE THEN HUNTER IS NOW BEING HUNTED.
நேற்று வேட்டையாடியவன்...இன்று வேட்டையாடப்படுகிறான்.

அபயங்கர் தப்பிப்பதை ராம் பார்க்கிறான்.
இக்காட்சி நிறைவு பெறுகிறது.

கலகக்காரர்களின் ஆட்டம் முடிவடைந்து விட்டது.
எண்ணற்ற  'இந்து - முஸ்லீம் சகோதரர்கள்' மடிந்து விட்டார்கள்.
‘வெள்ளை நாய்’ உயிரோடு இருக்கிறது.
உயிரோடு இருக்கும் கலவரக்காரர்களை,
போலிசார்  ‘வழக்கம் போல்’
லேட்டாக வந்து வேட்டையாடுகிறார்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இக்காட்சியை காணொளியில் காண்க...

Nov 17, 2012

பிரச்சனையில் சிக்காமல் படமெடுப்பது எப்படி ?நண்பர்களே...
ஒரு புதிய திரைப்படம் எடுக்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.
கதை விவாதத்தில் பங்கெடுக்க என்னையும் அழைத்தார்கள்.
அதன் நேரடி ஒளிபரப்பு இதோ...

இயக்குனர் : படத்தோட ஹீரோ நம்ம இந்திய உளவுத்துறையில முக்கிய பதவியில இருக்காரு.

உதவியாளர் 1 : வேணாம் சார்...
பிரச்சனையாயிரும்.

இயக்குனர் : என்ன பிரச்சனை வரும் ?

உதவி 1: உளவுத்துறை, ராணுவம், போலிஸ் இதுல எதை படத்துல காட்டுனாலும்...
எங்க இன உணர்வை  பாதிக்கும்னு ஒரு அமைப்பு சொல்லியிருக்கு.

இயக்குனர் : அப்ப வேணாம்...
ஹீரோ கலெக்டர்.

உதவி 2 : ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சங்கம் இருக்கு.
அவங்க எதிர்ப்பாங்க.

இயக்குனர் : சங்கமே இல்லாத துறையிருக்கா?.

உதவி 2 : இந்தியாவிலயே இல்ல.

இயக்குனர் : அப்ப ஹீரோவை பிச்சைக்கரனா ஆக்கிரட்டுமா ?

உதவி 3 : சார்...அவங்களுக்கும் சங்கம் இருக்கு.
ரொம்ப ஸ்டாராங்க்.

இயக்குனர் : என் ஹீரோ வேலை வெட்டி இல்லாதவன்.

உதவி 1, 2, 3 : சூப்பர்.

நான் : பெரும்பாலும் எல்லா தமிழ் சினிமாவிலேயும் ஹீரோ வே.வெ இல்லாமதானே வராங்க.

இயக்குனர் : வேலை வெட்டி இல்லா ஹீரோ...வேலைக்கு போற பெண்ணை காதலிக்கிறான்.

உதவி 1, 2, 3 : சூப்பரோ சூப்பர்.

நான் : புதுசா ஏதாவது டிரை பண்ணலாமே !

இயக்குனர் : சார்...எங்க நெலமை தெரியாம பேசாதீங்க...
ஜாதி பேரை யூஸ் பண்ண முடியாது.
மதம் மூச்சு விட முடியாது.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூட கோபால் பல்பொடி இருப்பதை வேணா காட்டலாம்.
கோபமா பேசற மனுசனை காட்ட முடியாது.
ஜாதி,மதம் எல்லா அமைப்பும் கியூ கட்டி வந்து அடிக்கும்.
ஆப்கான் தீவிரவாதி என்ன...டீ விக்கிறவாதியை பத்தி கூட படம் பண்ண முடியாது.
அடப்போங்க சார்...
எங்க தலையெழுத்து இனி இப்படித்தான் படம் பண்ணனும்...
இருந்தாலும் நீங்க சொல்லீட்டீங்க...
புதுசா டிரை பண்றேன்.
வேலைக்கு போற பொண்ணு ...வேலை வெட்டி இல்லாத பையனை காதலிக்கிறா !
நான், உதவி 1, 2, 3 : பிரமாதம்.

Nov 16, 2012

Hey Ram \ 2000 \ India \ கொலையும்...யுத்தமும் குற்றமா ? / ஹேராம் = 028

நண்பர்களே...

கமல்  'HATS OFF' பதிவை படித்தவர்கள் இப்பதிவை படிக்க வேண்டாம்.
ஏனென்றால் இரண்டும் ஒன்றே.இப்பதிவை மேம்படுத்திதான் அப்பதிவை உருவாக்கினேன்.
நன்றி.


*******************************************************************************
ஹேராமில் சாகேத்ராம் - அபயங்கர் உரையாடலை ஆய்வு செய்து வருகிறோம்.
இப்பதிவில் இயக்குனர் கமலின் தனிச்சிறப்பான பணியினை காணவிருக்கிறோம்.
ஒரே ஷாட்டில்... பல்வேறு அர்த்தங்களை அடுக்கடுக்காக அடுக்கி வித்தை புரிந்ததை இப்பதிவில் என்னால் முடிந்த வரை விளக்கி உள்ளேன்.


அபயங்கர் உரையாடலை தனி வண்ணத்திலும்...
சாகேத்ராம் உரையாடலை தனி வண்ணத்திலும் கொடுத்து உள்ளேன்.

அபயங்கர் : “ லிசன்...குத்தம் செஞ்சாத்தான் தண்டனை...
கடமையை செஞ்சா தண்டனை கிடையாது.
கொலை குத்தம்னா...யுத்தமும் குத்தம்.
பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது... 
கொலை எப்படி குத்தமாகும்? ”.
***************************************************************************
இந்த உரையாடல்கள்,
1939ல் இரண்டாம் உலகப்போரில்,
பிரிட்டனை  ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ நிபந்தனையுடன் ஆதரித்தது...

இதை ஏற்காமல் சுபாஷ் சந்திர போஸ்  ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கொள்கைப்படி பிரிட்டனுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்து
‘இந்திய தேசிய ராணுவத்தை’ நிறுவி போரிட்டது...
1942ல், காந்திஜி  ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கி பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுத்தது...
ரஷ்யாவுக்கு ஆதரவாக,
இரண்டாம் உலகப்போரை...மக்கள் போராட்டமாக அறிவித்து,
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்...
இந்தியாவைச்சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் பங்கெடுக்க மறுத்தது என வரலாற்றின் பல்வேறு பக்கங்களை புரட்டி பார்க்க வைக்கிறது.
***************************************************************************
போலிஸ்காரர்கள் நிரம்பிய ஜீப் வருவதைக்கண்டு அபயங்கர்,
ராமை இழுத்துக்கொண்டு டிராமில் ஏறுகிறான்.

போலிஸ் ஜீப் வரும் போது,
பார்வையாளராகிய நாம் நுட்பமாக கவனித்தால்...
கீழ் வரும்  ‘காட்சி சித்தரிப்புகள்’ காண முடியும்.

போலிஸ் ஜீப் வரும் போது ரோட்டின் இடது புறம்,
‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு கிடக்கிறது.
மாட்டு வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
வண்டியிலிருந்த மூடைகள் சிதறி கிடக்கிறது.

டிராமில் கணிசமான மக்கள் இருக்கிறார்கள்.
அபயங்கர் உரையாடல் தொடர்கிறது.
 அபயங்கர் : “ பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது கொலை எப்படி குத்தமாகும் ?.

 ராம் : “ நான் பட்டாளத்துக்காரனில்ல...நான் வெறும் சிவிலியன்”

அபயங்கர் : “ திஸ் ஈஸ் சிவில் வார் பிரதர்”
மேற்கண்ட அபயங்கர் - ராம் உரையாடலின்போது  டிராம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும்.
போலிஸ் ஜீப் வரும் போது பின் புலத்தில் இருந்த...  
‘தொலைவுக்காட்சி சித்தரிப்புகள்’...
ராம் - அபயங்கர் பின் புலமாக  ‘அண்மைக்காட்சி சித்தரிப்புகளாக’ தெளிவாக காண முடிகிறது.

வன்முறையில் ‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு  ‘பல நாட்கள்’ ஆகி விட்டது..
மாட்டு வண்டி  ‘தலை கீழாக’குடை சாய்ந்து கிடக்கிறது.
வண்டியிலுள்ள மூட்டைகள் சிதறி கிடக்கின்றது.
பூதாகரமாக உப்பிக்கிடக்கும் மாட்டு வயிற்றினுள்ளே...
ஒரு நாய் மாட்டின் சதையை தின்று கொண்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய காட்சியில் காட்டப்பட்ட நாயும்...
இதுவும் வெவ்வேறு.
அது கருப்பு...இது வெள்ளை.
அதாவது, உயிரோடு இருக்கும் ‘வெள்ளை நாய் தின்று கொண்டு இருக்கிறது’.
ஊர் ரெண்டு பட்டது...வெள்ளைக்கார கூத்தாடி நாய்க்கு கொண்டாட்டம்.
‘வெள்ளை நாய்’ குலைத்து நமது கவனத்தை ஈர்க்கிறது.
இது இயக்குனர் கமலின் சாமர்த்திய உத்தியாகும்.

அபயங்கரும், ராமும்  ‘துர்நாற்றத்தை’ உணர்வதை...
இருவரது  ‘உடல் மொழி’ மூலம் தெளிவாக உண்ர்கிறோம்.
‘கலவரத்தின் கால அளவை’ ‘துர்நாற்றத்தின்’ மூலமாக பார்வையாளருக்கு உணர்த்தியது...
இயக்குனர் கமலின்  ‘மாஸ்டர்பீஸ்’ பங்களிப்பு.

செத்துக்கிடக்கும் மாடு, பலநாள்கள் கடந்தும் அகற்றாமல் கிடக்கிறது.
 அரசு நிர்வாகம்  ‘குடை சாய்ந்து’ விட்டது.
‘விரைந்து செல்லும்  போலிஸ் ஜீப்’...
அரசு நிர்வாகம் மெல்ல மெல்ல நிலமையை கையகப்படுத்துவதற்கு சாட்சி.
 ‘டிராமில் கணிசமாக  பயணிக்கும் மக்கள்’....
கலவரம் சகஜ நிலைக்கு மீள்கின்ற தன்மையை சொல்கிறது.

மேலும் இக்காட்சியில் அறியப்படுவது...
கவிழ்ந்து கிடக்கும் ‘இந்திய மாட்டு வண்டி’ = சகோதர்களான 
இந்து -முஸ்லிமை மோத விட்டு வேடிக்கை பார்த்த வெள்ளை அரசின் சதிக்கு பலியாகி கவிழ்ந்து போன  ‘ஷராவர்தி’ பொம்மை அரசு.

ஓடிக்கொண்டிருக்கும் ‘வெள்ளையரின்  டிராம்’ =  ‘அதிகார வெள்ளைக்கார அரசு’ பாதிப்பில்லாமல் இயங்குவது.

செத்து கிடக்கும் மாடு,
துர்நாற்றம்,
உயிரோடு இருக்கும்  ‘வெள்ளை நாய்’,
தலை கீழாக கவிழ்ந்த வண்டி,
சிதறிக்கிடக்கும் மூட்டைகள்...மூலமாக
கலவரத்தின் கடந்த கால நிலையையும்.......

இயங்கிக்கொண்டிருக்கும் டிராம்,
பயணிக்கும் மக்கள்,
சாகேத் ராம்,
அபயங்கர்,
போலிஸ் நடவடிக்கை...மூலமாக
கலவரத்தின் நிகழ் கால நிலையையும்
ஒரே ஷாட்டில் கையகப்படுத்தியது இயக்குனர் கமலின் கை வண்ணம்.
உலகசினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது புது விருந்து.
அடர்த்தியான அர்த்தங்களை ஒரே ஷாட்டில் பொதிந்துரைத்த
இயக்குனர் கமலுக்கு  'HATS OFF'.

அபயங்கர் : “ நாடு இருக்கிற சிச்சுவேஷன்லே நாம எல்லோருமே சோல்ஜர்ஸ்தான்” 

“ இந்த புக்கை படி- இது தடை செய்யப்பட்ட புஸ்தகம்.
அட்டையை பிரிக்காம படி.
இது வீர சா...”
இந்த டயலாக் முழுமை பெறாமல் முடிவடைகிறது.
இந்த  ‘சாமர்த்தியத்திற்கு’ காரணம் இயக்குனரா...சென்சாரா தெரியவில்லை.
ஆனால், ‘வீர சாவர்க்கர்’  என்று...
ஹேராம் திரைக்கதை புத்தகத்தில் இருக்கிறது.
வீர சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களில் முக்கியமானவர்.
அவரை பற்றி விளக்கமாக விக்கிபீடியாவில் காண்க.
வீர சாவர்க்கர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

அபயங்கர் : “ பொழச்சிருந்தா மறுபடியும் சந்திப்போம்...
வந்தே மாதரம் !”.
டிராமை போலிசார் வளைக்கின்றனர்.
முற்றுகையிடுவதைக்கண்டு அபயங்கர்
கங்கையில் பாய்ந்து தப்பிக்கிறான்.
போலிசார் சுடுகின்றனர்.
THE THEN HUNTER IS NOW BEING HUNTED.
நேற்று வேட்டையாடியவன்...இன்று வேட்டையாடப்படுகிறான்.

அபயங்கர் தப்பிப்பதை ராம் பார்க்கிறான்.
இக்காட்சி நிறைவு பெறுகிறது.

கலகக்காரர்களின் ஆட்டம் முடிவடைந்து விட்டது.
எண்ணற்ற  'இந்து - முஸ்லீம் சகோதரர்கள்' மடிந்து விட்டார்கள்.
‘வெள்ளை நாய்’ உயிரோடு இருக்கிறது.
உயிரோடு இருக்கும் கலவரக்காரர்களை,
போலிசார்  ‘வழக்கம் போல்’
லேட்டாக வந்து வேட்டையாடுகிறார்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இக்காட்சியை காணொளியில் காண்க...


Nov 12, 2012

தீபாவளியை கொண்டாடுவோம் !

நண்பர்களே...

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.


Nov 11, 2012

The Pope's Toilet \ 2007 \ Spanish \ Uruguay \ கட்டண கழிப்பிடத்தில்... கல்லா கட்டலாம்.

நண்பர்களே கடந்த பதிவில் அறிமுகப்படுத்திய  ‘Detachment’ படத்தை பார்த்து விட்டீர்களா?
அப்படத்திற்கும் விரைவில் விரிவான விமர்சனம் எழுத இருக்கிறேன்.
ஏனென்றால் அமெரிக்க மாணவ கலாச்சாரத்தை பிரதியெடுக்கும் போக்கு
ந்ம்மூரிலும் அதிகரித்து விட்டது.
அதன் விளைவுதான் ஆசிரியர்களுக்கு நேரும் வன்முறைகள்.
எனவே படம் பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள்.

இந்தப்பதிவின் அறிமுகம் ‘போப்'ஸ் டாய்லெட்’ என்ற உருகுவே திரைப்படம்.
‘இம்சை அரசன் புலிகேசி’ போல் படம் முழுக்க  ‘சட்டயர்’ [Satire ] காமெடியின் சரவெடி.


போப் வருகையை ஒட்டி நடந்த முன்,பின் நிகழ்வுகளை படமாக்கி...
போப் வருகையின் ஆவணப்படத்தையும் ஒருங்கிணைத்து...
வழங்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Cesar Charlone & Enrique Fernandez.
இயக்குனர்களில் ஒருவரான Cesar Charlone...
நமக்கு பரிச்சயமான பல படங்களின் ஒளிப்பதிவாளர்.


Selected filmography


1988ல் ‘மெலோ’ என்ற உருகுவே கிராமத்திற்கு  ‘போப் இரண்டாம் ஜான் பால்’
வருகை புரிந்தார்.
சுமார் 60,000லிருந்து...2,00,000 மக்கள் வருகை புரிவார்கள் என மீடியாக்கள் அலறி இருக்கிறது.
அச்செய்தியில் உந்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள்...
திருவிழா கூட்டத்தை கணக்கிட்டு... ஸ்டால்களை அமைத்து காத்திருந்தனர்.
போட்ட ஸ்டால்களின் எண்ணிக்கை 387...
வந்த மக்களின் எண்ணிக்கை 400.
இந்த நிஜ சோக வரலாற்றை... நகைச்சுவையோடு பறிமாறி இருக்கிறார்கள் இயக்குனர்கள். ‘மெலோ’ பிரேசிலியன் பார்டரை ஒட்டிய அழகிய உருகுவே கிராமம்.
உள்ளூர்வாசிகளுக்கு பிரதானத்தொழில் கடத்தல்.

கடத்தல் என்றால் தங்க பிஸ்கட்,வைரம்,ஹெராயின் என
கருப்பு கண்ணாடி,கருப்பு கோட் சூட் போட்டு...
பிகினி கன்னிகளோடு,  ‘தீம் மியுசிக்கோடு’ வரும்....
‘பில்லா’வகையறாக்கள் இல்லை.

உள்ளூர் மக்களுக்கு தேவையான மளிகை சாமான்கள்,மது பாட்டில்கள்,
கேஸ் சிலிண்டர் என அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள்.
பிரதான கடத்தல் வாகனம் சைக்கிள்.
சற்று முன்னேறியவர்கள் மோட்டார் சைக்கிள்.


படத்தின் கதாநாயகன் பிட்டோ...சைக்கிளில் கடத்தும்  ‘பாமரன்’.
அவனது எளிய கனவு...மோட்டர் சைக்கிளில் கடத்த வேண்டும்.
அதற்காகவே சைக்கிளை வேகமாக மிதிக்கிறான்.
கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தப்பிக்கிறான்.
சமயத்தில் மாட்டுகிறான்.
கால் வலியை தள்ளி வைக்கிறான்.
உழைப்பிலிருந்து இளைப்பாற...
நண்பர்களோடு குடித்து கும்மாளமிடும்  ‘அன்றாடங்காச்சி’.

போப் வருகையை ஒட்டி கிராமமே ஸ்வீட் ஸ்டால்,பீஸா, பர்கர்,
பஞ்சு மிட்டாய் கடை என திட்டமிட்டு செயல் படுகிறார்கள்.
பிட்டோ எப்பவுமே தனக்கு அபார மூளை இருப்பதாக நம்பி செயல்படுபவன்.
கழிவறையில் இருக்கும் போது... 
கண நேரத்தில்  ‘கபாலத்தில்’ யோசனை உதித்து விடுகிறது.
‘கட்டண கழிப்பிடம்’
வருகின்ற மக்கள் கூட்டத்தை கியூவில் நிறுத்தி...
குறைந்த நேரம்...குறைந்த கட்டணம்.
அதிகநேரம்...அதிக கட்டணம்.
குடும்பத்தோடு வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள்...
பரிசு கூப்பன்கள்...பம்பர் பரிசு...
 ‘உச்சா போக அச்சா இடம்’ எனும் விளம்பர வாசகம்...
என கற்பனைகளை விரிக்கிறான் பிட்டோ.

 ‘வரப்போவதோ இரண்டு லட்சம் பேர்...
எல்லோருமே கண்ட இடத்தில்...‘யூரின்’ போகாத  ‘பாரின் மக்கள்’.
ஒரே ஒரு கழிப்பிடம் கட்டி விட்டால் போதும்.
இயற்கை உபாதைகளை தீர்க்க கூட்டம் நெரியும்...
செமத்தியாக கல்லா கட்டலாம்...’
என்னும் அரிய திட்டத்தை நிறைவேற்ற,
பிட்டோ படும் அவஸ்தைகளை நகைச்சுவையோடு
சொல்கிறது படம்.

 ஊடகத்துறையில் ‘காம்பியர்’ ஆகக்கனவு காணும் மகள்...
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மனைவி..
கொடுக்கல் -  வாங்கல் என மனித நேயத்துடன் வாழும் அக்கம்பக்கம்...
என நிஜ கிராமவாசிகளின் உள் அழகை தரிசிக்கலாம்.

படம் ஏழ்மையை விவாதிக்கிறது.
ஏழ்மையிலிருந்து தங்களை விடுவிக்க மக்கள் நம்புவதுதான்  ‘மத நம்பிக்கை’.
மக்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கும்...  ‘மத தும்பிக்கை’.
இம்முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கியியிருக்கிறது படம்.
ஆனால்,ஏழைகளை... ஏழைகளாகவே நிரந்தரமாக வைத்திருக்க முடியாது என எச்சரிக்கும் குறியீட்டுடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

இப்படத்தையும் விரிவான விமர்சனம் எழுதச்சொல்லி நண்பர் கேட்டிருக்கிறார்.
அதற்காக நிறைய படிக்க வேண்டி உள்ளது.
கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுத அனுமதியுங்கள்.

படத்தின் இறுதிக்காட்சி...
மீண்டும் பின்டோ,
கழிவறையில் இருக்கும் போது... 
கண நேரத்தில்  ‘கபாலத்தில்’ யோசனை உதித்து விடுகிறது.
என்னவாக இருக்கும் ?

படம் பெற்ற விருதுகள்...தகவல் உபயம் IMDB
Argentinean Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
2010WonSilver CondorBest Foreign Film, Spanish Language (Mejor Película Iberoamericana)
César Charlone
Enrique Fernández
Uruguay.
Cinema Brazil Grand Prize
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedCinema Brazil Grand PrizeBest Actor (Melhor Ator)
César Troncoso
Best Cinematography (Melhor Fotografia)
César Charlone
Best Picture (Melhor Filme)
Best Screenplay, Original (Melhor Roteiro Original)
Enrique Fernández
César Charlone
Gramado Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonAudience AwardLatin Film Competition
César Charlone
Enrique Fernández
Golden KikitoLatin Film Competition - Best Actor (Longa Metragem em 35mm, Latinos - Melhor Ator)
César Troncoso
Latin Film Competition - Best Actress (Longa Metragem em 35mm, Latinos - Melhor Atriz)
Virginia Méndez
Latin Film Competition - Best Screenplay (Longa Metragem em 35mm, Latinos - Melhor Roteiro)
César Charlone
Enrique Fernández
Kikito Critics PrizeLatin Film Competition
César Charlone
Enrique Fernández
Guadalajara Mexican Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2008WonMayahuel AwardBest First Work - Ibero-American Jury
César Charlone
Enrique Fernández
Huelva Latin American Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonSilver ColonBest Screenplay
Enrique Fernández
César Charlone
NominatedGolden ColonEnrique Fernández
César Charlone
Lleida Latin-American Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2008WonBest First WorkEnrique Fernández
César Charlone
TVE AwardEnrique Fernández
César Charlone
San Sebastián International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonHorizons AwardEnrique Fernández
César Charlone
São Paulo International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonInternational Jury AwardCésar Charlone
Enrique Fernández

இப்படத்தின் காணொளி காண்க...


அடுத்த பதிவில் சந்திப்போம்.