Nov 27, 2012

கமல் நிகழ்த்திய ‘உன்னதங்கள்’ \ Hey Ram \ 2000 \ India \ ஹேராம் = 031

நண்பர்களே...
கடந்த ஹேராம் பதிவை படித்து விட்டு பதிவர் ஒருவர் போன் செய்து சில சந்தேகங்களை எழுப்பினார். [ அவர் பெயர் வேண்டாமே ]
கிட்டத்தட்ட இந்தப்பதிவில் நான் எழுத திட்டமிட்டிருந்தவைகளில் பெரும்பாலானவைகளை கேள்விகளாக்கி விட்டார்.
அவரின் கேள்விக்கான பதில்கள் அனைத்தும் கமல் நிகழ்த்திய உன்னதங்கள்.
எனவே,அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் பாணியில் இப்பதிவை வடிவமைத்து விட்டேன்.


ஹேராமின் ஆரம்ப பதிவில்,
ரோலன் பார்த்தை [ ROLAND BARTHES ] குறிப்பிட்டிருந்தேன்.
இப்பதிவை உள் வாங்க ரோலன் பார்த்தை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
ஆங்கில இலக்கியங்களையும், அதிலுள்ள கோட்பாடுகளையும், தத்துவங்களையும் ஆய்வு செய்தவர்களில் மிக முக்கியமானவர்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  ரோலன் பார்த்.

ஒரு புகைப்படத்துக்கு...ரோலன் பார்த் ‘அர்த்தங்களை கட்டமைப்பதை’
[ Constructing Meaning ] பார்ப்போம்.

Roland Barthes: Mythologies

Barthes writes:

The whole of France is steeped in this anonymous ideology: our press, our cinema, our theatre, our popular literature, our ceremonies, our Justice, our diplomacy, our conversations, our remarks on the weather, the crimes we try, the wedding we are moved by, the cooking we dream of, the clothes we wear, everything, in our everyday life, contributes to the representation that the bourgeoisie makes for itself and for us of the relationships between man and the world.


Paris Match photo of black soldier saluting the flag:



I am at the barber's, and a copy of Paris-Match is offered to me. On the cover, a young Negro in a French uniform is saluting, with his eyes uplifted, probably fixed on a fold of the tricolour. All this is the meaning of the picture. But, whether naively or not, I see very well what it signifies to me: that France is a great Empire, that all her sons, without any colour discrimination, faithfully serve under her flag, and that there is no better answer to the detractors of an alleged colonialism than the zeal shown by this Negro in serving his so-called oppressors. I am therefore again faced with a greater semiological system: there is a signifier, itself already formed with a previous system (a black soldier is giving the French salute); there is a signified (it is here a purposeful mixture of Frenchness and militariness); finally, there is a presence of the signified through the signifier.



ரோலன் பார்த்தை அறிந்திருந்ததால்தான்,
 கமல் ஹேராமில் காட்சிக்கு காட்சி...
 ‘ஷாட் பை ஷாட்’ அர்த்தங்களை புதைத்திருக்கிறார்.


போன பதிவில் பார்த்த காட்சியை இப்பதிவில்  ‘ரோலன் பார்த் பாணியில்’
அர்த்தங்களை கட்டமைத்து பார்ப்போம்.

பதிவரின் கேள்வி : சாமான் ஏற்றப்பட்ட வண்டி ' பச்சை வண்ணத்தில்' இருக்க காரணம் என்ன ?

சாகேத் ராம் கல்கத்தா வீட்டை காலி செய்து புறப்படுகிறான்.
வீட்டு சாமான்கள் ஏற்றப்பட்ட வண்டி  ‘கரும் பச்சை வண்ணத்தில்’ இருக்கிறது.

இந்துவாகிய ராம், ‘கரும் பச்சை வண்ண’ வண்டியை வாடகைக்கு அமர்த்தியிருப்பது...
#   'இஸ்லாமியர் வண்டி' சாலையில் ஓடும்
சகஜ நிலைமைக்கு திரும்பி விட்டது.
ராமின் மனதில்  ‘இஸ்லாமியர் மேல் இருந்த பழி உணர்ச்சி ’
முடிந்து நீங்கி விட்டது என  உணர்த்துகிறது.

பதிவரின் கேள்வி : கஷ்டப்பட்டு பியானோவை இறக்கும் போது,
ராம் அவசர அவசரமாக ஓடக்காரணம் என்ன ?

இக்கேள்விக்கான பதிலை...எளிதில் விளக்குவது கடினமான சவால்.

பியானோவை இறக்கும் போது ‘ டாப் ரஷ்யன் ஆங்கிளில் ’
பியானோவை ‘ஃபோர்கிரவுண்டில்’ பிரம்மாண்டமாகவும்...
சாகேத்ராமை ஃபேக்கிரவுண்டில்’ சிறிதாகவும்...
ஒரு ஷாட் கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

காதல் வாழ்க்கையின்’ நினைவுச்சின்னமாக பியானோவை தன்னோடு எடுத்துச்செல்ல விழைகிறான் ராம்.

பியானோ இறக்கப்படும்போது ஆபத்தான நிலையில் ஊசலாடுகிறது.

கலாசி தொழிலாளர்கள் : பாத்து பாத்து...மோதப்போகுது ! 
[ Watch it!... lt's going to crash! ]

‘மோதப்போகுது’ என்ற தொழிலாளர்களின்  ‘எச்சரிக்கை குரல்’ ,
ராமை நிலை குலைய வைக்கிறது.

இப்போது பியானோ இறக்கப்படும் போது...
1 நடக்கின்ற நிஜ நிகழ்வில்  ‘ஏதோ’ முறிகின்ற நிஜ ஒலியும் +
2 ராமின் நனவோடையில் [ Stream Of Consciousness ] 
பியானோவில் தலை மோதும் போது எழுந்த
'அபஸ்வர நனவோடை ஒலியும்'
‘கண நேரத்திற்கு’ ஒருங்கே ஒலிக்கின்றன.

 ‘கண நேரத்திற்கு’ = Psychological Realism = Sight & Sound
பியானோவில் எழுந்த அபஸ்வர ஒலியாக ராமின் மனதில் எழுவது =
அபர்னா கற்பழிக்கப்படும் போது,
பியானோவில் தான் கட்டப்பட்டு கையறு நிலையில் கிடந்தது...+
பியானோ கட்டைகளில் தலை மோதியது...+
அதனால் எழுந்த பியானோ அபஸ்வர ஒலி...
சுக்கு நூறாகி விட்டது வாழ்க்கை.
இவை எல்லாமே ராமின் மனதில் ஓடியிருக்க வேண்டும்.

நிஜ ஒலி + நினைவு கூறும் நனவோடை ஒலி = இரண்டு ஒலிகளையும் ஒருங்கே ஒலிக்க வைத்து பார்வையாளர்களுக்கு சவால் வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.


‘நனவோடை ஒலி’ ராமை புரட்டிப்போட்டிருக்க வேண்டும்.
எனவேதான்  ‘எதுவுமே வேண்டாம்’ என முடிவு செய்து  ‘எல்லாவற்றையும்’ விட்டு விட்டு ராம்  ‘அப்ரியாக்‌ஷனாக’
[ ABREACTION ] புறப்படுகிறான்.
சாகேத்ராம் - அபர்னா மண வாழ்க்கை சுக்கு நூறாகி விட்டது.
SELF - PITY AND  'UNFORTUNATE' SERENDIPITY ? SURVIVAL INSTINCTS .

பதிவர் கேள்வி : டாக்ஸி டிரைவரிடம் திடீரென்று தமிழில் பேசக்காரணம் ?

\\\ ராம் : கெஞ்சுகின்ற குரலில் ] டிரைவர் சலோ .

டிரைவர் : மோல் பொத்தர் கேலா...[ Your Luggage...]

ராம் : ஐயா...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்யா...
என்னை இங்கே இருந்து கொண்டு போய்டு...

டிரைவர் : ஜீ...

ராம் : ப்ளீஸ் கெட் மீ அவுட் ஆப் ஹியர்...ப்ளீஸ்...\\\

ராம் ‘மைண்ட் அப்ரியாக்‌ஷனாக’ செயல்படுவதால்  'பெங்காலி டிரைவரிடம்' தாய் மொழியான தமிழில் பேசுகிறான்.
 எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் ‘அப்ரியாக்‌ஷன் சிச்சுவேஷனில்’
தாய் மொழிதான் பிரதானமாக செயல்படும்.

[ இரண்டாம் உலகப்போரில் கைது செய்யப்பட்ட உளவாளிகளை  ‘அப்ரியாக்‌ஷனாக’ செயல்பட வைத்து,
தாய் மொழியில் பேச வைத்து...
உளவாளி எந்த நாட்டை சேர்ந்தவன் ? என்பதை கண்டு பிடித்தார்கள்.]

பதிவர் கேள்வி : பியானோ கீழே விழுந்த பிறகு திரை முழுவதும் இருள் பரவுவதற்கு என்ன அர்த்தம் ?

ராமன் காட்டுக்கு போவதை காணச்சகியாமல்,
அயோத்தி  மாநகர கொடிகளெல்லாம் தலை குனிந்து கிடந்தன என கம்பர் வர்ணிப்பதைப்போல...
உடையவன் ராம் தன்னை புறக்கணித்துப்போனதால்,
பியானோவும் கீழே விழுந்து இறந்து போகிறது.

பியானோ கீழே விழுந்து நொறுங்கிய பிறகு,
மெல்ல திரை  ‘பிளாக் டிரான்ஸிசன் ’ [ BLACK TRANSITION ] ஆகிறது.

பொதுவாக இயக்குனர்கள் காலத்தை கடக்க ‘பிளாக் டிரான்ஸிசன்’ யுக்தியை மவுனப்படங்களின் காலம் முதல் பயன்படுத்தி வந்தார்கள்.
இங்கே ‘நனவோடையில்’ கதாபாத்திரம் கடந்த காலத்தை கடக்க முயற்சித்தது என,
 ‘பிளாக் டிரான்ஸிசன்’ பழைய உத்தியை,
புதிய பாணியில் செயல் பட வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.

அதே நேரத்தில், ‘நடிகர் கமல்’ பாத்திரத்தின் தன்மைக்கு மேல் போகவில்லை.
ஆனால் ‘இயக்குனர் கமலோ’ மரபை மாற்றி புதிய பாணியில் அர்த்த புஷ்டியுள்ள ஷாட்களை  அடுக்கி வைத்திருக்கிறார்.

டிராமாவில், நடிகருக்கு நடிப்புத்திறமையை காட்ட வாய்ப்பு மிக மிக அதிகம்.
சினிமாவில்,  'MISE -EN- SCENE' சிச்சுவேஷனில்தான் நடிக்க ஸ்கோப் கிடைக்கும்.
ஹேராமில், ரஷ்ய திரை மேதை  ‘ஐஸன்ஸ்டைன் மாண்டேஜ் தியரியை’ தனது மெத்தட் ஆக்டிங்கிற்குள் கொண்டு வந்து ஷாட் பை ஷாட் கொடுத்திருக்கிறார்  ‘நடிகர் கமல்’.
அதை கச்சிதமாக தொகுத்து ‘ஸ்கீரின் ஆக்டிங்காக’
ஒரு படி மேல் உயர்த்தி தந்திருக்கிறார் ‘ இயக்குனர் கமல்’.
சான்ஸே இல்லை கமல்ஜீ ! கிரேட் !!

திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த ரஷ்ய மாமேதைகளுள் முக்கிய ஒருவரான ‘ஐஸன்ஸ்டைன்’ வகுத்த  'மாண்டேஜ் தியரியில்’ வரும் இலக்கணத்தை எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

ஒரே ஷாட்டுக்குள் :
1 காட்சி ரூபத்தில் ஒரு அர்த்தம் கொடுக்கும்.
2 ஒலி ரூபத்தில் ஒரு அர்த்தம் கொடுக்கும்.
3 இரண்டும் இணைந்தோ அல்லது முரண்பட்டோ மற்றொரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.

இரண்டு ஷாட்டுகளுக்கு இடையில் :
  'A' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும்,
 'B' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும் தொகுக்கும் போது...
 'C' என்ற புதிய அர்த்தம் உருவாகும்.

இந்த இலக்கணங்களை இக்காட்சியில்  ‘நடிகர் கமலின்’ நடிப்போடு
பொருத்திப்பாருங்கள்.

பதிவர் கேள்வி : அங்குசத்தை தும்பிக்கையில் தூக்கிச்செல்லும் 
 ‘மத யானையை’ பார்த்து ராம் கண்களை மூடிக்கொள்வது ஏன் ?

 ‘கல்கத்தா கலவரம்’ மற்ற பிரதேசங்களுக்கு பரவியது, என்ற சரித்திரத்தின் கசப்பான பக்கங்களை...
 ‘பிளாக் டிரான்ஸிசன்’ முடியும் போது,
‘மத யானை’ அங்குசத்தை தூக்கி பிடித்து நடந்து போகும் ஷாட்டைப்போட்டு அர்த்தப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கமல்.

காரிலிருந்து ராம் மத யானையை பார்த்ததும்...
‘நனவோடையில்’ ஆயிரக்கணக்கான அபர்னாக்களும்,
அப்பாவி முஸ்லீம்களும் அநியாயமாக பலியாகப்போவதை  கண்டு
நடுங்கி கண்ணை இறுக மூடுகிறான்.

பதிவர் கேள்வி : இரண்டாவதாகவும் ‘பிளாக் டிரான்ஸிசன்’ வருகிறதே ஏன் ?
யானையை கரிய உருவத்தை, குளோசப்பில்  ‘கண நேரம்’ காட்டி...
மெதுவாக மீண்டும் திரையை  ‘பிளாக் டிரான்ஸிசன்’ செய்கிறார்
இயக்குனர் கமல்.
இங்கே  ‘பிளாக் டிரான்ஸிசனை’ காலத்தை கடக்க பயன் படுத்தி உள்ளார்  ‘இயக்குனர் கமல்’.
அதுவும் ஆறு மாத காலத்தை கடந்ததை சாகேத்ராம் டயலாக் மூலமாகவும்,
ராமின் ஏகமாய் வளர்ந்த முடி, தாடி, மீசையின் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம்.

ராம் : ம்...என் பொண்டாட்டியும்,தோப்பனாரும் செத்து ஆறு மாசங்கூட ஆகல.
அதுக்குள்ள பொண்ணு பாக்க போய்ண்ருக்கேன். 

 'There is a presence of the signified through the signifier'.

மன்னார்குடியில் ராம் பொண்ணு பார்க்க காரில் போகும் காட்சியை மட்டும்,
ஹேராம் ரீலிசுக்கு முன்பே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அதைப்பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.