Nov 11, 2012

The Pope's Toilet \ 2007 \ Spanish \ Uruguay \ கட்டண கழிப்பிடத்தில்... கல்லா கட்டலாம்.

நண்பர்களே கடந்த பதிவில் அறிமுகப்படுத்திய  ‘Detachment’ படத்தை பார்த்து விட்டீர்களா?
அப்படத்திற்கும் விரைவில் விரிவான விமர்சனம் எழுத இருக்கிறேன்.
ஏனென்றால் அமெரிக்க மாணவ கலாச்சாரத்தை பிரதியெடுக்கும் போக்கு
ந்ம்மூரிலும் அதிகரித்து விட்டது.
அதன் விளைவுதான் ஆசிரியர்களுக்கு நேரும் வன்முறைகள்.
எனவே படம் பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள்.

இந்தப்பதிவின் அறிமுகம் ‘போப்'ஸ் டாய்லெட்’ என்ற உருகுவே திரைப்படம்.
‘இம்சை அரசன் புலிகேசி’ போல் படம் முழுக்க  ‘சட்டயர்’ [Satire ] காமெடியின் சரவெடி.


போப் வருகையை ஒட்டி நடந்த முன்,பின் நிகழ்வுகளை படமாக்கி...
போப் வருகையின் ஆவணப்படத்தையும் ஒருங்கிணைத்து...
வழங்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Cesar Charlone & Enrique Fernandez.
இயக்குனர்களில் ஒருவரான Cesar Charlone...
நமக்கு பரிச்சயமான பல படங்களின் ஒளிப்பதிவாளர்.


Selected filmography


1988ல் ‘மெலோ’ என்ற உருகுவே கிராமத்திற்கு  ‘போப் இரண்டாம் ஜான் பால்’
வருகை புரிந்தார்.
சுமார் 60,000லிருந்து...2,00,000 மக்கள் வருகை புரிவார்கள் என மீடியாக்கள் அலறி இருக்கிறது.
அச்செய்தியில் உந்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள்...
திருவிழா கூட்டத்தை கணக்கிட்டு... ஸ்டால்களை அமைத்து காத்திருந்தனர்.
போட்ட ஸ்டால்களின் எண்ணிக்கை 387...
வந்த மக்களின் எண்ணிக்கை 400.
இந்த நிஜ சோக வரலாற்றை... நகைச்சுவையோடு பறிமாறி இருக்கிறார்கள் இயக்குனர்கள். ‘மெலோ’ பிரேசிலியன் பார்டரை ஒட்டிய அழகிய உருகுவே கிராமம்.
உள்ளூர்வாசிகளுக்கு பிரதானத்தொழில் கடத்தல்.

கடத்தல் என்றால் தங்க பிஸ்கட்,வைரம்,ஹெராயின் என
கருப்பு கண்ணாடி,கருப்பு கோட் சூட் போட்டு...
பிகினி கன்னிகளோடு,  ‘தீம் மியுசிக்கோடு’ வரும்....
‘பில்லா’வகையறாக்கள் இல்லை.

உள்ளூர் மக்களுக்கு தேவையான மளிகை சாமான்கள்,மது பாட்டில்கள்,
கேஸ் சிலிண்டர் என அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள்.
பிரதான கடத்தல் வாகனம் சைக்கிள்.
சற்று முன்னேறியவர்கள் மோட்டார் சைக்கிள்.


படத்தின் கதாநாயகன் பிட்டோ...சைக்கிளில் கடத்தும்  ‘பாமரன்’.
அவனது எளிய கனவு...மோட்டர் சைக்கிளில் கடத்த வேண்டும்.
அதற்காகவே சைக்கிளை வேகமாக மிதிக்கிறான்.
கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தப்பிக்கிறான்.
சமயத்தில் மாட்டுகிறான்.
கால் வலியை தள்ளி வைக்கிறான்.
உழைப்பிலிருந்து இளைப்பாற...
நண்பர்களோடு குடித்து கும்மாளமிடும்  ‘அன்றாடங்காச்சி’.

போப் வருகையை ஒட்டி கிராமமே ஸ்வீட் ஸ்டால்,பீஸா, பர்கர்,
பஞ்சு மிட்டாய் கடை என திட்டமிட்டு செயல் படுகிறார்கள்.
பிட்டோ எப்பவுமே தனக்கு அபார மூளை இருப்பதாக நம்பி செயல்படுபவன்.
கழிவறையில் இருக்கும் போது... 
கண நேரத்தில்  ‘கபாலத்தில்’ யோசனை உதித்து விடுகிறது.
‘கட்டண கழிப்பிடம்’
வருகின்ற மக்கள் கூட்டத்தை கியூவில் நிறுத்தி...
குறைந்த நேரம்...குறைந்த கட்டணம்.
அதிகநேரம்...அதிக கட்டணம்.
குடும்பத்தோடு வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள்...
பரிசு கூப்பன்கள்...பம்பர் பரிசு...
 ‘உச்சா போக அச்சா இடம்’ எனும் விளம்பர வாசகம்...
என கற்பனைகளை விரிக்கிறான் பிட்டோ.

 ‘வரப்போவதோ இரண்டு லட்சம் பேர்...
எல்லோருமே கண்ட இடத்தில்...‘யூரின்’ போகாத  ‘பாரின் மக்கள்’.
ஒரே ஒரு கழிப்பிடம் கட்டி விட்டால் போதும்.
இயற்கை உபாதைகளை தீர்க்க கூட்டம் நெரியும்...
செமத்தியாக கல்லா கட்டலாம்...’
என்னும் அரிய திட்டத்தை நிறைவேற்ற,
பிட்டோ படும் அவஸ்தைகளை நகைச்சுவையோடு
சொல்கிறது படம்.

 ஊடகத்துறையில் ‘காம்பியர்’ ஆகக்கனவு காணும் மகள்...
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மனைவி..
கொடுக்கல் -  வாங்கல் என மனித நேயத்துடன் வாழும் அக்கம்பக்கம்...
என நிஜ கிராமவாசிகளின் உள் அழகை தரிசிக்கலாம்.

படம் ஏழ்மையை விவாதிக்கிறது.
ஏழ்மையிலிருந்து தங்களை விடுவிக்க மக்கள் நம்புவதுதான்  ‘மத நம்பிக்கை’.
மக்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கும்...  ‘மத தும்பிக்கை’.
இம்முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கியியிருக்கிறது படம்.
ஆனால்,ஏழைகளை... ஏழைகளாகவே நிரந்தரமாக வைத்திருக்க முடியாது என எச்சரிக்கும் குறியீட்டுடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

இப்படத்தையும் விரிவான விமர்சனம் எழுதச்சொல்லி நண்பர் கேட்டிருக்கிறார்.
அதற்காக நிறைய படிக்க வேண்டி உள்ளது.
கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுத அனுமதியுங்கள்.

படத்தின் இறுதிக்காட்சி...
மீண்டும் பின்டோ,
கழிவறையில் இருக்கும் போது... 
கண நேரத்தில்  ‘கபாலத்தில்’ யோசனை உதித்து விடுகிறது.
என்னவாக இருக்கும் ?

படம் பெற்ற விருதுகள்...தகவல் உபயம் IMDB
Argentinean Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
2010WonSilver CondorBest Foreign Film, Spanish Language (Mejor Película Iberoamericana)
César Charlone
Enrique Fernández
Uruguay.
Cinema Brazil Grand Prize
YearResultAwardCategory/Recipient(s)
2009NominatedCinema Brazil Grand PrizeBest Actor (Melhor Ator)
César Troncoso
Best Cinematography (Melhor Fotografia)
César Charlone
Best Picture (Melhor Filme)
Best Screenplay, Original (Melhor Roteiro Original)
Enrique Fernández
César Charlone
Gramado Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonAudience AwardLatin Film Competition
César Charlone
Enrique Fernández
Golden KikitoLatin Film Competition - Best Actor (Longa Metragem em 35mm, Latinos - Melhor Ator)
César Troncoso
Latin Film Competition - Best Actress (Longa Metragem em 35mm, Latinos - Melhor Atriz)
Virginia Méndez
Latin Film Competition - Best Screenplay (Longa Metragem em 35mm, Latinos - Melhor Roteiro)
César Charlone
Enrique Fernández
Kikito Critics PrizeLatin Film Competition
César Charlone
Enrique Fernández
Guadalajara Mexican Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2008WonMayahuel AwardBest First Work - Ibero-American Jury
César Charlone
Enrique Fernández
Huelva Latin American Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonSilver ColonBest Screenplay
Enrique Fernández
César Charlone
NominatedGolden ColonEnrique Fernández
César Charlone
Lleida Latin-American Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2008WonBest First WorkEnrique Fernández
César Charlone
TVE AwardEnrique Fernández
César Charlone
San Sebastián International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonHorizons AwardEnrique Fernández
César Charlone
São Paulo International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2007WonInternational Jury AwardCésar Charlone
Enrique Fernández

இப்படத்தின் காணொளி காண்க...


அடுத்த பதிவில் சந்திப்போம்.

4 comments:

 1. இந்தப் படம் நன்றாக இருக்கும் பாருங்கள் என்று சொல்லி டிவிடி கடை வைத்திருக்கும் என் நண்பர் தந்தார். பல மாதங்களாகப் பார்க்காமல் தள்ளிப் போட்டுவிட்டேன். உங்கள் விமர்சனம் உடனே பார்க்கும் ஆவலை எழுப்பி விட்டது. பார்க்கிறேன். நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

   Delete
 2. பார்த்துட்டா போச்சு..! தீபாவளி வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.