Mar 22, 2013

மத மாற்றத்தை படமாக்கலாமா பாலா ?


நண்பர்களே...
பரதேசியை பாராட்டிய அன்பர்கள் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர்... கிருத்துவ மதத்துக்கு கொத்தடிமைகளை மாற்ற முயற்சித்ததை படமாக்கியதற்கும்...
படமாக்கிய விதத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
எரியும் பனிக்காட்டில் அப்படி ஒரு வரலாறு எழுதப்படவில்லை என்ற வாதத்தையும் வைத்துள்ளார்கள்.
பாலா ஒரு வரலாற்று தவறை செய்தது போல் சித்தரித்து உள்ளார்கள்.
மிக நுட்பமாக பாலா  ‘மத மாற்ற வரலாற்றை’ பதிவு செய்திருப்பதை பெரும்பாலும் கவனிக்க தவறி விட்டனர்.

பாலா கொத்தடிமைகளை கிருத்துவ மதத்துக்கு மாற்றப்பட்ட சரித்திரத்தை ஏன் படமாக்கினார் ? எனக்கேட்டவர்கள்...
ஏன் படமாக்கக்கூடாது எனச்சொன்னார்களா?
தேயிலைத்தோட்டத்தின் ரத்த சரித்திரத்தை பரதேசியில் பதிவு செய்த பாலா அதே கால கட்டத்தில் நிகழ்ந்த மத மாற்றத்தை பதிவு செய்யா விட்டால்தான் அது மாபெரும் வரலாற்று பிழையாகி இருக்கும்.

கொத்தடிமைகளை ஏன் கிருத்துவ மதத்துக்கு மாற்றினார்கள்?
இந்த  கேள்விக்கு விடை தெரிய வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும்.

[ 1 ] ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம்.
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கடவுளையும் மன்னனையும் இணையாக கருதி வழிபட்டார்கள் மக்கள்.
மன்னர்களுக்குள் நடந்த யுத்தங்களாலும், நிர்வாக சீர் கேடுகளாலும் மக்கள் சொல்லொணா துயரத்தில் இருந்தார்கள்.
மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
ரோம சாம்ராஜ்ய வரலாறைக்காண...

ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி புரட்சி செய்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.
முதல் புரட்சியே முற்றிலும் கோணலாகி ஸ்பார்ட்டகஸ் சிலுவையில் அறையப்பட்டான்.


SPARTACUS \ 1960 \ ENGLISH \ DIRECTED BY STANLEY KUBRICK.

ஸ்பார்ட்டகஸ் வரலாற்றை இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் அற்புதமாக படமாக்கி உள்ளார்.
[ இப்படத்தை தனது மகள் ஸ்ருதியுடன் 30 தடவைக்கு மேல் பார்த்ததாக கமல்
ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார் ]

[ 2 ] ஸ்பார்டகஸ் மறைந்து, சரியாக 71 வருடம் கழிந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மனித குல அவலங்களை காணச்சகியாமல் தனது புரட்சிக்கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
அவரையும் சிலுவையில் அறைந்து கொன்றது மன்னராட்சி.


THE GOSPEL ACCORDING TO ST.MATTHEW \ 1964\ ITALY \ PIER PAOLO PASOLINI

இயேசு என்ற புரட்சியாளரின் வரலாற்றை இயக்குனர் பசோலினி மிகச்சரியாக படமாக்கி உள்ளார்.
இயேசு கனல் தெறிக்க உரையாற்றுவதையும்,
சாட்டையெடுத்து அக்கிரமக்காரர்களை விளாசித்தள்ளுவதையும் காட்டி இயேசு ஒரு புரட்சிக்காரன் என காட்சிப்படுத்தி இருப்பார் பசோலினி.

[ 3 ] இயேசு மறைந்த பின்னர் அவரை பின் தொடர்ந்தவர்கள் ரகசிய இயக்கமாகவே 300 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தை முதலாம் கிருத்துவக்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

300 ஆண்டுகள் இரகசிய இயக்கமாக இருந்த கிருத்துவ மக்களை இணைத்து தனது சாம்ராஜ்யத்தை தக்க வைத்து விரிவு படுத்த...
‘கான்ஸ்டண்டைன்’ என்ற மன்னன் கிருத்துவ மதத்தை முதன் முதலாக  ‘அரசு மதமாக’ அங்கீகரித்தான்.
சர்ச் உருவானது.
இயேசுவை உயிர்த்தெழ வைத்து,
புரட்சியாளாரை புனிதராக்கி... கடவுளின் அவதாரமாக்கி...
புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.
அரசும் சர்ச்சும் இணைந்து இயங்கியது.
மக்களை மதம் மாற்றும் முயற்சியை சர்ச் முன்னெடுத்துச்சென்றது.

[ 4 ] கான்ஸ்டன்டைன் காலத்துக்கு பின்னர் உள்ள கிருத்துவத்தை
 ‘இரண்டாம் கிருத்துவக்காலம்’ என வரையறுக்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

ஐரோப்பிய கிருத்துவ நாடுகள், தங்கள் காலனிகளை விரிவு படுத்தினர்.
அங்கெல்லாம் சர்ச்சும் தன் ஆட்களை அனுப்பி மக்களை மத மாற்றம் செய்தது.
இந்த வரலாற்றை ஒரு  ‘உலக கவிஞன்’ பதிவு செய்தான் கவிதையில்.

அவர்கள் வந்தார்கள்.
எங்களை மண்டியிடச்சொன்னார்கள்.
மண்டியிட்டோம்.
கண்களை  மூடச்சொன்னார்கள்.
மூடினோம்.
ஜெபிக்கச்சொன்னார்கள்.
ஜெபித்தோம்.
ஜெபித்து விட்டு கண்களை திறந்து பார்த்தோம்.
எங்கள் கையில்  ‘அவர்கள் பைபிள்’ இருந்தது.
அவர்கள் கையில் ‘எங்கள் நாடு’ இருந்தது.

காலனியாதிக்கமும் மதமாற்றமும் ஏன் ஒருங்கே நிகழ்த்தப்பட்டதை ஆய்வு செய்தார்கள் தத்துவவாதிகள்.
இதுதான் வரலாறு.


[ 5 ] ஐரோப்பிய தத்துவ ஞானி  ‘கிராம்ஸ்சி’ [ ANTONIO GRAMSCI ] கூறுகிறார்...

“ ஒவ்வொரு அரசும் தனக்கான குறிப்பிட்ட வாழ்க்கை முறையை உருவாக்கி..
அதற்குறிய குண நலன்களோடு குடிமகனை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறது.
பழைய நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து உதறித்தள்ளி 
புதிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் வளர்த்தெடுக்கிறது.
இந்தப்பணிகளை செவ்வெனச்செய்ய  இரண்டு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது.  
  
[ A ] அரசு இயந்திரம் [ STATE APPARATUS ]  = அரசு, ராணுவம், காவல்துறை போன்றவைகள்.

[ B ] கருத்துருவ இயந்திரம்  [ IDEOLOGICAL APPARATUS ] = மத நிறுவனங்கள், நீதி மன்றங்கள்,
அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், 
மருத்துவ மனைகள், ஊடகங்கள், குடும்பங்கள் போன்றவைகள்.

[ ஊடகம் = பத்திரிக்கை,டிவி,சினிமா, இணையம் போன்றவைகள் ]

கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள்
நுழையவும்.
கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

[ 6 ] வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்து நாடு  பிடித்து நமது வளத்தை சுரண்டினார்கள்.
அந்தப்பணிக்காக இந்தியாவில் வைஸ்ராய், படைத்தளபதிகள், சிப்பாய்கள்,
மத குருமார்கள், தோலான் துருத்தி என தங்கி இருந்த மொத்த வெள்ளையினர் 7,000 பேர் மட்டுமே.

சுரண்டலின் ஒரு பகுதிதான் தேயிலைத்தோட்ட உருவாக்கம்.
அதற்காக கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்ட சாலூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை ‘தீமாக’ உருவாக்கி பரதேசியை படைத்துள்ளார் பாலா.

[ 7 ] எனவே இத்திரைக்கதையை ‘சப்ஜக்ட் டிராஜிடி’ இலக்கிய பார்முலாவில் வடிவமைத்துக்கொண்டார்.
சப்ஜக்ட் டிராஜிடி = தனி மனிதன் தனது துன்பங்களிலிருந்து வெளியேற வழியிருந்தும் அதற்காக சிந்திக்காமலும் செயல்படாமலும் அத்துனபங்களுக்குள்ளேயே உழன்று கொண்டு இருப்பது .

[ 8 ] கொத்தடிமைகளை ‘பணப்பெட்டியை’ காட்டி குறுகிய காலத்திற்குத்தான் அடிமையாக வைத்திருக்க முடியும்.
நிரந்தரமாக வைத்திருக்க மதமாற்றமே மருந்து என ‘மருத்துவம்’ மூலமாக முயற்சி நடந்ததை பாலா படமாக்கி உள்ளார்.

[ 9 ] மருத்துவன் தனது ஐரோப்பிய காதலியுடன் வருகிறான்.
கொத்தடிமைகளின் மருத்துவ மனையும், குடிசைகளும்,சுற்றுப்புறச்சூழலும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதைக்கண்டிக்கிறான்.
விரைவில் சரி செய்து விட வேண்டும் என முழங்குகிறான்.
ஒன்றையுமே சரி செய்யாமல்...
மத மாற்றத்தை மட்டுமே செவ்வனச்செய்கிறான்.


[ 10 ] சாலூரில் விபூதி காட்சியளித்த நெற்றியில் சிலுவைக்குறியிடப்படுகிறது.
நாக்கிலும் இடப்படுகிறது.
அதற்காக நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காரெக்டரை குள்ளமாகவும்...
வெள்ளைக்காரியை உயரமாகவும் போட்ட பாலாவின் குசும்பை மிகவும் ரசித்தேன்.

[ இத்தாலிக்காரியிடம் நாக்கைத்தொங்கப்பட்டதன் விளைவை
நாமும், ஈழத்தமிழர்களும் இன்றும் அனுபவித்து வருகிறோம்]

[ 11 ] மருத்துவனும் வெள்ளைக்காரியும் குத்தாட்டம் போட்டது எதற்காக ?
எந்த இசையில் நமது ஆட்கள் மயங்குவார்களோ...
அந்த இசையை இசைத்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து காரியம் சாதித்தவர்கள் மதமாற்றவாதிகள்.

[ 12 ] உணவை மருந்தாக்கி வாழும் கலாச்சாரத்தை உடைக்க,
‘பன் ரொட்டியை’ வீசுகிறார்கள்...பன்றிகளுக்கு வீசுவதைப்போல.
இதன் நீட்சியாகத்தான் இன்று பிஸ்ஸாவும்,பர்கரும் ஊடகம் வழியாக படையெடுத்து வந்து தாக்கி நம் உணவு கலாச்சாரத்தை அழித்துக்கொண்டிருகின்றன.

[ 13 ] வெள்ளைக்காரி,  நம்மவனை மயக்கி நாடகமாடுபவள் என்பதற்கு ‘குத்தாட்டப்பாடலில்’ அவளது  ‘டோப்போ’ கழந்து விழுவதை காட்சிப்படுத்தி இருப்பார் பாலா.
மருத்துவன் - வெள்ளைக்காரி இவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது என்பதை மருத்துவன் தனியாக இரவில் மருத்துவ மனையில் தூங்கிக்கொண்டிருப்பதை காட்சிப்படுத்தி இருப்பார்.

[ 14 ] கொள்ளை நோயில் கொத்தடிமைகள் பலியானதை சிரித்துக்கொண்டே அச்செய்தியை வெள்ளைக்காரர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவன் மகாத்மாவையும் தரக்குறைவாக பேசுவான்.
அப்போது ஒரே ஒரு பெண் குரல் அவர்களை கண்டித்து மகாத்மாவை துதிக்கும்.
வெள்ளையர்களில் ‘அன்னிபெஸண்ட்’ அம்மையார் போன்ற மாணிக்கங்களும் இருந்தார்கள் என பாலா பதிவு செய்துள்ளார்.

[ 15 ] பேஸ்புக்கில் நாக்கைத்தொங்கப்போட்டு அசிங்கப்பட்ட எழுத்தாளன் பரதேசியில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘ஒளிக்கீற்று’இல்லை என உளறியதை கண்டிருப்பீர்கள்.

கதாநாயகன் இறுதிக்காட்சியில் உயரமான மலைப்பாறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறான்.
கூலி கிடைக்காததால் கிராமத்து ஹோட்டல் முன்பாக தரையில் உட்கார்ந்து புலம்பியதற்கு நேர் மாறாக இக்காட்சியைப்படைத்துள்ளார் பாலா.
இறுதிக்காட்சியில் கதாநாயகன் பெருங்குரலெடுத்துக்கத்துவதை ஆங்கில இலக்கியத்தில் ‘கிளாரியன் கால்’ என குறிப்பிடுவார்கள்.
அந்தக்கத்தல் தொழிலாளர்கள் காதில் ஒலிக்கிறது என்பதை காமிரா காட்சிப்படுத்தி இருக்கிறது.

[ 16 ] ஓங்கி ஒலிக்கும் குரலோடு பல குரல்கள் இணையும் போது புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு.


[ 17 ] “ மார்க்ஸிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள்...
வர்க்கப்போராட்டத்தை முன்நிறுத்தும் அமைப்புகள்... மூலமாக மட்டுமே 
அரசு இயந்திரங்கள் & கருத்துருவ இயந்திரங்களின் இடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்க முடியும்”.
 - ஐரோப்பிய மார்க்சிய தத்துவ ஞானி ‘பவ்லண்ட்சாஸ்’  
[ NICOS POULANTZAS ]
பவ்லண்ட்சாஸ் பற்றி அறிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
பவ்லண்ட்சாஸ் பற்றி மேலும் படிக்க...

நடந்த வரலாறை யாராலும் மாற்றி எழுத முடியாது. 
‘பாலாவின் பரதேசி’ இது வரை இந்தியத்திரையில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்த ‘மார்க்ஸிய திரை இலக்கியம்’.

அடுத்தப்பதிவில் சந்திப்போம். 

37 comments:

 1. அருமையான ஆராய்ச்சி...தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்..வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பாலாவின் பரதேசியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது பச்சை "RSS-Parivar", "Marxist" அல்ல. என் கருத்தை பின்னூட்டத்தில் வெளியிடுவதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...நான் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அல்ல.
   எனது கிராமத்தில் நான் படித்த கிருத்துவ பள்ளிக்கூடத்துக்கு எதிராக இந்து வித்யாலயம் என்ற பள்ளியை இந்துத்வா அமைப்புகள் ஆரம்பித்தன்.
   நான் ஊரில் இருந்த வரை அப்பள்ளியை அரசு அங்கீகாரம் கிடைக்க விடாமல் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.

   இன்று வரை இந்துப்பள்ளியில் என் காலடி பட்டதில்லை.
   நான் படித்த T.D.T.A பள்ளி மாணவர்களுக்கே சீருடை, ஸ்கூல் பேக் போன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

   தீண்டாமையை ஒழிக்க கல்வி, மருத்துவம் மூலமாக பாடுபட்ட கிருத்துவ பெரியவர்களின் வரலாற்றை இதே அழகியலோடு திரைப்படம் எடுத்தால் அதையும் நான் கொண்டாடுவேன்.
   காரணம் சினிமா ரசிகன் மட்டுமே.

   Delete
  2. I did not call you or Bala as RSS-parivar, my comment is on the portrayal of physcian's role in "Paradesi". Sorry if I made many wrong impression.

   Delete
  3. நண்பரே...பரவாயில்லை.
   தங்கள் விளக்கம் என்னை நெகிழ வைத்தது.
   நன்றி பண்பாளரே.

   Delete
 3. சிம்பிளாக அப்போதைய ஏகாதிபத்திய நாடுகளில் கிறிஸ்தவ மதமே மேலோங்கி இருந்தது. .தாங்கள் பிடிக்கும் காலனி ஆதிக்கம் மட்டுமல்லாமல் மத பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். .அதற்கு வெகு சில நாடுகளே விதிவிலக்கு. .இந்தியாவிலும் அது நடைபெற்றது. .அட்டை பூச்சி,சுரண்டல் மட்டும் நம்மை வாட்டியது என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். .ஆனால் பாலா துணிந்து இதை சொல்லியிருக்கிறார். . இதை சொல்வதில் தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து. . paul daniel harris இந்த மத பிரச்சாரத்தை ஆதரித்திருக்கலாம். . அவருக்கு அது தவறாக தெரியாமல் இருந்திருக்கலாம். .அதனால் அதனை எழுதாமல் இருந்திருக்கலாம். .

  ReplyDelete
  Replies
  1. வெள்ளைக்காரனை கங்காணி திட்டும் கெட்ட வார்த்தை சென்சாரால்
   நீக்கப்படுகிறது.

   வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பாலா ‘பரதேசி’ எடுத்திருக்கிறார்.
   பிறாண்டுகிறார்கள் பிராந்தர்கள்.

   Delete
  2. புறந்தள்ளி விடுங்கள். .
   இந்த பதிவு நேற்றைய பதிவை விட காரம் கம்மியாகவே இருக்கிறது. .இன்னும் வலுவான மேற்கோள்கள் தந்து மேம்படுத்தியிருக்கலாம். . (மன்னிக்கவும். .எனக்கு தோன்றியது. .)

   Delete
  3. வரலாறு வகுப்புக்குள் நுழைந்தது போல் இருந்திருக்கும்.
   போதாக்குறைக்கு மார்க்ஸிய தத்துவங்கள் வேறு.

   நான் படித்த மார்க்சிய ‘தமிழ் புத்தகத்தை’ எனது தமிழில் மொழி பெயர்க்கவே எனக்கு முழி பிதுங்கி விட்டது.

   சீரியசாக யாரையுமே சீண்டவில்லை.ஒருவரைத்தவிற.
   எனவே காரம் குறைந்திருக்கலாம்.

   Delete
  4. வரலாற்று,மார்கசிய வகுப்புகள் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம் என்பது தான் என் எண்ணம். .
   (அதிகப்ரசிங்கி தனத்திற்கு மன்னிக்கவும். .:p )

   Delete
  5. நண்பரே...பரதேசிக்கு நீங்கள் எழுதிய பதிவு மிகச்சிறப்பாக இருந்தது.
   நான் படித்த சிறப்பான பதிவுகளில் தங்களுடையதும் ஒன்று.
   வாழ்த்துக்கள்.

   Delete
  6. மிக்க நன்றி. .எதிர்பார்க்கவே இல்லை இந்த வாழ்த்துக்களை. .மிக்க நன்றி
   துரோனாச்சாரியார் என்று கீதப்பிரியன்,கருந்தேள்,பாலா மற்றும் உங்கள் பெயரெழுதி அட்டை போட்டிருந்தேன். .xml கோடிங் மக்கர் பண்ணிக்கொண்டிருக்கிறது. .

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. திருட்டு டிவிடி தொடர் என்னாச்சி?

  ReplyDelete
  Replies
  1. பரதேசி என் தலைக்குள் ஏறி விட்டான்.
   ஓரளவுக்கு இறக்கி வைத்து விட்டேன்.
   இனி பழைய தொடர்களை தொடருவேன்.

   Delete
 6. சும்மா காமெடிக்காக! இந்த விளக்கமெல்லாம் பார்க்கும்போது காதலா காதலா படத்தில் வரும் பெயின்டிங் காமெடிதான் ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ///இந்த விளக்கமெல்லாம் பார்க்கும்போது காதலா காதலா படத்தில் வரும் பெயின்டிங் காமெடிதான் ஞாபகம் வருகிறது.///
   இப்படியா பப்ளிக்கா போட்டு அடிக்கிறது.
   சொல்லியனுப்பிச்சா நானே நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்.

   இருந்தாலும்...வரலாறு முக்கியம் அமைச்சரே !

   இதுவும் தமாஷ்.

   Delete
 7. #மிக நுட்பமாக பாலா மத மாற்ற வரலாற்றை பதிவு செய்திருப்பதை பாராட்டி ஒருவர் கூட விமர்சனத்தில் குறிப்பிடவில்லை.#

  நீங்கள் என் பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன் . படித்துவிட்டு சொல்லவும் .http://pesalamblogalam.blogspot.in/2013/03/blog-post_16.html
  பாலா வரலாற்றை திரித்து விட்டதாகவும் மனம் விரும்பியே மதம் மாறினார்கள் என்றும் பதிவில் சிலர் சொல்கிறார்கள் . இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை இந்தியா சுதந்திரம் அடைந்தும் என்ன பிரயோசனம் ? அப்படியானால் எதற்கு இன்னும் மத மாற்றத்துக்கு மார்க்கட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் . மக்களின் அறியாமையையும் , ஏழ்மையையும் பயன்படுத்தி ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டத்துக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் பாலா .

  #எனது கிராமத்தில் நான் படித்த கிருத்துவ பள்ளிக்கூடத்துக்கு எதிராக இந்து வித்யாலயம் என்ற பள்ளியை இந்துத்வா அமைப்புகள் ஆரம்பித்தன்.
  நான் ஊரில் இருந்த வரை அப்பள்ளியை அரசு அங்கீகாரம் கிடைக்க விடாமல் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.#

  பின்னூட்டத்தை பார்த்தவுடன் ஏனிந்த பல்டி ? கிறிஸ்தவர்கள் மட்டும் தான் பள்ளி நடத்த வேண்டுமா ? இந்துக்கள் நடத்தினால் பாவமா ? விளக்கவும் ...

  #நண்பரே...நான் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அல்ல.
  எனது கிராமத்தில் நான் படித்த கிருத்துவ பள்ளிக்கூடத்துக்கு எதிராக இந்து வித்யாலயம் என்ற பள்ளியை இந்துத்வா அமைப்புகள் ஆரம்பித்தன்.
  நான் ஊரில் இருந்த வரை அப்பள்ளியை அரசு அங்கீகாரம் கிடைக்க விடாமல் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும்.
   ஏற்கெனவே நீங்கள் எழுதியதை படித்து உள்ளேன்.
   மறதியால் தவறாக எழுதி விட்டேன்.
   திருத்தி விடுகிறேன்.

   /// நண்பரே...நான் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அல்ல.
   எனது கிராமத்தில் நான் படித்த கிருத்துவ பள்ளிக்கூடத்துக்கு எதிராக இந்து வித்யாலயம் என்ற பள்ளியை இந்துத்வா அமைப்புகள் ஆரம்பித்தன்.
   நான் ஊரில் இருந்த வரை அப்பள்ளியை அரசு அங்கீகாரம் கிடைக்க விடாமல் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன் ///

   அப்போது கல்லூரியில் படித்த காளைப்பருவம்.
   மிகவும் துடிப்பாக இருந்தேன்.

   இப்போது மதங்களின் பெயரால் யார் அநியாயம்,ஆக்கிரமிப்பு செய்தாலும் பிடிப்பதில்லை.

   Delete
 8. THANKS THANKS THANKS FOR THE DIFFERENT PERSPECTIVE POINT IN MOVIE REVIEW,VERY FOOD WRITEUP

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.
   வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற திருப்தி வந்து வந்து விட்டது.

   Delete
 9. //**தேயிலைத்தோட்டத்தின் ரத்த சரித்திரத்தை பரதேசியில் பதிவு செய்த பாலா அதே கால கட்டத்தில் நிகழ்ந்த மத மாற்றத்தை பதிவு செய்யா விட்டால்தான் அது மாபெரும் வரலாற்று பிழையாகி இருக்கும்.**//

  2000 வருடமாக அதற்கும் மேலாக கூனிக்குறுகி கேவலப்பட்டு விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்ட கீழ் சாதியினரின் அடிமைத்தனத்தை அதன் வாடையை கூட காட்டாத படம் 'மத மாற்றத்தை' மட்டும் கட்டினால் அதில் வரலாற்று திரிபு தான் மேலோங்கி இருக்கிறது.

  இந்தப்படம் எடுத்த காலகட்டம் ஜாதிபெயர் இல்லாமல் சொல்லாடலே இல்லாத காலமாகும். குசு குண்டி எல்லாம் வசனத்தில் சேர்த்தவர் கங்காணியின் ஜாதியை அவர் பெயரில் சேர்க்காதது ஏனோ? அதில் என்ன எதார்த்தம் இருக்கிறது? இவர்களே தொட்டால் தீட்டு என்று வைத்திருக்கும் கீழ் ஜாதி பெண்களின் நாற்றமடிக்கும் அவயங்களை தடவுவதும் நக்குவதும் தான் வெள்ளைக்காரனின் முழு நேர வேலையாக காட்டியது எந்த விதத்திலும் எதார்த்தம் இல்லை

  கிருத்தவர்களும் அவர்களில் தியாக மனம் கொண்ட பணியாட்களும் இல்லையானால் நீங்களெல்லாம் பதிவெல்லாம் எழுத முடியாது. ஏன் படிக்கும் உரிமை கூட உங்களுக்கும் எனக்கும் வந்திருக்குமா என்று தெரியாது. கல்வியையும் அதன் முக்கியத்துவத்தையும் நமக்கு மேல் வலித்து கற்றுத் தந்தவர்கள் அவர்கள் போன்றவர்களே.

  பாலா போன்ற பரதேசிகள் கடவுள் இல்லை, மதம் இல்லை, எல்லாம் திருடர்கள் என்று போகிற போக்கில் சாணி தெளிப்பது போல வசனம் பேசி என்ன தான் தீர்வை தந்து விட்டார்கள்? இவர் எடுத்திருக்கும் படத்தில் இருக்கிறது அத்தனை வரலாற்றுத் திருட்டு. ஒன்று பாலா பொட்டை அல்லது அவரும் RSS பரிவாரத்தின் சம்பளம் பெறுபவராக இருக்கிறார் என்றே பொருள்.

  ReplyDelete
  Replies
  1. ஹூ அம் ஐ அவர்களே...

   ஜாதி பற்றி சொல்ல சென்சார் அனுமதிக்காது.
   கங்காணி மேல்ஜாதி என தெளிவாக வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்திருக்கிறார் பாலா.
   இன்னும் மென்னு சவைச்சு வாயில் ஊட்டனுமா?

   கொத்தடிமைகள் அனைவருமே கீழ்ச்சாதி என காட்டியிருப்பது
   எல்.கே.ஜி பிள்ளைக்கு புரிகிறது.
   புரியாதது பாலாவின் குற்றமல்ல.

   வெள்ளைக்காரன் இல்லேன்னா...நானெல்லாம் பதிவெழுதி இருக்க முடியாது எப்படி சொல்ல முடியும்.
   அந்தக்கொள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பே கலை,இலக்கியம்,விஞ்ஞானம் எல்லாவற்றிலும் மேம்பட்டுதான் இருந்தோம்.

   எம்மிடம் துப்பாக்கி இல்லை.
   பின்னால் குத்தும் நய வஞ்சக போர் முறைகள் இல்லை.
   அதானல்தானே வெள்ளை கொள்ளை கூட்டம் கும்மியடிக்க முடிந்தது.

   வெள்ளையர்களும், அதற்கு முன்பு வந்து எம்மை பிரித்தாண்ட ஆரியர்களும் இங்கே வராதிருந்தால் உலகத்திலேயே சொர்க்க பூமியாக என் நாடு இருந்திருக்கும்.

   வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசும் உங்களைப்போன்றவர்கள்...
   ஆட்சியில் இருக்கும் வரை விமோசனமே கிடையாது.

   Delete
  2. ஹூஏம் ஐ தமிழனின் வரலாறு தெரியாமல் பேசுகிறார்..ஜான்சியும், கட்டபொம்மனின் ஏன் வெள்ளையனை எதிர்த்த லச்சோபலச்சம்பேரின் ஆன்மாவை கொச்சைப்படுத்துகிறார்.

   Delete
 10. என் தோழி காருண்யா பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் அப்பல்கலைக்கழகத்தில் மத போதனைக்காக அவள் நேரம் அவள் அனுமதியின்றி பறிக்கப்படுவதை கூறுவாள் அதை கேட்கையில் அது ஒரு மதத் தீவிரவாதம் போலவே எனக்குப்பட்டது.ஒரு தனி மனிதனின் வாழ்வியல் தத்துவங்களை,அவன் நம்பிக்கைகளை பொய் என்று அவனை வலுக்கட்டாயமாக நம்பவைப்பது கொடுமை சார்.இதை பாலா பதிவு செய்த முறையில் சிறிது பிழை இருக்கலாம்.ஆனால் அதை எங்கே பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்துள்ளார் இயக்குனர் பாலா.பாலா அவர்களின் படங்களிலும் செரி உலக நாயகனின் படங்களிலும் செரி கடவுள் மறுப்பு கொள்கை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதுவும் அழகாக உள்ளது.கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் நாம் பின்பற்றிய அபத்தங்களில் சிலவற்றையும் பாலா பரதேசியில் பதிவு செய்ய தவறவில்லை.இவையெல்லாம் காட்சி ஊடகத்தின் கடமையும்.

  ReplyDelete
  Replies
  1. வினோத்...
   காருண்யா பற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
   அவர்கள் கல்லூரியில் பசோலினியின் படம் காட்டப்பட்டதா எனத்தெரியவில்லை.
   அவர்களுக்கு ஜீசஸ் படம் என்றால் அவர் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் பிரகாசிக்க வேண்டும்.

   Delete
 11. நானும் கிறித்தவர்கள் இப்படி நோயுற்றவர்களை மதமாற்றம் செய்ய மாட்டார்கள் என்று எழுதி இருந்தேன் என் பதிவில்! உங்களின் பதிவு படித்து தெளிவடைந்தேன்! உண்மையில் மதமாற்றம் என்று யார்செய்தாலும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டிய ஒன்று! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மத மாற்றம் நடந்தது வரலாறு.
   தென் மாவட்டங்களில் நடந்த மதமாற்ற வரலாறு வேறு.
   அதையும் ஆய்வு செய்து யாரவது பதிவு செய்ய வேண்டும்.

   வருகை தந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
   உங்கள் பாராட்டு நான் பதிவு எழுதியதற்கு அர்த்தத்தை கொடுத்திருக்கிறது.

   Delete
 12. உணவு, பணம், பெண்.. கங்காணி சாலூறில் ஆள் பிடிக்கும் போதே இந்த மூன்றையும் காட்டித் தான் தந்திரம் செய்வதாக காட்டியிருப்பார் பாலா. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட இன்றும் மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.. தீராத நோயினை காரணம் காட்டி அந்த குடும்பத்தையே மதம் மாற்றிய கொடுமைகள் என் கண்முன்னே நிகழ்ந்திருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. கன கச்சிதமாக கங்காணி சர்க்கரை தடவி வார்த்தை வலையை விரிப்பான.
   வீடு,நகை இவைதான் பெண்களை வசியப்படுத்தும் மருந்து.

   நாஞ்சில் நாடனினும் பாலாவும் சேர்ந்து கை கோர்த்து கபடி ஆடிய இடங்களுள் இது முக்கியமான காட்சி.

   நன்றி நண்பரே.
   அமெரிக்காவில் இந்து மதத்துக்கு மாற்றும் வேலையை ஹரே ராமா போன்ற இயக்கங்கள் கச்சிதமாக செய்கின்றன அல்லவா !

   Delete
 13. மத மாற்றத்தை...பல எண்ண ஓட்டங்களும்..உண்மைகளும்.. வரலாறும் மேற்கோள்களும் ஸ்தம்பிக்க செய்கின்றன உங்கள் கருத்தாக்கம்(பரதேசியை இழிந்து பேசுவர்களின் மண்டையில் உரைத்தால் சரி)

  ReplyDelete
  Replies
  1. பாலா பரதேசியில் விஸ்வரூபமெடுத்திருக்கிறார்.
   பாராட்டுவதை விட்டு விட்டு குறை சொல்லிக்கூத்தடிக்கிறார்கள் இலக்கியவியாதி கோஷ்டிகள்.

   நண்பர் கலாகுமரனின் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 14. ஒரு சந்தேகம், spartacus என்ற மாபெரும் புரட்சியாளரின் உடல் கிடைக்கவில்லை என்று வரலாறு சொல்லுகிறது... சிலுவையில் அறைய பட்டவர் அவர் நண்பர் சக போராளி gannicus" என்று வரலாறு பதிவு உள்ளது...

  ReplyDelete
 15. """முதல் புரட்சியே முற்றிலும் கோணலாகி ஸ்பார்ட்டகஸ் சிலுவையில் அறையப்பட்டான்."""
  ஒரு வரலாறு சிறப்பு மிக்க மனிதனை இவரு மரியாதையை இல்லாமல் பேசுவது தவறு.... உண்மை இல் (1) spartacus blood and sand, (2)spartacus gods of the arena, (3)spartacus vengeance, (4)spartacus war of the damned.... இந்த நான்கு தலைப்புகளிலும் 6 - 10 episodes இருக்கும், வரலாறு போராட்டம் எப்படி தொடங்க பட்டது, அடிமை எப்படி ""மாவீரன்"" ஆகிறான் என்பதை தோலுரித்து சொல்லும், ரெத்த கண்ணீர்யுடன் சொல்லும் கதை..... விருப்ப பட்டவர்கள் இதை online லில் பார்க்கலாம்... இல்லை என்றல் torrent முலமாக download பண்ணி பார்க்கலாம்.... நெஞ்சை உருக்கும் கதை...
  குறிப்பு::""மிகவும் மிகவும் செக்ஸ் கட்சிகள் உள்ளதாக இருக்கும், குடும்பத்தோட பார்க்க வேண்டாம்"""

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.