Aug 30, 2010

The children are watching us-உலகின் முதல் ரியலிச சினிமா

இந்தப்படத்தை பார்க்கும் வரம் வழங்கிய கோணங்களுக்கு நன்றி
படமும்,தொடர்ச்சியாக காண்பித்த டாக்குமெண்ட்ரியும்..... நல்ல மாலைப்பதநீரில், மாம்பழத்துண்டு மிதக்க..... இரண்டு பட்டை குடித்து முடித்தால் ...ஏப்பத்தோடு ஒரு கிறக்கம் வரும் பாருங்கள்..அதே உணர்வை ஏற்ப்படுத்தியது.
1942 ல் இப்படி ஒரு படம் எடுக்க மிகுந்த ஆண்மை வேண்டும்..முசோலினியின் வாரிசுகள் இத்தாலிய சினிமாவில் சர்வாதிகாரம் புரிந்த காலம்..இப்போதைய தமிழ் சினிமா நிலவரம்..உரத்து சொல்கிறேன் “உலகசினிமாவின் சிங்கம்”.....விட்டோரியா டிசிகா
இதே காலகட்டத்தில் இன்னும் இரண்டு சிங்கங்கள் வந்தது இவருக்கு


இணையாக....


ஒருவர் விஸ்காண்டி.... படம் அப்சஸென் .....


மற்றொருவர் ரோஸலினி....படம் ஒப்பன் சிட்டி


இநத அலை உலகம் முழுக்க பரவி கமர்சியல் சினிமாக்களை கதிகலங்க வைத்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உருவானவர்கள்....நிமாய்கோஸ்...ரித்விக் கதக்...சத்யஜித்ரே..ஆனால்


தமிழ் சினிமா பராசக்தி எடுத்து கொண்டிருந்த்து. அன்று பிடித்த தரித்திரம் இன்று வரை விடவில்லை.


சரி...இந்தப்படத்துக்கு வருகிறேன்


இன்று தினத்தந்தியில்...ஜூ.வியில் படித்து கொண்டிருப்பதுதான் கதைக்களம்..


கணவனையும்,மகனையும் விட்டுவிட்டு ஒடுகிறாள் ஒரு ஒடுகாலி..இந்த கேடு கெட்ட செயலில் சீரழிந்த தந்தையும்,மகனும் படும் துயரம்தான் படம்..
எந்த இடத்திலும் ஒவர் செண்டிமெண்ட் கலக்காமல்..காவியமாக்கி தந்ததால் அறுபத்தெட்டு ஆண்டுகள் கழித்தும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் டிசிகாவை......


நான் தரிசித்த இவரது காவியங்கள்...


பை சைக்கிள் தீவ்ஸ்


உம்பர்ட்டோடி


சூ சைன்


எஸ்டர்டே..டுடே..டுமாரோ


எ ப்ரீப் வெகேசன்


திரைக்கதை மாமேதை சீசர் ஸவாட்டினியுடன் டிசிகா படைத்தது எல்லாமே காலத்தால் அழிக்க முடியாதது.


இந்தப்படங்களின் டிவிடிக்களை ஹாலிவுட் டிவிடி ஸாப்பில் திருடியாவது பார்த்துவிடுங்கள்.இது பாவமில்லை.


வெண்ணிலா கபடிக்குழு சூசீந்திரன்... நான் மகான் அல்ல என்ற படம் கொடுத்ததுதான் பாவம்.தமிழ் சினிமாவுக்கு தொடரும் சாபமும் கூட..

Aug 22, 2010

Divided we fall -வீழ்வது மனிதம்..வாழ்வது உயிர்


சிலபடங்கள் ஏன் பார்த்தோம் என்ற பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பலபடங்கள் ஏண்டா பார்த்தோம் என்ற சலிப்பு வரும்.இந்தப்படம் முதல்ரகம்.

இப்படத்தின் இயக்குனர் Jan Hrebejk , இரண்டாம் உலகப்போரில் சிதிலமடைந்த செக்கோஸ்லோவோக்கிய வாழ்க்கை வரைந்திருக்கிறார்.நேரடியாகவே நம்மை காயப்படுத்துகிறார்...வஞ்சனையில்லாமல்...உயிர் வாழ மனிதன் எவ்வளவு கீழிறங்குவான் என்பதை இதை விட எந்தப்படமும் ஆணித்தரமாக சொல்லியதில்லை .இப்படத்தில் வரும் ஆதர்ச செக் இன தம்பதியருக்கு நேரும் நெருக்கடி.... என்னால் ...எழுத்தால்..... சொல்லவே முடியாது .

இதோ.... என்னுடைய மனைவி புணர்ந்து கொள்.... என்று நண்பனிடம் இறைஞ்சுகிறான் ஒரு செக் நாட்டு கணவன்.....இதுதான் காட்சி.....

இதைப்படமாக பார்க்கும் போதுதான் அதில் உள்ள கண்ணியம் புரியும்.அந்த மனைவியும் நண்பனும் சேரும் கலவிக்காட்சி கதற வைத்து விடும்..இதற்க்குப்பிறகுதான் இம்மூவரும் எனக்கு ராமபிரானாக....சீதாபிராட்டியாக...வீபிசணனாக.....காட்சியளித்தனர்.

யுத்தகளத்தில் காயப்படும் முதல் பொருள் பெண்தான் ..இன்று காஸ்மீர் நம்மிடையே இருப்பதற்க்கு காரணம் நம்முடையராணுவம் அல்ல......அரசியல்வாதிகளும் அல்ல...பதினான்கு கன்னியாஸ்திரிகள் பறிகொடுத்த கற்புதான்.[”நள்ளிரவில் சுதந்திரம்” என்ற புத்தகத்தில் முழு விபரம் இருக்கிறது .ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம்.மிகச்சிறப்பான தமிழாக்கம்.]

நமீதா மாரை எவ்வளவு காட்டினாலும் அனுமதிக்கும் சென்சார்,கீழ்வெண்மணி பற்றி காட்சி வரும் படத்துக்கு அனுமதி மறுத்து டிரிப்யூனலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்..பிறகு எப்படி வெளங்கும் தமிழ் சினிமா..

நமக்கு மானாட மயிலாட தவிர வேறு கதியில்லை.

Aug 13, 2010

THE SONG OF SPORROW - ஈரான் புதுக்கவிதை


எனது ஆதர்ச இயக்குனர் மீண்டும் ஜெயித்திருக்கிறார் வழக்கமான மழலைப்பட்டாளங்களோடு.......

சில்ட்ரன் ஆப் ஹெவன்,கலர் ஆப் பாரடைஸ் வரிசையின் ஹாட்ரிக் இது.

குடும்பத்தோடு குதுகலிக்க....,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க..... படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை .முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்.

அழகிய கிராமத்து கவிதை ,நகரத்தின் நெருக்கடிகளில் குத்துப்பாட்டாகி, சீரழிவதை தன் பாணியில் நாகரீகமாக சொல்லியிருக்கிறார் மஜிதி .


ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...ஈரானில் நான்குக்கும் மேற்ப்பட்ட இடத்தில் சென்சார் என்ற விபத்தை தாண்ட வேண்டும்..கதையில்...காட்சியில்...கவர்மென்டை கொஞ்சம் காயப்படுத்தினால் போதும்..ஜெயிலில் போட்டு காயடித்து விடுவார்கள்..

சமீபத்திய உதாரணம் ஜாபர் பனாகி...

அழகிய கவிதை ஒன்றை காட்சியாக்கி அதன் உள் அர்த்தத்தில் சாட்டை எடுத்து சாடியிருப்பார் மஜிதி....இது அவரது ஸ்டைல்....

உதாரணம் இப்படத்திலேயே இருக்கிறது.

சாக்கடை குழியாக இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றை சுத்தப்படுத்தி மினரல்வாட்டர் கிணறாக மாற்றி விடுவார்கள் இவரது

மழலைப்பட்டாளங்கள்..இந்தக்கிணற்றில் இ. ராஜாவின் இசையில் ஜானகி மாதிரி பாடுகிறது ஒரு சிட்டுக்குருவி....அடடா...என்ன ஒரு அழகு...இந்தக்காட்சி சாகும் வரை என்னுள் இருக்கும்..

இதன் உள்அர்த்தமாக எனக்குப்பட்டது....முன்னோர்களால் சாக்கடையாக்கப்பட்ட ஈரானை வருங்கால சந்ததியினர் சுத்தப்படுத்தி சிட்டுக்குருவி போல் பறக்கவிடுவார்கள்..அங்கு பழமை என்ற பெயரில் பயங்கரவாதம் இருக்காது . [உங்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம்.அதை எனக்கு எழுதுங்கள் ]

மஜிதி போன்ற இயக்குனர் வரும் வரை நாம் எந்திரன் பார்த்து சுகித்திருப்போம்.....

Aug 3, 2010

INNOCENT VOICES[2004]


இயக்கம்:லூயிஸ் மேண்டோகி
எண்பதுகளில் எல் சல்வேடாரில் நடந்த நிகழ்வுகளை படம்
பிடித்துக்காட்டியிருக்கிறார்.
ஆனால் நமக்கு இலங்கையில் நடந்ததாக நம்முள் பதிவாகிறது .
ஒவ்வொரு நிகழ்வுகளும் விடுதலைப்புலிகளையும்,சிங்கள ராணுவத்தையும் தொடர்புபடுத்தியே நம்மால் உணரமுடிகிறது.
உள்நாட்டுப்போரில் பாசம்,காதல்...ஏன் மதம் கூட
காயப்படுத்தப்படுகிறது.
மரணம் நிச்சயமாகிப்போன வாழ்க்கையில் உயிர் வாழ்வதே அபத்தமாகிப்போகிறது.

இப்படம் ஏற்படுத்திய பாதிப்பை எழுத முடியவில்லை....
PIANNISIT,
TURTLES CAN FLY,
DIVIDED WE FALL,
THE BOY IN THE STRIPED PYJAMAS போன்ற படங்கள்...
ஏற்படுத்திய வடுவோடு...
இதுவும் நாவினால் சுட்டவடுவாக ஆறாதிருக்கும்
இப்படம் பாதிக்காதவர்கள் என்னிடம் வாருங்கள்..
அசினோடு... இலங்கைக்கு அனுப்பி வைக்கிறேன் இலவசமாய்......