Aug 22, 2010

Divided we fall -வீழ்வது மனிதம்..வாழ்வது உயிர்


சிலபடங்கள் ஏன் பார்த்தோம் என்ற பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பலபடங்கள் ஏண்டா பார்த்தோம் என்ற சலிப்பு வரும்.இந்தப்படம் முதல்ரகம்.

இப்படத்தின் இயக்குனர் Jan Hrebejk , இரண்டாம் உலகப்போரில் சிதிலமடைந்த செக்கோஸ்லோவோக்கிய வாழ்க்கை வரைந்திருக்கிறார்.நேரடியாகவே நம்மை காயப்படுத்துகிறார்...வஞ்சனையில்லாமல்...உயிர் வாழ மனிதன் எவ்வளவு கீழிறங்குவான் என்பதை இதை விட எந்தப்படமும் ஆணித்தரமாக சொல்லியதில்லை .இப்படத்தில் வரும் ஆதர்ச செக் இன தம்பதியருக்கு நேரும் நெருக்கடி.... என்னால் ...எழுத்தால்..... சொல்லவே முடியாது .

இதோ.... என்னுடைய மனைவி புணர்ந்து கொள்.... என்று நண்பனிடம் இறைஞ்சுகிறான் ஒரு செக் நாட்டு கணவன்.....இதுதான் காட்சி.....

இதைப்படமாக பார்க்கும் போதுதான் அதில் உள்ள கண்ணியம் புரியும்.அந்த மனைவியும் நண்பனும் சேரும் கலவிக்காட்சி கதற வைத்து விடும்..இதற்க்குப்பிறகுதான் இம்மூவரும் எனக்கு ராமபிரானாக....சீதாபிராட்டியாக...வீபிசணனாக.....காட்சியளித்தனர்.

யுத்தகளத்தில் காயப்படும் முதல் பொருள் பெண்தான் ..இன்று காஸ்மீர் நம்மிடையே இருப்பதற்க்கு காரணம் நம்முடையராணுவம் அல்ல......அரசியல்வாதிகளும் அல்ல...பதினான்கு கன்னியாஸ்திரிகள் பறிகொடுத்த கற்புதான்.[”நள்ளிரவில் சுதந்திரம்” என்ற புத்தகத்தில் முழு விபரம் இருக்கிறது .ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம்.மிகச்சிறப்பான தமிழாக்கம்.]

நமீதா மாரை எவ்வளவு காட்டினாலும் அனுமதிக்கும் சென்சார்,கீழ்வெண்மணி பற்றி காட்சி வரும் படத்துக்கு அனுமதி மறுத்து டிரிப்யூனலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்..பிறகு எப்படி வெளங்கும் தமிழ் சினிமா..

நமக்கு மானாட மயிலாட தவிர வேறு கதியில்லை.

11 comments:

 1. //யுத்தகளத்தில் காயப்படும் முதல் பொருள் பெண்தான்//

  நெஞ்சை ரணப்படுத்தும் உண்மை.

  ReplyDelete
 2. ஆமாம் பாஸ். இந்த படம் என்னை ரொம்ப பாதிச்சது. நீங்க சொன்ன ‘மச்சூகா’வும் பார்த்துவிட்டேன்.நன்றி சார்.

  ReplyDelete
 3. பின்னூட்டம் இட்டற்க்குநன்றி இலுமி & மயில்ராவணன்

  ReplyDelete
 4. தலைவரே
  நல்ல படம் பற்றிய அறிமுகம் கொடுத்தீர்கள்,கீழ்வெண்மணி சம்பவம் எவ்வளவு கொடியது ,அதை தெரியாத பேர் எவ்வளவு பேர்?அதை சினிமாவில் காட்டினால் என்ன கொள்ளை?இந்த காட்டுமிராண்டிதனத்தை வெள்ளைக்காரன் எடுத்தால் தான் உண்டு போலிருக்கு.
  போரினால் செக் அனுபவைத்த கொடுமை கொஞ்சம் நஞ்சமல்ல என படித்துள்ளேன்.போதாத குறைக்கு இந்த நாட்டை ஹாஸ்டல் படத்தில் வேறு பேரை கெடுத்திருப்பார் எலிராத்

  ReplyDelete
 5. நண்பரே...இப்படத்தை கட்டாயம் பாருங்கள்..நாஜிக்கொடுமைகளுக்குப்பின்..ரஸ்ய ஆதிக்கதில் சிக்கி தவித்ததை.. இப்படத்தின் இறுதிக்காட்சியில் இயக்குனர் குறியீடாக காட்சிப்படுத்தியிருப்பார்..கீ.வெ.பற்றி திருமா கூட எடுக்கமாட்டார்

  ReplyDelete
 6. //கீ.வெ.பற்றி திருமா கூட எடுக்கமாட்டார் //

  நச்!!

  இது மிகவும் உண்மை !

  ரொம்ப நாள் கழித்து இப்போதுதான் ப்ளாக் உலகம் பக்கம் வந்திருக்கிறேன். laptop failure..

  நள்ளிரவில் சுதந்திரம் இன்னும் படிக்கவில்லை. தேடிப்படித்து விடுகிறேன்.. நக்ஸலைட் ஆயிருவோம் !! ;-)

  ReplyDelete
 7. தலைவரே வணக்கம்
  இயக்குனர் சார்லஸ் அவர் நீண்டந்நாளாய் ஒரு ரஷ்ய படத்தை தேடுவதாக தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்,உங்களுக்கு தெரிந்தால் உதவுங்களேன்.

  =====================================
  இது தான் அந்த காட்சி:-
  நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட, (எனக்குப் பெயர் மறந்துபோன) ரஷ்யப் படத்தையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சி, சிறந்த தாளக் கட்டுமானமுள்ள படத்தொகுப்புக்கு ஆகச் சிறந்த உதாரணம். முதல் அல்லது இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலம், ஒரு சிற்றூரின் பெரும்பாலான ஆண்கள் கட்டாயத்தின்பேரில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல மாதங்களுக்குப் பின்பு, அவர்களது படைப்பிரிவு நாட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது என்றும், அவர்கள் செல்லும் இராணுவ ரயில் அவர்களது சொந்த ஊர் வழியாகத்தான் செல்லும் என்றும், கடிதங்கள் மூலம் சொந்தங்களுக்குத் தெரியவருகிறது. அந்தக் குறிப்பிட்ட காட்சி, ஒரு பெண் முகத்து ஒப்பனையை சரிபார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.. அது அந்த சிற்றூரின் ரயில் நிலையம்.. ஏராளமான பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் காத்திருக்கிறார்கள்.. அவர்களது கண்களில் ஆர்வமும், எதிர்பார்ப்பும், தவிப்பும் கலந்திருக்கின்றன.. ரயில் வருகிறது.. ஆனால் மிக மிக வேகமாக.. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணவர்களை, அப்பாக்களை, பிள்ளைகளை ஒரு முறை பார்த்துவிட அலைபாயும் விழிகளோடு பரிதவிக்க.. அந்த ரயில் முகம் பார்க்க முடியாத மின்னல் வேகத்தில் அந்த ரயில் நிலையத்தைக் கடந்து செல்கிறது.. இறுதியில் மொத்தப்பேரும் ஏமாற்றத்தோடு நிலையத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதோடு அந்தக் காட்சி முடியும்.

  .

  யாருக்காவது இந்தக் காட்சி எந்தப் படத்தில் என்று தெரிந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறது.

  ===========================================
  படத்தி பெயர் தெரிந்தால் நீங்களே இதை அங்கே பின்னூடினால் மகிழ்வேன்.
  http://vaarthaikal.wordpress.com/2010/08/28/ourdailybread/

  ReplyDelete
 8. நண்பரே..நான் மதுரை புத்தகத்திருவிழா [செப் 2-12] செல்கிறேன்.ந.சு கிடைத்தால் வாங்கி வருகிறேன்.சேஸ் நாவலை விட விறுவிறுப்பாக இருக்கும்.

  ReplyDelete
 9. நண்பர் கீதப்பிரியன்..தாங்கள் குறிப்பிட்ட கதைக்களம் "cranes are flying" படத்தில் வருகிறது .அந்தப்படம்தானா?

  ReplyDelete
 10. இல்லை,நண்பரே
  இது முதல் உலகபோர் கதைக்களமாம்

  ReplyDelete
 11. ”நள்ளிரவில் சுதந்திரம்” entha pathippagam please send me detail to my mail id symeeran@gmail.com

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.