Aug 15, 2012

முதல் மனித வெடிகுண்டு போராளி ‘‘குயிலி’


இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார்.
1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்...
  ‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான்.
அவனை தீர்த்து கட்ட சின்ன மருது,பெரிய மருது,வேலு நாச்ச்சியார் தலைமையில் மூன்று போராளி குழுக்கள் அமைக்கப்ப்பட்டன.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேச்வரம் கோவிலில் விஜயதசமி அன்று பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஐதீகம்.

அதைப்பயன்படுத்தி வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் போராளி குழு உள்ளே நுழைந்து ஆங்கில நவாப் வீரர்களை தாக்கினர்.
முற்றிலும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன பான்ஜோர் சுதாரித்து...கடும் எதிர் தாக்குதலை நடத்தினான்.
அரண்மனைக்கு உள்ளே வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்தது.

இது வரை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்யப்படாத சம்பவம் இக்கடும்போரில் நடைபெற்றது.
கரியநிறமுள்ள வீர தமிழச்சி தன் உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றிக்கொண்டு...
தனது உடலுக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து மொத்தக்கிடங்கையும் பூண்டோடு அழித்தொழித்தாள்.
அந்த வீர மங்கையின் பெயர்தான்                                                                                                           ‘குயிலி’
இவர்தான் உலகில் முதல் தற்கொலைப்படை போராளி.

50 வயதான வேலுநாச்சியார் இடது கையில் வாளேந்தி போரிட்டு
போன்ஜோரையும்,அவனது படையையும் அழித்தொழித்தார்.
சிவகங்கை அரண்மனை மட்டுமல்ல...தொடர்ந்து திருபுவனம்,
மானா மதுரை,காளையார் கோவில் போன்ற பகுதிகளையும் போரிட்டு மீட்டார்.
ஜான்சிராணியை [1828-1858] மட்டும் துதி பாடும் இந்திய சரித்திரம்...
 ‘வீரத்தாய் வேலுநாச்சியார் ’ [1730-1790] புகழை இன்றும் மறைத்து வருகிறது.

வெள்ளையனுக்குகெதிராக போர் பிரகடனம் செய்த முதல் இந்திய முழக்கம் வீரத்தாய் வேலுநாச்சியாரிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.
அது மட்டுமல்ல போரில் முதன்முதலாக வெள்ளயனை ஜெயித்த வீர வரலாறும் அவருக்கே சொந்தம்.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணம் ஏன்?

வீரத்தாய் வேலுநாச்சியார் பற்றி நானறிந்த தகவல்களை தனிப்பதிவில் தொடர்கிறேன்.

இக்கட்டுரை இன்று தினத்தந்தியில் [15-08-2012] சுதந்திரதின மலரில் தஞ்சாவூர்.வெ.ஜீவக்குமார் எழுதி வெளியாகி உள்ளது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

6 comments:

 1. எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள், தேசியக் கொடியின் மறுபெயர், என்னென்ன நிறங்கள் உள்ளன என்றே தெரியாத நிலையில் இருக்கிறது இந்தியர்களின் நிலைமை. (ஆதித்யாவில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க பார்த்தபோது தெரிந்துகொண்டது)

  உங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சுதந்திரம் என்றால் என்னவென்று... மக்களுக்கு சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.

   Delete
 2. // சுதந்திரம் என்றால் என்னவென்று... மக்களுக்கு சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள். //

  100 / 100 உண்மை! சுதந்திர தினத்தில் தேவையான ஒரு பதிவு!

  ReplyDelete
 3. அந்த நிகழ்ச்சியில, 'நாதஸ்வரம்' சீரியல் குழுகிட்ட ரெண்டு கேள்வி கேட்டாங்க. அதுக்கு ஒரு நடிகரும், ஒரு நடிகையும் சொன்ன பதில் இருக்கே. கருமம்.

  "M.K Gandhi யில உள்ள M.K அப்படீன்னா என்ன?"

  அந்த நடிகர் முழிச்ச முழி இருக்கே? கொடுமை.

  அடுத்தது ஒரு நடிகை கிட்ட.

  "N.S.C Bose இல் உள்ள N.S.C அப்படீன்னா என்ன?"

  "National Subash Chandra Bose"

  Atleast சன் டி வி யாவது இதை ஒளிபரப்பாம இருந்து இருந்தா, நம்ம மானம் உலகம் முழுக்க காத்துல பறந்து இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. ‘நாதெள்ள சம்பத்துச்செட்டி’ என்ற பதில் கிடைத்தால் கூட ஆச்சரியப்பட்டிருக்க கூடாது.

   Delete
 4. வேலு நாச்சியார் வரலாறு மட்டுமா மறைக்கப்பட்டுள்ளது? ஏன் மூவேந்தர்களின் உண்மையான வரலாறும் மறைத்தும் திரித்தும் உள்ளதே இதற்க்கு யாரை குறை சொல்வது. ஏன் மறுது சகோதர்களின் வரலாறு மற்றும் வேலு நாச்சியார் வரலாற்றை கூறும்போது இந்த மாபெரும் தியாகத்தை தனது நாட்டிற்காக செய்த குயிலி மள்ளதியாரின் உண்மையான வரலாற்றை ஏன் மறைக்கவேண்டும்? மருது சகோதர்களையும் வேலு நாட்சியாரையும் சொல்லும்போது அவர்கள் சார்ந்த குலம் மற்றும் அவர்களின் இன அடையாளங்களை சொல்லும்போது ஏன் குயலி மள்ளதியர் குலம் மற்றும் அவர்களின் இன அடையாளத்தை வேண்டுமென்றே மறைப்பது ஏன்?

  அதைப்போல கோயம்பத்தூரில் உள்ள வன்னியம்பாளையத்தில் தாசன் என்கின்ற ராமசாமி தேவேந்திரர் சுமார் 1840 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலய அரசின் விவசாயி வரியை கடுமையாக எதிர்த்ததும், இவர் திப்பு சுல்தான் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு அங்கிலயர்கலை எதிர்க்க மாபெரும் புரட்சி செய்த வரலாறும் திட்டமிட்டே மறைக்கப்பட்டது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.