Aug 2, 2012

Hey Ram \ 2000 \ கல்கத்தா...கற்பழிக்கப்பட்ட நகரம் \ ஹேராம் =017


சுதந்திரத்துக்கு ஒரு வருடம் முன்பு,1946 ல் கற்பிழந்த கல்கத்தாவுக்கு இன்று வரை அந்த புண் ஆறாமல் வலியை கொடுத்து கொண்டு இருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு இதோ விக்கிபீடியா....

Direct Action Day

From Wikipedia, the free encyclopedia

Dead and wounded after the 'Direct Action Day' which developed into pitched battles as Muslim and Hindu mobs rioted across Calcutta in 1946, the year before independence
Direct Action Day (Bengaliপ্রত্যক্ষ সংগ্রাম দিবস) (16 August 1946), also known as the Great Calcutta Killings, was a day of widespread riot and manslaughter in the city of Calcutta (now known as Kolkata) in theBengal province of British India.[1] The day also marked the start of what is known as The Week of the Long Knives.[2][3]
The Muslim League and the Indian National Congress were the two largest political parties in the Constituent Assembly of India in the 1940s. The 1946 Cabinet Mission to India for planning of the transfer of power from the British Raj to the Indian leadership proposed an initial plan of composition of the new Dominion of India and its government. However, soon an alternative plan to divide the British Raj into a Hindu-majority India and a Muslim-majority Pakistan was proposed by the Muslim League. The Congress rejected the alternative proposal outright. Muslim League planned general strike (hartal)[4]on 16 August terming it as Direct Action Day to protest this rejection, and to assert its demand for a separate Muslim homeland.[5][6]
In those days the situation in Bengal was particularly complex. In the province, Muslims represented the majority of the population (56%, as against 42% of Hindus) and were mostly concentrated in the Eastern part.[7] As a result of this demographic structure and specific developments, this Province was the only one in which a Muslim League government was in power under the provincial autonomy scheme introduced in 1935 in coalition with the Europeans, and against the hurdle of strong opposition from the Congress, the Communist Party of India and also from a Hindu nationalist party,the Hindu Mahasabha. The latter was supported by many members of the rich Marwari trading community, composed of immigrants from Rajasthan, who largely dominated the economy of central Calcutta (although European capital was still important).[8] For this, inhabitants of Calcutta comprising 64% Hindu and 33% Muslim were by then divided into two highly antagonistic entities.[7] Against this backdrop, the protest triggered massive riots in Calcutta.[9][10] In Calcutta, within 72 hours, more than 4,000 people lost their lives and 100,000 residents in the city of Calcutta were left homeless.[1][10] Violence in Calcutta sparked off further religious riots in the surrounding regions of Noakhali, Bihar, United Province (modern Uttar Pradesh), Punjab, and the North Western Frontier Province. These events sowed the seeds for the eventual Partition of India.

சாகேத்ராம்-அபர்னா நிலைமையை காண ஹேராமுக்குள் நுழைவோம்.
ராம்-அபர்னா கரங்களால் மீட்டப்பட்டு...காதல் ஸ்வரங்களை ஆனந்தமாக பாடிய பியானோ...ராமின் தலையால் முட்டு பட்டு... அபஸ்வரமாய் துடித்துஅழுகிறது,

ராம், தன்னை தடவும் ஆளை ஓங்கி மர்ம ஸ்தானத்தில் உதை விடுகிறான்.
வலி தாள முடியாமல் தவித்து கொண்டிருப்பவன் கண்களில் துப்பாக்கி படுகிறது.
துப்பாக்கியை கையில் கிடைத்ததும்... ‘மனதில் ஆண்மை ‘ துளிர்க்கிறது.

ஹேராம் படத்தில் துப்பாக்கி தொடர்ந்து குறியீடாக காட்டப்படுகிறது.
அந்தந்த இடங்களில் அக்குறியீடுகளை நாம் காணவிருக்கிறோம்.

துப்பாக்கியில் புல்லட் இல்லாதது ராமிற்கும் தெரியும்...நமக்கும் தெரியும்.
 “என் கைகளை அவிழ்த்து விடு...நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் ‘” தந்திர வலையை விரிக்கிறான் ராம்.
துப்பாக்கி கையில் இருப்பதாலும்... ‘மனதில் ஆண்மை’ விழித்ததாலும் அவிழ்த்து விடுகிறான்.
விடுதலை பெற்ற ராம் ஹாக்கி ஸ்டிக்கை எடுத்து அவன் மர்மஸ்தானத்தில் ஒங்கி ஒரு அடி.
ஹாக்கி ஸ்டிக் இடி போல் தாக்கி நிலை குலைகிறான்.
மீண்டும் அதிலேயே ஒங்கி ஒரு அடி.
 ‘பச்சை பிரேமை’ உடைத்து கொண்டு தலை கீழாக வவ்வால் மாதிரி கேவலமாக தொங்குகிறான்.
வன்முறை உருவானதை  ‘பச்சை பிரேமை’ கொண்டு  குறியீடாக காட்டிய இயக்குனர் அதே  ‘பச்சை பிரேமை’ வன்முறை முடிவுக்கு வந்ததற்கும் குறியீடாக்கிய கமலின் ஆளுமை... ஐரோப்பிய ஆளுமைகளுக்கு விட்ட சவாலாக எனக்கு படுகிறது.
காலித்துப்பாக்கி இப்போது ராமிடம்.
போலிஸ் வேன் வருகிறது...சைரன் அலறலோடு...
 ‘தப்பு செய்றவனெல்லாம் தப்பிச்சு போய்டு ‘ என்ற செய்தி அந்த சைரனில் பொதிந்திருக்கிறது.
வந்து நின்ற வேனின் டாப் மீது... தலை கீழாக விழுந்து செத்துப்போகிறது  ‘வவ்வால்’


குற்றவாளிகள் அனைவரும் தப்பித்து ஒடுகிறார்கள்.
தப்பித்து ஒடும் அல்தாப்பின் கரங்களில்...கத்தி இருக்கிறது.

துப்பாக்கியில் புல்லட்டை திணித்து...வெறி கொண்டு சுடுகிறான் ராம்.
தப்பித்து போன திசையை மட்டுமே சுட முடிந்தது.
அபர்னா நினைவுக்கு வர அவளிருக்கும் அறைக்கு நொண்டிக்கொண்டு வருகிறான்.
கழுத்தறுக்கப்பட்டதால்....ரத்தம் பீறிட...வதை பட்டு பிரிகிறது அபர்னா உயிர்.


  வன்முறை ...எப்படி உருவாகிறது ? 
ஒரு காரணத்திற்காக மக்களை திரட்டுகிறார்கள்.
அப்படி திரண்ட நாலு பேர் குழுவாக ஒன்று சேரும் போது  ‘இம்பல்சிவ்’ [ Impulsive ]  ஆகி விடும்.
அதும் ஆயுதம் கையில் இருந்தா  ‘மெக்லோமேனியா’ [ Megalomania ] வந்துரும்.
மெக்லோமேனியா=நான் எல்லோரையும் விட பவர்புல் என்ற எண்ணம் மண்டைக்குள் வந்து  ‘ஆடுதல்’.
அப்புறம்  ‘கில்லிங் ஸ்ப்ரீதான்’.[ Killing Spree ]
 ‘முன்னாள் பிரதமர்’ இந்திரா காந்தி இறந்ததும்... காங்கிரஸ் குண்டர்கள் கண்ணில் பாக்குற சீக்கியர்களை போட்டுதள்ளியதுதான் .... ‘கில்லிங் ஸ்ப்ரீ’

 [ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தது...
  States' Organised Killing Spree ] 
இப்படி உருவான  ‘வன்முறைக்கு’ அபர்னாவை பறி கொடுத்த ராம் கதறுகிறான்.
தன்னால் மிகவும் நேசிக்கப்பட்டவள் அழிக்கப்பட்டபோது... ‘ நடிகர் கமல்’ தனது சோகத்தை வெளிப்படுத்திய பாங்கை உலகில் எந்த கொம்பனும் செய்யவில்லை.  
***************************************************************************************************************************************************************************************************
‘நடிகர் கமல்’ அழுவதில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட வகையை நமக்கு திரையில் காட்டியிருக்கிறார்.
ஆனால்  மாஸ்டர்பீஸாக நான் கருதுவது... ‘மகாநதி’அழுகைதான்.
கல்கத்தா ‘ சோனாகாச்சி’ அவஸ்தையை... தூக்கத்தில் மகள் புலம்புவதை கேட்டு... புரிந்து... தவித்து... வெடித்து... அழுவாரே...இன்றும் அந்தக்காட்சியை திரையில் பார்க்க நடுங்கி விடுவேன்.

இதற்கு இணையாக நாயகன் அழுகையை சொல்லலாம்.
நாயகன் படத்தின் வசனகர்த்தா பாலகுமரான் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்கிறேன்.
“ மகனின் டெட் பாடியை பார்த்ததும் பேசுவதற்கு பக்கம்... பக்கமாக....எழுதி வைத்திருந்தேன்.
அந்த வசனத்தை பேசி நடித்து கொண்டிருந்த கமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
 ‘இங்கே வசனம் சரியா இருக்குமா’ என்றார்.
ஆமா...இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு...இங்கே வசனம் பேசிகிட்டு இருந்தா...தப்பா இருக்கும்...என்றேன்.
மணியும் ஆமோதித்தார்.
கமல் யோசித்து,நான் ஒண்ணு பண்றேன்...சரியா வருதான்னு பாருங்க...என்றார்.
மயில் அகவுவது போல் ஒரு குரல்...பிளிரலாக...பிசிறில்லாமல் ஸ்ருதியோடு ஒரு அழுகையை வெளிப்படுத்தினார்.
அந்த அழுகைதான் அவருக்கு இரண்டாம் முறை தேசியவிருதை பெற்றுத்தந்தது”
 என்றார்.

இதற்கு இணையாக ஹாலிவுட்டில் அல்பசினோவின் அழுகை காட்சி காட்பாதர் 3 ல் வருகிறது.
நாயகன் \ 1987
காட்பாதர்  3 \ 1990
கமலை பார்த்து அல்பசினோ காப்பியடித்தார் என நான் சொல்லவே மாட்டேன்.
இருவருமே மலைகள்...இந்த காட்சிகள் சிகரங்கள்.
**********************************************************************************************************************************

 இப்போது ஹேராமுக்குள் நுழைந்தால்... ஒளிப்பதிவாளர்‘திருவின்’ காமிரா, முதல் மாடியிலிருந்து ... ‘கிரேனில்’இறங்கும் போது அபார்ட்மெண்டில்   ‘வயதான பெண்’ கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை பதிவு செய்திருக்கிறது.

கமல் மாடியிலிருந்து வெறித்தனமாக அலறுவதை காமிரா தரையிலிருந்து அண்ணாந்து  'லாங் ஷாட்டில்' பதிவு செய்கிறது.
அடுத்தஷாட்டில்... இன்னும் நெருக்கமாக  'மிட்-லாங் ஷாட்டில்' அலறுவதை காட்டி ராம் வன்முறையை நெருங்கி விட்டான் என்று எடிட்டர் பதிவு செய்கிறார்.

 Direct Action Day  ‘ வன்முறைக்கு’ எதிராக,
 ‘ஆர்கனைஸ்டு வன்முறை கூட்டம்’ செயல் பட்டது  ‘வரலாறு’.
அதை கமல் படமாக்கிய விதத்தை... அடுத்து வருகின்ற பதிவுகளில் காண்போம்.

காணொளி காண்க....

13 comments:

 1. கமல் அழுகையை கூட விதம் விதமாக பதம் பிரித்து அறிந்து வைத்திருப்பதே ஒரு பெரிய நுணுக்கமான ரசனை தான்! அத்தோடு வன்முறையின் படிமுறைகள் பற்றிய தகவல்கள் புதுசு!

  கருத்தேள் பதிவுகள் + உலக சினிமா ரசிகன் பதிவுகள் = கமல் நல்லவரா? கெட்டவரா? ( ஒரே குஷ்டமப்பா)!!

  ReplyDelete
 2. கருந்தேள் பதிவுகள்தான்... என் பதிவை சோபிக்கின்றன.
  எதிரும் புதிரும்தான் ஒரு விஷயத்தை பலப்படுத்தும்.

  அவரும் லாலி பாட ஆரம்பித்தால் பதிவுலகமே நரகம்தான்.
  அவரை சுற்றி இருக்கும் ஜால்ராக்களின் ஒலிதான்...படு நாரசமாக ஒலிக்கிறது.
  ரஜினி,கமல் ரசிகர்களை விட படு மோசமாக விசில் அடிக்கிறார்கள்.

  தங்கள் பாராட்டுக்கும்...வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 3. ரொம்ப துல்லியமான பார்வை...ஒவ்வொரு பிரேம் பிரேமா பார்த்து ரசித்து இருப்பதை வியந்து நோக்குகிறேன்....

  ReplyDelete
 4. அண்ணே! கேமரா ஷாட்டைக் கூட ரசிச்சு எழுதியிருக்கிறீங்க...!நாயகனில் மகன் இறந்து கமல் அழுவது
  போன்ற காட்சி பலரால் மிமிக்ரி செய்யப்பட்டது கூட அந்த காட்சியில் இருந்த எதார்த்தம் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.

   மக்களிடம் மிகவும் பிரபலமான காட்சிகள்தான் ...மிமிக்ரி பண்ணப்படும்.

   அந்த ந்டிப்பை...காமெடிக்காக தொடலாம்.
   அதை மக்கள் அனுமதிப்பார்கள்.ரசிப்பார்கள்.

   வேறொரு நடிகர் அழுவதற்கு...ஒன்றை கூட மிச்சம் வைக்காமல் காலி பண்ணி விட்டார்கள்...சிவாஜியும்,கமலும்.

   Delete
 5. கமல் அழுக்கைக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் - ஆனால் முதல் இடம் மகாநதிக்கு தான்!

  வவ்வால் வவ்வால்னு நீங்க யார சொல்றீங்கன்னே எனக்குப் புரியல ;)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் மகாநதி அழுகைதான் பிடிக்குமா!
   ஸேம் பிளட்...

   //வவ்வால் வவ்வால்னு நீங்க யார சொல்றீங்கன்னே எனக்குப் புரியல ;)//

   நான் பதிவில் குறிப்பிட்ட வவ்வால் அஃறிணை...அஃறிணை...அஃறிணையே.

   தலை கீழாக தொங்குவது வவ்வால்தானே...

   Delete
 6. வன்முறை விளக்கங்களும், அழுகை வேறுபாடுகளும்.. பிரிச்சு மேயுறீங்க​!!!!!

  ஆனால் அழுகைக் காட்சிகள்தான் ஒருவரின் நடிப்புத் திறமையை எடுத்துக் காட்டும் என்பதையோ, அதுதான் விருதுகளுக்கு தகுதியானது என்பதையோ ஏற்க​ முடியாது..

  ReplyDelete
  Replies
  1. ///அழுகைக் காட்சிகள்தான் ஒருவரின் நடிப்புத் திறமையை எடுத்துக் காட்டும் என்பதையோ, அதுதான் விருதுகளுக்கு தகுதியானது என்பதையோ ஏற்க​ முடியாது..///

   நீங்கள் சொன்ன வாதம்...மிகச்சரியானதே.

   ஆனால் நான் பதிவில் குறிப்பிட்டது பாலகுமாரன் சொன்னது.

   இப்படத்துக்கு எந்த விருதுமே கொடுக்கப்பட்டிருக்க கூடாது என ஒருவர் என்னிடம் வாதிட்டார்.
   அவர்தான் ‘நாயகன்’ உண்மையான ’ ‘தயாரிப்பாளர்’...பழுத்த தேசியவாதி...
   இயக்குனர் திரு.முக்தா சீனிவாசன் அவர்கள்.

   நல்லவேளை தங்கள் பின்னூட்டம் காரணமாக இத்தகவல் நினைவுக்கு வந்தது.
   நன்றி நண்பா...

   Delete
 7. அண்ணே, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தனுஷ்கோடி போயிருந்தேன். அப்போ அங்க கேள்விப்பட்ட சம்பவங்கள், மற்றும் விக்கி பதிவுகள் எல்லாம் வச்சுப் பார்க்கும் போது, தனுஷ்கோடி ஒரு காலத்துல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான தமிழ் நாட்டு வர்த்தக நகரமா விளங்கியிருக்கு. சென்னையில இருந்து கொழும்புக்கு தனுஷ்கோடி மூலமா ரயில் சேவை நடந்து இருக்கு. ரயில் வந்துக்கிட்டு இருந்த ஒரு நாள்ல தான் சுனாமி தாக்கி அந்த செல்வ செழிப்பான நகரம் நிர்மூலமா ஆயிடுச்சி. ரயில்ல வந்த நூத்துசொச்சம் பெரும் அப்படியே ஜல சமாதி ஆயிருக்காங்க.

  இதை பின்னணியா வச்சு கூட ஒரு மகத்தான திரைப்படம் செய்யலாம். கொழும்பையும், தனுஷ்கோடியையும் இணைக்கும் ஒரு அற்புதமான காதல் கதையாய் கூட செய்யலாம். கமல் தான் அதுக்கு சரியான ஆள். கொஞ்ச நாளைக்கு முன்னால, முடிஞ்சா இதை யார் மூலமாவாவது கமலுக்கு suggest செஞ்சு பாருங்களேன் அப்படீன்னு கேபிளுக்கு கூட ஒரு மெயில் கூட அனுப்பி இருந்தேன். ஆனா சம்பவங்களை வச்சு பார்க்கும்போது, அதை திரைப்படமாக்குனா, செலவு ரொம்ப அதிகமா ஆகும்னு தோணுது.

  அப்படி மட்டும் ஒரு மகத்தான படைப்பு தமிழ்ல வந்தா இன்றைய கால கட்டத்துல அது உலக அளவுல போய் சேரும். அதன் மூலம் நம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு அளவிலான உலகின் கவனமும் கிடைக்கும்.

  ReplyDelete
 8. நண்பரே... தங்கள் தகவல், எனக்கு மிகவும் புதிதாகவும்...ஆச்சரியமூட்டுவதாகவும் உள்ளது.

  கமலிடம், எனது தொடர்பு 1997 லிலேயே அறுந்து விட்டது.
  ஒரு கசப்பான அனுபவத்தில்,ஏற்பட்ட தார்மீக கோபத்தில்...அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவேயில்லை.
  இருந்தாலும் இந்த தகவலை நான் அவரிடம் சேர்க்க முயற்சி செய்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிண்ணே...

   கமலோடு ஒரு கசப்பான அனுபவத்தில் தொடர்ப்பு அறுந்துவிட்டது என்றாலும், அவர் படத்தை பற்றி சிலாகித்து எழுதும் உங்கள் உயர் குணம்.....

   மேன்மக்கள்... மேன்மக்களே...

   Delete

Note: Only a member of this blog may post a comment.