Aug 30, 2012

செக்ஸ் பவர் பற்றி கமலும்...ராஜேஷும்.

நண்பர்களே...

இந்தப்பதிவு ஒரே ஜாலியாக இருக்கும்.
காரணம் உள்ளத்தில் இருப்பதுதான் எழுத்தில் இருக்கும்.

நடந்த கசப்புகளை...ஒரே ஒரு  ' இனிப்பு ' எல்லாவற்றையும் அடித்து தள்ளி விட்டது.
ஹாலிவுட் பாலா..அமெரிக்காவில் இருந்து ஒரே ஒரு போன் போட்டார்.
அவ்வளவுதான் எல்லாமே மாறி விட்டது.
அவரது பெருந்தன்மை என்னை சிறியனாக்கி விட்டது.
முடிவு... இருவருக்குமே  ' வெற்றி '.
புது  ‘கேம் தியரி ’ எழுதி விட்டோம்.
இந்தப்பதிவை ‘நட்புக்கு’ சமர்ப்பிக்கிறேன்.


நடிகர் ராஜேசும்...கமலும் நண்பர்கள்.
அவர் ஒரு தடவை கமலிடம் பேசும் போது...
  “ நான் ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன் ”.
 “ புரடக்‌ஷனா ?...டைரக்‌ஷனா...?
“ இரண்டும் ”

கமல்... இருக்கையிலிருந்து எழும்பி...இரண்டு கைகளையும் அகல விரித்து...
“ வெல்கம்...
இது கடல்...இங்கு எத்தனை திமிங்கலங்களும் இருக்கலாம் ”

என்ன ஒரு சொல்லாடல்...பாருங்கள் !.

இப்போது ஹேராம் ப்ரிவியூவுக்கு போவோம்.

படம் இடைவேளை.
கே.எஸ். ரவிக்குமார் சுற்றி இருந்த எல்லோரையும்  ‘ஒரு பார்வை’.
அதன் அர்த்தம்... “ எவனுக்காவது படம் விளங்கிச்சா ? ”.

பார்த்து விட்டு சொன்னது...
வானத்தை நோக்கி கை காட்டி... “அவர் எங்கேயோ...இருக்கார்”
தரையை நோக்கி கை காட்டி... “ நாம இங்க இருக்கோம் ”.

நடிகர் ராஜேஷ்...படம் முடிந்து காரில் போகும் போது சொன்னது...

“ கொன்னுட்டார்...
இண்டஸ்ட்ரியில இருக்குற எல்லோரையும் கொல்றதுக்குன்னே ஒரு படம் எடுத்திருக்கார்.
நான் கிராமத்துக்கே போகப்போறேன்.
நாலு மாடை வாங்கி... மேச்சு பொழச்சுக்கலாம்.
இனி நமக்கு எதுக்கு...  டைரக்‌ஷனு...புரடக்‌ஷனு... ”.

இன்று வரை அவர் படம் எடுக்கவில்லை.நடிகர் ராஜேஷ்... கமலின் சினிமா திறமையை அப்படி சிலாகிப்பார்...கொண்டாடுவார்.
இருந்தாலும் கமல் மேல்....ஒரு வேளை பொறாமை கூட...இருக்கலாம்.
ஏன் தெரியுமா?
அவள் ஒரு தொடர் கதையில் இவர் நடிக்க வேண்டிய காரெக்டரை...
 ‘இயக்குனர் சிகரம் ’ கே.பி. கமலுக்கு தூக்கி கொடுத்து விட்டார்.

இருந்தாலும்...தகவல்களை பறிமாறிக்கொள்வதில்தான் போட்டி போடுவார்கள்.
ஒரு முக்கியமான தகவலை புத்தகத்தில் படித்து விட்டார்.
இனி அதை கமலிடம் சொன்னால்தான் தூக்கம் வரும்.
எடு காரை...விடு ஆழ்வார் பேட்டைக்கு...

[ இந்த மேட்டரை  ‘கோவை நேரம் ஜீவாவுக்கு’ அர்ப்பணிக்கிறேன்.]

 “கமல்ஜி...
பெண்கள்தான்  ‘பலமானவர்கள்’.
ஆண்கள்  ‘பலமானவர்கள் போல் நடிப்பவர்கள்’.
என தான் தெரிந்து கொண்ட மருத்துவ விஞ்ஞான ஆய்வுத்தகவலை
சொன்னார்.

கமலுக்கு ஒரு புதிய தகவலை சொல்லி விட்ட சந்தோஷத்தில்...
ரோட்டோரக்கடையில் டீ சாப்பிட்டார் ராஜேஷ்.
உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்தால்...ராஜேஷ் நடத்தும் நிகழ்வு அது.
 ‘ரோட்டோரக்கடை டீ’

இந்த உண்மையை நானும்...புரிந்து கொண்டேன்.

பெண்கள் சக்திகள்.
ஆண்கள் சிவன்கள்.
சீக்கிரம்  ‘ஜீவன்’ போயிடும்.
ஆனா  ‘வீரன் ’ மாதிரி நடிப்போம்.

அடுத்தப்பதிவு...இன்னும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
  

9 comments:

 1. என்னா..ஒரு அர்ப்பணிப்பு எனக்கு...

  ReplyDelete
 2. ஹி ஹி ஹி ..யாராவது என்னை தப்பா நினைச்சிட மாட்டாங்க...

  ReplyDelete
 3. பெண்கள் சக்திகள்.
  ஆண்கள் சிவன்கள்.
  சீக்கிரம் ‘ஜீவன்’ போயிடும்.
  ஆனா ‘வீரன் ’ மாதிரி நடிப்போம்.///

  வீரனாவே இருக்க ஆசை படறேன்...ஹி ஹி

  ReplyDelete
 4. அண்ணா...இந்த மாதிரி xxx மேட்டர் பதிவில் எல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா??
  நாங்கள் அண்ணனிடம்...உலக சினிமா பற்றி சொல்லும் குருவாக உங்களை நினைக்கிறோம்..
  உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது வேறு...
  தம்பி தவறாக எதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
  நீங்களும் நண்பர் ஹாலிவூட் பாலாவும் பேசிக்கொண்ட விஷயம்...மிகவும் இனிப்பானது...

  ReplyDelete
 5. ஓகோ, இவ்வளவு விஷயம் இருக்கா?
  சரி கடைசி வரைக்கும் நம்ம கெத்த விட்டுக்குடுக்காம வீரனாவே நடிப்போம்

  ReplyDelete
  Replies
  1. ஹீட்டை...இறக்கி வைக்க செக்ஸ் மாதிரி அரு மருந்து கிடையாது.
   மேலும் இந்த விஷயம் கமல் சார் மண்டைக்குள் இருந்ததால் தான் ‘ஹேராம் அபர்னாவை’ கற்பிழந்த அதிர்ச்சியில் அவள் உயிரை விட்டாள் என கதை விடவில்லை.
   ‘கத்தி வைத்து அறுபட்டதால் இறந்தாள்’என விசுவலாக காட்டினார்.

   நண்பர்களே...இன்னும் கொஞ்ச காலத்துக்கு எந்த பின்னூட்டத்துக்கு பதிலிட மாட்டேன்.
   மன்னிக்கவும்.
   இடைவெளி விட்டு... ‘பதில் பின்னூட்டம்’தொடருவேன்.

   உண்மையில் என் ஆசான் சார்லி சாப்ளின் ‘சிட்டி லைட்ஸ் எழுத நினைத்து...படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
   முடியவில்லை.
   பார்க்கவே முடியவில்லையே...எழுத எப்படி முடியும்?.

   ஐம்பது வயசு அனுபவ சாலி எனக்கே இந்த நிலைமை என்றால்...ஹாலிவுட் பாலா,கொழந்த நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

   Delete
 6. //அதன் அர்த்தம்... “ எவனுக்காவது படம் விளங்கிச்சா ? ”//
  இங்க மட்டும் என்ன வாழுது?
  யாருக்காவது இந்த பதிவு வெளங்கிச்சு?

  ReplyDelete
 7. ஆனா ‘வீரன் ’ மாதிரி நடிப்போம்.

  ReplyDelete
 8. நீங்களும் பாலாவும் பேசிக்கொண்டது உண்மையில் இனிப்பான செய்திதான்!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.