Showing posts with label காட்பாதர். Show all posts
Showing posts with label காட்பாதர். Show all posts

Nov 7, 2012

HAPPY BIRTH DAY KAMAL \ நாயகன் காப்பியா ? காப்பியமா ?

நண்பர்களே...
கலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7  பிறந்த நாள்.
கமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.



கடந்த பதிவுகளின் சாரம்...
கமல் V \ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...
இரு தனி நபர் பேதமல்ல...
ஆர்ட் V \ S பிசினஸ் என்ற பேதமே.


Nayagan \ 1987 \ Tamil \ Directed by Mani Rathnam 
மணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...
நாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.
இந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.
பொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.

முதலில் காட்பாதரை பார்ப்போம்.
THE GODFATHER \ 1972 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
THE GODFATHER 2  \ 1974 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA

அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி  ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.
இந்த  ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு
வர முடியும்...நீடித்திருக்க முடியும்.

அமெரிக்க - இத்தாலிய மக்களின்  ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...
நிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...
எழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.
அதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.
காட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.
இக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்
மரியோ புஸோ பின் தங்கினார்.
கொப்பல்லோ ஜெயித்தார்.
கருத்தாக்கம் = பேமிலி V \ S பிசினஸ்

கொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.
வசூலிலும் வரலாறு படைத்தது.

உலகத்தையே கவர்ந்த காட்பாதர்...
கமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..
திரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி
படமாக்கும் முயற்சி...
திரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...
திரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
 ‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
காட்பாதர் இன்ஸ்பிரேஷனில்...  ‘தேவர் மகனாகி’  சிவாஜி -  கமல் பெருமை சேர்த்தது  வரலாறு.
தேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.

நாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.
ஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.

காட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.

காட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள் 
[ Power Struggle \ அதிகார போராட்டம் ] .
நாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள் 
[ Karmic Struggle \ கர்மவினைப்போராட்டம் ] .

 ‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...
Understanding Movies=Louis Giannetti=Fifth Edition=1990= Prentice Hall,
New Jersey 07632

Page=325
THE GOD FATHER =(USA.1972)=Paramount Pictures=Directed by: Francis Ford Coppola

Genre films are generally profuse in archetypal elements. 
In this, 
the most famous gangster film in history, 
the very title resonates with larger-than-life forebodings. 
In Italian-American culture, 
a godfather is a respected authority figure, 
a revered parental surrogate. 
In the subculture of the Mafia, 
“Godfather” is what criminal chieftains are often called.
The Brando figure is also a benevolent patriarch to the members of his immediate family,
a legendary hero, 
a God-Father.

Page=384
THE GOD FATHER, Part II =(USA.1974)=Paramount Pictures=
Directed by: Francis Ford Coppola

A Marxist reading of a movie doesn’t necessarily exclude other interpretations.
Critic  JOHN HESS  has argued that Coppola comes closer to a Marxist analysis of American Society than any other Hollywood filmmaker:
 “The film’s all pervasive theme is the warmth,
strength,
and beauty of family ties which,
in bourgeois society, 
alone appear to meet the desperate need we all feel for human community.
The counter theme and the real strength of the film is its demonstration that the benefits of the family structure and the hope for community have been destroyed by Capitalism"

பவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்
செண்டர் பாண்ட் பேமிலி V \ S  பிசினஸ்.
இந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்
மரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.

காட்பாதர்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய
3  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

மாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ]  ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.
The Origin of the Family.- Private Property - and the State - 1884 ] =  “ PRIMITIVE - COMMUNAL SYSTEM = CHANGES IN THE FORMS OF MARRIAGE & FAMILY = ECONOMIC PROGRESS OF SOCIETY = ECONOMIC CAUSES = CAPITALISM = STATE = FUTURE HUMAN SOCIETY "
காட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான  'கர்மா' இல்லை.
*********************************************************************************
ஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்
 ‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’  ‘பொதிந்து’எழுதிய...
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.
அழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...
திரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
*********************************************************************************
நாயகன்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய
4  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

கர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \ S  கர்மா.

ஸ்டேட் = அரசாங்கம்
காட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.

நாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...
அவரது கூட்டத்தையும் வேட்டையாடுகிறது.


மணிரத்னம்...
‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.
எனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.
மார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.

வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான்  போலிஸ்காரன்.
போலிஸ்காரனை கொல்கிறான் வேலு.
வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
என ஒரு வட்டத்தில் முடித்து....
இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.

பாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...
மகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...
மகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை
தானே அமைத்துக்கொள்வது...
மருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...
இவையெல்லாம் காட்பாதரிலிருந்து நாயகனை
வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.
மனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.

வேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...
அதன் விளைவாக உயிரை துறப்பான்.
மகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...
தந்தையை விட்டு விலகிச்செல்கிறாள்.
அவளது மகனுக்கு...அடுத்த தலைமுறைக்கு...
தனது  ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.
உத்திராட்சம் = அன்பே சிவம்.
வன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என
வேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...
இக்காட்சிதான்  ‘மணிரத்ன சுருக்கம்’.
காட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.
வன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.
காட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,

நாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
வேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த  ‘டைட்டானிக்’ படத்திலும்...
Titanic \ 1997 \ English \ Directed by James Cameron
இங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த  ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...
Cries & Whispers \ 1972 \ Swedish \ Directed by Ingmar Bergman
இறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.
காட்பாதரின் இறுதிக்காட்சி வேறு.

காட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
நாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
எந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்
ஒரே மாதிரிதான் வந்து சேரும்.

1970 -80களில்  ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.
அப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்
தொடர் கொலைகள் நிகழ்ந்தன.
மஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்
“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.
மஸ்தான்...“ உண்மைதான்...
ஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.
நிஜம் நிழலாகிறது...நிழல் நிஜமாகிறது.

காட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.
டைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்
உலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து
கொண்டாடியது.



மணிரத்னம் தலைமையில்...
கமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்  
தமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...
நாயகன் என்ற காப்பியத்தை... 
தமிழ் பதிவர்களில்  ‘சிலர்’ மட்டும்தான்...
காப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல் 
கண்ட மேனிக்கு எழுதுகிறார்கள்.
அவர்களுக்காக ஒன்று சொல்கிறேன்.
நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
நியூயார்க் பெண்களை காப்பியடித்து...
பம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.

பின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.



Nov 4, 2012

முக்தா சீனிவாசனுக்கு நன்றி.

நண்பர்களே...

நாயகன் \ 1987 \ தமிழ் \ இந்தியா \ இயக்கம் : மணிரத்னம்.

உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையால்,
உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றானது நாயகன் திரைப்படம்.
படத்திற்கு வெள்ளிவிழா வயதான 25ம் ஆகி விட்டது.
ஆனால் அது பற்றி பேச்சு மூச்சின்றி இருந்தபடியால்...
நாயகன் திரைப்படமும்...பங்கேற்ற வல்லுனர்களும் மவுனமாக அழுது கொண்டிருந்தார்கள் போலும்.
அது யாருக்கு கேட்டதோ தெரியவில்லை... ஹிந்து பத்திரிக்கைக்கு கேட்டு விட்டது.

தொடக்க தயாரிப்பாளர் மறந்து போயும்...
உரிமை வாங்கிய தயாரிப்பாளர் மறைந்து போய் விட்ட நிலையில், அப்படத்தின் கதாநாயகனான கமலிடம் ஒரு கட்டுரை வாங்கி பிரசுரித்தது.
நாயகன் உருவாக்கத்தில்...
மணிரத்னத்தின் சிறப்பான பங்கையும்...
தானும், சக தொழில் நுட்ப மேதைகளும் கலா பூர்வமாக உழைத்ததை
நினைவு கூர்ந்து எழுதினார் கமல்.
எழுதலாமோ!

நாயகன் என்ன ஈ புக்கா ?...
'நாயகன்' உலக சினிமா.
நான் மட்டும் சொல்லவில்லை...நாடே சொல்கிறது.
டைம் பத்திரிக்கையும் அங்கீகரித்து பெருமை தேடிக்கொண்டது.

டைம் பத்திரிக்கை வழங்கிய கவரவுத்தையும் கொண்டாடவில்லை.
வெள்ளி விழா ஆண்டையும் கொண்டாடவில்லை.
 ‘தமிழை’ உயர்த்திப்பிடிக்க, 
தமிழ்த்திரை ரசிகர்களாகிய  ‘நாமும்’ தயாராக இல்லை.
கொண்டாட வேண்டிய உரிமையும், கடமையும் தயாரிப்பாளருக்கு மட்டுமே.
ஆனால், ஏன் தயாரிப்பாளர் தரப்பு மவுனம் காத்தது?
ஏனென்றால், தொடக்க தயாரிப்பாளர்
திரு. முக்தா சீனிவாசன் அவர்கள்...
படத்தை தயாரித்த மொத்த செலவையும்...வட்டியோடு சேர்த்து கணக்கிட்டு நியாயமான லாபத்தையும் பெற்று...
சகல உரிமையையும் மறைந்த திரு.ஜீ.வி அவர்களிடம் விற்று விட்டார்.

நாயகன் படத்திற்கு பெருந்தொகை பைனான்ஸ் செய்து...
படம் முழுமை பெற உதவிகரமாக இருந்த ஜீ.வி...
நாயகன் அவார்டும் பெறும்...ரிவார்டும் பெறும்...
எனக்கணக்கிட்டு
நம்பிக்கை வைத்து வாங்கினார்...ஜெயித்தார்.
படத்தாயாரிப்பில் கூடவே இருந்து...
பல படங்களை தாயாரித்து இயக்கிய அனுபவசாலியான
திரு. முக்தா சீனிவாசன்...
நம்பிக்கையில்லாமல் விற்றார்...தோற்றார்.

உலகமே கொண்டாடும் நாயகன் திரைப்படம்,
தயாரிப்பாளரால் கொண்டாடப்படாமல் நிர்கதியாக நிற்கும் அவலத்தை நினைத்து  வருத்தத்தில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இருந்திருக்கலாம்.
இந்த வருத்தமே கமல் பேட்டியில்...
தொடக்க தயாரிப்பாளராகிய திரு முக்தா சீனிவாசன் மேல் உரசலாக வெளிப்பட்டிருக்கிறது.

இனி, கடந்த பதிவின் தொடர்ச்சியாக சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

When Velu is taken to a brothel in a song sequence,
I expressed my exasperation by rolling my eyes.
Mani told me that this was a very Western thing,
and asked if I could give a more Indian expression.
That was a very happy day for me.
Suddenly I had someone who noticed these small things that make up a performance.
கமலின் நடிப்பில் உள்ள குறையை கண்டு பிடித்து...
சரியாக வேலை வாங்கிய இயக்குனர் மணிரத்னத்தின் ஆளுமையை வியந்து சொல்லப்பட்டிருக்கிறது.


He wasn’t a bad man.
He was just from an older school.
And he did help at times.
I must give him his due.
The scene where Velu’s future wife studies for her exams in the brothel was suggested by him.

தொடக்க தயாரிப்பாளர் திரு.முக்தா சீனிவாசன் பங்களிப்பாக வந்த காட்சியை சுட்டிக்காட்டி அவருக்கும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

என்றும் மனதில் நினத்தவுடன் காட்சியளிக்கும்... 
மனித நேய ஓவியம்...அக்காட்சி.
“ நாளைக்கு கணக்கு பரிட்சை...சீக்கிரம் விட்டீங்கன்னா...”
இப்போதும்...இக்கணமும்.... இக்காட்சியை நினைத்து பார்த்த நெகிழ்ச்சியோடு சொல்கிறேன்...
நன்றி...நன்றி....நன்றி....ஐயா திரு.முக்தா சீனிவாசன் அவர்களே !
அதே சமயத்தில் அவரை  ‘ஓல்டர் ஸ்கூல்’ என விளித்ததும் சரியானதே.
அவர்  ‘ஓல்டர் ஸ்கூல்’ என்பதற்கு சாட்சி....
நாயகனை ஜீ.விக்கு விற்ற செயல் ஒன்று போதும்.
மாடர்ன் ஸ்கூலில் இருந்ததால்தான் மணிரத்னம்,கமல்,பி.ஸி.ஸ்ரீராம், தோட்டா தரணி, இளையராஜா,ஜீ.வி உள்ளிட்ட அனைவரும் நாயகனை உருவாக்கினார்கள்.
வசூலையும்...அவார்டுகளையும் அள்ளினார்கள்.

ஆதாரமாக விக்கிப்பீடியாவின் தகவல் இதோ...

The film released on 21 October 1987 coinciding with Diwali and received critical acclaim worldwide. 
Kamal Haasan's performance as Velu Naiker earned him a National Film Award for Best Actor
The film also earned the National Award for Best Cinematography(P. C. Sriram
and Best Art Direction (Thotta Tharani). 
The film was sent by India for theBest Foreign Language Film category 
at the 60th Academy Awards.
[2] In 2005, the Time Magazine included Nayagan in its list of "All-Time 100 Best Films".
3][4] This has also been included in The Moving Arts Film Journal greatest films of all time
[5] Nayagan was also included as one of 20 greatest Indian films of all time. 
This list emerged from the 'T20 of Indian Cinema' poll in which 20 experts from around the country - 10 young filmmakers and 10 seasoned critics and scholars participated.[6]

இப்போதும் மாடர்ன் ஸ்கூலுக்கு மாறி படமெடுக்க வாருங்கள்.
உங்களைப்போல சமுதாய பொறுப்பு மிக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தமிழர்களுக்கு இன்று உடனடித்தேவை.
85 வயது இளைஞன்  ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை’ முன் மாதிரியாகக்கொண்டு வாருங்கள்.
வெல்கம்... முக்தா சார். 

After wrapping the film,

I was so happy that I took Sarika and went for a walk 

around the empty set.

I remember just sitting there with a satisfied sigh.

வாவ்...என்ன ஒரு சொல்லாடல் !

ஒரு கலைஞன்...படைப்பில் ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும்
உழைத்ததால்தான் பரவச நிலையை அடைய முடியும்.
கட்டுரையின் இப்பகுதியை கட்டுடைக்கும்போது...
ஒரு வரி பொதிந்திருப்பது புலப்படும்.

சரிகா...ஐ மிஸ் யூ...

என்று தோன்றவில்லையா.  

இனி திரு.முக்தா சீனிவாசனின் வார்த்தைகளை ஆய்வோம்.
When the film was completed and the first print was shown to me, the film ran for 3 hours. 
Both Kamal and Mani wanted me to release the film as it was, 
whereas I knew that the audience would never sit through the movie. 

I told the editor Lenin to edit several unnecessary scenes. 
This gave life to the movie, along with the theme music Thenpandi seemayilae
Had it not been for Ilayaraja and Lenin, the movie would have flopped.
இங்கே தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை...  
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்.
மூன்று மணி நேரம் ரசிகர்கள் உட்கார மாட்டார்கள் என எந்த இலக்கணப்படி  யோசித்தீர்கள்?
காட்பாதர், டைட்டானிக், பென்ஹர், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன் போன்ற காவியங்கள் எல்லாம்... 
மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்டவைதானே !  

எடிட்டர் லெனின் துணையோடு அராஜகமாக...
மணிரத்னம் என்ற படைப்பாளி உருவாக்கிய காட்சிகளை... 
வெட்டி வீசி இருக்கிறீர்கள்.
காவியமான நாயகன் படத்தை... 
தேறாது என விற்ற வியாபாரி நீங்கள்...
வெட்டி வீசிய காட்சிகள் அனைத்துமே... 
காவியமாகத்தான் இருந்திருக்கும். 

தயாரிப்பாளர் செய்யும் அராஜகங்கள் காட்பாதரை உருவாக்கிய கொப்பல்லோவிற்கும் நிகழ்ந்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் படத்திலிருந்து தூக்கி வீசப்படுவோம் என்ற அச்சத்துடன்தான் கொப்பல்லோ செயல்பட முடிந்தது.
கொப்பல்லோவுக்கு மாற்றாக செட்டில் ஒரு  ‘ரெடிமேட் இயக்குனரை’ எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.
விளைவு... ' THE GODFATHER' எனும்  'EPIC'


சினிமாவில் எடிட்டிங்கிற்கு  ‘இலக்கணம்’ எழுதிய... 
ஷ்ய திரை மாமேதை ஐஸன்ஸ்டைன் இயக்கிய படத்தை... 
தயாரிப்பாளரே எடிட்டிங் செய்து
வெளியிட்ட கொடுமையான வரலாறு இருக்கிறது.

ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

சீன சரித்திரத்தை கேப்ஸ்யூலாக்கி The Last Emperor திரைக்கதை அமைத்து இயக்கிய பெட்ரோலூசிக்கு [ Bernardo Betrolucci ] 
இசைந்த தயாரிப்பாளர் ஜெரமி தாமஸ் [ Jeremy Thomas ] போல் இருக்க வேண்டும். 

நாற்பது கோடி செலவழித்து உருவாக்கிய,  
‘இந்திய சரித்திரத்தின் கேப்ஸ்யூல்’ ஹேராம்...
தரத்தில் உயர்ந்தும் வசூலில் தோல்வியும் அடைந்த நிலையில் 
கமல் இடிந்து போயிருந்தார்.
“ விடுங்கள் கமல் ஜி...
நல்ல படத்தை தயாரித்த பெருமையும்...சந்தோஷமும்... 
எனக்குள் இருக்கிறது.
அது போதும்” என்ற பரத்ஷாதான் தயாரிப்பளர். 

உங்களை நாயகன் படத்தயாரிப்பாளர் என எப்படி சொல்வது ?
சட்டப்படியும் சொல்ல முடியாது...தார்மீகப்படியும் சொல்ல முடியாது.
நாயகன் என்ற காவியப்படத்தை தொடங்கிய தாயாரிப்பாளர் என்ற பெருமையை மட்டும்...வரலாறு என்றும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இறுதியாக உங்களுக்கு நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.
நீங்கள் தயாரிப்பில் போட்ட முட்டுக்கட்டைகள்தான்...
நாயகன் படைப்பாளிகளை இயக்கி... 
கிரியேட்டிவிட்டியாக வேலை செய்ய வைத்திருக்கிறது.
நெருக்கடியில்தான்  ‘கிரியேட்டிவிட்டி’ பிறக்கும்.
அந்த வகையில் உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றியோடு இருக்கும்.

இருவருடைய கட்டுரையிலும்... செண்டர் பாய்ண்ட் இருப்பது...

ஆர்ட் V \ S பிசினஸ்.
   
இந்த முரண்பாடு என்றும் இருக்கும்...
அதிலிருந்துதான் நல்ல படைப்புகள் வந்தன...இனியும் வரும். 

நாயகனின் நாயகர்களை போற்ற வேண்டாம்...
 ‘துருத்திக்கொண்டு’ வந்து தூற்றாமலிருக்கலாம் அல்லவா.

நாயகன் காட்பாதர் காப்பி என்ற கருத்துரையை வலியுறுத்தி...
ரொம்ப பேர் புளகாங்கிதம் அடைந்து வந்தார்கள்.
திரு.முக்தா சீனிவாசனும் இக்கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
எனது பதிலுரையை விரிவாக அடுத்தப்பதிவில் காண்பீர்கள்.
அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.

Jul 25, 2011

GodFather- 3 [1990] கொண்டாட்டத்தின் முடிவு மரணம்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் வெற்றிகரமாக திரையிட்டு விட்டோம்.
நிகழ்ச்சியை ஹிந்து பத்திரிக்கை மிக விரிவாக விமர்சனமும்...செய்தியும் வெளியிட்டது.
அப்படியிருந்தும் கூட்டம் முப்பது பேரை தாண்டவில்லை.
கூட்டம் குறைவாக இருந்தாலும் நிறைவான கூட்டம்.
ஒவ்வொருவரும் காட்பாதரை பத்து தடவைக்கு மேல் படித்தவர்கள்...பார்த்தவர்கள்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் எடுத்த விதம் பற்றி கொப்பல்லோ,மரியோ புஸோ,அல்பசினோ.தயாரிப்பாளர்,எடிட்டர் என சகல ஜாம்பவான்களின் பேட்டி அடங்கிய ஆவணப்படமும் திரையிட்டோம்.
படத்தின் சுவையை இது மேலும் கூட்டியது.

 “காட்பாதரை மூன்று நாளாக திரையிடுகிறீர்கள்.....
தமிழகத்தின் காட்பாதர் கலைஞர் வேறு கோவையில் பொதுக்குழு கூட்டுகிறார்......
இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?” என நண்பர் கேட்டார்.
இது தற்ச்செயலாக நிகழ்ந்தது.அவ்வளவே...
ஆனால் காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட சரியான இடம்
திமுக பொதுக்குழுதான்.

 காட்பாதர் மூன்றாம் பாகத்தில் கொப்பல்லோ வாட்டிகனை வாட்டியிருக்கிறார்
பொதுவாக மூன்று பாகத்திலுமே மதத்தை காயடித்திருப்பார்.
இதில் நேரடியாக வாட்டிகன் ஊழலை முதன்மை படுத்தியிருக்கிறார்.
தீய சக்திகள்தான் வாட்டிகனையும் ஆளமுடியும் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

கெட்டவன் நல்லவனாக வாழ விரும்புவதை நிழல் உலகம் என்றுமே விரும்பாது.
'திருந்துபவனை தீர்த்து விடு' இதுவே அவர்களது தாரக மந்திரம்.

நிழல் உலக நரியாக இப்பாகத்தில் எலிவாலா என்ற பழைய பெருச்சாளியை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரம் முதல் இரண்டு பாகத்தில் வராதது.
இக்கதாபாத்திரத்தின் தன்மையை எலிவாலாவை போட்டதிலேயே ஆடியன்சுக்கு விளக்கி விடுகிறார் கொப்பல்லோ.
ஏனென்றால் எலிவாலாவின் இமேஜ் அப்படி.
குட் பேட் அக்ளியில்..... அக்ளியாக தோன்றி தூள் கிளப்பியவறாயிற்றே!!!!!!!.

ஒரு மனிதன் செய்த தவறுகளுக்கு தன் வாழ்நாளிலேயே தண்டனை  பெறுவான் என்ற நீதி மூன்றாம் பாகத்தில்தான் சொல்லப்படுகிறது.
எனவே மூன்றாம் பாகம் மற்ற இரண்டைப்போல வெற்றி பெறவில்லை அநீதீதான் வெற்றி பெறும் என்பது இன்றைய பாக்ஸ் ஆபிஸ் சூத்திரம்.

படத்தின் இறுதிக்காட்சி வசனமே இல்லாத கவிதை.
இது எனக்கு ஏற்ப்படுத்திய அதிர்வுகள் எனக்கே எனக்கானவை .[இதை பதிவிட மாட்டேன் என்று கொப்பல்லோ மீது சத்தியம் செய்திருக்கிறேன்]
இக்காட்சி தனிப்பட்ட வரம்.....
மூன்று பாகத்தையும் பார்த்தவர்களுக்கு கொப்பல்லோ வழங்கும் ஸ்பெசல் கிப்ட்.

இப்படத்தில் மூன்று பேர் மிக அருமையாக நடித்து உள்ளனர்.
அவர்கள் யாரென்றால்....
ஒன்று அல்பசினோ....

இரண்டாவது அல்பசினோ....


மூன்றாவது அல்பசினோ.


கீழே உள்ள புகைப்படத்தில் வரும் காட்சி மணிரத்தினத்தின் ஒரு படத்தில் இடம் பெறுகிறது.அந்தப்படம் எது?

Jul 20, 2011

காட்பாதர் மூன்றையும் திரையிடுகிறோம்.





காட்பாதரை பதிவெழுதப்போய் காட்பாதர் வைரஸ் என்னை அட்டாக் செய்து ஒரு வழி பண்ணி விட்டது.
அந்த பித்து பிடித்த நிலையை தெளிய வைக்க காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட ஏற்பாடு செய்து விட்டேன்

.கோணங்கள் பிலிம் சொசைட்டி,கோயம்புத்தூர் சினிமா கிளப்,களம் பிலிம் சொசைட்டி மூன்றையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக கொண்டாட அடியெடுத்து உள்ளேன்.

பதிவுலக நண்பர்கள் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பக்கத்தில் எழுதியும்... ,நிகழ்ச்சி போஸ்டரையும் விளம்பரப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
மேலும் என் இதய ராஜ்ஜியத்தில் ஒரு ஏக்கர் எழுதி தருகிறேன்.

[கோவையில் ஒரு செண்ட் இடம் கூட கிடையாது .எல்லாம் கலைஞர் பேமிலி வளைத்து போட்டு விட்டது..அதான்..இதயத்தில் இடம்...ஹி..ஹி..ஹீ..]

Jul 13, 2011

காட்பாதரை பின்னுக்கு தள்ளிய படம்!


காட்பாதரின் மகத்தான வெற்றிக்கு பிறகு பாரமவுண்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தை எடுத்து காசு பார்க்கதுடித்தது.
ஹாலிவுட்டில் இது குல வழக்கம்.
கொப்பல்லாவை அணுகிய போது மறுத்து விட்டார்.
காட் பாதரின் மொத்த எஸென்சையும் கண்டு பிடித்து முதல் பாகத்திலேயே வைத்து விட்டதால் இரண்டாம் பாகம் வேலை செய்ய சுவாரஸ்யம் இருக்காது என கருதினார்.
இதுதான் ஒரு படைப்பாளின் இயற்க்கையான குணம்.
கொப்பல்லோவின் ஸ்டேட்மெண்ட் இதோ...
 “கொக்கோ கோலாவின் பார்முலா தெரிந்த பிறகு அதன் பின் ஆராய்ச்சியில் சுவாரஸ்யம் இருக்காது”
பாரமவுண்ட் தொடர்ந்து வற்ப்புறுத்தவே மீண்டும் காட்பாதரை ஆய்வு செய்தார்.
இரண்டாம் பாகத்திற்க்கான சூத்திரத்தை கண்டு பிடித்து விட்டார்.
அதன் பின் பாரமவுண்டுக்கு மூன்று கண்டிசன் போட்டார்.
முதலாவது... படைப்பு சுதந்திரம்
இரண்டாவது...மிகப்பெரிய சம்பளம்.
மூன்றாவது...படத்தின் பெயர் காட்பாதர் 2
முதல் இரண்டுக்கும் தலையாட்டிய பாரமவுண்ட் மூண்றாவதுக்கு அலறியது....
நோ....
இறுதியில் ஜெயித்தது கொப்பல்லோ!


காட்பாதரை விட காட்பாதர் 2 அதன் உள்ளடக்கம்,கட்டமைப்பு,பிரம்மாண்டம்,வசூல் எல்லாவற்றிலும் சுப்பீரியராக அமைந்து விட்டது.
வழக்கமாக இது போல் எடுக்கப்படும் தொடர் பாகங்கள் தரத்தில் பின் தங்கி விடும்.
ஹாலிவுட் வரலாற்றிலேயே முதல் பாகத்தை விஞ்சியது காட்பாதர் 2 மட்டுமே!
 இன்றும் முறியடிக்கப்படாத இச்சாதனைக்கு நாயகன் கொப்பல்லோதான்

முதல் பாகத்தின் மைய இழை... மார்லன் பிரண்டோவிடம் இருந்து அல்பசினோவிடம் பவர் டிரான்ஸ்பர் ஆவது.
மூன்று மகன்கள் இருந்தாலும் மூன்றாவது மகன் தான் தனது வாரிசாக வரமுடியும் எனக்கணித்து காய் நகர்த்துவார் பிராண்டோ.
அல்பசினோ இந்த மாபியா விளையாட்டே வேண்டாம் என ஒதுங்கிப்போய் விதியின் வசத்தால் தந்தை இடதில் அமர்த்தப்படுகிறார்.

இரண்டாம் பாகத்தில் மார்லன் பிரண்டோ எப்படி காட்பாதராக உருவானார் என்பதையும் குடும்பத்தை கட்டிக்காத்து உறவுகள் சிதையாம ல் பிசினஸ் சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைத்தார் என்பதை ஒரு கோணத்திலும்...
 பிரண்டோவிலிருந்து விலகி அல்பசினோ குடும்பத்தை சிதைத்து பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த போராடுவதை மற்றொரு கோணத்திலும் காட்டி திரைக்கதையில் சாதனை படைத்தார்.

முதல் பாகத்திலேயே சகோதரியின் கணவரை போட்டு தள்ளியாச்சு...
இரண்டாம் பாகத்தில் அண்ணனை கொன்று விடுகிறார்.
காரணம்????????
அண்ணன் நானிருக்க தம்பி பதவிக்கு வருவதா????  என அண்ணன் தம்பியை கொல்ல முற்ச்சிக்க தம்பி தப்பித்து அண்ணனை போட்டு தள்ளுகிறான்.
 “மன்னிப்பு இத்தாலியில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”

தந்தைக்கு இல்லாத நெருக்கடி தனையனுக்கு...
நாலு பேர் ந்ல்லா இருக்க ஒருவரை போட்டு த்தள்ளியது பிராண்டோ காலம்.
ஒருவன் நல்லா இருக்க நாலு பேரை போட்டு தள்ளுவது அல்பசினோ காலம்.


இந்த இரண்டு பாகங்களையும் தொடர்ச்சியாக நீங்கள் பார்க்கும் போது கலைஞர் பேமிலி ஞாபகத்துக்கு வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

இப்படத்தில் வரும் கோர்ட் சீன் மிரட்டலாக இருக்கும்.
நீதிக்கும்,மாபியாவின் சாகசத்திற்க்கும் நடக்கும் மாய விளையாட்டை ரசிக்கலாம்.
தனக்கு எதிராக சாட்சி சொல்பவனுக்கு பேதி கொடுக்க அவனது அண்ணனை தன்னோடு கூட்டிக்கொண்டு வருவார் அல்பசினோ.
அந்த ஆள் பார்ப்பதற்க்கு மத யானை தோற்றம்...
கண்களில் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றம்.
ஜட்ஜிலிருந்து மொத்த கோர்ட்டே நடுங்கி விடும்.
சாட்சியாவது...மண்ணாவது...அடி..அந்தர்பல்டி....
படத்தின் உச்சபட்ச நகைச்சுவை காட்சியாக பரிணமிக்கும்.

படத்தின் ஆரம்பக்காட்சி மிக முக்கியமானது.
இத்தாலியில் லோக்கல் மாபியாவால் தந்தை கொலை செய்யப்படுகிறார்.
பழி வாங்க குடும்பத்தில் ஒருவரையும் மிஞ்சவிடக்கூடாது என்பது மாபியா மரபு.
இந்தக்காட்சிகள் எனக்கு உணர்த்தும் உண்மைகள்...
படம் பார்க்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் உணர முடியும்.
பிரபாகரன் இப்படத்தை பார்த்திருக்க மாட்டார்...
பார்த்திருந்தால் ராஜீவ் காந்தியை கொன்றிருக்க மாட்டார்.
இதற்க்கு மேல் என்னால் விரிவாக எழுத முடியாது.
அடுத்தப்பதிவெழுத... இருக்க வேண்டும்.

சினிமாவின் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு...புரிந்தவர்களுக்கு ஒரு செய்தி...
சோவியத் ரஷ்யாவின் இண்டலக்சுவல் மாண்டேஜ் தியரியை திரைக்கதையில் புகுத்தி வெற்றி கண்டிருக்கிறார் கொப்பல்லோ என்று எனக்குப்படுகிறது.
சரிதானா!!!!!

Jul 11, 2011

காட்பாதர்-1972[ஆங்கிலம்]வன்முறையை கொண்டாடுவோம்

காட்பாதர்-இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே ஒரு பவர் தெறிக்கும்.
கேபிடலிசம் தான் உயிர் வாழ, யாரையும் பழி வாங்கும்....
போட்டுத்தள்ளும்...
நம் ஊரிலேயே மிகச்சரியான உதாரணம்....
 சோனியா காந்தி.

1669ல் மரியோ புஸோவால் நாவலாக எழுதப்பட்டு 1972ல் பிரான்ஸிஸ் போர்டு கொப்பல்லாவால் படமாக்கப்பட்டது.

நாவலும் சரி..படமும் சரி..
இரண்டுமே உலகைக்கலக்கியது.
ஹாலிவுட்டில் சிட்டிசன்கேனை பின்னுக்கு தள்ளிவிட்டு தரத்தில் முதலிடத்தில் இன்றளவும் காட்பாதரை கொண்டாடுகிறார்கள்.
சினிமா பேச ஆரம்பித்த பிறகு அதன் அர்த்தத்தை ...வலிமையை முழுமையாக உணர்த்திய படம் காட்பாதர்.
வண்ணப்படங்களிலேயே அதன் வீர்யத்தை அற்புதமாக போர்ட்ரெய்ட் செய்த படம் காட்பாதர்.
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை காட்பாதரை பார்ப்பதை வழமையாககொண்டிருக்கிறேன்
.இன்று பார்க்கும்போது கூட படம் புத்தம் புதிதாய் தோற்றமளித்தது.
திரைப்படத்தின் அத்தனை உள்ளடக்கங்களையும் சரியாகப்பயன்படுத்தியபடம் காட்பாதர்.
ஒரு கதை எவ்வாறு திரைக்கதை அமைக்கப்படவேண்டும் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம் காட்பாதர்.
முதலில் மரியோபுஸோதான் திரைக்கதையை அமைத்தார்.
சரியாக வரவில்லை.
பிறகு கொப்பல்லோ அமைத்தார்.
மொதத நாவலைப்படித்து விட்டு அதன் மூலக்கூறை பிடித்து விட்டார்.
பேமிலி V/S  பிசினஸ்.
இந்த தளத்தில்தான் இக்கதை இயங்குகிறது என்றசூத்திரத்தை கண்டுபிடித்தவர் கொப்பல்லோ.
அவராலும் ஒருகட்டத்தில் திரைக்கதையை நகர்த்த முடியவில்லை.
இதற்க்கென்றே ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டாகடர் என்ற பிரிவு உண்டு.
அதில் ஜீனியஸான ராபர்ட் டுவென் உதவி செய்தார்.
இவர்தான் திரைமேதை ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த
சைனா டவுண் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்தவர்.
எத்தனை ஜீனியஸ்கள் சேர்ந்து ஒரு திரைப்படத்தை காவியமாக்குகிறார்கள்!!!!!!!!!!
.நம்ம ஊரிலே கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்....என ஒரே ஒரு பெயரைப்போட்டு கைதட்டல் வாங்கும் அயோக்கியத்தனம் இன்றும் தொடர்கிறது

உலகில் எந்தெந்த மொழிகளில் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ அத்தனை மொழிகளிலும் இப்படம் காப்பியடிக்கப்பட்டோ...சிதைக்கப்பட்டோ...மறு உருவாக்கம் செய்யப்பட்டோ வந்துள்ளது.
காட்பாதரை.... தமிழில்....
 சிதைக்கப்பட்டு வந்த படம் அமரன்.
காப்பியடிக்கப்பட்டு வந்த படம் நாயகன்.
அற்புதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட படம் தேவர் மகன்.
அதனால்தான் கமல் தைரியமாக தேவர்மகனை ஆஸ்கார் அனுப்பினார்.
“உன் காட்பாதரை என் மதுரை மண்ணில் உயிர்த்தெழ வைத்துள்ளேன்” என்று வெள்ளைக்காரனுக்கு சேதி சொல்லியதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படம் எப்படி தொடங்கப்பட வேண்டும் என்பதற்க்கு இலக்கணம் காட்பாதர்.
குளோசப்பில் ஒரு முகம் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கும்.
உதவி கேட்கும்.
கவுண்டர் ஷாட்டில் மார்லன் பிராண்டோ மடியில் பூனைக்குட்டியை விரல்களால் கொஞ்சியபடிகேட்டுக்கொண்டு இருப்பார்.

ஒளிப்பதிவில்.... லைட்&ஷேட் என்ற உத்தி மிகுந்த நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கும்.
இருண்ட உலகத்தின் மாமனிதன் மார்லன் பிரண்டோ என்பதை ஒளிப்பதிவு சொல்லும்.
ஏன்? ஆர்ட் டைரக்டரும் அவர் பாணியில் சொல்லியிருப்பார்.

.இருட்டை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் காட்சியிலிருந்து அப்படியே ஜம்ப்...
அடுத்தக்காட்சி .

வெளிச்சம் வெள்ளமாக தெறிக்கும் திருமணக்காட்சி.
அத்தனை முதன்மை பாத்திரங்களும் இங்கே ஆஜராகியிருப்பார்கள்.
அவர்களது குணாதிசயங்களை இந்தக்காட்சியிலேயே சொல்லி விடுவார் கொப்பல்லோ.

கொப்பல்லோவின் ஆளுமைக்கு இதோ ஒரு சாம்பிள்.....
இன்னொரு டான் காட்பாதரை பார்த்து பேச வேண்டும்.
அந்த நடிகரால் மார்லன் பிராண்டோவை பார்த்து வசனமே பேச முடியவில்லை.
 'வசனத்தை திருப்பி திருப்பி சொல்லி மனப்பாடம் பண்ணு' என்று சொல்லி விட்டு அந்த நடிகர் அவ்வாறு பிராக்டிஸ் பண்ணுவதை அவர் அறியாதவாறு சூட் செய்து படத்தில் வெகு நேர்த்தியாக இணைத்துவிட்டார்.
படத்தில் காட்பாதரை பார்க்கப்போகும்முன்னால் எப்படி பேசவேண்டும் என்பதை ஒரு மனிதன் தனியாக ஒத்திகை பார்ப்பதுபோல் இக்காட்சி ரசிகர்களுக்கு பதிவாகும்.

கொப்பல்லொ இப்படம் எடுக்க பட்ட பாட்டை தனியே ஒரு படம் பண்ணலாம்.
அவ்வளவு பாடு.
தயாரிப்பாளரான பாரமவுண்ட் கொடுத்த நெருக்கடி சொல்லி மாளாது.
மார்லன் பிராண்டோவும் இயக்குனரை வாட்டி வதைப்பதில் பிஹெச்டி வாங்கியவர்.
ஒரு கட்டத்தில் கதவை சாத்தி விட்டு கொப்பல்லோ தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.
அதன் பிறகு பிராண்டோ தனது சேட்டைகளை மூட்டை கட்டி விட்டு படம் முழுமையாக வர முழு மனதோடு ஒத்துழைத்தது வரலாறு.

அல்பசினோ இப்படத்தின் ஆடிசனுக்கே ஒத்துழையாமையை நல்கினார்.
அப்போது அவர் திரை உலகில் சாதாரணன்.
ஆனால் நாடக உலகில் சூப்பர் ஸ்டார்.
இவரைப்போட பாரமவுண்ட் கொடுத்த கட்டையை நீக்க கொப்பல்லோ படாத பாடுபட்டார்.
அல்பசினோ என்ற மகத்தான நடிகன் வெளிப்பட்டது காட்பாதரில்தான்.
ஆரம்பக்காட்சிகளில் அல்பசினோ முகம் பச்சிளம்பாலகனாக காட்சியளிக்கும்.

கிளைமாக்சில் நரியின் தந்திரத்தையையும், ஒநாயின் கொடூரத்தையும் கண்களில் தேக்கி பாவங்களை வெளிப்படுத்துவார் பாருங்கள்.
வர்ணிக்க வார்த்தைகளை புதிதாக உருவாக்க வேண்டும்.


இது வரை இப்படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்.
இனிமேலும் பார்க்கபோவதில்லை என்றால் டோட்டல் வேஸ்ட்.

இப்படத்தை முப்பதாண்டுகளாக ஆய்வு செய்து வரும் எனது நண்பர் இயக்குனர் திரு .ஆனந்தன் கொடுத்த தகவல்கள்தான் இப்பதிவில் நிரம்பி உள்ளன.
அவருக்கு நன்றி.