Jul 20, 2011

காட்பாதர் மூன்றையும் திரையிடுகிறோம்.

காட்பாதரை பதிவெழுதப்போய் காட்பாதர் வைரஸ் என்னை அட்டாக் செய்து ஒரு வழி பண்ணி விட்டது.
அந்த பித்து பிடித்த நிலையை தெளிய வைக்க காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட ஏற்பாடு செய்து விட்டேன்

.கோணங்கள் பிலிம் சொசைட்டி,கோயம்புத்தூர் சினிமா கிளப்,களம் பிலிம் சொசைட்டி மூன்றையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக கொண்டாட அடியெடுத்து உள்ளேன்.

பதிவுலக நண்பர்கள் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பக்கத்தில் எழுதியும்... ,நிகழ்ச்சி போஸ்டரையும் விளம்பரப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
மேலும் என் இதய ராஜ்ஜியத்தில் ஒரு ஏக்கர் எழுதி தருகிறேன்.

[கோவையில் ஒரு செண்ட் இடம் கூட கிடையாது .எல்லாம் கலைஞர் பேமிலி வளைத்து போட்டு விட்டது..அதான்..இதயத்தில் இடம்...ஹி..ஹி..ஹீ..]

21 comments:

 1. கண்டிப்பா செய்வோம் மாப்ள.....நிகழ்ச்சி விஷயத்த தெரியப்படுத்துங்க நன்றி!

  ReplyDelete
 2. நன்றி நண்பரே!
  நிகழ்ச்சியையும்...
  காட்பாதர் மூன்றாம் பாகத்தையும்...
  ஒன்றிணைத்து ஒரே பதிவாக்கி எழுதலாம் என்றிருக்கிறேன்.

  ReplyDelete
 3. மிக்க மகிழ்ச்சி தலைவரே,
  நன்றாக விலம்பரம் செய்து விடலாம்

  ReplyDelete
 4. கோவையில் ஒரு செண்ட் இடம் கூட கிடையாது .எல்லாம் கலைஞர் பேமிலி வளைத்து போட்டு விட்டது..அதான்..இதயத்தில் இடம்...ஹி..ஹி..ஹீ..
  மாப்பிள உனக்கு ரொம்பதான் தைரியம் இப்ப ஆட்டோ வராதென்று..!?

  காட்டான் குழ போட்டான்....

  ReplyDelete
 5. @கீதப்பிரியன்
  நன்றி நண்பரே!

  விரைவில் சென்னை வருகிறேன்.சந்திப்போம்.

  ReplyDelete
 6. இதயத்தில் இடமா? அப்போ வேற ஏதாவது ஐடியா? :-)
  வாழ்த்துக்கள் பாஸ்!

  ReplyDelete
 7. @காட்டான்
  //மாப்பிள உனக்கு ரொம்பதான் தைரியம் இப்ப ஆட்டோ வராதென்று..!?//

  எல்லாம் காட்டான்,நிரூபன் போன்ற நண்பர்கள் இருக்கும் தைரியத்தில்தான்

  ReplyDelete
 8. நல்ல தகவல் சார்..போஸ்ட்டர் ரெடி ஆகவும் சொல்லுங்க, ஒட்டிடுவோம்.

  --செங்கோவி

  ReplyDelete
 9. @ஜீ
  //இதயத்தில் இடமா? அப்போ வேற ஏதாவது ஐடியா? :-) //

  நண்பா...இதயத்தில் இடம் என்ற வார்த்தையை கலைஞர் கெட்ட வார்த்தையாக்கிவிட்டார்.அதனால்தான் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்துவிட்டது.

  ReplyDelete
 10. @செங்கோவி
  வருகைக்கும் கனிவான ஆதரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 11. ஆமாயா..
  இந்த வார்தையை கூட கலைஞர் கெட்ட வார்தைபோலாக்கிவிட்டார் .. இவருக்காக எங்கள் தமிழ் தாத்தாக்கள் ஓலைச்சுவடிகளில் ஓயாமல் எழுதி வைத்த தமிழை விடுவோமா..!!?

  காட்டான் குழ போட்டுட்டான்...

  ReplyDelete
 12. போட்டுட்டோம்ல .....என்னோட ப்ளாக்ல...

  ReplyDelete
 13. மறக்காம எனக்கு ஒரு ஏக்கர் ...ஹி ஹி ஹி..உங்க இதயத்துல ....

  ReplyDelete
 14. பத்திர பதிவு எப்போன்னு சொன்னீங்கனா உடனே குடும்பத்தோடு வந்துருவேன் ...

  ReplyDelete
 15. @காட்டான்

  மீண்டும் வருகை தந்து பின்னூட்டம் போட்ட நண்பருக்கு...ந்ன்றி..நன்றி...மீண்டும் நன்றி.

  ReplyDelete
 16. @கோநேரம்

  தங்கள் பிளாக்கில் இத்தகவலை சேர்த்தமைக்கு நன்றி...நண்பரே!

  ReplyDelete
 17. @கோவை நேரம்

  //பத்திர பதிவு எப்போன்னு சொன்னீங்கனா உடனே குடும்பத்தோடு வந்துருவேன் ...//

  வெள்ளிக்கிழமை அருணா திருமண மண்டபத்துக்கு வாங்க...
  காட்பாதர் முன்னிலையில் ரிஜிஸ்ட்ரேசன் வச்சுக்கலாம்.

  ReplyDelete
 18. Dear Friend

  I am coimbatorian, but till now i do not know about the organisations which u mentioned.
  Please let me know the dates of film shows.

  Many thanks,
  K.Sundaramurthy, Yemen

  ReplyDelete
 19. காட்பாதர் ஒரு படமல்ல வாழ்க்கை.நான் இதுவரை பத்து முறை பார்த்துவிட்டேன்.இன்னும் சலிக்கவில்லை!!சிலர் இது போர் சிலர் அரைகுறையான விமர்சனம் இதெல்லாம் அறைவேக்காட்டுதனமானது.உங்களின் பனி பாராட்டுகிரியது!!

  ReplyDelete
 20. தாமதமான வணக்கம் பாஸ்,

  அருமையான முயற்சியினக் கையிலெடுத்திருக்கிறீங்க.

  வாழ்த்துக்கள் பாஸ். படம் ஓடவுள்ள மண்டப விபரம், திரையிடப்படும் திகதி முதலியன Fix பண்ணிய பின்னர், எனக்கு ஒரு மெயில் தாங்கோ, நான் என் வலைப் பதிவிலும் கோயம்புத்தூரில் இடம் பெறும் உலக சினிமாக் கொண்டாட்டம் பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுக்கின்றேன்.

  போன வாரம் முழுவதும் வலைப் பதிவிற்கு வர முடியாது போய் விட்டது,
  கடந்த ஞாயிறு முதல் தான் மீண்டும் வரத் தொடங்கியிருக்கின்றேன்,

  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 21. இந்த பதிவ படிச்சுட்டு நேத்து மறுபடியும் காட்பாதர் முதல் பாகம் பாத்தேன்...
  ஏனோ இப்போ பாக்கும் போது சில பல தமிழ் படங்கள் தான் ஞாபகம் வருது

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.