Jul 13, 2011

காட்பாதரை பின்னுக்கு தள்ளிய படம்!


காட்பாதரின் மகத்தான வெற்றிக்கு பிறகு பாரமவுண்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தை எடுத்து காசு பார்க்கதுடித்தது.
ஹாலிவுட்டில் இது குல வழக்கம்.
கொப்பல்லாவை அணுகிய போது மறுத்து விட்டார்.
காட் பாதரின் மொத்த எஸென்சையும் கண்டு பிடித்து முதல் பாகத்திலேயே வைத்து விட்டதால் இரண்டாம் பாகம் வேலை செய்ய சுவாரஸ்யம் இருக்காது என கருதினார்.
இதுதான் ஒரு படைப்பாளின் இயற்க்கையான குணம்.
கொப்பல்லோவின் ஸ்டேட்மெண்ட் இதோ...
 “கொக்கோ கோலாவின் பார்முலா தெரிந்த பிறகு அதன் பின் ஆராய்ச்சியில் சுவாரஸ்யம் இருக்காது”
பாரமவுண்ட் தொடர்ந்து வற்ப்புறுத்தவே மீண்டும் காட்பாதரை ஆய்வு செய்தார்.
இரண்டாம் பாகத்திற்க்கான சூத்திரத்தை கண்டு பிடித்து விட்டார்.
அதன் பின் பாரமவுண்டுக்கு மூன்று கண்டிசன் போட்டார்.
முதலாவது... படைப்பு சுதந்திரம்
இரண்டாவது...மிகப்பெரிய சம்பளம்.
மூன்றாவது...படத்தின் பெயர் காட்பாதர் 2
முதல் இரண்டுக்கும் தலையாட்டிய பாரமவுண்ட் மூண்றாவதுக்கு அலறியது....
நோ....
இறுதியில் ஜெயித்தது கொப்பல்லோ!


காட்பாதரை விட காட்பாதர் 2 அதன் உள்ளடக்கம்,கட்டமைப்பு,பிரம்மாண்டம்,வசூல் எல்லாவற்றிலும் சுப்பீரியராக அமைந்து விட்டது.
வழக்கமாக இது போல் எடுக்கப்படும் தொடர் பாகங்கள் தரத்தில் பின் தங்கி விடும்.
ஹாலிவுட் வரலாற்றிலேயே முதல் பாகத்தை விஞ்சியது காட்பாதர் 2 மட்டுமே!
 இன்றும் முறியடிக்கப்படாத இச்சாதனைக்கு நாயகன் கொப்பல்லோதான்

முதல் பாகத்தின் மைய இழை... மார்லன் பிரண்டோவிடம் இருந்து அல்பசினோவிடம் பவர் டிரான்ஸ்பர் ஆவது.
மூன்று மகன்கள் இருந்தாலும் மூன்றாவது மகன் தான் தனது வாரிசாக வரமுடியும் எனக்கணித்து காய் நகர்த்துவார் பிராண்டோ.
அல்பசினோ இந்த மாபியா விளையாட்டே வேண்டாம் என ஒதுங்கிப்போய் விதியின் வசத்தால் தந்தை இடதில் அமர்த்தப்படுகிறார்.

இரண்டாம் பாகத்தில் மார்லன் பிரண்டோ எப்படி காட்பாதராக உருவானார் என்பதையும் குடும்பத்தை கட்டிக்காத்து உறவுகள் சிதையாம ல் பிசினஸ் சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைத்தார் என்பதை ஒரு கோணத்திலும்...
 பிரண்டோவிலிருந்து விலகி அல்பசினோ குடும்பத்தை சிதைத்து பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த போராடுவதை மற்றொரு கோணத்திலும் காட்டி திரைக்கதையில் சாதனை படைத்தார்.

முதல் பாகத்திலேயே சகோதரியின் கணவரை போட்டு தள்ளியாச்சு...
இரண்டாம் பாகத்தில் அண்ணனை கொன்று விடுகிறார்.
காரணம்????????
அண்ணன் நானிருக்க தம்பி பதவிக்கு வருவதா????  என அண்ணன் தம்பியை கொல்ல முற்ச்சிக்க தம்பி தப்பித்து அண்ணனை போட்டு தள்ளுகிறான்.
 “மன்னிப்பு இத்தாலியில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”

தந்தைக்கு இல்லாத நெருக்கடி தனையனுக்கு...
நாலு பேர் ந்ல்லா இருக்க ஒருவரை போட்டு த்தள்ளியது பிராண்டோ காலம்.
ஒருவன் நல்லா இருக்க நாலு பேரை போட்டு தள்ளுவது அல்பசினோ காலம்.


இந்த இரண்டு பாகங்களையும் தொடர்ச்சியாக நீங்கள் பார்க்கும் போது கலைஞர் பேமிலி ஞாபகத்துக்கு வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

இப்படத்தில் வரும் கோர்ட் சீன் மிரட்டலாக இருக்கும்.
நீதிக்கும்,மாபியாவின் சாகசத்திற்க்கும் நடக்கும் மாய விளையாட்டை ரசிக்கலாம்.
தனக்கு எதிராக சாட்சி சொல்பவனுக்கு பேதி கொடுக்க அவனது அண்ணனை தன்னோடு கூட்டிக்கொண்டு வருவார் அல்பசினோ.
அந்த ஆள் பார்ப்பதற்க்கு மத யானை தோற்றம்...
கண்களில் சினம் கொண்ட சிங்கத்தின் சீற்றம்.
ஜட்ஜிலிருந்து மொத்த கோர்ட்டே நடுங்கி விடும்.
சாட்சியாவது...மண்ணாவது...அடி..அந்தர்பல்டி....
படத்தின் உச்சபட்ச நகைச்சுவை காட்சியாக பரிணமிக்கும்.

படத்தின் ஆரம்பக்காட்சி மிக முக்கியமானது.
இத்தாலியில் லோக்கல் மாபியாவால் தந்தை கொலை செய்யப்படுகிறார்.
பழி வாங்க குடும்பத்தில் ஒருவரையும் மிஞ்சவிடக்கூடாது என்பது மாபியா மரபு.
இந்தக்காட்சிகள் எனக்கு உணர்த்தும் உண்மைகள்...
படம் பார்க்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் உணர முடியும்.
பிரபாகரன் இப்படத்தை பார்த்திருக்க மாட்டார்...
பார்த்திருந்தால் ராஜீவ் காந்தியை கொன்றிருக்க மாட்டார்.
இதற்க்கு மேல் என்னால் விரிவாக எழுத முடியாது.
அடுத்தப்பதிவெழுத... இருக்க வேண்டும்.

சினிமாவின் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு...புரிந்தவர்களுக்கு ஒரு செய்தி...
சோவியத் ரஷ்யாவின் இண்டலக்சுவல் மாண்டேஜ் தியரியை திரைக்கதையில் புகுத்தி வெற்றி கண்டிருக்கிறார் கொப்பல்லோ என்று எனக்குப்படுகிறது.
சரிதானா!!!!!

38 comments:

 1. hello sir,
  nall post,enakku 1staa vida 2nd part the romba puduchidhu..btw idhann hollywood la "part 2" appingra title oda release aana 1st padam nu kelvi patten..not sure

  ReplyDelete
 2. மாப்ள கலக்கலா சொல்லி இருக்கீங்க நன்றி!

  ReplyDelete
 3. @பாலு
  ஹாலிவுட் வரலாற்றில் முதன் முதலில் இரண்டாம் பாகத்திற்க்கு காட்பாதர் 2 எனப்பெயரிட்டு வெற்றி கண்டார் கொப்பல்லோ.அதற்க்கு முன்னால் இரண்டாம்...மூன்றாம்...என எத்தனை வந்தாலும் ஒவ்வொன்றுக்கும் வேறு பெயரிட்டு வெளியாகியது.முதன் முதலில் மரபை உடைத்தவர் கொப்பல்லோ...

  ReplyDelete
 4. @கவி அழகன்
  நண்பரே!
  நான் இது போன்ற பின்னூட்டங்களை விரும்பாதவன்.
  பின்னூட்டங்கள் நீங்களும் நானும் மேலும் அப்பதிவு பற்றி விவாதிக்கின்ற....பகிர்கின்ற விரிவாக்கமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
  தயவு செய்து என் ஆசையை நிறைவேற்றும் வகையில் பின்னூட்டம் இடுங்கள்...என் இனிய நண்பரே!

  ReplyDelete
 5. வணக்கம் பாஸ்,
  உண்மையிலே வித்தியாசமான ஒரு விமர்சனம், படத்திற்குரிய கதை எப்படி விவாதிக்கப்பட்டது, இரண்டாவது பாகத்திற்குரிய படப்பிடிப்பிற்கான காய் நகர்க்கதல்களை கொப்பல்லோ எப்படியெல்லாம் நகர்த்தினார் என்பதனை சுவாரஸ்யமாகவும் விளக்கியதோடு, கூடவே படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மனதில் எழும் வண்ணம் அழகிய விமர்சனத்தையும் பகிர்ந்திருக்கிறீங்க.

  நன்றி பாஸ்,

  டைம் இருக்கும் போது கண்டிப்பாக காட்பாதர் 2 இனைப் பார்க்கிறேன்.

  உலக சினிமா விமர்சனத்திற்கு உங்களுக்கு நிகர் நீங்களே தான்.
  சுவை பட எழுதி, உள் இழுத்து வாசிக்க வைக்கிறீங்க.

  ReplyDelete
 6. ரெண்டு படங்களும் உங்க கிட்ட இருக்கு தானே ..?சப் டைட்டில் உடன் கிடைக்குமா ..? கொஞ்சம் உலக அறிவு கம்மி ....அதான்...

  ReplyDelete
 7. இந்த படத்தைத்தான் தமிழில் கொத்துக்கறி போட்டு எடுத்து கமல்ஹாசனுக்கு மறு வாழ்வு கொடுத்தார் மணிரத்னம். அல்பசினோ வை துல்லியமாக காப்பி அடிக்கும் நம்மூர் ஒலக நாயகன் கமல் இதை விடுவாரா என்ன? ஆனால் அல் பசினோ முன் ஒலக நாயகன் ஒரு வெத்து வேட்டு என்பதை இருவரையும் பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது உண்மை தான்...பொதுவாக இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட நல்லா இருக்காது..ஆனால் இது ஒரு வித்தியாசம் தான்.

  ReplyDelete
 9. பட விவரங்கள் சூப்பர்

  ReplyDelete
 10. @நிரூபன்

  //டைம் இருக்கும் போது கண்டிப்பாக காட்பாதர் 2 இனைப் பார்க்கிறேன்.//

  கட்ட்டாயம் பாருங்கள் நண்பரே!.நீங்கள் பார்க்கும் போது உங்களிடம் படம் வேறு ஒரு தளத்தில் பேசும்.
  உங்கள் அரசியலோடு தொடர்பு ஏற்ப்படுத்தும்.
  இதுவே காட்பாதரின் தனித்தன்மை.

  ReplyDelete
 11. கோவை நேரம்

  //ரெண்டு படங்களும் உங்க கிட்ட இருக்கு தானே ..?சப் டைட்டில் உடன் கிடைக்குமா ..?//

  சப் டைட்டிலுடன் மூன்று பாகங்களுமே கிடைக்கிறது.
  ஆடியோ கொப்பல்லோ கமெண்ட்ரியுடன் உள்ளது.

  // கொஞ்சம் உலக அறிவு கம்மி ....அதான்...//
  பாஸ் நீங்க தன்னடக்கமா சொல்றீங்க....
  இந்த உலகத்தில் என்னை விட அறிவு கம்மி யாருமே கிடையாது என்பதை நானறிவேன்.

  ReplyDelete
 12. @தீனா
  //இந்த படத்தைத்தான் தமிழில் கொத்துக்கறி போட்டு எடுத்து கமல்ஹாசனுக்கு மறு வாழ்வு கொடுத்தார் மணிரத்னம். அல்பசினோ வை துல்லியமாக காப்பி அடிக்கும் நம்மூர் ஒலக நாயகன் கமல் இதை விடுவாரா என்ன? ஆனால் அல் பசினோ முன் ஒலக நாயகன் ஒரு வெத்து வேட்டு என்பதை இருவரையும் பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.//

  நண்பரே!உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன்
  நிச்சயம் கமல் வேத்து வேட்டு கிடையாது.
  நாயகனில் கமல் பிரண்டோ,ராபர்ட்டிநீரோ,அல்பசினோ மூன்று பேரையுமே உள் வாங்கி பம்பாய் தாதா வரதராஜ முதலியாரை பிரதிபலித்தார்.வன்முறையை பிரதிபலிக்கும் ஆக்ரோஷக்காட்சிகளில் வேண்டுமானால் அல்பசினோ அளவுக்கு கமலால் நடிக்கமுடியாதிருக்கலாம்.
  சரண்யாவுடன் காதல் காட்சிகளை நினைத்துப்பாருங்கள்.கமல் நிழலைக்கூட அல்பசினோ நெருங்க முடியாது.
  சலங்கை ஒலி கமலுக்கு நிகராக உலகில் எந்த நடிகனும் இது வரை பிறக்கவில்லை.
  நிழல் நிஜமாகிறது பாருங்கள்...அண்டர் ஆக்டிங்கில் அசத்தியிருப்பார்.

  ReplyDelete
 13. @செங்கோவி
  //நீங்கள் சொல்வது உண்மை தான்...பொதுவாக இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட நல்லா இருக்காது..ஆனால் இது ஒரு வித்தியாசம் தான்.//

  கொப்பல்லோ செய்த சாதனை இது வரை மீறப்படவில்லை நண்பரே!

  ReplyDelete
 14. @தமிழ்வாசி

  //பட விவரங்கள் சூப்பர்//

  காட்பாதர் என்ற கடலில் நான் எடுத்துக்காட்டியது ஒன்றிரண்டு முத்துக்களே!

  ReplyDelete
 15. என்னாமா எழுதறீங்க நண்பா. விரைவில் கோவை வந்து உங்களை சந்திப்பேன். அதிக பட்சம் 30 நாட்களூக்குள்

  ReplyDelete
 16. படத்தைப்பற்றிய விளக்கமான பதிவு....
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. மாப்பிள எப்புடி இருக்கீங்க நானும் ஒரு ஈழத்தமிழந்தான் திரிய இப்பூடி கிள்ளி போட்டிருக்கீங்களே...!? 

  இதுக்கு நான் உண்மையான விமர்சனம் எழுதினா நீங்க போட மாட்டீங்க சினமா விமர்சனந்தானே எழுதிரிங்க மாப்பு ...!? உந்த படத்துக்கு முன்னால் ஒலக்க நாயகண்ட நடிப்பு ஏன்யா கம்பேர் பன்னுறீங்க...!? இந்த விமர்சனத்த கட் பண்ணீடாத மாப்பிள..!?

  ReplyDelete
 18. வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியது ரசிக்க வைத்தது.... மேலும் தொடர்க...

  ReplyDelete
 19. விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.. நான் இன்னமும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 20. @சி.பி.செந்தில்குமார்
  //விரைவில் கோவை வந்து உங்களை சந்திப்பேன். அதிக பட்சம் 30 நாட்களூக்குள்//

  வாருங்கள் நண்பரே!
  உங்களை நேரில் சந்திக்க காத்திருக்கிறேன்.
  ஈரோடு புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போட கடும் முயற்ச்சி எடுத்து வருகிறேன்.
  கிடைக்கும்பட்சத்தில் நானே இம்மாத இறுதியில் ஈரோடுக்கு வருவேன்.
  அப்போது சந்திக்கலாம்.

  ReplyDelete
 21. @விடிவெள்ளி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 22. @காட்டான்
  //நானும் ஒரு ஈழத்தமிழந்தான் திரிய இப்பூடி கிள்ளி போட்டிருக்கீங்களே...!? //
  இப்படம் பாருங்கள்.
  உங்களுக்கு இந்தப்படம் எப்படி பாதிப்பு ஏற்ப்படுத்தியது என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

  ReplyDelete
 23. @காட்டான்
  //இதுக்கு நான் உண்மையான விமர்சனம் எழுதினா நீங்க போட மாட்டீங்க சினமா விமர்சனந்தானே எழுதிரிங்க மாப்பு ...!? உந்த படத்துக்கு முன்னால் ஒலக்க நாயகண்ட நடிப்பு ஏன்யா கம்பேர் பன்னுறீங்க...!? இந்த விமர்சனத்த கட் பண்ணீடாத மாப்பிள..!?//

  விமர்சனத்தை கட் செய்யவில்லை.
  அப்படியே போட்டாச்சு..
  திருப்தியா நண்பரே!

  ReplyDelete
 24. @சரியில்ல

  //வேறொரு கோணத்திலிருந்து அனலைஸ் பண்ணியது ரசிக்க வைத்தது.... மேலும் தொடர்க...//

  உங்கள் பாராட்டை ...இன்னும் சிறப்பாக எழுத கட்டளையிட்டதாக நினைத்து பணிபுரிவேன்.

  ReplyDelete
 25. @மதுரன்

  //விபரங்களை அருமையாக தந்திருக்கிறீர்கள்.. நான் இன்னமும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு வருகிறேன்//

  நீங்கள் காட்பாதர் பார்ப்பதுதான்...
  நான் விரும்பும் பாராட்டு.

  ReplyDelete
 26. ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்தையே மிகவும் விரும்புகிறேன்... ஏனெனில் இதில் மாறி மாறி பயணிக்கும் கதை சில நேரங்களில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு பதில் குறைத்துவிட்டது :(

  அல் பேசினோ - ஏன் அவரது மைக்கேல் கோர்லீயோன் கேரக்டருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என இப்போதும் யோசிப்பதுண்டு. என்ன நடிப்பு... வாழ்ந்திருப்பார்.

  மூன்றாவது பாகத்தையும் பற்றி கொஞ்சம் எழுதுங்கள் தலைவரே... :) இப்ப்திவில் சில நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்.. :)

  ReplyDelete
 27. @கனகு

  //ஏனோ இந்த இரண்டாம் பாகத்தை விட முதல் பாகத்தையே மிகவும் விரும்புகிறேன்... ஏனெனில் இதில் மாறி மாறி பயணிக்கும் கதை சில நேரங்களில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு பதில் குறைத்துவிட்டது//

  கனகு கை கொடுங்கள்....சூப்பர்.
  காட்பாதரை நன்றாக உள்வாங்கியவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.
  இத்தாலியில் பயணிக்கும்போது சற்று படம் நொண்டும்.இந்த இடத்தில்..திரைக்கதை சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைதான்.

  ReplyDelete
 28. @கனகு

  //அல் பேசினோ - ஏன் அவரது மைக்கேல் கோர்லீயோன் கேரக்டருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என இப்போதும் யோசிப்பதுண்டு. என்ன நடிப்பு... வாழ்ந்திருப்பார்.//

  நண்பரே இதற்க்கு காட்பாதர்3 எழுதும் போது விரிவாக சொல்கிறேன்.

  ReplyDelete
 29. காட்ஃபாதர் நாவல்தான் மொதல்ல படிச்சேன். அதன்பின் படம் பார்த்தேன். நாவல் எனக்கு மிகமிகமிகமிகப் பிடித்தது. படமும். இதுல இருக்கும் சின்னச்சின்ன அல்பசீனோ மேனரிஸங்களை, இன்னமும் கமல் உபயோகித்துக்கொண்டே இருக்கிறார். இந்தக் கதையில், தனது மகளின் திருமணத்தின்போது, பாதிக்கப்பட்ட ஒரு இத்தாலி வியாபாரிக்கு நீதி வழங்குவார் கார்லியோனி. அதுவும், மகன் ஸான்னி இறந்ததும், சவப்பெட்டி வியாபாரியின் கடைக்கு வந்து, கண்கலங்கும் இடமும், எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.

  இரண்டாம் பாகத்தில், டி நீரோ. அட்டகாசம். என்ன சொல்வது? இது ஒரு அற்புதம். பின்னிருக்கீங்க :-) .. தொடருங்கள் :-) .. மொதோ பாகத்துக்கும் சேர்த்து இங்கனயே கமெண்ட் போட்டுக்குறேன் :-)

  ReplyDelete
 30. @கருந்தேள் கண்ணாயிரம்
  நண்பரே!
  காட்பாதர் திரை இதிகாசம்.

  //காட்ஃபாதர் நாவல்தான் மொதல்ல படிச்சேன்.//
  தமிழில் மொழி பெயர்த்தால் முதலில் படிப்பது நானாகத்தான் இருக்கும்.நீங்கள் மொழி பெயர்த்தால் நான் வெளியிடத்தயார்.

  ReplyDelete
 31. நன்று..தகவல்களால் படத்தை பார்க்க தூண்டும் உங்கள் முயற்சி அருமை. நன்றி

  ReplyDelete
 32. உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்லை  என்னால் நீங்கள் புண்பட்டால்..!? அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.. இதை நீங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை ..நீஙகள் என்னை படங்கள் பார்க தூண்டுகிறீர்கள் உங்கள் அழகிய ஆழமான விமர்சன பார்வையால்.. நன்றி .. நன்றி காட்டான் கல் நெஞ்சம் படைத்தவனில்லை..!!?

  ReplyDelete
 33. @விஜய் ஆர்ம்ஸ்டாராங்க்
  //நன்று..தகவல்களால் படத்தை பார்க்க தூண்டும் உங்கள் முயற்சி அருமை. நன்றி//

  நண்பரே!காட்பாதர் என்ற பூவோடு இருந்ததால் இந்த நாருக்கு மணம் வந்துள்ளது.
  உங்கள் பாராட்டு மேலும் என்னை உழைக்கத்தூண்டும்

  ReplyDelete
 34. @காட்டான்
  //உங்கட மனச புண்படுத்துவது என் நோக்கமில்லை என்னால் நீங்கள் புண்பட்டால்..!? அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.. இதை நீங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை ..நீஙகள் என்னை படங்கள் பார்க தூண்டுகிறீர்கள் உங்கள் அழகிய ஆழமான விமர்சன பார்வையால்.. நன்றி .. நன்றி காட்டான் கல் நெஞ்சம் படைத்தவனில்லை..!!?//

  நண்பரே நீங்கள் போட்ட முதல் பின்னூட்டத்திற்க்கு நான் விளையாட்டாக போட்ட பதில் தங்களை பதற வைத்து விட்டது.
  நீங்கள் என்னை புண்படுத்தவேயில்லை.
  எனவே நான் காயம் பட்டேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
  நீங்கள் போட்ட கமெண்டை மிகவும் ரசித்து நண்பர் ஆனந்தனிடம் ரசித்து பேசிக்கொண்டிருந்தேன்.

  ReplyDelete
 35. @காட்டான்
  நான் பிரான்ஸ் வரும் போது தங்களை சந்திக்க விரும்புகிறேன்.
  எனக்கு குளிர் தாங்காது.
  அதனால் நல்ல பருவ காலம் எப்போது என்பதை தெரிவிக்கவும்

  ReplyDelete
 36. Your review once again pushing me to look for the movie...

  Just came to my mind that Pirates of the Caribbean - Part 2 did much better than part 1 in terms of collection & popularity.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.