Oct 21, 2013

‘பின்லாந்து ஓநாயும்’... ‘மிஷ்கின் ஓநாயும்’.
Crime & Punishment | 1983 | Finnish | Directed by : Aki Kaurismaki
நண்பர்களே... ‘பின்லாந்து ஓநாய்’ பதிவின் இறுதிப்பகுதியை பார்ப்போம்...


கொலை செய்த ஓநாய் முக்கியமான தடயங்களை வைத்து போலிசை எளிதாக திசை திருப்புகிறது.
தனக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் தான் செய்த கொலையை மறைக்கவில்லை.
ஆனால் போலிஸ் விசாரணையில் மட்டும் தனக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிடுகிறது ஓநாய்.

போலிஸ் ஓநாயை ஆட்டுக்குட்டியிடம் காட்டி விசாரிக்கிறது.
‘இவன் இல்லை கொலைகாரன்’ என்கிறது ஆட்டுக்குட்டி.
ஒரு கட்டத்தில் ஆட்டுக்குட்டி ஓநாயை காதலிக்கிறது.
ஒரு பிச்சைக்காரனை சாதுர்யமாக சிக்க வைக்கிறது ஓநாய்.

தொழிலதிபரை கொலை செய்த போது ‘லவுட்டிய’ வாலட்டையும்...வாட்சையும் ஒரு ரயில்வேஸ்டேஷன் லாக்கரில் வைக்கிறது ஓநாய்.
லாக்கரின் சாவியை ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுகிறது.
 ‘அடிச்சது ஜாக்பாட்’ என எண்ணி பிச்சைக்காரன்... 
“உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...
தைய்யடா...தைய்யடா...” என்று பாடிக்கொண்டே போகிறான்.
லாக்கரை திறந்து எடுக்கும் போது ஓநாயால் அனுப்பி வைக்கப்பட்ட போலிஸ் மாமாக்கள் ‘வாடா...மாப்ள’  என கைது செய்து லாக்கப்பில் தள்ளுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் ‘நாந்தான் கொலைகாரன்’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதாக ஒரு போலிஸ் அதிகாரி சொல்வார்.

காவல்துறை ,  ‘விளிம்பு நிலை மக்களை’ எவ்வளவு எளிதாக குற்றவாளிகளாக்கி கொடுமை படுத்துகிறது என்ற உண்மையை ‘வெட்ட வெளிச்சமாக்கி ’ இருக்கிறார் இயக்குனர்.

*********************************************************************************

இதே ஸ்டைலில் மிஷ்கின் ‘அடித்தட்டு போலிஸ்காரன்’ இழிநிலையை ஒரே காட்சியில் பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார்.
 ‘ஐயா’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் அத்தனை போலிஸ்காரர்களுக்கும் இக்காட்சியை அர்ப்பணித்து உள்ளார் மிஷ்கின்.
ஆனால் இது தொடர்பான காட்சிகள்  ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைக்கதைக்கு எந்த தேவையும் இல்லை.
ஆனால் சமுதாயச்சிந்தனை + நகைச்சுவை என இரண்டு மாங்காய் அடிக்க ‘திரைக்கதைக்கு’ சற்று வெளியில் போய் கல்லெறிந்து இருக்கிறார்  மிஷ்கின்.
மிஷ்கினை குறை சொல்லிய கோமான்கள் யாருமே ‘இத்திரைக்கதை விலகலை’ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 

*********************************************************************************
இறுதியில் போலி பாஸ்போர்ட் தயாரித்து சுலபமாக ‘பார்டரை’ கிராஸ் செய்கிறது ஓநாய்.
பார்டரை கிராஸ் செய்த மறு நிமிடமே திரும்பி வந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைகிறது ஓநாய்.

ஏன் இந்த சதுரங்க விளையாட்டு?

எட்டு வருடம் தண்டனை விதிக்கப்பெற்று ஜெயில் இருக்கிறது ஓநாய்.
சந்திக்க வருகிறது ஆட்டுக்குட்டி.
இவர்கள் உரையாடலில், கேள்விக்கு விடை இருக்கிறது.


Why did you come?

To tell you, I'll wait for you.

Eight years?

Will you wait eight years for me?

I'll tell you something.

The man I killed is not important.

I killed a louse, and
became one myself.

The number of lice
remained constant.

Unless I was one from
the very beginning -

but that's not important.

I wanted to kill a principle,
not a man.

Killing a man may've
been a mistake -

but everybody's satisfied now.
-You mustn't think like that.

Including me. And isolation means
nothing to me, you know why?

Because I've always been alone.

Do you know what that means?

That's why I don't want
you to wait for me.

Go away and live your own life.

We've all got to die sometime.

And there won't be a heaven
afterwards, just something else.

What?

Spiders. Or something.

How should I know?

தான் விரும்பி ஏற்றுக்கொண்ட சிறையில் அடைந்து கொள்கிறது ஓநாய்.
படம் நிறைவடைகிறது.

இயக்குனர் ‘அகி’ சித்தரிக்கும் ஓநாயை உள் வாங்க முடிந்தால்...
இயக்குனர் ‘மிஷ்கின்’ சித்தரிக்கும் ஓநாயை ஏற்றுக்கொள்ள தடை இருக்காது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்...வாழ்க வளமுடன்.

Oct 16, 2013

‘ஃபின்லாந்து ஓநாயும்’... ‘ஃபின்லாந்து ஆட்டுக்குட்டியும்’.


நண்பர்களே!
இன்று பின்லாந்து திரைப்படம் ஒன்று பார்த்தேன்.
அசந்து போய் விட்டேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு எதிர் வினையாற்றுபவர்கள் அத்தனை பேருக்கும் இப்படத்தை சிபாரிசு செய்கிறேன்.
ஏனென்றால் இந்தப்படம் பார்த்தால்தான் மிஷ்கின் எப்பேற்பட்ட படத்தை நமக்கு வழங்கி இருக்கிறார் என்று கொண்டாட முடியும்.

ரஷ்ய இலக்கிய மாமேதை  'பியதர் தஸ்தாவ்யஸ்கியின் கிரைம் & ஃபனிஷ்மெண்ட்’ நாவலைத்தான் தனது பாணியில் திரைக்கதையாக்கி தனது முதல் படமாக வழங்கி உள்ளார் இயக்குனர் Aki Kaurismaki.


Crime & Punishment | 1983 | Finnish | directed by : Aki Kaurismaki.

படத்தின் முதல் காட்சியே ஓநாய் வேலை செய்யும் இடத்தையும்,
ஓநாயின் பணியையும் தெளிவாக்குகிறது.
உரித்து வைத்த மாடுகளை...துண்டு துண்டாக வெட்டும் தொழிற்சாலை.
ஓநாய் அந்த வேலையை ரசித்து செய்கிறது.
எல்லோரும் பணி முடித்து சென்ற பிறகு அந்த இடத்தில் உள்ள ரத்தத்தையும், சதைப்பிசிறுகளையும் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்கிறது.
நிதானமாக...பொறுமையாக...அத்தனையையும்  ‘சுத்தமாக’ சுத்தம் செய்கிறது.

இந்தக்காட்சியை, விலாவாரியாக...நீண்ட ஷாட்களின் மூலம்...
நம் மண்டைக்குள்...ஏன் திணிக்கிறார் இயக்குனர்?
அடுத்தக்காட்சியே ஓநாய் ‘ஒரு கொலை’ செய்கிறது.
அதான் இத்தனை ‘விலாவாரி’.

ஒரு தொழிலதிபர் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
காத்திருந்த ஓநாய் பின் தொடர்கிறது.
‘தந்தி வந்திருக்கிறது’ என்கிறது ஓநாய்.
தொழிலதிபர் தந்தியை வாங்கிக்கொண்டு ‘பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பாரத்தில்’ கையெழுத்திட்டு கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் செல்கிறார்.
கையெழுத்து இட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஓநாய் உள்ளே வந்ததைக்கண்டு திடுக்கிட்டு வினவுகிறார்.

What are you doing here?

துப்பாக்கியை எடுக்கிறது ஓநாய்.

I've come to kill you.

Why?

You'll never know.

If you want money...

துப்பாக்கியால் குறி வைக்கிறது ஓநாய்.

What do you want?
ஓநாய் துப்பாக்கியால் சுடுகிறது.
சாய்ந்து கீழே விழும் போது ஒரு கண்ணாடி ஜாடியை தட்டி விட்டு விழுகிறார்.
கண்ணாடி ஜாடி விழுந்து நொருங்குவது மட்டும் ‘ஸ்லோமோஷனில்’ காட்டப்படுகிறது.
 ‘மாஸ்டர்கள்’ வயலன்சை...பொயட்டிக் வயலன்சாக இப்படித்தான் மாற்றுவார்கள்.
சந்தேகமே இல்லாமல் இயக்குனர் அகி  ‘மாஸ்டர்தான்’.
மாஸ்டர் என்ற அந்தஸ்தில் இந்தியாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக்கை மட்டுமே சொல்ல முடியும்.
வேறு யாரையும் அந்த ‘அரியணையில்’ ஏற்ற முடியாது.

ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடப்பவரை பார்க்கிறது ஓநாய்.
‘மேகி தக்காளி சாஸை’ தொடுவது போல அவரது ரத்தத்தை தொட்டு பார்க்கிறது ஓநாய்.
கையில் இருந்த ரத்தத்தை தனது கைகுட்டையில் துடைத்து தனது கோட் பாக்கெட்டில் பத்திரப்படுத்துகிறது.
அவர் கையில் கட்டிய வாட்சையும்...அவரது ‘வாலட்டையும்’ எடுத்து
ஒரு  ‘கேரி பேக்கில்’ பத்திரப்படுத்துகிறது ஓநாய்.

இத்தனையையும் நிறுத்தி நிதானமாக செய்து விட்டு,
இருக்கையில் அமர்ந்து மேஜையை ஆராய்கிறது ஓநாய்.
ஒரு  ‘பெண் ஆட்டுக்குட்டி’ திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து பிணத்தையும் இவனையும் பார்த்து அதிர்ச்சி ஆகிறது.


‘யார் நீ? ஏன் இப்படி செஞ்சே?’ என்கிறது ஆட்டுக்குட்டி.
 ‘சும்மாதான்...சரி...சரி...போலிசுக்கு போன் பண்ணு’ என்கிறது ஓநாய்.
 ‘ நீ இந்த இடத்தை விட்டுப்போ...அப்புறம் நான் போன் பண்றேன்’ என்கிறது ஆட்டுக்குட்டி.

இந்தக்காட்சிக்கு ‘லாஜிக்’ பார்க்க தொடங்குபவர்கள் இதோடு விலகி விடுங்கள்.
அக்கி சித்தரிக்கும் ‘மாய உலகிற்குள்’ பிரவேசிக்க விருப்பமுள்ளவர்கள் தொடருங்கள்.

அடுத்தப்பதிவில்  ‘இயக்குனர் அக்கியின் சித்து விளையாட்டை’ முழுமையாக காணலாம்.

Oct 9, 2013

இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும்’!.நண்பர்களே...
நேற்று பதிவுலக நண்பர் ‘மின்னல் வரிகள்’ பால கணேஷ்  எச்சரிக்கையை புறக்கணித்து...
நானும் நண்பர் ‘கோவை நேரம்’ ஜீவாவும்  ‘நினைத்தாலே இனிக்கும்’
படத்தை பார்த்து விடத்துணிந்தோம்.
கோவை ராயல் தியேட்டரின்,  ‘சோமலியா பிரஜை’ போன்ற தோற்றம் அச்சமூட்டியது.
பால்கனி டிக்கெட் கட்டணமான  ‘30 ரூபாய்’ ஆச்சரியமூட்டியது.

பாதிக்கு மேல் இருக்கைகள் உடைந்து கிடந்தது.
மூட்டை பூச்சியும், கொசுவும் இணைந்து இடையறாமல் தாக்கிக்கொண்டு இருந்தது.
ஒரு வித ‘முடை நாற்றம்’ நாசியை பதம் பார்த்தது.
இவைகள் அனைத்தும் தங்கள் பணியைச்செய்ததை நான் உணர்ந்தது...
‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற டைட்டில் போடும் வரைதான்.
அதற்குப்பிறகு என்னைச்சுற்றி இருந்தது
‘இயக்குனர் கே.பாலச்சந்தரின் பரிவாரங்கள்தான்’.


எம்.எஸ்.வி, தன் நண்பரோடு இணைந்து...
என் காதுகளை நிரப்பிக்கொண்டு இருந்தார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர், மனம், மணம் எல்லாவற்றிலும் நிரம்பி ததும்பிக்கொண்டு இருந்தார்.
இப்படம் வெளியான தருணம் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.
இப்படத்தை கிட்டத்தட்ட பத்து தடவைக்கு மேலே நண்பர்களுடன் சென்று பார்த்து இருக்கிறேன்.
இப்படத்திலுள்ள ஒரு காட்சியை,  அப்போது புரியாமல் நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன்.
இன்று பார்க்கும் போது ‘எப்பேற்பட்ட குறியீடை’ துணிந்து அந்த காலத்தில் ரசிகப்பெருமக்களை நம்பி இயக்குனர் கே.பி. வைத்துள்ளார் என வியக்காமல் இருக்க முடியவில்லை.


ஜெயப்ரதா தனக்கு ரத்த புற்று நோயால் மரணம் நெருங்கி விட்டதை அறிந்து கமலிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்...
சாகும் வரை கமலின் இசைக்குழுவோடு இனைந்து பாடிக்கொண்டு இருக்க வேண்டும் என.
 ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு...
இதுல உனக்கு கவலை எதுக்கு...
லவ்லி பேர்ட்ஸ்...’ என்ற கவிஞரின் வார்த்தைகளில்...
எம்.எஸ்.வியின் துள்ளல் இசை பிறக்கிறது.
வெவ்வேறு ஊர்களில் நிகழ்ச்சி நடைபெறுவதை பாடலின் இடையே வரும் பின்னணி இசையில் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.
பாடலின் நடுவில் ஜெயப்ரதா வலி தாங்க முடியாமல் திணறுவதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் வெண் திரையில் ‘பிலிம்’ எரிந்து கருகி சுருள்வதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் ‘ஜெயப்ரதா’ தவிர மீதி அனைவரும் கருப்பு ஆடை அணிந்து மேடையில் நின்று கொண்டு இருப்பார்கள்.
சில நொடிகள் ‘கனத்த மவுனம்’ இருக்கும்.
கருப்பு வண்னம் பிரதானப்படுத்தப்பட்ட மேடை அலங்காரத்தில்,
‘பாடலின் எஞ்சிய பகுதி’...
 மென் சோகம்+ துள்ளிசை கலந்த கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒரு மரணத்தை எவ்வளவு கவித்துவமாக கே.பி. காட்சிப்படுத்தி உள்ளார்!

‘பிலிம் எரியும்’ குறியீட்டுக்கு வருகிறேன்.
அப்போது ‘பிலிம் எரியும்’ காட்சி வந்ததும் தியேட்டரே ‘ஓவென’ அலறி ஆப்பரேட்டரை திட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால் படம் தொடர்ந்து நடைபெறுவதைக்கண்ட பிறகு அமைதி காப்பார்கள்.
காரணம் அந்த காலத்தில் ‘கார்பன் சூட்டில்’ பிலிம் எரிந்து படம் தடை பட்டு நின்று விடும்.
இதை...ஜெயப்ரதாவின் மரணத்துக்கு குறியீடாக பயன்படுத்திய பாலச்சந்தரின் மகிமை அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றும் சிலருக்கு தெரிவதில்லை.

இக்குறியீடை அன்று எனது நண்பர்களுக்கு நான் இப்படித்தான் விளக்கினேன்.
“ மாப்ளே...ஜெயப்ப்ரதா சாவுறது...
சுடுகாட்டுல வச்சு எரிக்கிறது...
இதை எல்லாத்தையும் விலாவரியா காட்டாம...பாலச்சந்தர் சிக்கனமா ஒரே ஒரு பிலிம் துண்டை எரிய வச்சு நமக்குக்காட்டிட்டாரு!”


இந்த பிலிம் துண்டு எரியும் காட்சி இயக்குனர் இங்மர் பெர்க்மன் இயக்கிய ‘பர்சோனா’ படத்தில் வரும்.
அவர் வேறு அர்த்தம் வருகின்ற வகையில் இக்காட்சியை அமைத்து இருப்பார்.
ஆனாம் நம்ம கே.பி. மிக அற்புதமாக இக்குறியீட்டை கையாண்டுள்ளார்.
பெர்க்மனை விட ‘பவர்புல்லாக’ கையாண்டு உள்ளார் கே.பி.
இது உண்மை.
நான் மிகைப்படுத்தவில்லை.

Persona | 1966 | Swedish | Directed by : Ingmar Bergman.
இப்போது இந்தப்படம் பார்க்கும் போது எத்தனை அழகாக
‘இயற்கையான நடிப்பை’ எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
ரஜினிகாந்த் என வியந்தேன்.
அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக்கி’ சினிமாக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் ‘பின்னாள் இயக்குனர்கள்’.

இந்தப்படம் ‘தேனிசை மழை’ என விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியது.
விளம்பரங்கள்  ‘உண்மை பேசியது’...இந்த படத்திற்கு மட்டும்தான்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Oct 8, 2013

‘ஓநாய்’ ஜெயித்து விட்டது!


நண்பர்களே...
போற்றுவோர் போற்றி...தூற்றுவோர் தூற்றி...
ஏற்றம் கண்டு வருகிறது ‘ஓநாய்’.
நேற்று ‘இரண்டாம் முறை’ இளையராஜாவுக்காக சென்றேன்.
இந்த முறையும், இளையராஜாவோடு மிஷ்கின்...
 ‘இரண்டறக்கலந்து’ என்னை தாக்கியதை பரிபூர்ணமாக அனுபவித்தேன்.
பரிபூர்ணமே பேரானந்தம்.


தர்க்க ரீதியாக இப்படத்தை அணுகக்கூடாது.
புரியாதவர்களுக்காக  ‘தமிழில்’.
அதாவது, இப்படத்தை ‘லாஜிக்’ அப்ளை செய்து பார்க்கக்கூடாது.
அப்போதுதான் ‘மிஷ்கின்’ சிருஷ்டித்த ‘மாய உலகத்தை’
பரிபூர்ணமாக உள் வாங்க முடியும்.


உதாரணமாக இறுதிக்காட்சியை எடுத்துக்கொள்வோம்.
இரவு நேரத்தில் ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் ஏரியாவில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள்தான் நிறைந்திருக்கும்.
மாறாக ‘மிஷ்கின்’ சிருஷ்டித்த மாய உலகில்,
அந்த பார்க்கிங் ஏரியா  'தகத்தகாயமாக' ஜொலிக்கிறது.
ஏனென்றால் இது வரை இருண்ட காட்டிலேயே சஞ்சரித்த ‘ஓநாய்’ முழுமையாக  ‘வெளிச்சத்துக்கு’ வரும் அபூர்வ தருணம் இது.
  ‘ஓநாய்’ இறுதியாக ‘தெய்வத்திடம்’ மண்டி இட்டு,
கை கூப்பித்தொழுது தன் பாவத்தை போக்க துதிக்கிறது.
குழந்தை = தெய்வம்.
அந்த அற்புத நொடியில், அனைத்து பாவங்களும் பஸ்பமாகி விடுகிறது.
 ‘பவித்ரமான ஓநாய்’ ‘பேரியக்க மண்டலத்தில்’ நட்சத்திரமாக ஜொலிக்க போய் விடுகிறது.

 இறுதிக்காட்சியின்  ‘பைனல் ஷாட்’...
‘ஆட்டுக்குட்டி’  ‘தெய்வத்தை’ கைகளில் ஏந்தி நடந்து செல்கிறது.
எதிரில் ‘வெளிச்சம்’ மட்டுமே நிறைந்து இருக்கிறது.
வெளிச்சம்...வெளிச்சம்...வெளிச்சம்.
இந்த ‘வெளிச்சம்’ தமிழ் சினிமாவுக்கும்தான்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Oct 4, 2013

போதைகள் ஓய்வதில்லை -தமிழ் சினிமாவில் முதன் முறையாக!


                    ‘போதைகள் ஓய்வதில்லை’

நடிகர்கள்:  ‘கோவை நேரம்’ ஜீவா,  ‘பிலாசபி’ பிரபாகரன், 
‘வீடு’ சுரேஷ் குமார், பால கணேஷ் & ஜாக்கி சேகர்
நடிகைகள் : நஸ்ரியா, அனுஷ்கா [ சிறப்பு தோற்றம்]
வசனம் :  ‘மெட்றாஸ் பவன்’ சிவா.
தகவல் தொடர்பு : திண்டுக்கல் தனபாலன்.
கலை : கலாகுமரன்.
இசை, பாடல்கள் : கோவை ஆ.வி.
ஒளிப்பதிவு : ‘ஆபிசர்’ சங்கரலிங்கம்.
இயக்கம் : இலக்கியச்செம்மல் ‘வெளங்காதவன்’.
தயாரிப்பு : திருப்பூர் லட்சுமி காந்த்.

தயாரிப்பாளர் : ‘போதைகள் ஓய்வதில்லை’ படத்தின் டைட்டிலே ‘கிக்’ ஏத்துதே!...சூப்பர்.
அந்த காலத்துல, பாராதிராஜாவோட  ‘அலைகள் ஓய்வதில்லை’
சில்வர் ஜூப்ளி போச்சு!


இயக்குனர் : இந்த படமும் அப்படிப்போகும்.
ஏன்னா நம்ம படக்கதையும்...அலைகள் ஓய்வதில்லையும் ஒண்ணுதான்.

தயாரிப்பாளர் : அய்யய்யோ...
இந்தப்பதிவர்கள் எல்லாம்  விமர்சனம் எழுதி கிழிச்சுருவானுங்களே!

இயக்குனர் :  அதான் நமக்கு வேணும்.
அப்பத்தான் படம் ஓடும்.
மவுன ராகம்தான்... ராஜா ராணின்னு எழுதித்தள்ளினாங்க...
என்னாச்சு?
ராஜா ராணி... சூப்பர் டூப்பர் ஹிட்.

தயாரிப்பாளர் : அதுவும் ஒரு காரணம்.
இருந்தாலும் முக்கியமான காரணம்...
மவுனராகத்துல உள்ள ‘கிளாசிக்தனத்தையெல்லாம்’ கழிச்சு கடாசிட்டு எடுத்ததாலதான்  ‘ராஜா ராணி’ படம் ஹிட்டு.
நம்ம படம்...?

இயக்குனர் : கவலையே படாதீங்க.
அலைகள் ஓய்வதில்லை ‘மதப்பிரச்சினையை’ அடிப்படையா வச்சு இயங்கிச்சு.
நம்ம படம் ‘போதைப்பிரச்சினையை’ மையமா வச்சு இயங்குது.
படத்தோட ‘அவுட்லைனை’ சொல்றேன்.
கதாநாயகனும் அவனது பிரண்ட்சும் ஒன்லி ‘பீர் பால்கள்’.
இவங்க எல்லோரும் ஒண்ணா கூடிப்போய்...ஹீரோயினை பொண்ணு கேக்குறாங்க.
பொண்ணோட அண்ணன்,
‘ என் கூட ஒண்ணா தண்ணி அடி.
எனக்கு முன்னாடி மட்டை ஆகக்கூடாது.
இதான் என்னோட கண்டிஷன்’ அப்படின்னு சொல்றான்.
ஆனா கதாநாயகன் ‘குவார்ட்டருக்கே’ குப்புற குனிஞ்சு வாந்தியெடுக்குறான்.
 ‘டேய்...தக்காளி ஜூஸ் குடிக்கறவன்லாம்...
என் தங்கச்சியை கட்டமுடியாதுன்னு’ சொல்லி எல்லோரையும் அவமானப்படுத்தி விரட்டி விடுகிறான்.
அவமானப்பட்ட ஹீரோ,  ‘இயக்குனர் ராஜேஷ்’ எடுத்த...
தமிழ்  டாஸ்மாக் படங்களை’ 24 மணி நேரமும் திருப்பி திருப்பி போட்டு பாத்து டிரெய்னிங் எடுக்குறான்.
கிளாமாக்ஸ்ல  ‘ஃபுல் அடிச்சு’... ‘புல்லட்’ மாதிரி பாய்ஞ்சு பைட் பண்றான்.
ஹீரோயினை கல்யாணம் பண்றான்.

தயாரிப்பாளர் : அட...அட...அட...
இந்த கான்செப்ட்ல நம்ம படம் வந்துச்சுன்னா...
வசூல்ல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையே’ தூக்கி சாப்டுறுமே!

இயக்குனர் : நம்ம படத்துக்கு கேப்ஷனே... ‘குடி நல்லது’.

தயாரிப்பாளர் : இந்த கேப்ஷனுக்கே சென்சார் ‘யூ’ சர்டிபிகேட் குடுத்துரும்.
தமிழக அரசோட ‘வரி விலக்கும்’ ஈசியா கிடைச்சுரும்.
நீயெல்லாம் நல்லா வருவே!

இயக்குனர் : நம்ம படத்துல வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கும்.
‘திரைக்கதை’ என்கிற வஸ்து துளி கூட இருக்காது.
அந்த எழவு இருந்துச்சுன்னா படம் ஓடாது.
இதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள்  ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.

தயாரிப்பாளர்: அப்புறம் இன்னொரு முக்கியமான பார்முலா...
மூடர் கூடம் மாதிரி வித்தியாசமாவும் எடுக்கப்படாது.
[ ஹாலிவுட் பாலா போல் சிரிக்கிறார்.]
கெக்...கெக்...கெக்...

இயக்குனர் : சார்...அதெல்லாம் படமா அது!.
எப்படி படம் எடுக்கக்கூடாதுன்னு நமக்கு பாடம் சார் அது!
நான்  ‘அரைச்ச மாவை’ அற்புதமா அப்படியே ‘அரைப்பேன்’.
அதுல நான் எக்ஸ்பர்ட்.
பேரரசு, இராம நாராயணன் இவங்கதான் எனக்கு மானசீக குருக்கள்.

தயாரிப்பாளர் : அப்படியா!
இவங்கள மாதிரியே விகடன் விமர்சனத்துல மார்க் வாங்குவியா?

இயக்குனர் : கண்டிப்பா வாங்குவேன்....
ஆனா 50 மார்க்குக்கு மேல வாங்குற கேணத்தனத்தை செய்ய மாட்டேன்.


எப்பாடுபட்டாவது ‘45 மார்க்குக்கு’ கீழே வாங்குறதுதான் என் லட்சியமே.
முக்கியமா பதிவுலகில எழுதுற உலகசினிமா ரசிகன், சுரேஷ் கண்ணன், அதிஷா, கருந்தேள் போன்றவர்கள் நம்ம படத்தை பாராட்டி விமர்சனம் எழுத மாட்டாங்க.
இந்த மாதிரி ஆளுங்க  ஒட்டுக்கா ஒரு படத்தை பாராட்டுனா ‘படம் பணால்’.  
முக்கியமா  ‘இன்னொருத்தர்’ பிளாக், பேஸ்புக் எதுலயுமே நம்ம படத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டார்.
அவரது  ‘வாஜகர்கள்’ விடாம  ‘படத்தை பத்தி’ கேட்டா...
இந்த ‘படத்தை’ பதிலா போடுவாரு.


தயாரிப்பாளர் : இந்த உத்தரவாதம் போதும்.
படம்...  ‘பிளாக் பஸ்டர்’.
பிடிங்க...அட்வான்ஸ்.