Oct 16, 2013

‘ஃபின்லாந்து ஓநாயும்’... ‘ஃபின்லாந்து ஆட்டுக்குட்டியும்’.


நண்பர்களே!
இன்று பின்லாந்து திரைப்படம் ஒன்று பார்த்தேன்.
அசந்து போய் விட்டேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு எதிர் வினையாற்றுபவர்கள் அத்தனை பேருக்கும் இப்படத்தை சிபாரிசு செய்கிறேன்.
ஏனென்றால் இந்தப்படம் பார்த்தால்தான் மிஷ்கின் எப்பேற்பட்ட படத்தை நமக்கு வழங்கி இருக்கிறார் என்று கொண்டாட முடியும்.

ரஷ்ய இலக்கிய மாமேதை  'பியதர் தஸ்தாவ்யஸ்கியின் கிரைம் & ஃபனிஷ்மெண்ட்’ நாவலைத்தான் தனது பாணியில் திரைக்கதையாக்கி தனது முதல் படமாக வழங்கி உள்ளார் இயக்குனர் Aki Kaurismaki.


Crime & Punishment | 1983 | Finnish | directed by : Aki Kaurismaki.

படத்தின் முதல் காட்சியே ஓநாய் வேலை செய்யும் இடத்தையும்,
ஓநாயின் பணியையும் தெளிவாக்குகிறது.
உரித்து வைத்த மாடுகளை...துண்டு துண்டாக வெட்டும் தொழிற்சாலை.
ஓநாய் அந்த வேலையை ரசித்து செய்கிறது.
எல்லோரும் பணி முடித்து சென்ற பிறகு அந்த இடத்தில் உள்ள ரத்தத்தையும், சதைப்பிசிறுகளையும் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்கிறது.
நிதானமாக...பொறுமையாக...அத்தனையையும்  ‘சுத்தமாக’ சுத்தம் செய்கிறது.

இந்தக்காட்சியை, விலாவாரியாக...நீண்ட ஷாட்களின் மூலம்...
நம் மண்டைக்குள்...ஏன் திணிக்கிறார் இயக்குனர்?
அடுத்தக்காட்சியே ஓநாய் ‘ஒரு கொலை’ செய்கிறது.
அதான் இத்தனை ‘விலாவாரி’.

ஒரு தொழிலதிபர் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
காத்திருந்த ஓநாய் பின் தொடர்கிறது.
‘தந்தி வந்திருக்கிறது’ என்கிறது ஓநாய்.
தொழிலதிபர் தந்தியை வாங்கிக்கொண்டு ‘பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பாரத்தில்’ கையெழுத்திட்டு கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் செல்கிறார்.
கையெழுத்து இட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஓநாய் உள்ளே வந்ததைக்கண்டு திடுக்கிட்டு வினவுகிறார்.

What are you doing here?

துப்பாக்கியை எடுக்கிறது ஓநாய்.

I've come to kill you.

Why?

You'll never know.

If you want money...

துப்பாக்கியால் குறி வைக்கிறது ஓநாய்.

What do you want?
ஓநாய் துப்பாக்கியால் சுடுகிறது.
சாய்ந்து கீழே விழும் போது ஒரு கண்ணாடி ஜாடியை தட்டி விட்டு விழுகிறார்.
கண்ணாடி ஜாடி விழுந்து நொருங்குவது மட்டும் ‘ஸ்லோமோஷனில்’ காட்டப்படுகிறது.
 ‘மாஸ்டர்கள்’ வயலன்சை...பொயட்டிக் வயலன்சாக இப்படித்தான் மாற்றுவார்கள்.
சந்தேகமே இல்லாமல் இயக்குனர் அகி  ‘மாஸ்டர்தான்’.
மாஸ்டர் என்ற அந்தஸ்தில் இந்தியாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக்கை மட்டுமே சொல்ல முடியும்.
வேறு யாரையும் அந்த ‘அரியணையில்’ ஏற்ற முடியாது.

ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடப்பவரை பார்க்கிறது ஓநாய்.
‘மேகி தக்காளி சாஸை’ தொடுவது போல அவரது ரத்தத்தை தொட்டு பார்க்கிறது ஓநாய்.
கையில் இருந்த ரத்தத்தை தனது கைகுட்டையில் துடைத்து தனது கோட் பாக்கெட்டில் பத்திரப்படுத்துகிறது.
அவர் கையில் கட்டிய வாட்சையும்...அவரது ‘வாலட்டையும்’ எடுத்து
ஒரு  ‘கேரி பேக்கில்’ பத்திரப்படுத்துகிறது ஓநாய்.

இத்தனையையும் நிறுத்தி நிதானமாக செய்து விட்டு,
இருக்கையில் அமர்ந்து மேஜையை ஆராய்கிறது ஓநாய்.
ஒரு  ‘பெண் ஆட்டுக்குட்டி’ திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து பிணத்தையும் இவனையும் பார்த்து அதிர்ச்சி ஆகிறது.


‘யார் நீ? ஏன் இப்படி செஞ்சே?’ என்கிறது ஆட்டுக்குட்டி.
 ‘சும்மாதான்...சரி...சரி...போலிசுக்கு போன் பண்ணு’ என்கிறது ஓநாய்.
 ‘ நீ இந்த இடத்தை விட்டுப்போ...அப்புறம் நான் போன் பண்றேன்’ என்கிறது ஆட்டுக்குட்டி.

இந்தக்காட்சிக்கு ‘லாஜிக்’ பார்க்க தொடங்குபவர்கள் இதோடு விலகி விடுங்கள்.
அக்கி சித்தரிக்கும் ‘மாய உலகிற்குள்’ பிரவேசிக்க விருப்பமுள்ளவர்கள் தொடருங்கள்.

அடுத்தப்பதிவில்  ‘இயக்குனர் அக்கியின் சித்து விளையாட்டை’ முழுமையாக காணலாம்.

4 comments:

 1. வணக்கம்
  படத்தின் ஆய்வு நன்றாக உள்ளதுபதிவு அருமை வாழ்த்துக்கள்

  தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்று இணையத்தளத்தில் நடைபெறுகிறது அதற்கான விதிமுறை இதோ.... கவிதை எழுதுங்கள் பரிசு அள்ளிச் செல்லுங்கள்.

  இதோ முகவரி.
  http://2008rupan.wordpress.com/2013/09/05/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிதையா! நானா !!
   அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.
   என் நண்பர் ஆ.வி இருக்கார்.
   அவரை அனுப்பி விடறேன்.
   அழைப்புக்கு நன்றி.

   Delete
 2. ஓநாய் - சத்யராஜ் ஞாபகம் வருகிறது...!

  ReplyDelete
  Replies
  1. எல்லோரிடம் ‘ஓநாய்’ இருக்கிறது.
   அதை அவுத்து விட்டு விடக்கூடாது.
   கல்வி,கலாச்சாரம், பண்பாடு இவற்றை முறையாக முறையாக பயன்படுத்தினால் ‘ஓநாயை’ கட்டுக்குள் வைத்து இருக்க முடியும்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.