Oct 21, 2013

‘பின்லாந்து ஓநாயும்’... ‘மிஷ்கின் ஓநாயும்’.
Crime & Punishment | 1983 | Finnish | Directed by : Aki Kaurismaki
நண்பர்களே... ‘பின்லாந்து ஓநாய்’ பதிவின் இறுதிப்பகுதியை பார்ப்போம்...


கொலை செய்த ஓநாய் முக்கியமான தடயங்களை வைத்து போலிசை எளிதாக திசை திருப்புகிறது.
தனக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் தான் செய்த கொலையை மறைக்கவில்லை.
ஆனால் போலிஸ் விசாரணையில் மட்டும் தனக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிடுகிறது ஓநாய்.

போலிஸ் ஓநாயை ஆட்டுக்குட்டியிடம் காட்டி விசாரிக்கிறது.
‘இவன் இல்லை கொலைகாரன்’ என்கிறது ஆட்டுக்குட்டி.
ஒரு கட்டத்தில் ஆட்டுக்குட்டி ஓநாயை காதலிக்கிறது.
ஒரு பிச்சைக்காரனை சாதுர்யமாக சிக்க வைக்கிறது ஓநாய்.

தொழிலதிபரை கொலை செய்த போது ‘லவுட்டிய’ வாலட்டையும்...வாட்சையும் ஒரு ரயில்வேஸ்டேஷன் லாக்கரில் வைக்கிறது ஓநாய்.
லாக்கரின் சாவியை ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுகிறது.
 ‘அடிச்சது ஜாக்பாட்’ என எண்ணி பிச்சைக்காரன்... 
“உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...
தைய்யடா...தைய்யடா...” என்று பாடிக்கொண்டே போகிறான்.
லாக்கரை திறந்து எடுக்கும் போது ஓநாயால் அனுப்பி வைக்கப்பட்ட போலிஸ் மாமாக்கள் ‘வாடா...மாப்ள’  என கைது செய்து லாக்கப்பில் தள்ளுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் ‘நாந்தான் கொலைகாரன்’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதாக ஒரு போலிஸ் அதிகாரி சொல்வார்.

காவல்துறை ,  ‘விளிம்பு நிலை மக்களை’ எவ்வளவு எளிதாக குற்றவாளிகளாக்கி கொடுமை படுத்துகிறது என்ற உண்மையை ‘வெட்ட வெளிச்சமாக்கி ’ இருக்கிறார் இயக்குனர்.

*********************************************************************************

இதே ஸ்டைலில் மிஷ்கின் ‘அடித்தட்டு போலிஸ்காரன்’ இழிநிலையை ஒரே காட்சியில் பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார்.
 ‘ஐயா’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் அத்தனை போலிஸ்காரர்களுக்கும் இக்காட்சியை அர்ப்பணித்து உள்ளார் மிஷ்கின்.
ஆனால் இது தொடர்பான காட்சிகள்  ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைக்கதைக்கு எந்த தேவையும் இல்லை.
ஆனால் சமுதாயச்சிந்தனை + நகைச்சுவை என இரண்டு மாங்காய் அடிக்க ‘திரைக்கதைக்கு’ சற்று வெளியில் போய் கல்லெறிந்து இருக்கிறார்  மிஷ்கின்.
மிஷ்கினை குறை சொல்லிய கோமான்கள் யாருமே ‘இத்திரைக்கதை விலகலை’ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 

*********************************************************************************
இறுதியில் போலி பாஸ்போர்ட் தயாரித்து சுலபமாக ‘பார்டரை’ கிராஸ் செய்கிறது ஓநாய்.
பார்டரை கிராஸ் செய்த மறு நிமிடமே திரும்பி வந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைகிறது ஓநாய்.

ஏன் இந்த சதுரங்க விளையாட்டு?

எட்டு வருடம் தண்டனை விதிக்கப்பெற்று ஜெயில் இருக்கிறது ஓநாய்.
சந்திக்க வருகிறது ஆட்டுக்குட்டி.
இவர்கள் உரையாடலில், கேள்விக்கு விடை இருக்கிறது.


Why did you come?

To tell you, I'll wait for you.

Eight years?

Will you wait eight years for me?

I'll tell you something.

The man I killed is not important.

I killed a louse, and
became one myself.

The number of lice
remained constant.

Unless I was one from
the very beginning -

but that's not important.

I wanted to kill a principle,
not a man.

Killing a man may've
been a mistake -

but everybody's satisfied now.
-You mustn't think like that.

Including me. And isolation means
nothing to me, you know why?

Because I've always been alone.

Do you know what that means?

That's why I don't want
you to wait for me.

Go away and live your own life.

We've all got to die sometime.

And there won't be a heaven
afterwards, just something else.

What?

Spiders. Or something.

How should I know?

தான் விரும்பி ஏற்றுக்கொண்ட சிறையில் அடைந்து கொள்கிறது ஓநாய்.
படம் நிறைவடைகிறது.

இயக்குனர் ‘அகி’ சித்தரிக்கும் ஓநாயை உள் வாங்க முடிந்தால்...
இயக்குனர் ‘மிஷ்கின்’ சித்தரிக்கும் ஓநாயை ஏற்றுக்கொள்ள தடை இருக்காது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்...வாழ்க வளமுடன்.

4 comments:

 1. என்னவொரு ஒப்பீடு...! நல்லாவே கல்லெறிந்து உள்ளார் மிஷ்கின்....

  ReplyDelete
 2. மனித தன்மை அற்றவர்களாக எப்படி இருக்கிறோம் என்பதை, மருத்துவமணை காட்சியில் சந்தானத்தின் நகைச்சுவை துணுக்கை கண்டு சிரித்து கொண்டிருக்கும் கம்பௌன்டர் முலமாக காட்சி படுத்தி இருக்கிறார்.

  ReplyDelete
 3. sir oru cinemavai rasipathu eppadi,
  why i am asking bcoz,most of the cine experts and media are saying positive comments to mostly tragic movies like paradesi ,vazhaku en, myna,etc like that
  plzz help

  ReplyDelete
  Replies
  1. சோகத்தை பிழியும் படங்கள் மட்டுமே...உலக சினிமா இல்லை.
   சாப்ளின், ஜாக்குஸ் தாதி போன்றவர்கள் படைத்த நகைச்சுவை படங்களும் உலக சினிமாக்களே.
   பேண்டசி,சயின்ஸ் பிக்‌ஷன்,ஹாரர் போன்ற வகையறாக்களிலும் உலக சினிமாக்கள் உண்டு.

   Delete

Note: Only a member of this blog may post a comment.