Jan 29, 2013

விஸ்வரூபம் பார்க்கும் வழி...


நண்பர்களே...
விஸ்வரூபம் தமிழகத்தின் மாபெரும் இரு அரசியல் சக்திகளின் சதுரங்க விளையாட்டில் சிக்கி தவிக்கிறது.
தடை செய்யப்போராடும் அமைப்புகள் பகடைக்காய்களே!.

25 சதவீத இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கேரளாவில் விஸ்வரூபம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழக - கேரள எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில்,
விஸ்வரூபம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் சென்று பார்ப்பதே சாலச்சிறந்தது.

சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக ‘வேலந்தாவளம்’ என்ற கேரள சிற்றூரில் உள்ள
தனலஷ்மி தியேட்டரில் பார்த்து வருகிறார்கள்.

வேலந்தாவளம் செல்லும் வழி இதோ...

பஸ்ஸில் வருபவர்கள் கோவை வந்து,
உக்கடம் பஸ் நிலையம் வாருங்கள்.
ஒரு மணி நேரத்துக்கு... ஒரு பஸ்.
வேலந்தாவளம்  செல்லும் டவுண் பஸ் தயார்.
தனலஷ்மி தியேட்டர்காரர் காலை 10 மணியிலிருந்து நள்ளிரவு 3 மணி வரை தொடர்ச்சியாக ஆறு காட்சிகள் நடத்துகிறார்.
இது வரை அனைத்து காட்சிகளும் ’ஜெ’ புண்ணியத்தில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மற்ற மாவட்டத்திலிருந்து கார் மற்றும் வேன்களில் வருபவர்கள்
‘நிலாம்பூர் பை பாஸ் ரோட்டில்' போய் கோவை-பாலக்காடு சாலையை அடையுங்கள்.
சாவடி என்ற ஊரைத்தொட்டதும் இடது பக்கம் வேலந்தாவளம் செல்லும் சாலை இருக்கும்.
அச்சாலை விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் இடையூறை ஞாபகப்படுத்தும்.
குண்டும் குழியும் விதவிதமாக வந்து கொண்டே இருக்கும்.

இடையூறுகளை தாண்டி பயணிக்கும் போது தமிழக எல்லை
செக்போஸ்ட் வரும்.
எப்போது பார்த்தாலும் ஒரு தொப்பை போலிஸ் செல் போனில் பேசிக்கொண்டிருப்பார்.
அவரைத்தாண்டியதும் ஒரு சிறிய பாலம் வரும்.
பாலத்தின் முடிவில் கள்ளுக்கடை போர்டு உங்களை வரவேற்கும்.
கள்ளுக்கடை போகாமல் நேரே போனால சாலையின் வலது பக்கத்தில் தனலஷ்மி காத்திருப்பாள்.

போகும் வண்டியை சாலையின் ஓரத்தில் பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்க கியூவில் நின்று விடுங்கள்.
ஒரு ஆளுக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே கொடுக்கப்படும்.
எனவே அனைவருமே கியூவில் நின்று வாங்குவது உத்தமம்.
ஒரே கட்டணம்தான்...100 ரூபாய்.

கோவை மக்கள் குனியமுத்தூர், மதுக்கரை வழியாகப்போய் நிலாம்பூர் பைபாஸ் இணையும் இடத்தை அடையலாம்.

நான் விஸ்வரூபம் இரண்டாம் முறை பார்க்க,
எனது டிவிஎஸ் ஸ்கூட்டியிலேயே ஜாலியாக சென்றேன்.

மீண்டும் சொல்கிறேன்.
விஸ்வரூபம் முழுக்க முழுக்க ANTI-அமெரிக்கன் படமே.
ANTI-இஸ்லாம் படம் அல்ல.
குரானை அனு தினமும் ஓதும் இந்திய முஸ்லீமிற்கும்...
குரானை அனு தினமும் ஓதும் ஆப்கானிஸ்தான் முஸ்லீமிற்கும்...
உள்ள முரண்பாடே, விஸ்வரூபத்தின் கதையாக இயங்குகிறது.


கமல் சொன்ன மாதிரி இப்படத்தை விளங்க உலக ஞானம் தேவை.
படத்தில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியரைக்கூட இழிவு படுத்தவில்லை.
மாறாக அவர்களை தூக்கிப்பிடித்திருக்கிறார் படைப்பாளி கமல்.
அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாகத்தான் ஆப்கானியர் தீவிரவாத்ததில் இறங்குவதை தெள்ளத்தெளிவாக படத்தில் காட்டப்படுகிறது.
அது கூட ஆப்கானியர்கள் செய்யும் எதிர்வினை...
மிகக்குறைவான சேதாரமே விளைவிக்கிறது.
உதாரணமாக விஸ்வரூபத்தில் வரும் ஒரு காட்சி...
அமெரிக்கர்களின் ஆணைக்கேற்ப செயல்படும்‘நேட்டோ’ ராணுவம்...
ஆப்கானிய கிராமத்தை சுக்கு நூறாக்கியதால் பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவருமே பலியாகிறார்கள்.

அமெரிக்க தீவிரவாதத்துக்கு பதிலடியாக ஆப்கானியர்கள் ஒரு இளைஞனை மனித வெடிகுண்டாக்கி ஒரு ராணுவ வண்டியை சிதறடிக்கிறார்கள்.
மக்கள் சீனாவை கட்டமைத்த மாமேதை  ‘மாவோ’ சொன்னதை நினைவில் கொள்க...
“ நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நம் எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர் ”. 
படம் பார்க்கும் அனைவரிடமும் இக்கேள்வி எழும்...எழ வேண்டும்.
ஒரு கிராமமும்...ஒரு ராணுவ வண்டியும் ஒன்றா ?

ஆப்கானிஸ்தானை  தொடர்ந்து உலக நாடுகள் காயடித்ததை ஒரு மூதாட்டியின் வசனத்தில் பொதிந்திருக்கிறார் கமல்.
“ முதல்ல பிரிட்டிஷ்காரன் வந்தான்...
அப்புறம் ரஷ்யாக்காரன்...
அப்புறம் தாலிபன்...
இப்ப நீ வந்திருக்க...”
என ஆப்கான் மூதாட்டி, கதாநாயகனான இந்திய முஸ்லீமை பார்த்து கேட்பதாக காட்சியமைத்திருக்கிறார் கமல்.
இதுதான் படத்தின் சென்டர் பாய்ண்டே.

இன்னும் சொல்லத்துடிக்கிறேன்...
படம் பார்க்காத உங்களிடம் மேலும் படத்தை சொல்லுவது கூட தீவிரவாதம்தான்.

விஸ்வரூபம் வெளியாக அவரவர் கடவுள்களை...
பிரார்த்திப்போம்...
தொழுவோம்...
வணங்குவோம்.

கோவை வலைப்பதிவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும்
பதிவர்கள் கோவை நேரம் ஜீவானந்தம், அகிலா, கோவை எம்.சரளா ஆகியோரது புத்தக வெளியீட்டு விழாவும் ஒருங்கே நடை பெற உள்ளது.
இணையத்தில் உலவும் தமிழ்ச்சிங்கங்களை அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி முழு விபரம் இதோ...


இந்நிகழ்ச்சியை யாராவது தடை செய்ய தமிழக முதல்வரிடம் போட்டுக்கொடுத்து,
எங்களையும் விளம்பரப்படுத்தவும்.
பப்ளிக்குட்டி பண்ண சங்கத்தில் நிதி இல்லை.
ப்ளீஸ்...

21 comments:

 1. Sir.. rendaavathu murai paathuteengalaa.. company illaaama thaan naan pogala.. are u in kovai now?

  ReplyDelete
  Replies
  1. கோவை வந்து விட்டேன்.
   இன்னொரு முறை பார்க்க நான் ரெடி!
   போலாமா.

   Delete
 2. ம்ஹும்... தீர்ப்பு வரட்டும்... பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. நல்ல தீர்ப்பு விரைவில் வரவேண்டும்.

   Delete
 3. பார்க்கனும் என்கிற ஆவல் அதிகமாகிட்டே வருது...அனேகமா உங்களை கூப்பிடுவேன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 4. Hi
  I appreciate your article.I don't know why the people are hurting him again and again.
  Even some of my Muslim friends are against me because of supporting this film.
  Clarify this thing to every one as much as possible by changing the topic like TRUTH OF VISWHAROOPAM

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நான் சொன்னது ஒரு துளி.
   படம் வெளியாகி விட்டால் முழுப்படத்தையும் விவரிப்பேன்.

   கமலுக்கு நிச்சயம் பிரியாணி கொடுத்தே தீர வேண்டும் இஸ்லாமிய அன்பர்கள்.

   Delete
 5. ரூட்டுக்கு மிக்க நன்றி தலைவா!.எப்படி போவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,இதோ கிளம்பிவிட்டேன் உலக நாயகனின் விஸ்வரூபத்தை தரிசிக்க.

  ReplyDelete
 6. படம் பார்க்க முடிகிறதோ இல்லையோ படம் பார்த்ததுக்கான டிக்கட் பணத்தை (குடும்பம்) கமலுக்கு சிங்கப்பூரில் இருந்து அனுப்ப விரும்புகின்றேன்.

  ஏதாவது வழி சொல்ல முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்து ஒன்று போதும்.
   படம் தமிழகத்தில் வெளியானதும் சிங்கப்பூரிலும் வெளியாகும்.

   Delete
 7. Collection eppadinu sollalame

  ReplyDelete
  Replies
  1. இது வரை தனலஷ்மி தியேட்டர் ஹவுஸ்புல்தான்.

   Delete
 8. நாங்கள் பல பேர் பெங்களூரில் எந்த திரை அரங்குகளில் ஓடுகிறது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம் :'(

  ReplyDelete
  Replies
  1. நண்பர் பிரதீப் பெங்களூரில்தான் பார்த்திருக்கிறார்.
   அவரை தொடர்பு கொள்ளவும்.
   09611333665

   Delete
 9. வெளியிட்ட இடத்தில் எல்லாம் படம் பெரும் வரவேற்ப்பை பெற்று இருப்பதே, இதை எதிர்த்தவர்களுக்கும், தடை செய்தவர்களுக்கும் பெரிய அவமானம், முகத்தில் கரி. இவர்கள் வாதமெல்லாம் சாக்கடைதனமான சந்தர்ப்பவாதம் என்பதின் நிரூபணம் தான் இந்த வரவேற்ப்பு. இவர்கள் தங்களை தாங்களே சிறுமை படுத்திக்கொண்டது தான் மிச்சம். மதக் கலவரம் ஏற்படும் என்று கூக்குரல் இட்டார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளாவில் படம் சக்கை போடு போடுகிறதே தவிர ஒரு இடத்தில் கூட மதக் கலவரம் ஏற்படவில்லை. அங்குள்ள (இஸ்லாமிய) மக்களே இங்கு உள்ள இந்த காக்கை கூட்டத்தின் பின்புறத்தில் எட்டி உதைத்து இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கேரள மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

   Delete
  2. நிச்சயமாக,
   25% முஸ்லிம்கள் கொண்ட மாநிலத்தில் தடை செய்ய முடியாது என்று பிடிவாதமாக இருந்துள்ளார்கள்.
   அவர்களை கட்டாயம் வாழ்த்த வேண்டும்

   Delete
  3. கேரளத்தவருக்கும் தமிழ் நாட்டவருக்கும் என்ன வித்தியாசம் எனில் பெரும்பாலான கேரளா முஸ்லிம்கள் தங்களை இஸ்லாமியர்களாக முன்னிலைப்படுத்துவதில்லை.
   மலையாளிகளாகவே முன்னினைப்படுத்துவார்கள்.

   நீ எந்த நாட்டவன் என்று நாங்கள் கேட்டால் தாம் இந்தியன் என்று கூட சொல்லமாட்டார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் என்றே சொல்வார்கள். (பல மலையாளிகள் சிங்கப்பூரில் பணி புரிகின்றனர். அவர்கள் பலருடன் எனக்கு தொடர்பு இருக்கின்றது)

   Delete
 10. இந்த போராட்டத்தால் தமிழகத்து இஸ்லாமியர்கள் தங்களைத் தாமே அவமானப்படுத்தி கொண்டுள்ளார்கள்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.