Jan 21, 2013

கமல் பயப்படுகிறார்.


நண்பர்களே...
கமலின் விஸ்வரூபத்தை தரிசிக்க,
25ம் தேதி சென்னை மாயாஜால் ஸ்கீரின் 12க்கு போகிறேன்.
எனக்காக ஆன் லைனில் ரிசர்வ் செய்து மெனக்கெட்ட நண்பர்
தமிழ்க்குறிஞ்சி இணையப்பத்திரிக்கை ஆசிரியர் செந்தில் ராஜ் அவர்களுக்கு நன்றி.
[ரெயில்வே தட்கால் புக்கிங் போல, ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார்கள்.]


கமல், மணிரத்னம், பாலா ஆகியோரது படங்கள் முதல் நாள் பார்ப்பது
எனது வழக்கம்.
ஆரோ 3டி அனுபவத்திற்காக 500 கிலோ மீட்டர் பயணித்து பார்க்கவிருப்பது புதிய அனுபவம்.
கல்லூரியில் படிக்கும் போது மூன்றாம் பிறையை,
50 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து பார்த்த கமல் ரசிகன்
உயிர்த்தெழுந்து விட்டதை உணர்கிறேன்.

நேற்று புதிய தலைமுறை டிவியில் கமலின் பேட்டி ஒளிபரப்பாகியது.
அதன் முக்கிய அம்சங்கள்...விஸ்வரூபம் அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு தமிழ்ப்படம்
முன்பு எப்போதும் இருந்திராத அளவில் அதிக தியேட்டரில் வெளியாகிறது.
வெளியாகும் அன்றே டி.டி.எச்சிலும் வெளியாகிறது.

விஸ்வரூபத்தை வெளியிடதடைக்கற்களாக வட இந்திய வியாபாரிகள்தான் அதிகமாக குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள்...
கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்...
கொடுப்பார்கள்....ஜனவரி 25 வரை.

தமிழ் நாட்டில் கிடைக்கும் வெற்றியின் விஸ்வரூபம் வடக்கர்களை
கமலின் கால் ஷூவை நக்க வைத்து விடும்.

தெற்கை தேய்ப்பதில் தேர்ந்தவர்கள் வடக்கர்கள்.
வடக்கை வாழ வைத்து  வலியனுபவிப்பவர்கள் நம்மவர்கள்...
அன்றும்... இன்றும்.
என்றும் இந்த பாச்சா பலிக்காது என விஸ்வரூபம் வரலாறு படைக்கும்.

*******************************************************************************
வட இந்திய வியாபாரிகள் தமிழர்கள் தலையெடுப்பதை என்றுமே விரும்ப மாட்டார்கள்.
எனவே தமிழர்கள் தலையை எடுத்து விடுவார்கள்.
ஹிந்திக்கு போய் முண்டமானவர்கள் அநேகம்.எம்.ஜி.யார், சிவாஜி போன்ற ஜாம்பவான்களை வைத்து பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த சரவணா பிக்ஸர்ஸ் ஜி.என்.வேலுமணியை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள் வட இந்திய வியாபாரிகள்.

தேவர் பிலிம்ஸ், விஜயா வாஹினி புரடக்‌ஷன்ஸ், ஜெமினி பிக்சர்ஸ்,
இயக்குனர் ஸ்ரீதரின் சித்ராலயா, ஏவி.எம், என ஜாம்பவன்களே
வட இந்திய வியாபாரிகளால் அடிபட்டு மிதிபட்ட வரலாறு அநேகம்.

இந்த விஷயத்தில், கபூர்கள், கான்கள், பச்சன்கள் அனைவருமே
கூட்டணி வைத்து கும்கியாவார்கள்.

தொழில் நுட்பக்கலைஞர்களை வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்வார்கள்.
 உ.ம் : ஏ.ஆர். ரஹ்மான், ரவி.கே.சந்திரன், வி. மணிகண்டன் இத்யாதிகள்....

அவர்கள் கோலோச்ச விடுவது நம்மூர் நடிகைகளை மட்டும்தான்.
வைஜயந்திமாலா,ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, அசின் என பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

*********************************************************************************
இனி கமலின் பேட்டியிலிருந்து முக்கிய சில துளிகள்...

பேட்டியாளர் : சக நடிகர்கள் உங்களுக்கு உதவ வரவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா ?

கமல் : இல்லை.
அவர்கள் மதிலில் பூனையாக இருந்தது சரியென்றே படுகிறது.

தேனை எடுக்க மரத்தில் ஏறியது நான்.
கூட்டில் கை வைத்ததும் தேனீக்கள் கொட்ட ஆரம்பித்து விட்டது.
வலிகளை நான் வாங்கிக்கொண்டு இனி அவர்கள் சவுகரியமாக தேனெடுக்க வகை செய்து விட்டேன். 

பேட்டியாளர் : டி.டிஎச் வியாபாரத்தில் ஏன் விட்டுக்கொடுத்தீர்கள் ?

கமல் : அவர்கள்  எனக்கு 500 தியேட்டர்கள் தர முன் வரும் போது 
நான் டி.டி.எச்சை ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தேன்.
டி.டி.எச்சை விட்டு விடவில்லை.
டி.டி.எச் ஒளிபரப்பை கை விட்டால்தான், அது எனக்கு தோல்வி.

பேட்டியாளர் : சமுதாய சிந்தனையை தொடர்ந்து தங்கள் படங்களில் வலியுறுத்தி வரும் நீங்கள்  ‘டெல்லி சம்பவத்தை’ எப்படிப்பார்க்கிறீர்கள் ?

கமல் : இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றதால் வந்த பயத்தில்தான்  ‘மகாநதி’ எடுத்தேன்.
இன்றும் எனக்கு பயம் இருக்கிறது.
பெண்களை மதிக்க, ஒரே நாளில்...ஒரே படத்தில் வந்து விடாது.
தேவர் மகனில் சொன்னதைப்போல அந்த மாற்றம் மெல்லத்தான் வரும்.
எனது பாட்டி விதவையாகும் போது மொட்டையடிக்கப்பட்டார்.
ஒரு விதவை இந்தியப்பிரதமராக இருக்கும் போதுதான் இந்த அவலம் நடந்தது.
என் பாட்டி தனக்கு நடந்த கொடுமையை  கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொண்டு இறக்கும்வரை அப்படியே வாழ்ந்தார்.

இன்று இந்தியப்பெண்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் முழுமையாக கிடைக்க இன்னும் காலங்களாகும்.
ஆனால் கிடைத்தே தீரும். 

பேட்டியாளர் : விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள் பற்றி...

கமல் : விஸ்வரூபம்  இஸ்லாமியர்களுக்கு எதிரானது என ஒரு வாதம் வைக்கப்பட்டது.
ஒரு முட்டாள் ஒரு படமெடுத்து இணையத்தில் விட்டபோது, இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட வலியும் வேதனையும் கோபமும் எனக்கும் ஏற்பட்டது.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறு பான்மையினராக இருக்கலாம்.
உலகளாவிய வகையில் அவர்கள் பெரும் பான்மையினர்.
விஸ்வரூபம் உலகளாவிய படம்.
அவர்களுகெதிராக எனது படம் எப்படி இருக்க முடியும் ?.

பேட்டியாளர் : டி.டி.எச் முயற்சி தொடருமா ?

கமல் : நிச்சயமாக...நான் ஒருவன் மட்டுமே பயணித்தால் அது பாதையாகாது.
வழியை கை காட்டி விட்டேன்.
இனி சவுகரியமாக எல்லோரும் பயணிப்பார்கள்.
விஸ்வரூபம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.
அதை நீங்கள் நம்பும் போதுதான்  வெற்றி.விஸ்வரூபப்பதிவுகள் தொடரும்.

23 comments:

 1. pபெங்களூரு ஆன்லைன் புக்கிங் இன்னமும் முழுதாக ஓப்பன் ஆக வில்லை. Auro 3D தியேட்டர்கள் இங்கு உள்ளனவா என்ற விவரமும் தெரியவில்லை :-( வெள்ளிக்கிழமை முதல் காட்சி எப்படியும் பார்த்துவிடுவேன். பிறகு மீண்டும் ஒரு முறை சென்னை சத்யமில் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆரோ 3டி தியேட்டர் பெங்களூரில் நிச்சயமாக இல்லை.
   இருந்திருந்தால் கமல் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பார்.


   சத்யம் காம்ப்ளக்ஸில்,ஆரோ 3டி வசதி உள்ள சிக்ஸ்டிகிரி ஸ்கீரினில் விஸ்வரூபம் திரையிடப்படவில்லை.
   [காரணம் தெரியவில்லை.ஒரு வேளை ஒட்டு மொத்தமாக கமல் சாரே புக் செய்திருக்கலாம்]

   பதிலாக சத்யம்,சாந்தம்,மற்றும் ஸ்டூடியோ 5 ஸ்கீரின்களில் திரையிடப்படுகிறது.

   மாயாஜாலில் 7 மற்றும் 12 ஸ்கிரீன்களில் ஆரோ 3டி வசதியில் விஸ்வரூபம் பார்க்கலாம்.

   Delete
 2. சார், யு.ஸ்ல நான் இருக்கிற ஊருல "சான் டீயாகோ" படம் ரீலீஸ் ஆகுது..கண்டிப்பா முதல் நாள் பார்த்துடுவேன். ஆனா இங்க ஏரோ சிஸ்டம் எல்லாம் கிடையாது. இங்க எந்திரன் கூட ரீலீஸ் ஆகல.

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்கா போன நண்பர் ராஜ் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் ஒருங்கே பெற்று தீர்க்காயுசுடன் வாழ வாழ்த்துகிறேன்.

   விஸ்வரூபம் முதல் நாள் அமெரிக்க அனுபவத்தை பதிவாக்குங்கள்.
   காத்திருக்கிறேன்.

   அநேகமாக ஆரோ3டியில், தமிழகம்தான் உலகிலேயே முதன்மையாக கோலோச்சுகிறது என நினைக்கிறேன்.

   Delete
 3. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 4. இந்து முஸ்லீம் கலவரங்கள் பல கண்டது இந்தியா. இன்றும் நடக்கிறது. இசையிலாவது இணைப்போமே என்று ஒரு பாடல் இதில் புகுத்தி இருப்பது புதுமை...

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்கா தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளை வேட்டையாடுவதற்கு... தனது கண்டனத்தை உட்பொருளாக்கி...
   படத்தின் மையக்கருத்தாக்கியிருப்பார் என்று கணித்துள்ளேன்.
   பார்ப்போம்.

   Delete
 5. நானும் இங்கே முதல் ஷோ தான்.. டி.டி.எக்சும் கிடையாது, ஏரோ 3டியும் கிடையாது, அட்வான்ஸ் புக்கிங்கும் கிடையாது..
  ஆனாலும் தொண்ணூறு நிமிஷம் காத்திருந்து, உள்ளேபோய் விசில்களுக்கு மத்தியில் ஸ்பீக்கர் வெடிக்க வெடிக்க தகதகதக தினதினதின கேட்பதே போதும்! அதுவே எங்களுக்கு ஏரோ 3டி!!

  ReplyDelete
  Replies
  1. ///உள்ளேபோய் விசில்களுக்கு மத்தியில் ஸ்பீக்கர் வெடிக்க வெடிக்க தகதகதக தினதினதின கேட்பதே போதும்! அதுவே எங்களுக்கு ஏரோ 3டி!!///

   நீங்க பாக்கறதுதான் நிஜ ஆரோ3டி.
   அதற்கு ஈடு இணை அனுபவம்,எந்த டெக்னாலஜியும் தர முடியாது.
   நானே அதுக்குத்தான் மதுரை போய் பாக்கப்போறேன்.

   Delete
 6. Thanks a lot.... இதோ புக் பண்ணியாச்சு..!

  ReplyDelete
  Replies
  1. விஸ்வரூபம் அட்வான்ஸ் புக்கிங்கில் வரலாறு படைக்கவிருக்கிறது.

   வாழ்த்துக்கள்.

   Delete
 7. the post creates eager to see the movie.

  thanks a lot


  Cinema News

  ReplyDelete
 8. கமல் யாரென்று தெரியும் ....

  ReplyDelete
  Replies
  1. தீயென்று புரியும்...எதிரிகளுக்கு.

   Delete
 9. //விஸ்வரூபம் அட்வான்ஸ் புக்கிங்கில் வரலாறு படைக்கவிருக்கிறது.//

  ஆனா மீடியா எல்லாம் இதை பத்தி வாயே திறக்காம இருக்கிறது கமல் மேல உள்ள காழ்ப்புணர்ச்சியால தான். இதுவே ரஜினி படமாவோ, அஜித் படமாவோ இருந்தா பேனை பெருமாளாக்கி இருப்பானுங்க.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மக்கள் மீடியாக்களை அலற வைப்பார்கள்.

   விஸ்வரூபத்திற்கு எதிர்பார்ப்பே இல்லையென வட இந்திய ஊடகங்கள்
   விஷத்தை கக்கி வருகின்றன.
   கான்களுக்கும்,பச்சன்களுகும் காவடி தூக்கும் அவர்களை ரத்தம் கக்க வைப்பார்கள் ரசிகர்கள்.

   Delete
 10. Great.. In US is it releasing on DTH on the same day ? Could you give some more details about the DTH? My hard luck.. couldn't watch it on theater, since I have to travel 3 and half hours on 24th Night to watch it on theater..

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.