Jan 22, 2013

2013 கோயம்புத்தூர் விழாவில் சிவாஜி கணேசன்.


நண்பர்களே...
கோவையில் வருடாவருடம் கோயம்புத்தூர் விழா ரகசியமாக நடத்தப்படுவதால் பாமர மக்களுக்கு அது பற்றி தெரியாது.
இந்த வருடமும் அதே வழமை மாறாமல் ‘சிறப்புடன்’ நடந்து வருகிறது.
விழாவை நடத்துபவர்கள் ‘கோவை பற்றிய சினிமாவுக்காக’
எங்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டியை வலை வீசி பிடித்து விடுவார்கள்.
நாங்களும் கூடி கும்மியடுத்து இறுதியில் ‘குத்து பட்டு’ வருவோம்.

‘முதல் கோவை விழாவிலே’ மலைக்கள்ளன் திரையிட்ட போது
கோணங்கள் தளபதிகளுக்கு தனித்தனியாக ஆப்படித்து அனுப்பினார்கள்.
ஆப்படித்த காயம் ஆறி விட்டபடியால் மீண்டும் கோணங்கள்...
கோயம்புத்தூர் விழாக்குழுவினரோடு இணைந்து   கோவை பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்த ‘மரகதம்’ என்ற திரைப்படத்தை திரையிடுகிறது.


மரகதம் - 1959 ல் பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரிப்பில் வெளி வந்தது.
பக்ஷிராஜா ஸ்டூடியோவை கோவையில் நிறுவி பல வெற்றிப்படங்களை
பலவேறு மொழிகளில் தயாரித்து இயக்கியுள்ளார் ஸ்ரீராமுலு நாயுடு.

இவரைப்பற்றியும் பக்ஷிராஜா ஸ்டூடியோ பற்றியும் விரிவாகத்தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட பதிவுக்கு செல்லவும்.
கூடு என்ற பதிவில் பி.ஜி.எஸ். மணியன் மிக அற்புதமாக செய்திகளை சேகரித்து தகவல் களஞ்சியமாக தந்துள்ளார்.
பி.ஜி.எஸ் பதிவைக்காண்க.

மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்து கொலை என்று இப்படத்திற்கு இரண்டு பெயர்கள்.
அந்தக்காலத்தில் பல படங்கள்...  இரண்டு பெயர்கள் வைத்து  வெளியாகி இருக்கிறது.

மரகதம் திரைப்படத்திற்கு திரு.ராண்டார் கை எழுதிய கட்டுரை இந்து பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
ராண்டார் கை கட்டுரையை படிக்க...
மரகதம் \ 1959 \ தமிழ் \ இயக்கம் : ஸ்ரீராமுலு நாயுடு
நடிகர்கள் : சிவாஜி கணேசன், வீணை எஸ். பாலச்சந்தர், சந்திரபாபு, சந்தியா, பத்மினி, டி.எஸ்.பாலையா
இசை : எம்.எஸ்.சுப்பையா நாயுடு.
வசனம் : முரசொலி மாறன்.
 
திரையிடல் நாள் : 23-01-2013 புதன் கிழமை,
நேரம் : மாலை 5.30 மணிக்கு,
இடம் : CLL HALL [ Second Floor ],
OPP-CARMEL GARDENS SCHOOL,
SUNGAM,
OFF. TRICHY ROAD,
COIMBATORE.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க :
திரு.பொன் சந்திரன்,
அமைப்பாளர்,
கோணங்கள் பிலிம் சொசைட்டி,
கோவை.
94430 39630.


கோவை வாசிகள் மரகதம் படத்தை கண்டு களிக்க இது ஒரு தங்க வாய்ப்பு.
டிவிடி,இணையம் போன்ற வசதிகளில் மரகதத்தை பார்க்க முடியும். இருந்தாலும் இது போன்று விழாக்களில் படத்தை பார்ப்பது தனியனுபவம்.
கடந்த விழாவில் ‘மலைக்கள்ளன்’ திரையிட்ட போது எம்.ஜியார். திரையில் தோன்றியதும் எழுந்த விசில் ஒலியும்,கை தட்டல்களும்
இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கின்றன.

சந்திர பாபு ரசிகர்கள் கவனத்திற்கு...
சந்திரபாபுவின் சூப்பர் ஹிட்டான
குங்குமப்பூவே...கொஞ்சும் புறாவே... என்ற பாடல்
மரகதம் படத்தில்தான் இடம் பெற்றுள்ளது.


விஸ்வரூபம் வெளி வர இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.
படபடப்பு மும்மடங்காகி விட்டது.

நாளை சந்திப்போம்.

2 comments:

  1. மரகதம் படம் பார்த்ததில்லை.. குங்குமப் பூவே பாடலைத் தவிர..

    ReplyDelete
  2. மரகதம் என்கிற படமே எனக்கு தெரியாது அண்ணா..ஆனால் குங்கும பூ பாட்டுக்கு பல நாள் ரசிகன் நான்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.