Jul 23, 2013

மரியான் - ரசிகனை ‘மரிக்க’ வைப்பான்.


நண்பர்களே...
'பரத்பாலா - கனிகா',
இந்தப்பெயர்கள்...
ஏ.ஆர்.ரஹ்மான் ‘வந்தேமாதரம்’ வீடியோ ஆல்பம் பார்த்தவர்கள்... அனைவரும் வியந்து பாராட்டிய பெயர்கள்.


 ஜப்பானிய ‘சோனி’ நிறுவனம் இந்திய மனத்தையும்...
பணத்தையும் கொள்ளையடிக்க நூறு கோடி செலவழிக்க திட்டமிட்டது.  ‘இந்திய சுதந்திர பொன் விழா’ வசமாக வாய்த்தது.
வளர்ச்சி ஏணியில் ஏறி வரும் ஏ.ஆர்.ரஹ்மானை பிடித்தது.
 ‘வந்தேமாதரம் 1997’ பிறந்தது.
வந்தேமாதரத்தை ‘வீடியோ ஆல்பமாக்க ‘பரத்பாலா-கனிகா தம்பதிகளை’
கை காட்டினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நூறு கோடி லட்டாக கிடைத்தது தம்பதிகளுக்கு.
தனது  ‘கார்ப்பரேட் நண்பர்களான’ ‘பரத்பாலா-கனிகாவுக்கு’...
ரஹ்மான் காட்டிய கருணை அது.
[ இசைக்காக ரஹ்மான் பீஸ் தனி. ]


வந்தேமாதரம் ஆல்பத்திற்காகவே ரஹ்மானை,
கண்ட்ராக்ட் போட்டு... ஸ்பெஷலாக முடி வளர்க்க வைத்தது ‘சோனி’.
அவரும் வளர்த்து, புரொபல்லர் பேன் காற்றில்,
தலை முடிகள்  பறக்க...‘தாய் மண்ணுக்கு வணக்கம்’ வைத்தார்.


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்,
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது ‘வந்தேமாதரம் 1997’.
ரஹ்மானின் இசைப்பயணத்தில்...
மிக முக்கிய மைல் கல் ‘வந்தேமாதரம் 1997’.


1997ல் கிடைத்த ‘வருமானத்தை’...
பரத்பாலா  ‘தலைமுறை தலைமுறையாக’ உட்கார்ந்து சாப்பிட்டு...
‘வந்தேமாதரம் புகழோடு’ இருந்திருக்கலாம்.
விதி வலியது.
‘மரியான்’ என்ற ஒரே படம்,
‘மேலும் பல கோடிகளை’ கொடுத்திருக்கும்.
ஆனால் ‘வந்தேமாதரம் புகழை’ மரித்து போகச்செய்து விட்டது.
தேவையா பரத்பாலா!

[ பரத்பாலா ஒரு படைப்பாளி கிடையாது.
தொழில் நுட்ப வல்லுனர்களின் திறமையால்,
‘வெளிச்சம் பெற்று வருபவர்’...
என்ற குற்றச்சாட்டு திரை உலகில் அன்றும்...இன்றும்... உண்டு.
அதை தனிப்பதிவாக தருகிறேன்.]

இந்தப்படத்தில் வேலை செய்திருப்பவர்கள் ,
தடுக்கி விழும் போது...
நிச்சயம் ஒரு ஜாம்பவான் மீதுதான் விழுந்திருக்க வேண்டும்.
மிகப்பெரிய ‘ஜாம்பவான்கள்’ கூட்டமே  ‘மரியான்...மரியான்’ என வேலை பார்த்தது.
ஏகப்பட்ட சமையல் வல்லுனர்கள் ஒன்று கூடி சமைச்சிருக்காங்க.
ஆனா சமைச்சஅவ்வளவு பேரும்,
‘உப்பை அள்ளி போட்டிருக்காங்க’.


‘ஆழி சூழ் உலகு’ என்ற இலக்கியத்தை படைத்த ‘ஜோ டி குரூஸ்’,
தமிழில் உலகசினிமா எடுக்க காத்திருக்கும்
 ‘மாமல்லன் கார்த்தி’ ஆகியோரும்
உப்பை அள்ளிப்போட்ட ஸ்பெஷல் வித்வான்கள்தான்.


மரியானில், ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பாடல்களை தவிர மீதி அனைத்திலும் தூள் கிளப்பி இருந்தார்.
ஆனால் எல்லா பாடல்களையும் குறிப்பாக நல்ல பாடல்களையும் ,
பரத்பாலா படமாக்கிய விதத்தில்  ‘குற்றுயிராக்கி’ விட்டார்.
அந்தப்பாடல்கள் மரித்த விதத்தை பார்த்து ‘ நொந்து விட்டேன்’.

[ ‘சின்னச்சின்ன மழைத்துளிகளை அருந்தும் சக்கரவாஹத்தை’ கொன்ற  இயக்குனர் ரவி  ‘என் சுவாச காற்றுக்குள்’ வந்தார்.]

இசையில் வித்தை காட்ட,
மரியான்,‘எந்திரனோ’....‘சிவாஜியோ’ அல்ல.

‘நெய்தல்’ படங்களில்,
இசையிலும்,பாடல் வரிகளிலும், பாடகர் குரலிலும்...
உப்புக்காத்து உரசணும்.
கருவாடு கமகமக்கணும்.
மீன் கொழம்பு வாசம்  ‘மிதக்கணும்’.

மரியானில் மூன்று பாடல்களில் மட்டும்,
‘பாடல் வரிகளில் இருக்கும் மண் வாசனை’
இசையில் சுத்தமாக காணாமல் போய் விட்டது.
அந்த மூன்று பாடல்களில்,
‘மண் வாசனை’ சுத்தமாக துடைக்கப்பட்டு ‘பினாயில் வாடை’ அடித்தது.
அந்த மூன்று பாடல்கள்...

# 1.  ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,


# 2. I Love My Africa
I Love My Africa
Welcome To Africa
I Love My Africa
I Love My Africa
I Love My Africa


# 3. சர்ச் பாடல்.

‘அன்பென்ற மழையில்..அகிலங்கள் நனைய’ இயேசு பிரான்,  ‘மின்சாரக்கனவில்’மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார்.
இந்தப்படத்தில் வரும்  ‘சர்ச் பாடலை’ கேட்டு,
அவர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டதை
நான் என் இரண்டு கண்களால் பார்த்தேன்.

பின்னணி இசை பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.


தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கமலை பற்றிச்சொல்ல வேண்டும்.
கமல்,16 வய்தினிலே படத்திற்கு பிறகு நடிக்கவேயில்லை.
அந்த படத்துக்கும் அப்புறம், அவரது  கதாபாத்திரம்  ‘சென்னையாக’ இருக்கும்.  ‘சென்னையிலிருந்து’ விலகி,
திருச்சியை தாண்டி...
‘மதுரையாக’ நடித்து...
துருத்தி கொண்டிருப்பதை நான் ‘சிசுவாக’ இருந்து அவதானித்து வருகிறேன்.
எனிக்கு அரிஞ்சி ‘மோகன்லால்’ஏட்டந்தான் நல்லா கப்பக்கிழங்கு அவிப்பார்.
மத்தவங்க அல்லாரும் வேஸ்ட்.

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு என திகைக்க வேண்டாம்.
பதிவெழுதும் போது கமலை போட்டு சாத்த ‘எனக்கும்’ ஆசை இருக்காதா?
அப்போதுதானே ‘பிர்பால பதிவரு’ ஆக முடியும்.
‘பேஸ்புக்ல லைக் அள்ள முடியும்.
‘கூவல் திலகம்’ பட்டம் வாங்க போட்டி போடுபவர்கள்,
‘நல்லா கூவ முடியும்’.


இந்தப்படத்தை கட்டாயம் தியேட்டரில் பாருங்கள்.
அப்போதுதான் ‘நல்ல சினிமாவை’ அடையாளம் காண முடியும்.


நான் இந்தப்படத்தை ‘கோவை  ஃபன் மால் மல்டிப்ளக்சில்’ பார்த்தேன்.
படம் முடிந்து வரும் போது, மாலில் உள்ள கண்ணாடியில்
என்னை பார்த்தேன்.
எனது பிம்பம் இப்படித்தான் இருந்தது.


மரியானில் ‘மரித்துப்போன’ திரை நுட்பங்களை அடுத்தப்பதிவில் பார்ப்போம். 

34 comments:

 1. I dont have expectations for bharath bala,pure corporate lobbying person,earned in crores in shadow of sony,after that sony was collapsed and shattered , filthy,luck,damn overrated celebrity.

  ReplyDelete
  Replies
  1. பதிவெழுதின பிறகுதான், என் திரையுலக நண்பர்கள் பரத்பாலா வண்டவாளத்தை தண்டவாளத்தில் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

   Delete
 2. ‘இந்திய சுதந்திர வெள்ளி விழா’ - golden jubilee

  ReplyDelete
  Replies
  1. தவறை திருத்தி விட்டேன் நண்பரே.
   நன்றி.

   Delete
 3. தோ நான் பட்ட அவஸ்த இங்கன கீது http://killadiranga.blogspot.in/2013/07/2013.html

  100 ரூவா வேஸ்ட் பண்ணிட்டு அழுது பொலம்ப வுட்டாய்ங்க..!!

  //அதை தனிப்பதிவாக தருகிறேன்//
  வெய்ட்டிங்..

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் பின்னி பெடலெடுத்து இருக்கீங்க உங்க பதிவுல.

   மணிரத்னத்தின் ராவணன்,கடல் போன்ற படங்களை ரசித்த ரசிகர்கள் இதையும் ரசிக்க வாய்ப்பு உள்ளது.
   அவங்களாவது கொடுத்த காசு விரயமில்லன்னு சந்தோஷமா இருக்கட்டும்.

   Delete
 4. நண்பரே...பச்சைக்கொடி காட்டிட்டீங்க...
  கழுதைப்புலிகளை அடையாளம் ‘காட்டிருவோம்’.

  ReplyDelete
 5. // பரத்பாலா ஒரு படைப்பாளி கிடையாது.
  தொழில் நுட்ப வல்லுனர்களின் திறமையால்,
  ‘வெளிச்சம் பெற்று வருபவர்’...//

  Correct Sir..I never belived this guy.I never expected this movie.

  ReplyDelete
  Replies
  1. இந்திய சுதந்திர பொன் விழாக்கொண்டாட்ட உணர்ச்சி வெள்ளத்தில் நான் பரத்பாலாவை கொண்டாடியவன்.
   அவரை இப்போதுதான் என் திரையுலக நண்பர்கள் ‘வெள்ளாவில வச்சு வெளுத்துக்காட்டுறாங்க’.

   நீங்க மொதல்லயே தெளிவா இருந்திருக்கீங்க.
   அதுக்காக உங்களை பாராட்டுகிறேன் நண்பரே.

   Delete
 6. உள்குத்து நன்றாக புரியுது

  ReplyDelete
  Replies
  1. உள் குத்தா ! நாவொரு பசுங்க...

   Delete
 7. /// அப்போதுதானே ‘பிர்பால பதிவரு’ ஆக முடியும்.
  ‘பேஸ்புக்ல லைக் அள்ள முடியும்.
  ‘கூவல் திலகம்’ பட்டம் வாங்க போட்டி போடுபவர்கள்,
  ‘நல்லா கூவ முடியும்’... ///

  நிறைவேற வாழ்த்துக்கள் ஐயா...!@

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

   Delete
 8. Ar Rahman proud Indian wwwi.filmyscope.com news photos tollywood telugu

  ReplyDelete
  Replies
  1. சுந்தர தெலுங்குக்கு வணக்கம்.

   Delete
 9. என்னை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதம் எள்ளலுடன் இருக்கிறது... 'தமிழ் உலக சினிமா எடுக்க போகிறேன்' என்று நான் எங்கும் சொல்லவில்லை... இது போன்ற வார்த்தைகள் இந்த விமர்சனத்திற்கு அவசியமா? ... ஒரு சினிமா என்பது இயக்குனரின் ஊடகம் என்பதை அறிவீர்களா? இல்லையா? உலகில் உள்ள சிறந்த கலைஞர்களை அழைத்து ஒரு இயக்குனரோடு பணியாற்ற வைத்தாலும், ஒரு படம் என்பது இயக்குனரின் பார்வையே அன்றி மற்றவர்களுடையது அல்ல... எவ்வளவு உப்பு தனக்கு தேவை என்பதை ஒரு இயக்குனர் தான் தீமானிக்கிறார் எனபது உங்களுக்கு தெரியாதா 'உலக சினிமா ரசிகரே'!!! -
  மாமல்லன் கார்த்தி

  ReplyDelete
  Replies
  1. திரு.மாமல்லன் கார்த்தி அவர்களே...உங்களை பற்றி எங்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் மூலமாகவும், உங்கள் எழுத்துக்களின் மூலம் அறிந்ததை வைத்து தமிழில் உலகசினிமா எடுக்க காத்திருப்பவர் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டேன்.
   நாம் அறிந்து வைத்திருக்கும்,மதிப்பும் பெருமிதமும் உள்ள இருவர் இந்த படத்தில் இருந்தும் ‘அரை வேக்காடாக’ வந்துள்ளதே என்ற ஆதங்கத்தில் வந்த உணர்வை என் எழுத்தில் வெளிப்படுத்தினேன்.

   நீங்கள் உப்பை அள்ளிப்போடாமல் இருந்திருக்கலாம்.
   உப்பு அள்ளிப்போடும் போது அருகில் இருந்தவர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

   ஒரே நாளில் ஒரு இயக்குனர் தரம் அறிந்து படத்தை விட்டு வெளியேறியவன் நான்.
   எனக்கு இயக்குனர் பணியும் தெரியும்.உதவியாளார்களாக இருப்பவர்களின் நிலையும் புரியும்.

   Delete
 10. நான் படம் முதல் நாளே பார்த்துவிட்டேன் சார்.தனுஷ் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எதோ ஒன்று படத்தில் குறைவது போலவே இருக்கிறது.ஆனால் அது என்ன என்று எனக்கு இன்னும் பிடிபடவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இந்தப்படத்தை திரும்ப திரும்ப பார்.
   எங்கே திருத்தப்பட வேண்டும் என்பதை கண்டு பிடி.
   இதை ஒரு பயிற்சியாக மேற்கொள்.

   Delete
 11. தனக்கு உப்பு எவ்வளவு தேவை என்பதை தீர்மானிப்பவர் ஒரு இயக்குனர் என்பது கூடவா தெரியாது.. உலக சினிமா ரசிகரே!!! ... என் பெயரையும் , ஜோ.டி.க்ரூஸ் பெயரையும் போட்டுவிட்டு மற்ற சில பெயர்களை தவிர்த்திருப்பது ஏனோ.?..உண்மையின் புதலவரே!...

  ReplyDelete
  Replies
  1. நான் மதிப்பும்,மரியாதையும் வைத்திருந்த காரணத்தால்தான் உங்கள் பெயர்களை குறிப்பிட்டேன்.
   வேறு யாரையும் நான் அறிந்து வைத்திருக்கவில்லை.
   அதனால் மற்றவர்கள் பெயர்களை நான் குறிப்பிடவில்லை.

   உங்கள் பெயரை...இப்போது ‘ஏண்டா குறிப்பிட்டோம்’ எனத்தோன்றுகிறது.
   ஒரு வேளை இப்படம் காவியமாக வந்திருந்தாலும் அதற்கு நீங்கள் இருவரும் ஒரு காரணம் என என் பதிவில் நிச்சயம் குறிப்பிட்டு இருப்பேன்.
   இராமர் கட்டிய பாலத்தில் அணிலின் பங்காக அது வெளிப்பட்டிருக்கும்.


   Delete
  2. /// Ram Chinnappayal Mamallan Karthi நன்றி மாமல்லன்..பார்க்கும்போது உங்களை மனதில் வைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்..///

   நானும்தான்.
   இந்தப்படம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு என்னுள் உருவாகியதற்கு காரணமே மாமல்லன் கார்த்தியும், ஜே.டி.குருசும்தான்.

   Delete
 12. \\ஏகப்பட்ட சமையல் வல்லுனர்கள் ஒன்று கூடி சமைச்சிருக்காங்க.\\ Five experts in other fields, they don't know cooking, but tried cooking!! eppoodi.........!! எப்பூடீ ..............

  ReplyDelete
  Replies
  1. ஹா....ஹா...உங்களது கோணமும் ரசிக்கும்படி உள்ளது.
   ஆனால் சமைத்தவர்கள் ரசிக்க மாட்டார்கள்.

   ‘எருதுக்கு நோவு...காக்கைக்கு கொண்டாட்டமா?’

   Delete
 13. மன்னிக்கவும்... என் சொற்கள் கடுமையாகிவிட்டது போல... மரியான் பற்றி தமிழில் அதிகமான எள்ளலான விமர்சனங்களை படித்து வருவதால்..அதே தோரணையில் உங்களின் அவதானிப்புகளையும் அந்த மயக்கத்தில் படித்துவிட்டேன்...
  நான் கடந்த பத்து ஆண்டுகளில் பலரோடு முறைத்து கொண்டு வாழ்ந்தவன்... கடைசியாக பரத்பாலாவோடு தொழில் ரீதியில் ஓரளவு ஒத்துப்போனது... இந்த படப்பிடிப்பு குழுவிடமும், தொழில் நுட்ப்ப கலைஞர்களுடனும் பணியாற்றி கற்று கொள்ள நிறைய உள்ளது என்று அறிந்தேன்... அதுவே முக்கியம் என்று எனக்கு பட்டது... என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை... மார்க் கொநின்க்ஸ் உடன் பணியாற்றிய அனுபவத்தை அற்புதம் என்றே சொல்வேன்... இப்படி சொல்வதற்கு நிறைய உண்டு...

  உப்பு போடும் போது நாங்கள் எல்லோரும் கூட தான் இருந்தோம்... நான் என்னால் ஆனா எல்லாவற்றியும் விவாதித்தேன்... அதன் பின் அவர் எடுக்கும் முடிவு தான் இறுதி.. இது அவர் படம்... நன்றி...

  ReplyDelete
 14. /// உப்பு போடும் போது நாங்கள் எல்லோரும் கூட தான் இருந்தோம்... நான் என்னால் ஆனா எல்லாவற்றியும் விவாதித்தேன்... அதன் பின் அவர் எடுக்கும் முடிவு தான் இறுதி.. இது அவர் படம்... ///

  நன்றி கார்த்தி...
  நிச்சயம் இந்தப்படம் உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கும்.
  கற்ற பாடங்கள்தான்...வெற்றியை நோக்கி செல்லும் பாதைகள்.
  தீவிரமான சினிமா ஆர்வத்தால் மிகப்பெரிய வருமானம் தந்த வேலையை தூக்கியெறிந்த தீரன் நீங்கள்.
  நிச்சயம் உங்களிடம் என்னை பார்க்கிறேன்.

  தமிழுக்கு தரமான உலகசினிமாவை தர வேண்டி விரும்பி வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 15. மிக்க நன்றி உலக சினிமா ரசிகன்...
  உங்கள் வாழ்த்துகள் உண்மையாகட்டும் :)

  ReplyDelete
 16. http://karuvooraan.blogspot.in/2013/07/blog-post_20.html
  இதோ எனது விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. மரியான் படம் பாத்தா வடை கிடைக்கும்னு விமர்சனம் எழுதி இருக்கீங்க...

   அந்த குறும்பை மிகவும் ரசித்தேன்.

   Delete
 17. பொறமையின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இந்த கூவல் ..... கடல் வாழ் மக்களின் வாழ் நிலை தெரியாத அற்பனின் மனவோட்டம் தான் இந்த விமர்சனம் .... பாரதிராசா பரதேசியின் கனவு காட்சிகள் படம் என்றால் உங்களுக்கு ஓகே யா ...............

  ReplyDelete
 18. காட்சிக்கு காட்சி ‘பார்வதி மேனன் கிளிவேஜை’ காட்டுவதுதான்...
  கடல் வாழ் மக்கள் வாழ்க்கையின் பதிவா?

  படகோட்டி, மீனவநண்பன் போன்ற படங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
  தெரிந்து கொள்ள இந்த அற்பன் ஆவலாயிருக்கிறேன்.

  நீர்ப்பறவைக்கு என் விமர்சனத்தை படித்துப்பாருங்கள்.

  ReplyDelete
 19. UCR-

  I was disappointed by the film. I thought they will show the difficulties of the survivors and how they escaped or rescued, but these were taken to back seat. The first part ( before interval ) is a normal movie, 1hr 30 mins could have been said in 30 mins. The African villains are stereotyped, one scene they dance with Danush, the next scene they torture him ( Is it hallucination to Danush or to us !)

  ReplyDelete
  Replies
  1. முதல் பிரேமிலிருந்தே இயக்குனர்,‘தியேட்டரை விட்டு ஓடுங்கடா’ என நம்மை விரட்டிக்கொண்டே இருக்கிறார்.
   இறுதி பிரேம் வரை நம்மை இழுத்து பிடித்து உட்கார வைத்தது நடிக,நடிகையர் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்கள்தான்.

   Delete
 20. செத்துப்பொழச்சவண்டா....இந்த படம் பார்க்கபோய்....

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.