Jul 6, 2013

AMEN = 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வரலாறு.



நண்பர்களே...
‘ஆமென்’ படத்தில் காட்சி ரூபமாகவும்,
வசன ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுக்குள் நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.


AMEN \ 2002 \ German, Romanian and French \ Directed by Costa - Gavras \ Part - 3.

போன பதிவில்,
யாரைச்சுட்டான்? என்ற கேள்வியோடு முடித்திருந்தேன்.
விடையை தெரிந்து கொள்ள...
‘ஆமென்’ படத்தை கொஞ்சம் ‘ரிவைண்ட்’ செய்து பார்ப்போம்.

‘துப்பாக்கி இளைஞன்’ உலகநாடுகள் சங்க உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அரங்கினுக்குள் நுழைகிறான்.
ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
“ This year of 1936,
consequently we must Today..."

நுழைந்தவன், மேடையில் அமர்ந்திருக்கும் கனவான்களிடம் ‘நோட்டிசை’ விநியோகிக்கின்றான்.


மேடையில் அமர்ந்திருந்த ஒரு தாடிக்கார கனவான் காவலர்களை அழைக்கிறார்.
" Guards...Guards..." 

நோட்டிசை வீசி எறிகிறான்.
அனைவரும் ஆவலோடு ‘காட்ச்’ செய்கின்றனர்.
நோட்டிஸ் முழுவதையும் வீசி எறிந்து விட்டு,
சபையோரை பார்த்து முழங்குகிறான்.


" My name is Stephan Lux.
I am Jewish.
The Jews are being persecuated in Germany and the World dosen't care." 

எனப்பேசிக்கொண்டே,
துப்பாக்கியை வெளியே எடுக்கிறான்.
துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தொடர்கிறான்.


" I see no other way to reach people's hearts."
எனச்சொல்லி விட்டு,
தன்னைத்தானே சுட்டுக்கொண்டு...
தற்கொலை செய்து கொள்கிறான்...
‘யூத முத்துக்குமார்’.
_________________________________________________________________________________

ஹிட்லர் உலகம் முழுக்க 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தான்.

இது பற்றிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ செய்தியை அப்படியே தருகிறேன்.

பெரும் இன அழிப்பு என்பது,
மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் 
ஜெர்மனியில் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை, 
குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான 
ஹோலோகாஸ்ட்(Holocaust) என்பதற்கு 
இணையாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இது அக்காலத்தில் ஜெர்மனியில் ஆட்சியில் இருந்த,
அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான, 
இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. 
யூதர்கள் தவிர வேறு பிற இனத்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுள், 
ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள்
போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர்
மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் ஆகியோர்கள் அடங்குவர். 

பல அறிஞர்கள், 
பெரும் இன அழிப்பு என்னும் போது, 
மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக்கொள்ளாமல் 
யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர்.
ஜெர்மன் அரசு, 
இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. 

நாஸி ஜெர்மனியில் 
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் 
மொத்தத்தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் 
எனக்கருதப்படுகிறது.
இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜெர்மனி அரசினால் 
பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. 

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்றப்பட்டது. 

வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, 
அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், 
நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். 
கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளை  கைப்பற்றிய ஜெர்மனி, 
சிறப்புப்படையணிகள் மூலம், 
யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. 

யூதர்களும், ரோமாக்களும்... 
நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டு, 
பின்னர் அங்கிருந்து சரக்குத்தொடர்வண்டிகள் மூலம் 
நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த 
கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
பலர் வழியிலேயே இறந்து போயினர். 
எஞ்சியோர் நச்சு வாயு அறைகளுள் அடைத்துக்கொல்லப்பட்டனர். 

அக்கால ஜெர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும், 
இக்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. 
ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என 
ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.

ஹோலோகாஸ்ட் பற்றி மிக அற்புதமாக எனது நண்பர் கீதப்ரியன் எழுதி உள்ளார்.
ஹோலாகாஸ்ட் பற்றிய தகவல்கள், ஆவணப்பட ங்கள் பற்றிய விபரங்கள் என அனைத்தும் ஒரு ‘கலைக்களஞ்சியமாக’ அவரது பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

‘ஹோலோகாஸ்ட்’ பற்றிய நண்பர் கீதப்ரியன் பதிவிற்கு இந்த இணைப்பில் செல்க...

________________________________________________________________________

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம் 1939 - 1945 என வரலாறு குறிப்பிடுகிறது.


“ This year of 1936,
consequently we must Today...”

“ The Jews are being persecuated in Germany and the World dosen't care.” 

என்ற வசனங்களின் மூலமாக,
இரண்டாம் உலகப்போருக்கு முன்பே...
ஹிட்லர் ஜெர்மனியில் யூத அழிப்பை தொடங்கி விட்டதை எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.


‘கான்சன்ட்ரேஷன் & லேபர் கேம்ப்ஸ்’ [ Concentration and Labor Camps ]
என்ற பெயரில் முகாம்களை அமைத்து,
1933 - 1945 வரை ஹிட்லர் ‘யூத இன அழிப்பு’ செய்தான்.

1935ல் ‘நியூரம்பர்க் சட்டம்’ என சட்டம் ஒன்றை இயற்றி,
‘யூத இன அழிப்பை’ தீவிரப்படுத்தினான் ஹிட்லர்.

1936ல் உலகநாடுகள் சங்கம் கூடியதை,
ஆமென் படத்தின் துவக்க காட்சியாக வைத்து...
யூத இன அழிப்பு விவகாரத்தில்...
‘உலக நாடுகள் சங்கம்’ என்ற அமைப்பு செயல்படாத தன்மையை எடுத்துக்காட்டுகிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

 ‘உலக நாடுகள் சங்கம்’ இரண்டாம் உலகப்போரில் முடிந்து போனது.
ஆனால்,  ‘யூத இன அழிப்பு’ விஷயத்தில்...  
‘மற்றொரு அமைப்பும்’ செயல்படாமல் இருந்ததை எடுத்துக்காட்டவே 
‘ஆமென்’ படத்தையே எடுத்திருக்கிறார் இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

ஆனால் அந்த அமைப்பு இன்றும் பொலிவுடன் இருக்கிறது.
அந்த அமைப்பு எது ?

அதைத்தான் இனி வரும் பதிவுகளில் பார்க்கவிருக்கிறோம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
  

9 comments:

  1. மிக அருமையான இரண்டாம் பாதி
    தொடருங்கள்,வரலாற்று சினிமாக்கள் 1000 2000 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் சொல்லாதவற்றை பார்வையாளனுக்கு 3மணிநேரத்தில் கடத்தும் தன்மை கொண்டவை,பள்ளியில் பிள்ளைகளுக்கு பாவக்காய் போன்ற வரலாற்று பாடங்களுக்கு பதிலாக ஆவணப்படங்களும் உலக வரலாற்று சினிமாக்களையும் திரையிட்டு காட்ட வேண்டும்,அல்லது பெற்றோராவது தாமும் பார்த்து பிள்ளைகளுக்கும் பார்க்க ஊக்குவிக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஏமென் பட பதிவெழுத தொடர்ந்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதற்கு நன்றி நண்பரே.

      நமது பள்ளிகள் இன்னும் ஏட்டுச்சுரைக்காயையே நம்பி இருக்கின்றன.
      விஷுவலாக பாடத்திட்டத்தை வழங்க இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.
      சில பள்ளிகளில் மட்டும் இரான் படங்களையும், நேச்சர் சம்பந்தமான ஆவணப்படங்களையும் காட்டி வருகின்றன.

      Delete
    2. முதலில் பாடத்திட்டமே மாற வேண்டும்...!

      Delete
  2. என் பார்வையில் எளிமையாக உலகின் ஏனைய இன அழிப்பு பற்றி சில பதிவுகள் எழுதியிருப்பேன்,இங்கே அவற்றை வைப்பது பொருத்தமாயிருக்கும்,ஆமென் படம் மீண்டும் பார்க்க தேடினால் அது ஊரில் உள்ள ஹார்ட் டிஸ்கில் இருக்கிறது,ப்ளூரே வே டவுன்லோட் செய்கிறேன்
    http://geethappriyan.blogspot.ae/2009/09/blog-post.html
    நாஜிக்கள் யூதரை எப்படி இனம் கண்டு அழித்தனர்?யூரோப்பா யூரோப்பா[18+][1990][ஜெர்மன்]
    http://geethappriyan.blogspot.ae/2010/03/181990.html
    ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்[Schindler's List][1993][அமெரிக்கா]
    http://geethappriyan.blogspot.ae/2011/03/schindlers-list1993.html

    ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்ட இனப்படுகொலை
    http://geethappriyan.blogspot.ae/2009/10/blog-post_28.html
    த பியானிஸ்ட்[The Pianist][2002][இங்கிலாந்து]
    http://geethappriyan.blogspot.ae/2011/03/pianist2002.html
    த‌ கில்லீங் ஃபீல்ட்ஸ் (1984) மரண வயலும் முடிந்த வாழ்வும்
    http://geethappriyan.blogspot.ae/2009/11/1984.html
    இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளின் அடக்குமுறை
    http://geethappriyan.blogspot.ae/2009/09/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...கரும்பை பிழிந்து ஜூஸாக்கி குடிக்க கூலியும் கொடுத்த மாதிரி ஆகி விட்டது நண்பரே.

      நீங்கள் எழுதிய படங்களை நான் எழுதும் பதிவுகளில் பொருத்தமாக இணைத்து விடுகிறேன்.
      இந்தப்பதிவிலேயே அந்தப்பணியை செய்து விடுகிறேன்.

      நன்றி...மிக்க நன்றி.

      Delete
  3. கீதப்ரியன் அவர்களின் இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்...இந்தப்பதிவுக்கு நீங்க லேட்.
      இருந்தாலும் ஒண்ணுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டு அசத்தீட்டீங்க.
      நன்றி.

      Delete
  4. ஜெனீவா மாநாட்டுக்குப் பிறகு நம் ஊடகம் ஈழத்தமிழரை முழுதாகவே மறந்து விட்டது.ஆமென் போன்ற ஒரு படைப்பை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் நம் திரையுலகமுள்ளது.அப்படியான ஒரு படைப்பை எடுக்கும் தகுதியும்,துணிச்சலும் ஒருங்கேபெற்ற படைப்பாளி யாரேனும் தமிழகத்தில் உள்ளனரா ? சார்.

    ReplyDelete
  5. காஸ்டா கவ்ராஸ் போல இந்தியாவில் படமெடுக்க இந்திய சென்சார் விடாது.
    கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களில் ஒரு படைப்பாளி உருவாகி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.