Jul 21, 2013

இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்.

நண்பர்களே...
எனது நண்பர்  ஒவியர் ஜீவானந்தன் அவர்கள் ,
 ‘நடிகர் திலக வீரபாண்டிய கட்ட பொம்மனை’ 
ஓவியமாக்கி...காவியமாக்கி இருக்கிறார்.
அவரது விரல்கள் வழியே நடிகர் திலகம் சிலிர்தெழுந்து வந்திருக்கிறார்.
அடடா...அந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
எத்தனை நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன.


கமல் என் சிந்தையில் கலந்தவர் என்றால்,
நடிகர் திலகம் என் ரத்தத்தில் கலந்தவர்.

‘அன்னை இல்லத்தை’ என் கால்கள் என்றுமே மிதித்ததில்லை.
காரணம், நான் நடிகர் திலகத்தின் மீது வைத்திருக்கும் அன்பு என்றுமே ரணமாகி விடக்கூடாது என்ற அச்சமே.


ஆனால் அவரை பற்றிய செய்திகளை திரைத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறேன்.

அதில் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் ‘நேரம் தவறாமை’ உலகப்பிரசித்தம்.
இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் திலகம்+ சத்யராஜ் காம்பினேஷனில் ஒரு படம்.
வி.ஜி.பி.கோல்டன் பீச்தான் லொக்கேஷன்.
‘சூரிய உதயத்தில்’ படம் பிடிப்பதாக ஏற்பாடு.
சூரிய உதயத்தில் படம் பிடிக்க வேண்டுமென்றால் லொக்கேஷனில் அனைவரும் அதிகாலை 3 மணிக்கே ஆஜராக வேண்டும்.
நடிகர் திலகம் சரியாக 3 மணிக்கு ‘மேக்கப்போடு’ ரெடியாக வந்து விட்டார்.
அப்படி என்றால் அவர்,
ஒரு மணிக்கு எந்திருச்சி...
குளிச்சி...
மேக்கப் போட்டாதான் இது சாத்தியம்.

அவரைத்தவிர யாருமே லொக்கேஷனுக்கு வரவில்லை.
அங்கிருந்த வாட்ச்மேனிடம் ஒரு சேர் கேட்டு வரவழைத்து,
கடற்கரையில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டார்.
ஐந்து மணிக்கு மேல்தான் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.
மணிவண்ணனும், சத்யராஜும் வருவதற்குள்  ‘சூரியன்’ வந்து விட்டான்.

‘பெரிசு இண்ணைக்கு நம்மளை பொளக்கப்போகுது’ என மணிவண்ணனும், சத்யராஜும் அவர் திசைப்பக்கமே தலைக்காட்டாமல் பம்மி கிடந்தனர்.
குழுவில் ஒருவர் சரியாக எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தார்.

இயக்குனர் மணிவண்ணனை அழைத்து  வரும்படி ஆள் அனுப்பினார்  ‘சிம்மக்குரலோன்’.
 “ எல்லோரும் வந்தாச்சா?”
“ வந்தாச்சு”
 “ படத்துக்கு நீதானே டைரக்டரு.
இன்னைக்கு சூட்டிங் கேன்சல் பண்ணிரு.
நான் நாளைக்கும் மூணு மணிக்கு வந்து விடுகிறேன்.
நீங்க சவுகரியம் போல வாங்க”

அன்று விஜிபி கோல்டன் பீச்சிலேயே ரூம் போட்டு தங்கி விட்டனர் மணிவண்னனும்,சத்யராஜும்.

[இத்தகவலை என்னிடம் சொன்னது,
நான் தயாரித்த தொலைக்காட்சி தொடரை இயக்கிய இயக்குனர் ஜீவபாலன்.
இயக்குனர் ஜீவபாலன், இயக்குனர் மணிவண்னனின் பிரதம சிஷ்யர்.
தப்புக்கணக்கு முதலான சில படங்களை இயக்கியவர்.]

அவரது கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது
‘படிக்காத மேதை’.
இயல்பான நடிப்பில் அசத்தி இருப்பார்.

நடிகை கண்ணாம்பாவை விதவை கோலத்தில் பார்த்து,
அய்யோ...
என ஓங்கி குரலெழுப்பி ஒப்பாரி வைத்து அழுவார்.
ஓங்கி ஒலிக்கும்அழுகை...
படிப்படியாக சுருதி குறையும்...
பிசிறும்...
குரல் உடையும்...
கம்மும்.

இந்த அழுகைக்கு இணையான நடிப்பை,
உலகில் எந்த நடிகனாலும் தர முடியவில்லை.
இனியும் முடியாது.
சவால் விடுகிறேன்.
செஞ்சு பாருங்க..


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

16 comments:

 1. மணிவண்ணனுக்கும், சத்யராஜுக்கும் சரியான தண்டனை தான்...

  இந்த சவாலுக்கு ஆள் இல்லை... இனிமேலும் இல்லை... (கமல் ஒரு வேளை முயற்சிக்கலாம் : மகாநதி - தன் பெண்ணை கண்டு பிடித்த பின் - வீட்டில் கதறும் காட்சி)

  ReplyDelete
  Replies
  1. நடிப்பில் நடிகர் திலகத்தை தாண்ட கமல் என்றுமே முயற்சித்துக்கொண்டிருப்பார்.
   அந்த ‘ஆரோக்கியம்’ என்றுமே கமலிடம் மட்டும் இருக்கும்.

   Delete
 2. உங்க பதிவைப் படிச்சதும், சிம்மக்குரலோனை சிறுவனாக இருக்கும்போது நேரில் சந்தித்த அனுபவம் பீறிட்டுக்கிளம்புகிறது.

  அவர் இறந்தபொழுது, சென்னையில்தான் இருந்தேன். ஆனாலும் நேரில் போகவில்லை. காரணம், சிறுவயதில் பார்த்த அந்த கம்பீரத் தோற்றம் மனதைவிட்டு அகலக்கூடாது என்று தான்.

  ReplyDelete
  Replies
  1. கடற்கரை சீரணி அரங்கில் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து முழங்கிய பல கூட்டங்களை பார்த்திருக்கிறேன்.
   சந்தன சில்க் ஜிப்பா அணிந்து கம்பீரமாக பேசியதை கை தட்டி ஆரவாரித்து உள்ளேன்.
   சிங்கத்தமிழன் சிவாஜி தலைமையில்,
   [அதிமுக தோன்றும் முன்பு]
   திமுகவின் அராஜக ஆட்சியை கண்டித்து மவுண்ட் ரோட்டில் கடல் அலைபோல் திரண்ட ஊர்வலத்தில் நானும் போயிருக்கிறேன்.
   திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் ஊர்வலம் வரும் போது மாடியெங்கும் பெண்கள் திரண்டு கை அசைத்து வாழ்த்திய காட்சி...
   அடடா...இப்போதும் அந்தக்காலம் கண் முன் விரிகிறது.

   Delete
 3. தன் வாரிசாக பெற்ற பிள்ளையை முன்னிறுத்தி, பலரும் அவமானப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், தன் கலைவாரிசு கமல் தான் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பண்பாளர் நடிகர் திலகம்.

  ReplyDelete
  Replies
  1. நிஜ வாழ்க்கையில் நடிக்காத உத்தமர்.
   அதனால்தான் அவரது மறைவுக்கு, திரையுலகமே திரண்டு வந்தது.
   எம்ஜியாருக்கு கூட திரை உலகம் இப்படி திரளவில்லை.
   சாவிலும் சாதனை படைத்தவர்.

   Delete
 4. ஒரு படத்தில் தம்பி, தன் அண்ணனான சிவாஜியிடம் சொத்தை சரி பாதியாக பிரித்து தன் பங்கை தர சொல்லி கேப்பார். அப்போது எல்லா சொத்துக்களையும், டாகுமெண்ட்களையும் ஒரு இடத்தில் வைத்து விட்டு சிவாஜி மறுபுறத்தில் உக்காந்து கொள்வார். "உனக்கு எந்த பங்கு வேணுமோ எடுத்துக்கோ" என்பார். முதல்ல ஒன்னுமே புரியாது. சொத்தை பிரிக்காமலேயே பங்க எடுத்துக்கனு சொல்றாரேனு.. அப்புறம் தான் கேமரா கோணம் மாறும். சிவாஜி தன்னை ஒரு பங்காவும், சொத்துக்களை ஒரு பங்காவும் பிரிச்சு வச்சுருக்கறத அருமையா காட்டிருப்பாங்க. அண்ணனோட அன்பை புரிஞ்சுக்கற தம்பி அப்பறம் கதறி அழுவார். நடிப்பும், கேமரா வொர்க்கும் அவ்ளோ அருமையா இருக்கும் அந்த சீன்ல.

  இன்னிக்கும் இந்த மாதிரி கருப்பு வெள்ளை படங்கள் டிவில போட்டா பாக்க உக்காந்துருவேன். இவ்வளவு உள்ளர்த்தம் பொதிந்த சீன்கள் கருப்பு வெள்ளை படங்கள்ல ரொம்ப அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிட்ட காட்சி ‘குலமா குணமா’ படத்தில் இடம் பெற்றது.
   இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம்.
   இந்த படத்தின் பாதிப்பில்தான் ‘வானத்தை போல’ படத்தை உருவாக்கினார் இயக்குனர் விக்கிரமன்.
   குலமா குணமா படத்தை சென்னை பிளாசா தியேட்டரில் ரீலிஸ் அன்று பார்த்தது.
   [இந்த தியேட்டர் இப்போது இல்லை. சென்னை தேவி தியேட்டருக்கும்-காஸ்மோபாலிடன் கிளப்புக்கும் நடுவில் ஒரு சந்துக்குள் இருந்தது ‘பிளாஸா தியேட்டர்.]
   நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
   அதன் பின்னர் அந்தப்படத்தை பார்க்கவில்லை.
   இப்போது அந்தப்படத்தை பார்க்கும் ஆவலை கிளப்பி விட்டீர்கள்.

   Delete
 5. நிஜ வாழ்க்கையில் நடிக்காத உத்தமர்.
  அதனால்தான் அவரது மறைவுக்கு, திரையுலகமே திரண்டு வந்தது.
  எம்ஜியாருக்கு கூட திரை உலகம் இப்படி திரளவில்லை.
  சாவிலும் சாதனை படைத்தவர்.

  திருக்குறள் போல அழகான விமர்சனம். இது போல தொடர்ந்து எழுத வேண்டுகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றி.

   Delete
 6. Nadigar Thilagam oru Sahaptham.I have seen so many of his movies more than 100 times.But every time I used to enjoy.He is an un comparable Actor.No body can come close to him. Puthiya Paravai,Gowravam,Karnan,
  Pasa Malar, Padithal Mattum Pothuma,Bahap Pirivinai,Viyatnaaam Veedu,
  Engal Thanga Raja, and so many... The list is end less. In fact in all his movies he has done his best.No body can forget him.May his soul rest in peace.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நடிகர் திலகத்தின் பக்தரே!

   Delete
 7. enakku therinji dhaavanikkanavugal thodangi padayappa varai ilaya thalaimurayin rasiganaga sivaji avargal pangedutha nadippukku vaarisaaga vara endha nadiganalum mudiyadhu.andha alavu perunthanmai rajini kamal utpada evarukkum illai.hero of herovaga innoru mootha nadigarai kaattum perunthanmayum ilaya thalaimurayidamum illai

  ReplyDelete
 8. சூப்பர் பதிவு

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.