Oct 4, 2013

போதைகள் ஓய்வதில்லை -தமிழ் சினிமாவில் முதன் முறையாக!


                    ‘போதைகள் ஓய்வதில்லை’

நடிகர்கள்:  ‘கோவை நேரம்’ ஜீவா,  ‘பிலாசபி’ பிரபாகரன், 
‘வீடு’ சுரேஷ் குமார், பால கணேஷ் & ஜாக்கி சேகர்
நடிகைகள் : நஸ்ரியா, அனுஷ்கா [ சிறப்பு தோற்றம்]
வசனம் :  ‘மெட்றாஸ் பவன்’ சிவா.
தகவல் தொடர்பு : திண்டுக்கல் தனபாலன்.
கலை : கலாகுமரன்.
இசை, பாடல்கள் : கோவை ஆ.வி.
ஒளிப்பதிவு : ‘ஆபிசர்’ சங்கரலிங்கம்.
இயக்கம் : இலக்கியச்செம்மல் ‘வெளங்காதவன்’.
தயாரிப்பு : திருப்பூர் லட்சுமி காந்த்.

தயாரிப்பாளர் : ‘போதைகள் ஓய்வதில்லை’ படத்தின் டைட்டிலே ‘கிக்’ ஏத்துதே!...சூப்பர்.
அந்த காலத்துல, பாராதிராஜாவோட  ‘அலைகள் ஓய்வதில்லை’
சில்வர் ஜூப்ளி போச்சு!


இயக்குனர் : இந்த படமும் அப்படிப்போகும்.
ஏன்னா நம்ம படக்கதையும்...அலைகள் ஓய்வதில்லையும் ஒண்ணுதான்.

தயாரிப்பாளர் : அய்யய்யோ...
இந்தப்பதிவர்கள் எல்லாம்  விமர்சனம் எழுதி கிழிச்சுருவானுங்களே!

இயக்குனர் :  அதான் நமக்கு வேணும்.
அப்பத்தான் படம் ஓடும்.
மவுன ராகம்தான்... ராஜா ராணின்னு எழுதித்தள்ளினாங்க...
என்னாச்சு?
ராஜா ராணி... சூப்பர் டூப்பர் ஹிட்.

தயாரிப்பாளர் : அதுவும் ஒரு காரணம்.
இருந்தாலும் முக்கியமான காரணம்...
மவுனராகத்துல உள்ள ‘கிளாசிக்தனத்தையெல்லாம்’ கழிச்சு கடாசிட்டு எடுத்ததாலதான்  ‘ராஜா ராணி’ படம் ஹிட்டு.
நம்ம படம்...?

இயக்குனர் : கவலையே படாதீங்க.
அலைகள் ஓய்வதில்லை ‘மதப்பிரச்சினையை’ அடிப்படையா வச்சு இயங்கிச்சு.
நம்ம படம் ‘போதைப்பிரச்சினையை’ மையமா வச்சு இயங்குது.
படத்தோட ‘அவுட்லைனை’ சொல்றேன்.
கதாநாயகனும் அவனது பிரண்ட்சும் ஒன்லி ‘பீர் பால்கள்’.
இவங்க எல்லோரும் ஒண்ணா கூடிப்போய்...ஹீரோயினை பொண்ணு கேக்குறாங்க.
பொண்ணோட அண்ணன்,
‘ என் கூட ஒண்ணா தண்ணி அடி.
எனக்கு முன்னாடி மட்டை ஆகக்கூடாது.
இதான் என்னோட கண்டிஷன்’ அப்படின்னு சொல்றான்.
ஆனா கதாநாயகன் ‘குவார்ட்டருக்கே’ குப்புற குனிஞ்சு வாந்தியெடுக்குறான்.
 ‘டேய்...தக்காளி ஜூஸ் குடிக்கறவன்லாம்...
என் தங்கச்சியை கட்டமுடியாதுன்னு’ சொல்லி எல்லோரையும் அவமானப்படுத்தி விரட்டி விடுகிறான்.
அவமானப்பட்ட ஹீரோ,  ‘இயக்குனர் ராஜேஷ்’ எடுத்த...
தமிழ்  டாஸ்மாக் படங்களை’ 24 மணி நேரமும் திருப்பி திருப்பி போட்டு பாத்து டிரெய்னிங் எடுக்குறான்.
கிளாமாக்ஸ்ல  ‘ஃபுல் அடிச்சு’... ‘புல்லட்’ மாதிரி பாய்ஞ்சு பைட் பண்றான்.
ஹீரோயினை கல்யாணம் பண்றான்.

தயாரிப்பாளர் : அட...அட...அட...
இந்த கான்செப்ட்ல நம்ம படம் வந்துச்சுன்னா...
வசூல்ல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையே’ தூக்கி சாப்டுறுமே!

இயக்குனர் : நம்ம படத்துக்கு கேப்ஷனே... ‘குடி நல்லது’.

தயாரிப்பாளர் : இந்த கேப்ஷனுக்கே சென்சார் ‘யூ’ சர்டிபிகேட் குடுத்துரும்.
தமிழக அரசோட ‘வரி விலக்கும்’ ஈசியா கிடைச்சுரும்.
நீயெல்லாம் நல்லா வருவே!

இயக்குனர் : நம்ம படத்துல வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கும்.
‘திரைக்கதை’ என்கிற வஸ்து துளி கூட இருக்காது.
அந்த எழவு இருந்துச்சுன்னா படம் ஓடாது.
இதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள்  ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.

தயாரிப்பாளர்: அப்புறம் இன்னொரு முக்கியமான பார்முலா...
மூடர் கூடம் மாதிரி வித்தியாசமாவும் எடுக்கப்படாது.
[ ஹாலிவுட் பாலா போல் சிரிக்கிறார்.]
கெக்...கெக்...கெக்...

இயக்குனர் : சார்...அதெல்லாம் படமா அது!.
எப்படி படம் எடுக்கக்கூடாதுன்னு நமக்கு பாடம் சார் அது!
நான்  ‘அரைச்ச மாவை’ அற்புதமா அப்படியே ‘அரைப்பேன்’.
அதுல நான் எக்ஸ்பர்ட்.
பேரரசு, இராம நாராயணன் இவங்கதான் எனக்கு மானசீக குருக்கள்.

தயாரிப்பாளர் : அப்படியா!
இவங்கள மாதிரியே விகடன் விமர்சனத்துல மார்க் வாங்குவியா?

இயக்குனர் : கண்டிப்பா வாங்குவேன்....
ஆனா 50 மார்க்குக்கு மேல வாங்குற கேணத்தனத்தை செய்ய மாட்டேன்.


எப்பாடுபட்டாவது ‘45 மார்க்குக்கு’ கீழே வாங்குறதுதான் என் லட்சியமே.
முக்கியமா பதிவுலகில எழுதுற உலகசினிமா ரசிகன், சுரேஷ் கண்ணன், அதிஷா, கருந்தேள் போன்றவர்கள் நம்ம படத்தை பாராட்டி விமர்சனம் எழுத மாட்டாங்க.
இந்த மாதிரி ஆளுங்க  ஒட்டுக்கா ஒரு படத்தை பாராட்டுனா ‘படம் பணால்’.  
முக்கியமா  ‘இன்னொருத்தர்’ பிளாக், பேஸ்புக் எதுலயுமே நம்ம படத்தை பத்தி மூச்சு கூட விட மாட்டார்.
அவரது  ‘வாஜகர்கள்’ விடாம  ‘படத்தை பத்தி’ கேட்டா...
இந்த ‘படத்தை’ பதிலா போடுவாரு.


தயாரிப்பாளர் : இந்த உத்தரவாதம் போதும்.
படம்...  ‘பிளாக் பஸ்டர்’.
பிடிங்க...அட்வான்ஸ்.

    

33 comments:

 1. வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கு... ஹா... ஹா... போட்டுத் தாக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. நம்ம படத்துக்கு ‘தீயா வேலை செய்யணும் டி.டி’.

   Delete
  2. பாடல்கள் இப்படி இருக்க வேண்டும்...!

   நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல... ஸ்...
   பூவுக்கு அடிமை பதினாரு வயசுல...
   நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல...
   சாவுக்கு அடிமை அட நூறு வயசுல...
   அடிமைகளா பொறந்துவிட்டோம்...
   அத மட்டும் தான் மறந்துவிட்டோம்...
   அந்த பாசம் அன்பு கூட...
   சிறைவாசம் தானடா...

   ஆண்டவன பாக்கணும்; அவனுக்கும் ஊத்தணும்...
   அப்ப நான் கேள்வி கேக்கணும்... சர்வேசா...!
   தலைஎழுத்தெந்த மொழியடா...? ஆ...ஓஓ...!
   தப்பிச் செல்ல என்ன வழியடா...?

   Delete
  3. இப்பவே இந்த பாட்டை ரீ மிக்ஸ் பண்ண...
   ‘காப்பி ரைட்ஸ்’ வாங்கச்சொல்லிருவோம்...தயாரிப்பாளர்கிட்ட.

   Delete
  4. டி.டி பாஸ். கலக்கல்.

   Delete
  5. தனபால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய். யாரு கண்ணுலோ பட்டு திண்டுக்கல்லில் அட்வான்ஸ் எடுத்துக்கிட்டு வந்து கிக்கப் (நிக்க) போறானுங்க.

   Delete
 2. அட என்ன சார்..... இந்த படத்தில் நமக்கு ஒரு ரோல் கொடுக்க கூடாதா, பதிவுலகமே நம்மை புறக்கனிக்குதே !

  கற்பனை அபாரம்,......... கருத்து தூக்கலா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அட...நீங்க இல்லாமலா.
   ‘வெளிநாட்டு படப்பிடிப்பு உதவி’ படத்தோட கடைசில...
   டைட்டில் கார்டு போட்டு இருக்கேன்.

   Delete
 3. போட்டுத் தாக்குங்க...
  சூப்பரு....

  ReplyDelete
  Replies
  1. இன்னும் போட்டுத்தாக்கணுமா!
   அவ்வளவு கொலை வெறியோடு இருக்கீங்க!!

   Delete
 4. நம்ம படத்துல வெற்றிக்கான சூத்திரம் முழுமையா இருக்கும்.
  ‘திரைக்கதை’ என்கிற வஸ்து துளி கூட இருக்காது.
  அந்த எழவு இருந்துச்சுன்னா படம் ஓடாது.
  இதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.
  ................நல்ல தமாசு ....சீக்கிரம் எடுங்க... தியேட்டர் இல்லைனா என்ன...அதுதான் you-tube இருக்கே

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இந்தப்படம்... அண்டார்டிகாவுல கூட வெளியாகப்போகுது!
   யூ ட்யூப்ல வெளியிட இது குறும்படமா?
   தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டு...சரித்திரம் படைக்கும்.

   விமர்சனம் எழுத தயாரா இருங்க.

   Delete
 5. ஏனுங்க.

  இந்தப் படத்துக்கு முன்னாடி, நீங்க தயாரிச்சு நான் இயக்கிய, தீவாளிக்கு வெளிவரும், காதல் மன்னன் வீடு சுரேஷ் நடிக்கும்

  "எத்தாச்சோட்டு கிச்சன்"

  படத்தைப் பற்றி எழுதாதைக் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட வாங்கிச்சென்றுள்ளார்கள்.
   அங்கு திரையிடப்படும் வரை படத்தை பற்றி ‘மூச்’.
   கப் சிப்.

   Delete
 6. நஸ்ரியாவிற்கென்றே நல்லா நாலு பாட்டு இசையமைச்சிருப்பாரே நம்ம கோவைஆவி. :)

  ReplyDelete
  Replies
  1. பாடல் இசை அமைக்க ‘ஹங்கேரி’ போகணுமாம்.
   டிஸ்கசனுக்கு ‘தாய்லாந்து’ போகணுமாம்.
   கூட நஸ்ரியாவும் வரணுமாம்.

   படத்துல இவரு பட்ஜெட்தான் பெருசா இருக்கு!

   Delete
  2. ாபிசர், என் மேல அபார நம்பிக்கை வச்சதுக்கு நன்றி. அவ்வ்வ்!

   Delete
  3. முதல் படத்துக்கே ஹங்கேரி,தாய்லாந்தா.. கூட நஸ்ரியாவுமா. ஆஹா இதுவல்லவோ பாக்கியம். ஆனா கரும்பு தின்ன கூலி வேணாம் சார். (அச்சோ பாட்டெழுத பீஸ் வேணாமின்னு சொன்னேன். ஹிஹி

   Delete
  4. மதர்லேண்டை விட்டு தாய்லாந்துக்கு நஸ்ரியாவோட ஓடறதுல பயபுள்ளக்கு எவ்வளவு குஷி பாருங்க...! படத்துல அவளுக்கு அப்பா கேரக்டர் பண்ணப் போற என் பர்மிஷன் இல்லாம ஆவி பறந்துடுமா உ.சி.ர. ஸார்?

   Delete
  5. உங்களை கவிஞரா போட்டதே...ஒரு உள் நோக்கம்தான்.

   ‘கரும்புக்குரிய’ சம்பளத்தை நீங்கதான் கொடுக்கணும்.

   எப்பூடி!

   Delete
 7. கதை டிஸ்கன் லி மெரிடியன்ல இல்லையா ? இத ஒத்துக்க முடியாது. அப்புறம் நான் ஒழுங்கா அடுக்கி வச்சத எல்லாம் கலச்சுப்போடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. /// நான் ஒழுங்கா அடுக்கி வச்சத எல்லாம் கலச்சுப்போடுவேன்.///

   ‘கலை’ இயக்குனருக்கு நீங்க சரியான ஆளுதான்.
   இயக்குனர் கரெக்டாதான் செலக்ட் பண்ணி இருக்காரு.

   Delete
  2. ஆமா சார் அவர் ஒரு 'கலா' ரசிகன்றத யாராலும் மறுக்க முடியாது.

   Delete
 8. ஜாக்கி சேகர்?????????????????? Why?????????????????????????

  ReplyDelete
  Replies
  1. ஜாக்கி...தியாகராஜன் காரெக்டருக்கு.
   அவருக்கு ஜோடிதான் அனுஷ்கா [சிலுக்கு ரோல் ].

   Delete
 9. வெளிநாட்டு வெள்ளத்தோல் நடிகைய தமிழ் பேசவச்சு ஒரு கேரக்டர் புகுத்துங்க! நம்ம ஜனங்க மெயெமறந்துடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. அட...ஆமாம்.
   தமிழ்ப்பட வெற்றிக்கான சூத்திரங்களில் இதுவும் ஒன்று ஆயிற்றே!
   ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

   நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்புக்குழுவில் இணைந்து பணியாற்றக்கூடாது?

   Delete
 10. அது யாருங்க திருப்பூர்ல லட்சுமி காந்த்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம கோவை நேரம் ஜீவாவின் நண்பர்.
   அவர் பெயர் லஷ்மி.
   சினிமா இலக்கணப்படி நான்தான் ‘காந்த்’ சேர்த்து விட்டேன்.

   Delete
 11. ஒரு 'தமிழ்'ப் படம் ஓடறதுக்குத் தேவையான அத்தனை அம்சத்தையும் கரைச்சுக் குடிச்சு ஏப்பமே விட்ருக்கீங்க உ..சி.ர. ஸார்! விமர்சனத்துல மார்க் வாங்கற விஷயத்தைக் குறிப்பிட்டது 'நச்'! அதெல்லாம் சரி... படத்துல எனக்கு நீங்க சொன்ன 'அந்த' முக்கிய கேரக்டர் தானே...? ஹி... ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. ‘அதே காரெக்டர்தான் உங்களுக்கு’.
   திட்டமிட்டபடி ‘சிக்ஸ்பேக்கோட’ ரெடியா இருங்க!

   Delete
 12. நான் ஆவலா எதிர்பார்த்திருந்த ஓநாய் - மூடர்கூடம் போன்ற படங்கள்லாம் வெளிநாட்டில் ரிலீஸ் ஆகலை...பார்க்க முடியலை.

  அதனால அதையும் உங்க தகுதிகள் லிஸ்ட்டில் ஏத்திக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நல்ல படத்தை ரசிக்கிறவங்க வெளிநாடு போயிறாங்க...
   உள்ளூர்ல இருக்கிற பக்கிங்க, நல்ல படத்தை கண்டுக்காம உட்டுற்றாங்க.
   இது வேதனையான சோதனை.

   Delete

Note: Only a member of this blog may post a comment.