Feb 28, 2013

சுஜாதாவும் கமலும்.நண்பர்களே...
என் ஆசான் சுஜாதா நினைவு நாளை [பிப்ரவரி 27 ] முன்னிட்டு...
இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.எண்பதுகளில் [ 1980s ] திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது.
அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்...
 ‘வறுமையின் நிறம் சிவப்பு’ பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள்.
அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது.
அதிலிருந்து சில தேன் துளிகள்...


சுஜாதா : நான்  'இஸட்'ன்னு  ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன்.
[ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ]
அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க.
தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ?

கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம்.
முடியல.
பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு.
யெஸ்....இட் வாஸ் டினைட் [ Yes..It was denied ].
தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா... 
டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க.
வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி.
அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம்.

சுஜாதா : ரொம்ப பேர் அடிபட்டாலும், சினிமா எடுக்க வந்துகிட்டே இருக்காங்க !
அதுக்கு முக்கிய காரணம் சினிமாவைப்பற்றி இருக்கிற தப்பான அபிப்ராயமும்,
அவங்களுக்குள்ளே இருக்குற சபலமும்தான்.

கமல் : சினிமா படமெடுக்க ஆபிஸ் பிடிச்ச உடனே...
ஒரு படுக்கையை மூலையில ரெடி பண்ணி போட்டுக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.
ஆனா அவங்க யாரும் படம் எடுக்கல.

சுஜாதா : உங்களுடைய  ‘ராஜ பார்வை’ எப்படிப்பட்ட படம் ?

கமல் : ‘குரு’ மாதிரி முழுக்க முழுக்க மசாலா படமல்ல.
படத்தின் கதை பரிட்சார்த்தமானது அல்ல.
ஆனால் டெக்னிக்கலாக உயர்ந்த படமாக தயாரிக்க முயற்சி செய்கிறோம்.
குறியீடுகளை முழுசா இப்படத்தில் ஒதுக்கி வைச்சிருக்கோம்.
தப்பித்தவறி வந்தா அது எங்களுடைய பூர்வீக பழக்கமாக இருக்கலாம்.
ஒரு தெளிவான காதல் கதை.
சந்தோஷமான முடிவு.
நாங்க கூட நினைச்சோம்.
இந்த ஹீரோவை கொன்னு பாத்தா என்னன்னு ?
சந்தோஷமான முடிவுன்னு தீர்மானிச்ச பிறகு கொல்ல முடியலையேன்னு ரொம்ப துக்கமா இருந்தது - அழுகையா வந்தது. 

ரொம்பப்பிரமாதமான படமாங்கிறது... படம் வெளி வந்தப்புறம்தான் சொல்லணும்.
ஆனா இப்படி ஒரு படம் தயாரிச்சதுக்காக நிச்சயமாக என்னை வருத்தப்பட வைக்காத படம்.

சுஜாதா : நீங்க எழுதறதையெல்லாம் நான் விடாம படிக்கிறேன்.
உங்க நடை நல்லாயிருக்கு.
எழுதறதை விட்டுடாதீங்க.
எழுத்தாளர்கிட்ட இருக்கிற முதிர்ச்சி உங்ககிட்ட இருக்கு.
இன்னும் சரியா சொல்லணும்னா ‘கனவுத்தொழிற்சாலை’ எழுதறதுக்கு நீங்கதான் சரியான ஆள்.

கமல் : நீங்க எழுதுனதுக்கே அது யாரைப்பற்றி...
இது யாரைப்பற்றின்னு எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
நான் எழுதினா அதை விட வம்பே வேண்டாம்.
தவிற நான் ஒரு ‘பிம்ப்’ பற்றி எழுதினேன்னு வைச்சுக்கங்க.
உடனே கேள்வி வரும்.
 “ ஹேவ் யூ எவர் பீன் எ பிம்ப்” [ Have You ever been a Pimp ] அப்படின்னு.

ஆனா சுஜாதாகிட்ட அப்படியெல்லாம் கேட்க மாட்டாங்க.
சமீபத்துல ‘ஹோமோ செக்சுவல்’ பத்தி எழுதினேன்
உடனே பல பேர் என்னை கேட்டுட்டாங்க.
நீங்க ஒரு ஹோமோ செக்சுவலான்னு.

நீங்க ஒரு முறை ‘மழைத்தல்’னு எழுதியிருந்தீங்க இல்ல!

 “பெய்யென பெய்யும் மழை.
மழைக்குமெனில் சொல் உன் தாயிடம்...
நாடு நனையட்டும்” னு நான் எழுதியிருந்தேன்.
மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க.
  
சுஜாதா : சொல்லலாம் தவறில்லை.

கமல் : சுப்ரமணிய ராஜூவோ...மாலனோ...யார்னு ஞாபகம் இல்ல.
“ கீழ் பெர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை.
மனதிற்குள் படுக்க வைத்தேன்”
அப்படின்னு எழுதியிருந்தாங்க.

சுஜாதா : புதுக்கவிதையில கல்யாண்ஜி எல்லாம்...பிரமாதம்.
ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கிறவ...
பெருக்கிட்டிருக்கா...
தரை சுத்தமாயிடுச்சு...
மனசு குப்பையாயிடுச்சு....அப்படீங்கறார்.
நாலு பக்க கதை...அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே !.

கமல் : இன்னொன்று நான் படிச்சேன். 
‘கருப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்’ அப்படின்னு...
என்ன கற்பனை பாருங்க !

சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன்... 
‘கண்ணீர்’ என்ற தலைப்பில். 
“ இதயத்தில்தானே இடி....
இங்கே ஏன் மழை?” ன்னு எழுதியிருந்தாங்க!

இன்னொருவர் இப்படி...
“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக்குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது ?”  

கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதி இருக்காங்க.
நான் சினிமா பாட்டு புத்தகத்திலிருந்தும்...
கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேசக்கத்துகிட்டேன்.

சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்.
இன்னொரு முறை மீட் பண்ணி நாம்ப பேசுவோம்.

சுஜாதா  என்ற ஜாம்பவான் இன்று நம்மிடையே இல்லை.
அவரது தமிழ் என்றும் இளமையுடன் நம்மோடு ஓடி வரும்.

சின்ன சின்ன ஆசை....Costa - Gavras - ' Z ' பற்றி பதிவு எழுத ஆசை.
அதற்கு முன் -
Costa-Gavras -  ‘மானிடத்திற்கு’ எழுதிய புதுக்கவிதை  ' AMEN ' பற்றி எழுதுவதே...சிறகடிக்கும் ஆசை.
AMEN \ 2002 \ English \ Directed by Costa-Gavras 
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

17 comments:

 1. சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 2. சுஜாதா-கமல் நினைவலைகள் அருமை. அன்றும் இன்றும் எவ்வளவு மாற்றங்கள் ”தரை சுத்தமாயிடுச்சு...
  மனசு குப்பையாயிடுச்சு”

  ReplyDelete
  Replies
  1. மாறாமல் சில விஷயங்கள் இன்றும் தொடர்கிறதே...நண்பரே!

   Delete
 3. ரசிக்க வைத்தது உரையாடல்... பார்க்காத புகைப்படமும் கூட...

  ReplyDelete
  Replies
  1. /// ரசிக்க வைத்தது உரையாடல்... ///

   இருவருமே வார்த்தை சித்தர்கள்.

   /// பார்க்காத புகைப்படமும் கூட... ///

   இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
   சுஜாதா செயின் ஸ்மோக்கராக இருந்த காலமது.

   Delete
 4. சுஜாதாவும் கமலும் இருக்கும் இந்த புகைப் படத்திற்குப் பின் இருக்கும் உரையாடலை உங்கள் புண்ணியத்தில் நானும் படித்து விட்டேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நான் எடிட் பண்ணிதான் இப்பதிவில் போட்டுள்ளேன்.
   முழுமையாக படிக்க...
   சுஜாதா எழுதியதை தொகுத்து வந்த ‘விவாதங்கள் விமர்சனங்கள்’
   என்ற நூலை படிக்கவும்.

   Delete
  2. ‘விவாதங்கள் விமர்சனங்கள்’ எங்க கிடைக்கும்னு சொல்ல முடியுமா? வெகுநாட்களாகத் தேடுகிறேன்.

   Delete
 5. இதுவரை பார்த்ததில்லை...இந்த புகைப்படம்...உரையாடல் அருமை..தொகுத்து வழங்கியதற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா ஆவியாக... என்னுள் இறங்க வேண்டும்.
   அதற்காக மீண்டும் சுஜாதா படைப்புகளை வாசித்து வருகிறேன்.
   அதிலிருந்து ஒரு தேன் துளிதான் இது.

   தேன் எத்தனை ஆண்டானாலும் கெட்டுப்போகாமல்...
   அதன் வீர்யத்துடன் இருக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது.

   Delete
 6. நான் சுஜாதா அவர்களின் 'மூன்று குற்றங்கள்'என்ற புத்தகத்தை மட்டும்தான் வாசித்துள்ளேன்.பிறகு அவ்வப்போது அவருடைய சில கட்டுரைகளை வாசித்துள்ளேன்.'மூன்று குற்றங்கள்' புத்தகத்தை வாசிக்கத்துவங்கி சில பக்கங்கள் கடந்த பிறகு உணர்ந்தேன்,நான் ஒரு சிறந்த எழுத்தாளரின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று .சுஜாதா அவர்களின் எழுத்து நடை அவரை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து சுலபமாக வேறுபடுத்திக் காட்டியது.அவரளவுக்கு அறிவியல் கட்டுரைகள் எழுதியவர்களை நான் அறிந்ததில்லை.கவிஞர் வாலி அவர்கள் 'நினைவு நாடாக்கள்' என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் எழுதிவந்தபோது சுஜாதாவைப் பற்றியும் எழுதியுள்ளார்.அதில் "சுஜாதா அவர்களை சினிமாக்காரர்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதித்துவிட்டார்,சுஜாதா அவர்களின் இடத்தில் நான் இருந்திருந்தால் அதற்க்கு அனுமதித்திருக்கமாட்டேன் காரணம் அவர் எட்டிய உயரம் யாரும் தொடமுடியாதது." என்று.எனக்கு அது செரி என்றே பட்டது.சார் இதுபற்றிய உங்கள் கருத்து ?.

  ReplyDelete
 7. தமிழ்த்திரை உலகின் சாபங்கள் அவரது ஆரம்பக்கால திரைப்படங்களை தீண்டியது.
  ரோஜாவுக்குப்பின்தான் விமோசனம் கிடைத்தது.
  அவருக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை நிறைய ஒதுக்கி தள்ளினார்.
  அவருக்கு பிடித்தமான இயக்குனர்களுடன் மட்டுமே பயணித்தார்.
  திரை உலகில்,உயரமான இடத்தை தனது எழுத்தாலும் பண்புகளாலும் பெற்றார்.
  அவரால் வசீகரிக்கப்படாத இயக்குனர்களே இல்லை எனலாம்.

  குறிப்பாக, ஒரே ஒரு பாடலுக்கு ஆர்மோனியம் வாசிப்பது போல நடித்து விட்டு ஆர்ப்பாட்டம் செய்யத்தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. //ஒரே ஒரு பாடலுக்கு ஆர்மோனியம் வாசிப்பது போல // என்று யாரை சொன்னிர்கள் என்று விளங்கியது .அம்மனிதரின் பார்வையில் சமீபத்தில் சிக்கியவர் 'வட்டியும் முதலும் ' ராஜ் முருகன்.

   Delete
 8. ரொம்ப நல்ல பகிர்வு தலைவரே,கமல் 20 வருடம் முன்னே சிந்திப்பவர் என சொன்ன பேட்டி.ஆமென் படம் நாஜிக்கள் யூதர்களை கொன்று குவிக்க துவங்கியது தெரிந்தும் கள்ள மௌனம் காத்த போப்பின் முகமூடியை கிழிக்கும் படம்.
  கீதப்ப்ரியன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே !
   தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   Delete

Note: Only a member of this blog may post a comment.