Feb 20, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் முதலிடம் !.


நண்பர்களே...
‘விஸ்வரூபத்தை சீன் பை சீன் எழுது’ என அன்புக்கட்டளைகள்
வந்த வண்ணம் உள்ளது.
இரண்டாம் பாகம் வந்ததும் எழுதுகிறேன்.
அது வரை பொறுத்திருக்க...
கல்லெறிபவர்களும் காத்திருக்க.

நண்பர்களே...
விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...
என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.
விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம்  படைக்கப்படவில்லை.
இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபத்தை, நிருபமா கதாபாத்திரத்தின் வழியாக கொஞ்சம்
எட்டிப்பார்ப்போம்.
நிருபமா + சைக்யாட்ரிஸ்ட் வழியாகத்தான் விஸ்வரூபத்தின் முன் கதை விளக்கப்படுகிறது.
இக்காட்சியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் வார்த்தைகளாக வெடிக்கிறது.
படம் நெடுக  ‘வசனகர்த்தா கமல்’ தீனி போட்டாலும்,
இந்த பகுதி ஸ்பெஷல் ட்ரீட்.


நிருபமா : ஐ பிலிவ் இன் அமெரிக்கா.
என் விமோசனமே இங்கேதான் தோணித்து.
ஏழு வயசாயிருக்கும் போதே எங்கப்பா கேன்சர்ல போயிட்டார்.
ஸோ...நானும் எங்கம்மாவும் சித்தப்பா ஆத்துல ஒண்ட வேண்டியதா போச்சு.
எங்கம்மா செத்த அண்ணைக்கு... என் மனசுல ஒரு வைராக்கியம் .
எப்படியாவது இந்த மிடில் கிளாஸ் ஊழில இருந்து தப்பிக்கணும்.
அமெரிக்கா போகணும்.
பி.எச்.டி பண்ணணும்.
ஆச்சா...

ஒரு மிடில் கிளாஸ் பிராம்மணப்பெண்ணின் நரகத்தையும்...
அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கும் முனைப்பையும்...
சொற்சித்திரங்களாக்கி இருக்கிறார்
‘வசனகர்த்தா கமல்’.
இந்தப்பகுதியின் இறுதி வார்த்தையான ‘ஆச்சா’ எதை குறிக்கிறது ?
இது வரை பிளாஷ்பேக்கை சரளமாக சொன்ன நிருபமா,
இனி தன்னுடைய  ‘மனதில்’ இருப்பதை எடிட் பண்ணிப்பேசப்போகிறாள்  என்பதை விளக்க ‘ஆச்சா’வை போட்டிருக்கிறார் படைப்பாளி கமல்.

நிருபமா : சொல்லி வச்சாப்ல...
நம்ம ஜெகன்நாத் மாமா இவர் ஜாதகத்தை
கொண்டு வர்றார்.
இவரும் கரெக்டா ஸ்டேட்ஸ்ல இருந்தார்.
ஸோ...

ஜெகன்நாத்தும், விஸாமும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள்.
இருவருமே திட்டமிட்டு தங்களது அமெரிக்க ஆப்பரேஷனின் ஒரு பகுதியாக இந்த திருமணத்தை திட்டமிட்டு நடத்தியது புலப்படுகிறது.
இருவருமே உற்றார் உறவினர்களிடம் கூட தங்கள் பணியை மறைப்பதை கடமையாகக்கொண்டவர்கள் என்பதும் புரிகிறது.
[ இரண்டாம் முறை பார்க்கும் போதுதான் இது விளங்கும்.]

சைக்யாட்ரிஸ்ட் : புரியுது...
அதான் வயசு வித்தியாசம் கூட பாக்காம... 
மிஸ்டர்.விஸ்வநாதனை கட்டிக்க சம்மதிச்சிங்களா ?

கதாநாயகனுக்கும்...கதாநாயகிக்கும் உள்ள வயது வித்தியாசத்தை ‘பேலன்ஸ்’
செய்துள்ளார் கமல்.

நிருபமா : அப்கோர்ஸ்...இட் வாஸ் எ மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்.
அவருக்கும் இதுல என்ன சவுகரியமோ தெரியல...
தெரிஞ்சுண்டேதான் ஒத்துண்டார்...விஸ்.

சைக்யாட்ரிஸ்ட் : விஸ்...

நிருபமா : ஓ...விஸ்...என் ஹஸ்பண்ட் பேரு.

சைக்யாட்ரிஸ்ட் : ஓ...நீங்க வச்ச பெட் நேமா ?.

நிருபமா : பெட்டுமில்ல...குட்டுமில்ல.
எல்லோரும் அப்டி கூப்டா...நானும் அப்டி கூப்ட்டேன்.
ஆரம்பத்துல இருந்தே...அந்த மாதிரி கொஞ்சல்-கிஞ்சல்லாம் கிடையாது.
நான் ஹானஸ்டா அவர்ட்ட சொல்லிட்டேன்.
நான் வந்தது படிக்கத்தான்.
எனக்கு படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்லேன்னேன்.
அவரும் சிரிச்சுண்டே ஒத்துண்டுட்டார். 
ஹி ஹேஸ் எ கிரேட் சென்ஸ் ஆப் ஹ்யூமர்...யூ நோ.

‘படுத்துண்டே...படிக்கிற பழக்கமில்ல’...
இந்த டயலாக் மட்டும்  'குறள்' மாதிரி...
விளக்கத்தை கொஞ்சம் ‘உள்ளே போய்’ தேடணும்.

கணவனது தோற்றம்...பாடி லேங்குவேஜ்...இவற்றால் அசூயை அடைந்த நிருபமா அவனோடு செக்ஸ் வைப்பதை தவிர்க்க எண்ணியுள்ளாள்.
உடலுறவு வைத்திருந்தால்... ‘புரிந்திருப்பாள்’...
கணவனை ‘முஸ்லிம்’ என கண்டு பிடித்திருப்பாள்.
It is a Wonderful  'Situational - Logic'. 

இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபமா நிச்சயமாக தெரிந்திருப்பாள்.

படத்தின் கதாநாயகன் இந்துவா ? முஸ்லிமா ? என்ற சுவாரஸ்யப்புதிருக்கு விடை நிருபமா கதாபாத்திரம் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும்.
கதாநாயகன் + அஷ்மிதா + ஜெகன்நாத் & கோ சொல்வதை நம்ப முடியாது.
நம்பவும் கூடாது.
ஏனென்றால், இவர்கள் பொய் சொல்வதை குலத்தொழிலாக கொண்ட உளவாளிகள்.

இரண்டாம் முறை பார்க்கும் போது  ‘புரிந்து ரசித்ததில்’...
எனக்கு மிகவும் பிடித்த சூப்பரான காட்சி இதோ...விஸ் : மாமாஜியும்...டாக்கின்ஸனும் ஏதோ ப்ரீப் பண்ணணுமாம் நம்பளை.
ஓவர் த டின்னர்.

அஷ்மிதா [ அண்ட்ரியா ] : எப்டி ?....அதும் நிருபமா எதிர்க்க !.

விஸ் : நிருபமா டின்னருக்கு...வரல.

அஷ்மிதா : வரமாட்டான்னு... ‘ஆகாஸ்வாணி’ சொல்லித்தா ?.

விஸ் : எக்ஸாக்ட்லி. 

இந்தக்காட்சியில்,
வசன உச்சரிப்பில்...‘பிராம்மண உச்சரிப்பையும்’...
உடல் மொழியில்... பெண்மைத்தன்மையையும்...
‘விஸ் கதாபாத்திரம்’  தவிர்த்திருப்பதாக காட்சியமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
அஷ்மிதா காரெக்டரும் அதே போல் காஷுவலாக உரையாடும்.
உடல் மொழியும் மாறுபடும்.
பின்னால் வரும் “ இங்க எல்லோருக்குமே டபுள் ரோல்” என்ற வசனத்தை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

சக உளவாளியான அஷ்மிதாவோடு உரையாடுகையில்...
‘பிராம்மண உச்சரிப்பு +  பெண் தன்மையை’ விலக்கி...
அடுத்தக்காட்சியில்...
நிருபமாவுடன் உரையாடும்போது  ‘பிராம்மண உச்சரிப்பு + பெண் தன்மையை’ தொடர்வதாக காட்சியமைத்த படைப்பாளி கமலை கலா ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.‘ஆகாஸ்வாணி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம்...
பின்னால் வரும் ஒரு காட்சியில் அஷ்மிதா,
நிருபமாவை பார்த்து... “ உங்க ஆபிஸ் பூரா ‘பக்’ பண்ணியிருக்கோம்” எனச்சொல்லும் போது விளங்கும்.
அதாவது, நிருபமா-தீபக் அலுவலக உரையாடல்கள் முழுக்க ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதை வசனம் மூலமாகவே விளக்கியுள்ளார் படைப்பாளி கமல்.
ஆகாஸ்வாணி = ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைக்கு ஏற்படுத்தப்பட்ட 
‘கோட் வேர்ட்’

நிருபமா-தீபக் ரகஸ்யக்காதலை தெரிந்தும்... ஒன்றுமே தெரியாதவன் போல்
உரையாடுவான் விஸ்.
இதற்கு அஷ்மிதா,ஜெகன்னாத்,டாக்கின்சன் ரியாக்‌ஷனை கவனியுங்கள்.
தேர்ந்தெடுத்த உளவாளிகளின் பாவனை இருக்கும்.
ஏனென்றால் உளவாளிகளுக்கு பொய் பேசுவதுதான் குலத்தொழில்.
மாறாக,  ‘நிருபமா-தீபக்&கோ’ பொய் பேசுவதில் தடுமாறுவதை காட்டி நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளார் படைப்பாளி கமல்.  

இப்படத்தில் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
ஒருத்தொருக்கொருத்தர் சளைக்காமல் நடித்து இயக்குனர் கமலுக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
HATS OFF ! ALL ACTORS !!

‘விஸ்வரூபம்’ - துளியூண்டு விமர்சனம்’ என்ற பதிவு...
எனது பதிவுகளிலேயே அதிக ‘பேஜ் விசிட்’ பெற்று...
முதலிடம் பெற்றிருக்கிறது.
நன்றி நண்பர்களே!.

VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம் பதிவைப்படிக்க இங்கே செல்லவும்.

இப்படத்தை குப்பை என எழுதிய ஆண் \ பெண் பதிவர்கள் அனைவருக்கும்...
ஒரு தாழ்மையான வேண்டுகோள்...

நிருபமா தீபக்குடன் ஊர் சுற்றி விட்டு வந்து படுக்கையில் படுப்பாள்.
அவளது கணவன்  ‘விஸ்’ கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு ‘குறட்டை’ ஒலி எழுப்புவதற்கு காரணம் என்ன ?

கண்டு பிடித்து... பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
ப்ளீஸ்.

அறிவிப்பு :  விஸ்வரூபத்தை பற்றி,
பதிவர்கள் கூட்டத்தை கூட்டி அழைத்தால்...
இந்தியாவில் எந்த மூலைக்கும் வந்து விவாதிக்க நான் தயார்.
போலி ஐ.டி போக்கிரிகளிடம்...வலைத்தளத்தில் கூட விவாதிக்க மாட்டேன்.
எனது நேரத்தை வீணடிக்கும் வீணர்களின் கமெண்டை ‘ஸ்பேம்’ செய்து வருகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

54 comments:

 1. Hello sir,
  I saw the movie 4 times. 2 in velanthavalam and 2 in shanthi & central. I feel great to be a kamal fan to watch this movie each and every time. A movie is fantastic. His screenplay is amazing in the movie. At the time u explain the movie is more superb. I saw this type of movie like INCEPTION. I feel, what a man he is, to write the screenplay sensible and logical best. I feel the same thing in the VISWAROOPAM. I request you to post the movie review before the second part. Because I feel more exciting to read ur review,after I watch the movie is more exciting. plz thanking you

  ReplyDelete
 2. sir.
  I don't know typing in tamil. so plz pardon me.

  ReplyDelete
  Replies
  1. அடடே !
   மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுத மறந்து விட்டேன்.

   வருகைக்கும்...பாராட்டுக்கும்...நன்றி நண்பரே.

   Delete
 3. சினிமாவுக்கு விளக்கவுரை பதவுரை கொடுத்து புரிந்து கொள்ள நேரும்படி இருந்தால் அதுதான் உலக சினிமாவா? உங்கள் பதவுரைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சுரேஷ் அவர்களே...
   கதை மட்டும்தான் எழுத வேண்டுமா ?
   விடுகதை எழுதக்கூடாதா ?
   கதை எழுதுவதும்...விடுகதை எழுதுவதும்...படைப்பாளியின் பிறப்புரிமை.

   திருக்குறளை எழுதியது ஒருவர்தான்.
   விளக்க உரை, பதவுரை எழுதியது எத்தனை பேர் !

   திருவள்ளுவரிடமோ அல்லது விளக்க உரை எழுதியவர்களிடம் இப்படி கேளுங்கள்...
   விளக்க உரை,பதவுரை கொடுத்து புரிந்து கொள்ள நேரும்படி இருந்தால் அதுதான் இலக்கியமா ?

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

   Delete
  2. சபாஷ், சரியான பதில்..!

   Delete
 4. வாவ்....ஷாட் பை ஷாட் //விளக்கம்...அருமை...

  ReplyDelete
 5. இது.. இதுக்குத்தான் நீங்க எழுதனும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்..
  எனக்கும் படம் பிடிச்சிருந்திச்சு. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு விலகிப் படம் போனதால் முழு திருப்தி கிடைக்காமல் இருந்தது..
  இப்போ இதை வாசிக்கும் போதே, அதுவும் 'ஜெகன்நாத்' மாமா திருமணம் அரேஞ்ச் பண்ண மேட்டர் இப்போதான் 'கிளிக்' ஆவுது.. 'படுத்துக்கிட்டே படிக்கிற' நானும் யோசிச்சிருந்தேன் (ஹி..ஹி..), என் டிஸிஷனை ரீ-கன்ஸிடர் பண்ணிக்கனும்!!

  *இது இப்படியே தொடர்ச்சியா எழுதுவீங்களா.. இல்ல மீதியெல்லாம் பார்ட்-2வுக்கு அப்புறமாவா? ரெண்டும் எனக்கு செளகரியமே!

  ReplyDelete
  Replies
  1. பார்ட்-2 க்கு பிறகுதான் முழு விமர்சனம் எழுத முடியும்.
   அதுதான் முறை.

   வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி நண்பரே.

   Delete
 6. அணு அணுவாய் ரசித்து அழகாக நீங்கள் எழுதிய பாங்கு எங்கே ...கீழ் உள்ள வலை தளத்தில்
  புரிதல்கள் ஏதும் இல்லாமலேயே எழுதிய பாணி எங்கே .. என்னவென்று சொல்வது ? ஒன்று நிச்சயம் . கமல் படம் பார்க்க தனி கலைக்கண் தேவை . ஒரு முறை பார்த்து உடனே புரிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனம் . http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_15.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 7. அண்ணே வழக்கம் போல கலக்கல்! திரை உலகம் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கும் போது அதை பற்றிய ரசனையும், அறிவும் மட்டும் இன்னும் தோலுரித்து புகட்டும் வாழைபழ அளவில் தான் இருக்க வேண்டும், நாங்கள் வளர மாட்டோம் என்று அடம் பிடித்தால், நாம் மட்டும் பின் தங்கி விடுவோம். திரைபட துறையில் பெரிய வரலாறு இல்லாத இரான் மற்றும் சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் கதை சொல்லும் பாணியிலும், காட்சி அமைப்பிலும் எங்கேயோ போய் விட்டார்கள். ஆனால் நாம் மட்டும் சினிமா வெறும் பொழுது போக்கிற்கு மட்டும் தான் என்று சொல்லிக் கொண்டு அபத்தங்களை எடுத்து கல்லா கட்டுபவர்களை தலை சிறந்த கலைஞர்கள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. இனி தரமாக படமெடுத்தால்தான் ஜெயிக்க முடியும்.
   சமீபத்திய உதாரணம் : கடல்,டேவிட்

   ஜல்லியடித்தால்...தூக்கி வீசிவிடுவார்கள் ரசிகர்கள்.

   வருகைக்கும்...பாராட்டுக்கும்...கருத்துக்கும் நன்றி கோபி.

   Delete
 8. //விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...
  என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.//

  உங்களுக்கே அப்படின்னா..படிக்காத பாமரனுக்கு?


  //விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
  ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம் படைக்கப்படவில்லை.
  இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.//

  அடடா.. அப்போதான் நல்லா கல்லா கட்ட முடியும் என்பதாலா வாட் எ ஐடியா.. உலகநாயகனா கொக்கா..

  ReplyDelete
  Replies
  1. வாடிக்கையாளருக்கு டேஸ்டாக கொடுத்து...
   திரும்ப திரும்ப தன்னிடம்
   வரவழைத்து கல்லா கட்டுவது வியாபார தர்மம்தானே !

   Delete
 9. Super, I Understood the movie when I watched it second time, all because of your writing about Heyram. Thank you.Keep writing.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டம் மகிழ வைத்தது.
   அதே நேரத்தில் ஹேராம் தொடரை முடிக்க வேண்டிய கடமையையும் ஞாபகப்படுத்தியது.

   Delete
 10. விஸ்வநாதன் + நிருபமா = விஸ்வரூபம்?

  ReplyDelete
  Replies
  1. Two names for protagonist is Vishwanath & Wisam. Phonetically both names sounds "VishaWa"roopam

   Roopam has different meanings in Sanskrit, but I think they meant "appearance".

   Most of the super-here movie title will be the name of the hero itself. Remember Kamal and Rajani films like Vikram, Annamalai, Pammal K Sambandam, Arunachalam... the list goes on..

   But Kamal in few films play with words, remember AnbeSivam ( the theme and protagonists names are close ), so in the similar lines he titled ManMadan Ambu and Hey Ram.

   Ravi
   www.filmbulb.blogspot.com
   www.teashoptalks.blogspot.com

   Delete
  2. நண்பர் ரவியின் அலசல்...அற்புதம்.
   அனைத்தையும் படித்தேன்...ரசித்தேன்...ருசித்தேன்...அத்தனையும் தேன்.

   Delete
 11. சார் நான் ஒரு ஹோடேலுக்கு சாப்பிட போறேன் அந்த இடம் பார்க்க சூப்பரா இருக்கு ,பட் நான் சாப்பாடு கேட்டேன் அவன் சாதம் மட்டும் வச்சிட்டு சாம்பார் நாளைக்கு தரேன்னு சொல்லிடு சாப்பாட்டுக்கு உண்டான மொத்த ரூபாயும் வாங்கிட்டார் ,மறுநாள் போகும்போது சாம்பார் கொடுத்தார் அதுக்கும் மொத்த ரூபாய் வாங்கிட்டார் .சோ நான் ஒரு சாப்பாடு சாப்பிட ரெண்டு சாப்பாட்டுக்கு உண்டான காசு கொடுக்கணுமா?

  ஒரு பார்ட்ல நடந்தத நான் இன்னொரு பார்ட் பார்த்தபிறகுதான் புரிஞ்சிக்கணும்ன இந்த முதல் பகுதிக்கு பாதி தொகை மட்டும் வசூல் செய்ய வேண்டும் அதுதான் ஒரு நேர்மையான கலைஞனின் செயல் பட்?

  இந்த படதுகுமட்டும் 95 கோடி செலவு செய்ததாக சொன்ன கமல் சார் எல்லாரும் ஆதரவு தெரிவிக்கும்போதும் சும்மா இருந்துவிட்டு தடை நீக்கம் செய்தபின் நான் ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கு பல காட்சிகளை எடுத்துவிட்டேன் என்றார் .இது சரியான செயலா ?

  இந்த உண்மையை முதலிலேயே கூறி இருக்க வேண்டும் .

  நல்ல இல்லன்னு சொல்லல இன்னும் நல்ல இருந்த நல்ல இருந்திருக்கும்னு தான் சொல்றேன்...

  ReplyDelete
  Replies
  1. ///சார் நான் ஒரு ஹோடேலுக்கு சாப்பிட போறேன் அந்த இடம் பார்க்க சூப்பரா இருக்கு ,பட் நான் சாப்பாடு கேட்டேன் அவன் சாதம் மட்டும் வச்சிட்டு சாம்பார் நாளைக்கு தரேன்னு சொல்லிடு சாப்பாட்டுக்கு உண்டான மொத்த ரூபாயும் வாங்கிட்டார் ,மறுநாள் போகும்போது சாம்பார் கொடுத்தார் அதுக்கும் மொத்த ரூபாய் வாங்கிட்டார் .சோ நான் ஒரு சாப்பாடு சாப்பிட ரெண்டு சாப்பாட்டுக்கு உண்டான காசு கொடுக்கணுமா?///

   உங்க விவாதம் அபத்தமா இருக்கு.

   நான் ஒரு ஹோட்டலுக்கு போறேன்.
   டேஸ்ட் நல்லாயிருக்குன்னுதான் திரும்பவும் போறேன்.
   நல்ல ஹோட்டல் ஒட்டல் நடத்தரவன்...தொழில் பக்தி உள்ளவன்...திரும்ப திரும்ப கஸ்டமர் வரணும்னு டேஸ்டா சமைப்பான்.

   /// இந்த படதுகுமட்டும் 95 கோடி செலவு செய்ததாக சொன்ன கமல் சார் எல்லாரும் ஆதரவு தெரிவிக்கும்போதும் சும்மா இருந்துவிட்டு தடை நீக்கம் செய்தபின் நான் ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கு பல காட்சிகளை எடுத்துவிட்டேன் என்றார் .இது சரியான செயலா ? ///

   முதல் பாகம் ரீலிஸ் பண்றதுக்கே எத்தனை ஆர்ப்பாட்டம் ?
   அப்போ யாராவது இரண்டாம் பாகத்தை பத்தி பேசுவாங்களா ?
   நாடே சொல்லும்...முதல் பாகத்துக்கே வழியக்காணோம்.
   இவரு இரண்டாம் பாகத்தைப்பத்தி பேசராறு.

   95 கோடி செலவு செய்து ஒரு படம் எடுத்து காட்டுங்கள்.
   அதற்கு பிறகு உங்கள் ஆலோசனையை கமலுக்கு கூறுங்கள்.

   முதலில் ஒரு கதை எழுத முடியுமா எனப்பாருங்கள்.
   பதிவுலகில் எழுதி காட்டுங்கள்.

   Delete
  2. நன்றி சார் ,
   ஆனால் நீங்கள் நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்துகொள்ளவில்லைன்னு நினைக்கிறன் .'விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.
   விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.
   ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம் படைக்கப்படவில்லை.
   இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.'
   இதற்குத்தான் நான் கேட்டிருந்தேன் ஒரு படம் பல பாகங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த பாகத்திலும் நிறைவு இருக்க வேண்டும் .பேரரசு போன்ற இயக்குனர்கள் செய்திருந்தால் நாங்கள் கேள்வி கேட்டிருக்க முடியாது .நாங்கள் கமலிடம் எதிர் பார்த்தது கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் கேட்டது.நான் ஒரு புரிந்து கொள்ள அடுத்த பாகத்தினையும் பார்த்தால்தான் புரியும் என்றால் அது எனக்கு இரட்டை செலவு என்பதை இப்படி கேட்டேன் ,அபத்தம் எனில் மன்னிக்கவும்.
   அடுத்து நான் கமல் இரண்டாம் பகதினை பற்றி சொல்லிருக வேண்டும் என்று கேக்கவில்லை.முதல் பாகத்திற்கு செலவு செய்த உண்மையான தொகையை மட்டும் சொல்லிருக்கலாம் என்று நினைத்து கேட்டேன் தவறெனில் மன்னிக்கவும்.கமல் கஷ்டப்படுவதை பார்த்து கமலுக்கு ஆதரவாக திரண்ட பலகோடி தமிழனில் நானும் ஒருவன் என்று முறையில் கேட்டேன். ஒழுங்காக வரி கட்டும் ஒரு நடிகன் கமல் என்பதில் பெருமைப்படும் நான் என் நண்பர்கள் சிலர் கமல் இப்படி செய்துடறே என்று சொல்லும்போது கஷ்டமாய் இருப்பதால் கேட்டுவிட்டேன் .
   அப்புறம் நான் சில குறைகளை சொன்னதால் ஒரு படம் எடு ,கதை எழுது,95 கோடி செலவு செய்து பார் என்று சொன்னீர்கள் .எனக்கு முதல்வன் நேர்காணல் காட்சி தான் நினைவில் வந்தது .நீங்கள் எந்த படத்தினையும் குறை சொல்ல வில்லையா ?அல்லது நீங்கள் எத்தனை கோடி செலவு செய்து எத்தனை படம் எடுத்து உள்ளீர்கள் என்று நான் கேட்க முடியும் ,ஆனால் நான் கேட்க விரும்பவில்லை .இத்தனை காலமாக நீங்கள் ஒரு நடுநிலை விமர்சகர் என்று நினைத்து உங்கள் வலைபக்கதினை தொடர்ந்து வந்தேன் ,ஆனால் நான் ஒரு சந்தேகம் கேட்டால் அதற்கு பதில் அளிக்காமல் நீ படம் எடு என்று சொன்னதும் உங்கள் நடுநிலை உணர்ந்து கொண்டேன் .அந்த வரிகளில் சில கோபம் இருப்பதை உணர்ந்தேன் .இனி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை .உங்கள் உணர்வினை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

   Delete
  3. நண்பரே...
   எனது பதிலில் தார்மீக கோபம் இருந்தது.

   ஒரு படத்தை இரண்டு பாகமாக எடுப்பது தவறில்லையே.
   பில்லா 2 போல...விஸ்வரூபம் இரண்டாம் பாகம் அபத்தமாக
   வந்தால் குறை சொல்ல நியாயம் உண்டு.

   மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...
   முதல் பாகம் திருப்தி தரவில்லை ?

   Delete
  4. Whatever said.. I wont buy your below arguments- worldcinemafan,

   //95 கோடி செலவு செய்து ஒரு படம் எடுத்து காட்டுங்கள்.
   அதற்கு பிறகு உங்கள் ஆலோசனையை கமலுக்கு கூறுங்கள்.

   முதலில் ஒரு கதை எழுத முடியுமா எனப்பாருங்கள்.
   பதிவுலகில் எழுதி காட்டுங்கள்.//

   Delete
  5. நான் முதல் பாகம் சிறப்பாக இல்லை என்று சொல்லவில்லை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தான் சொல்கிறேன் ,நானும் பல கட்சிகளை ரசித்தேன் ,
   கார் கண்ணாடியை சுட்டுவிட்டு உள்ளே குதிப்பது ,இளம் ஜிகாதி ஊஞ்சல் ஆடும் இடம் ,குதிரையை கருணை கொலை செய்யும் இடம் ,முதல் சண்டை,ஆப்கனின் கடை வீதி,தூக்குதண்டனை , இப்படி நிறைய ஆனால் கடைசி 45 நிமிடங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை அதுதான் குறை.

   உங்கள் அளவிற்கு இல்லையெனினும் நேரம் கிடைக்கும்போது நானும் எனக்கு வருவதை எழுதுவேன் .
   http://piraridamanbusei.blogspot.com/

   Delete
 12. விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்

  விஸ்வரூபம் கார் விபத்து

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவைப்படித்தேன்.
   நன்றாக எழுதி உள்ளீர்கள்.
   நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

   Delete
  2. நன்றி.. நன்றி..

   Delete
 13. \\பூஜா கமலை சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தது போல, கமலும் அவரை ஒரு சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தாரா? அதாவது, அவர் வேலை பார்க்கும் இடத்தில நடக்கும் தில்லு முல்லுகளைக் கண்டறிவதற்கு. (கமல், இது உங்கள் கதையுடன் பொருந்தியிருந்தால், என்னை உங்கள் உதவியாளனாக சேர்த்துக் கொள்வீர்களா?\\

  இது என்னுடைய பதிவில் எழுதியது..

  http://sivigai.blogspot.in/2013/02/blog-post.html

  எனக்கு இன்னும் சில சந்தேகங்கள்.. பதிவிலும் உள்ளது..

  கமல் தன்னை ஒருவர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிந்தும், அவர் ஏன் தொழுகை செய்ய போகிறார்? அது மட்டுமின்றி, அவரை ஏன் அங்கே சிக்க வைக்க வேண்டும்?

  உமர் எப்படி கமல் ஒரு உளவாளி என்று கண்டு பிடித்தார்?

  ReplyDelete
 14. \\\பூஜா கமலை சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தது போல, கமலும் அவரை ஒரு சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தாரா? அதாவது, அவர் வேலை பார்க்கும் இடத்தில நடக்கும் தில்லு முல்லுகளைக் கண்டறிவதற்கு.\\\

  என் பதிவிலேயே இதற்கு விடை இருக்கிறது.
  அது கூடப்புரியாமல் கேள்வி எழுப்பி உள்ளீகள்.

  உங்கள் அறிவுக்கு நேரடியாகவே...
  ஹாலிவுட் படத்துக்கே இயக்குனர் ஆகலாம்.
  ரோமன் பொலான்ஸ்கி,கிரிஸ்டோபர் நோலன்,வெர்னர் ஹெர்சாக் போன்றவர்களே உங்களிடம் உதவியாளராக வரிசை கட்டி நிற்பார்கள்.
  நீங்கள் எதற்கு கமலிடம் உதவியாளராக வேண்டும் ?

  வேண்டுகோள் : இன்னொரு பின்னூட்டம் போட்டு விடாதீர்கள்.
  அழுதுருவேன்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும். தங்களுக்கு பிடிக்காவிட்டால் பின்னூட்டத்தை நீக்கியிருக்கலாம். அல்லது எனது பதிவை ஒரு முறை படித்திருக்கலாம். நீங்கள் சொல்லியிருந்தது என்னுடைய பதிவிலும் உள்ளது என்பதை சொல்லவே அதை நான் குறிப்பிட்டிருந்தேன். அதை முழுதாக சொல்லாமல் விட்டது என் தவறுதான்.

   உங்களுடைய 'அறிவிப்பை' பார்த்து, முதலில் மற்றவர்களை தப்பாக எண்ணியிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. தங்களின் வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டதற்கு மன்னிக்கவும்.

   சொல்ல மறந்து விட்டேன்.. என்னுடைய அறிவைப் பற்றியும் திறமையைப் பற்றியும் எனக்குத் தெரியும். தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி. உங்களால் முடிந்தால், இந்த பின்னூட்டத்தை அனுமதித்து, மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும்.

   Delete
  2. நண்பரே....
   நீங்கள் தங்கள் பதிவிலேயே குறிப்பிட்டபடி கமல் ரசிகராயிருந்தால்,
   படத்தை மறுபடி பாருங்கள்.

   ///கமல் தன்னை ஒருவர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிந்தும், அவர் ஏன் தொழுகை செய்ய போகிறார்? அது மட்டுமின்றி, அவரை ஏன் அங்கே சிக்க வைக்க வேண்டும்?///

   இந்த கேள்விக்கு வெகு எளிதாக படத்திலேயே விடை கிடைக்கும்.

   ///உமர் எப்படி கமல் ஒரு உளவாளி என்று கண்டு பிடித்தார்?///

   அமெரிக்க ‘சாலை டோல்கேட்’ காட்சியில்...
   ‘உனக்கு முழுக்கதையும் தெரியாது’
   என ஒமர் சலீமிடம் சொல்வதிலேயே...
   ஒமர் விஸாமை உளவாளி எனப்புரிந்து கொண்டான் என்பதை விளங்கலாம்.

   ஆனால் ஒமர் எப்படி தெரிந்து கொண்டான் என்பதை இரண்டாம் பாகத்தில் விளக்குவார் படைப்பளி கமல்.
   பொறுத்திருக்கவும்.

   எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் எழுப்புங்கள்.
   படத்தில் விடை கிடைக்கும்.
   விடை கண்டு பிடித்த சந்தோஷத்தை அனுபவியுங்கள்.

   நான் தங்கள் மனம் புண்படும்படி பதில் பின்னூட்டம் போட்டதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

   ஒன்றை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
   உங்கள் பதிவை நீங்கள் எனக்கு பின்னூட்டம் போடுவதற்கு முன்பாகவே படித்து விட்டேன்.
   விஸ்வரூபம் பற்றி யார் பதிவெழுதினாலும் படித்து விடுவேன்.
   குறை சொல்லி எழுதப்படும் பதிவை மீண்டும் ஒரு தடவை படித்து...
   குறை உண்மையானதுதானா ?
   வக்கிரம் பிடித்து எழுதப்பட்டுள்ளதா ?
   அறியாமையால் எழுதப்பட்டுள்ளதா ?
   என்பதை தெரிந்து கொள்வேன்.

   Delete
 15. யாருமே குறட்டை பற்றி பேசவில்லையே??

  உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.. குறட்டை என்பது ஆழ்நிலை தூக்கத்தின் வெளிப்பாடு.. தான் உறங்குவதை தன் மனைவிக்கு உணர்த்த, அதே சமயம் நீங்க பதிவில் சொன்னது போல் "அதை" தவிர்க்கவும் வேண்டியே அவ்வாறு செய்திருக்கலாம்.. மேலும் அந்நேரத்தில் ஒரு விவாதத்தை தவிர்க்கவும் வேண்டி இருக்கலாம்..

  ReplyDelete
  Replies
  1. குறட்டை பற்றி கேட்டு... நிறைய பேர் தூக்கத்தை கெடுத்து விட்டேன் என ஒரு நண்பர் சொன்னார்.
   நீங்கள் கமல் ரசிகரல்லவா...துணிந்து பதிலை சொல்லி விட்டீர்கள்.
   நன்றி நண்பரே.

   Delete
 16. ஸ்டான்லி குப்ரிக் படம் போல செதுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் படம் நெடுக புதிர் போட்டும்,உள் அர்த்தம் கொண்ட காட்சியமைப்புகளும் நெறயவே இருக்கு. .
  விஸ்வரூபம் பற்றிய எல்லா பதிவும் அருமை. .இன்னும் நெறைய வேணும். .இரண்டாம் பாகம் சீக்கிரம் வர வேண்டி காத்திருப்போம். .

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 17. கலக்கல் சார்,
  படத்தை ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்துட்டேன்.. மொத்தம் முனு ஷோ தான் போட்டாங்க. $30 - கமலுக்கு நான் செலுத்திய காணிக்கை. அப்புறம் படத்தை டவுன்லோட் பண்ணி முனு தடவை பார்த்து இருக்கேன். நிறைய சின்ன சின்ன விஷயங்கள் புரிஞ்சது. முத சண்டை ரெண்டு சொட்டு தண்ணி சொட்டி முடிகிறதுக்குள்ளே நடந்து முடிஞ்சிரும். அப்புறம் அந்த ஊஞ்சல் சீன், ரெண்டு மட்டும் தான் முத தடவை பார்க்கும் போது என்னால் உணர முடிஞ்சுது. மத்த விஷயங்கள் நிறைய படிச்சு மறுபடியும் படம் பார்த்து புரிஞ்சிகிட்டேன். படத்துல நாசர் எப்படி செத்தார் என்பதை கண்பிக்கவே இல்ல, சரியா சார்..??
  நானும் நான் படிச்சதை வச்சு ஒரு பதிவு எழுதிட்டு வரேன். இதுக்கு முன்னாடியே Kill Bill படத்தை குவாண்டின் ரெண்டு Vol ஆக ரீலீஸ் செஞ்சு இருக்கார். Vol-1 ல Vol-2 சண்டை காட்சிகள் வரும். அது போல் தான் இந்த படமும் என்று நான் நினைக்கிறன். Vol-2 வோட நிக்கமா "விஸ்" கதாபாத்திரத்தை இந்தியன் ஜேமஸ் பாண்ட் மாதிரி ஆக்கினா நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்.

   நீங்கள் என்னைப்போலவே ஒரு கலா ரசிகர்.
   நம்மை போன்றவர்களுக்கு விஸ்வரூபம் பொக்கிஷம்.
   எனவேதான் கொண்டாடுகிறோம்.

   Delete
 18. படத்தில் உள்ள பாராட்ட வேண்டிய விஷயங்களை பட்டியில் இடுவதை போல, படத்தில் உள்ள அபத்தங்களையும் ஒரு வரியிலாவது சொல்லலாமே. எதோ குறைகளே இல்லாத படம் போல எழுதுகிறிர்களே? இது வித்தியாசமான கதைக்களன் கொண்ட ஒரு சுமாரான திரைப்படம். இப்படியெல்லாம் பதிவு எழுதி படத்தின் மேல் வெறுப்படைய வைத்துவிடாதிர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் ஒரு ஆளைத்தேடிக்கொண்டு இருந்தேன்.
   தயவு செய்து...இப்படத்திலுள்ள அபத்தங்களை பட்டியலிடுங்கள்.

   நானும் தேடித்தேடி களைத்து விட்டேன்.

   Delete
  2. I think "worldcinemafan" has to write about the -ve's of the film, because if someone writes then there are chances that you may not agree for it and it will became a debate. So it will be wise that you write about the -ve's. Please, no product is 100% correct.

   @Stalin you can see some -ve's and +ve's here. http://teashoptalks.blogspot.in/2013/02/my-best-scenes-in-viswaroopam.html

   Delete
 19. கமல் ஹாலிவுட் சென்று சாதித்தாலும் பலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் சார். .A .R .ரஹ்மானுக்கு நேர்ந்த நிலைதான்.பெரிய கலைஞனை சொரிந்து சுகம் காண்பது இங்கே ஒன்றும் புதிதில்லையே.யார் தூற்றினாலும் கமல் மிகச்சிறந்த கலைஞன் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

  ReplyDelete
  Replies
  1. கமலை குறை சொல்பவர்கள்...
   உலகில் உள்ள படைப்பாளிகள் அனைவரையும் விட தான்தான் மேதை என எண்ணும் போஸ்ட்மாடர்ன் காரெக்டர்கள்.

   இப்படிப்பட்ட ‘அறிவாளிகளின்’ தாக்குதல் சிறந்த கலைஞர்கள் அனைவருக்கும் நேரிடும்.
   இப்படிப்பட்ட ஆசாமிகளை கண்டு கொள்ளவே மாட்டார் கமல்.
   பார்க்காமலே தப்பிச்சு போயிடுவார்.

   Delete
  2. ஆமாம் உண்மை தான்.இந்த பின் நவீனத்துவம் சார்ந்து பேசுபவர்களை பார்த்தாலே ஏனோ எரிச்சலாக வருகிறது சார்.நவீன யுகத்தின் அணைத்து சாதனங்களையும் நுகர்ந்து கொண்டே அதனை சாடுவது தான் என்னளவில் மிகப்பெரிய அபத்தம்.

   Delete
 20. காஷ்மீரி என்ற அப்பா தனது அம்மாவினை ஏமாற்றியதாகவும் தன மானத்தினை காக்க அப்பா பெயரை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம்மால் கற்பழிக்கப்பட்ட பிராமணப்பெண்ணின் மகன் தான் கமலகாசன் கதாப்பாத்திரம். ஆகவே கமலின் வளர்ப்பு முறை பிராமண முறையாகவே இருந்திருக்கவேண்டும். அதனால் கமலுடன் மனைவி உறவுகொள்ளும் சந்தர்ப்பத்தில் கமல் முஸ்லிம் என்று தெரிய வாய்ப்பில்லை அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. விஸ்வரூபத்திற்கு நீங்கள் வடிவமைத்த கதை...
   ஒரிஜினல் விஸ்வரூபக்கதையுடன் பொருந்தவில்லை.

   படத்தை இன்னும் பலமுறை பாருங்கள்.

   Delete
 21. கமல் தனது தந்தை பற்றி கூறிய விஷயத்திற்கு பதில் தரமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. "அப்பா பேர் மட்டும்தான் கொடுத்தாரு...
   அப்புறம் அம்மாவுக்கு தலாக் கொடுத்துட்டாரு.
   அம்மாவோட மானத்த காப்பாத்த நான் காஷ்மீரியை வச்சுகிட்டேன்”

   இந்த டயலாக்கில் உங்கள் சந்தேகத்திற்கு விடை இருக்கிறது.
   தலாக் = விவாகரத்து.

   Delete
 22. //இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபமா நிச்சயமாக தெரிந்திருப்பாள்.//
  நிருபமா கூட கூற முடியாது. ஆப்கானிஸ்தான் காட்சிகளில் தான் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஒரு இஸ்லாம் அல்லாத உளவாளி கூட சுன்னத் செய்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. அருமையாக இப்புதிரை வேறு புதிய கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள்.
   உங்களுக்கு எனது பாராட்டும்...நன்றியும்.

   மேலும் இப்புதிர் விரிவடைந்து வருகிறது.
   இது பற்றி விளக்கமாக எனது அடுத்தப்பதிவில் பேசுவோம்.

   Delete
 23. இதைப் படிச்சீங்களா.. படிச்சுட்டு சொல்லுங்க, உங்க கருத்தை அறிய ஆவலுடன்...

  http://www.vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_15.html

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.