Jan 19, 2013

விஸ்வரூபமே கமலின் விஸிட்டிங் கார்டு !


நண்பர்களே...
விஸ்வரூப எதிர்ப்பலைகள் தணிந்து விட்டது.
25ம் தேதி வெளியாவதில் இனி பிரச்சினை இருக்காது என நம்புவோம்.
அவர் நம்பாத கடவுளிடம் அவருக்காக வேண்டுவோம்.

வியாபார சதுரங்கத்தில்,கமலே தொடர்ந்து ஜெயித்து வந்தார்.
ஆனால், நடுவில் விழுவது போல் விழுந்தார் எதிரிகள் சுகம் காண.


தியேட்டர் அதிபர்களிடம் இறுதிப்பேச்சு வார்த்தை நடந்த இடம்...
 கமலின் அலுவலகம்.
இந்த பிரச்சனையில் கமல் தரப்பு  ஸ்டாராங்காக இருந்ததற்கு அடையாளம்...
இது ஒன்று போதும்.

கமல்,
திறமையான நடிகர்...
திறமையான இயக்குனர்...
திறமையான படைப்பாளி...
ஆனால் இவை எல்லாவற்றையும் விட...
திறமையான வியாபாரி.

இது நிறைய பேருக்கு தெரியாது.
அவருடன் கூட பயணிப்பவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
சில மாதங்களுக்கு முன்னே முதலமைச்சர் அம்மா அவர்களை
கமல் சந்தித்தபோதே நான் எனது நண்பர்களிடம் சொன்னேன்.
“ விஸ்வரூபம் பிரச்சனையை சந்திக்கும்.
அதற்கு இப்பவே காய் நகர்த்தி விட்டார்”

தேவர் மகன் தயாரிப்பில் இருந்த நேரம்.
கோவை ஏரியாவை  25 லட்சத்திற்கு கேட்டார்கள்.
கமல் 35 லட்சம் கேட்டார்.
ரஜினி படம் 25 லட்சத்திற்கு வியாபாரம் ஆகும் காலம்.
எனவே கமலின் மானேஜர் டி.என்.எஸ் ,
“நல்ல விலை தம்பி.கொடுத்து விடலாம்” என்றார்.
கமல் சொன்னார்...
“அவர்கள் கேட்கும் விலைக்கு விற்பதல்ல வியாபாரம்.
நாம் சொல்லும் விலைக்கு வாங்க வைப்பதே வியாபாரம்”.
இறுதியில் கமல் சொன்ன விலைக்கே விற்கப்பட்டது.
வாங்கியவருக்கும் பல மடங்கு லாபம் கிடைத்தது.


விஸ்வரூபத்தின் வெற்றி பற்றி .001 சதவீதம் சந்தேகம் எனக்கில்லை.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இந்திய சரித்திரத்தின் அத்தனை வசூல் ரெக்கார்டையும் முறியடிக்கப்போகிறார்.

விஸ்வரூபத்தை படமாக எடுக்கவில்லை.
ஹாலிவுட்காரன்களை மிரட்ட ஒரு விசிட்டிங் கார்டு தயாரித்துள்ளார்.
ஹாலிவுட் தொழில் நுட்ப ஸ்டூடியோக்களையும்...
தொழில் நுடப வல்லுனர்களையும் அவர் பயன்படுத்தியது ஹாலிவுட்டை தன்னை நோக்கி இழுக்கத்தான்.
பந்திக்கு முந்தியவர் லார்டு ஆப் த ரிங் தயாரிப்பாளர்.

ஹாலிவுட்டில் அவர் இன்னும் விஸ்வரூபமெடுப்பார்.
அப்போது தெரியும்!
கமலுக்கு கீழே யார் இருக்கிறார்கள் என்று.
என்னால் நிச்சயம் சொல்ல முடியும்...
டொரண்டினோ,நோலன்...போன்ற  சின்னப்பசங்களெல்லாம்   
கமலின் முழங்காலுக்கு கீழே இருப்பது உலகறியும்.
அதற்காக கேமரூன், பொலன்ஸ்கியெல்லாம் தாண்டி விடுவார் என பொய்யுரைக்க மாட்டேன்.

ஆனால் ஒன்று...விஸ்வரூபத்திற்கு பிறகு இனி தமிழ்ப்படம் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.
ஹாலிவுட் அவரை தத்தெடுத்துக்கொண்டு திருப்பித்தராது.
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் உலகை ஆளட்டும்.
வாழ்த்துவோம்...ஆனந்த கண்ணீரோடு.

ஆரோ 3டி சவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர் லிஸ்ட்டை கமல் தனது பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதோ லிஸ்ட்...
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

14 comments:

 1. கமலின் திறமைக்கேற்ற மரியாதை, இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை. ஒரு தமிழனாக ஹாலிவுட்டில் நமக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாலிவுட்டின் சூத்திரமே, உலகின் பெஸ்ட்டை தனக்குள் ஸ்வீகாரமாக்குவது.

   கோலிவுட் பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் செய்தவர்.
   ஹாலிவுட் ராஜ்ஜியத்தில் நிச்சயம் படைத்தளபதிகளுள் ஒருவராக இடம் பிடித்து சக்ரவர்த்திகளுக்கு நெருக்கடி கொடுப்பார்.

   Delete
  2. ஹாலிவுட் மட்டுமல்ல.. அது அமெரிக்காவின் சூத்திரம்.. திறமைகள் எங்கிருந்தாலும் தன் நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அருமையான சூத்திரம்..

   Delete
 2. அவர் திறமையும் புகழும் ஏறு முகத்தில் இருக்கும்,அவர் உலக அரங்கில் மெச்சும் அளவுக்கு இருப்பார் என்பது உறுதி.ஆனால் ஹாலிவுட் அரங்கு மீது எனக்குச் சற்று பயமாகவே உள்ளது.அவர் சுதந்திரம் பறிக்கப்படாமல் இருந்தால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. கோலிவுட் அரசியலை சமாளித்தவர்...
   ஹாலிவுட்டை ஊதி தள்ளி விடுவார்.
   கவலைப்படத்தேவையில்லை.

   Delete
 3. Amazing article. I admire your pessimism about Kamalhassan and hope all turns into fact, even if it doesn't no worries he will still make films here.

  ReplyDelete
 4. My last comment is about your optimistic view about Vishwaropam and Kamal, not ** pessimism **. It was a typo, by mistake I selected the antonyms when I did a spell-check.

  Another thing I am worried, will the samething happen to Kamal like AR Rehaman when he starts concentrating outside Tamil films.

  ReplyDelete
  Replies
  1. ஹாலிவுட்டுக்கு போனாலும் தமிழை மறக்காத ஏ.ஆர்.ரஹ்மான் வழியில் கமலும் பயணிப்பார்.

   தன்னை வளர்த்த தமிழுக்கு அமுது படைப்பார்.

   Delete
 5. ஜெயலலிதாவை புரட்சித் தலைவின்னும், கலைஞரை தமிழினத் தலைவர்...ன்னு சொல்ற ஊர்ல நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப குறைவாத் தோணுது. இதைவிட இன்னும் பெரிசா எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. புத்தகக்கண்காட்சியில் சின்மயி பற்றிய புத்தகம் வாங்கும் உங்களிடம்
   இதை விடப்பெரிசா பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லை.

   உலகம் பூரா தனக்கு பிடித்தவர்களை கொண்டாடும் மனநிலை
   உண்டு.
   நான் கொண்டாட மாட்டேன் என்னும் வியாதியஸ்தர்களும் உண்டு.
   வியாதியஸ்தர்கள் சிறு கூட்டம்.

   Delete
 6. மிகச் செரியாக சொன்னீர்கள்.அவர் திறமைக்கான மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்,அப்போது மட்டும் நம் தமிழ் திரைத்துறை சென்று அவர் வெற்றியில் பங்கெடுக்கம்!.பொறுத்திருந்து பார்ப்போம்....உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது மகழ்ச்சி ஐயா!.

  ReplyDelete
  Replies
  1. நான் ஜாதகம் சொல்லவில்லை.
   அவர் திறமையின் சாதகங்களை நன்கு அறிந்தவன் என்ற உரிமையில்
   கணித்ததை சொல்லி உள்ளேன்.
   என் கணிப்பை என்றுமே அவர் பொய்த்ததில்லை.

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 7. கமலை விடுங்கள், உம் போன்ற ரசிகர்களால் சக கமல் ரசிகர்களுக்குமே கூட பெருமை தான்!

  ஒரு பக்கம் கமலின் படங்களில் உள்ள கலை/சினிமா உள்ளடக்கத்தை அட்டகாசமாக விளக்குவது
  மறுபக்கம், அவரின் பாக்ஸ் ஆஃபீஸ் விஸ்வரூபத்தை பற்றிய உண்மையான செய்திகளை சொல்வது

  இவர் இரண்டும் ஒருங்கே இனையப்பெற்ற அபூர்வ ரசிகர் சார் நீங்க!

  தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்தீரணம் செய்ததும் கமல் தான்
  தமிழ் சினிமாவின் கலை/சினிமாடிக்/தொழில்நுட்ப எல்லைகளை தொடர்ந்து விரிவாக்கியதும் கமல் தான்!

  ஆக இன்று கமலை புரியாயமேலே குறை சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தைத்தனமான ரசிகர்களும் சரி,

  அரைகுறையாக புரிந்துகொண்டு கமலை விமர்சித்து அதன்மூலம் பிரபலமாக துடிக்கும் சாரு, கருந்தேள், மகாதேவன் போன்ற அல்லக்கை கூட்டமும் சரி,

  இவர்கள் எல்லாருமே கமல் போட்ட அஸ்திவாரத்தின் மேல் நின்றுகொண்டுதான் கமலை சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

  அவர்களுக்கு நன்றாகத்தெரியும் அவர்களின் வாதங்கள் படிக்கப்பெறும் ஆனால் எடுபடாது என்று!

  ReplyDelete
 8. உங்கள் பாராட்டை கூச்சத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.