Apr 4, 2012

A Love To Avenge-தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படம்.

தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படம்...
ஆனால் குறும்படம்.
கோவை பி,எஸ்.ஜி கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் இறுதி ஆண்டு படிக்கும் மாண்வி எடுத்த கிரைம் குறும்படம்.
வெறும் ஆறாயிரம் படஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
யூ ட்யூப்பில் இரண்டு பாகங்களாக காணக்கிடைக்கிறது.
கீழே அதற்க்குறிய இணைப்பு கொடுத்துள்ளேன்.

முதல் பாகம் காண....
http://www.youtube.com/watch?v=fEi3RdEcgGc&list=PL922C101600EF3591&index=1&feature=plpp_video

இரண்டாம் பாகம் காண....
http://www.youtube.com/watch?v=43w-LHSPCKU&feature=relmfu

இப்படத்தை பற்றிய விமர்சனம் நான் எதுவும் சொல்லப்போவதில்லை.
சொல்லவும் கூடாது.
ஏனென்றால் படமெடுத்தது எனது ஒரே மகள் நந்தினி பாஸ்கரன்.
நிறை... குறைகளை நீங்கள் எல்லோரும் தயவு செய்து சொல்லுங்கள்.
அவளை வளர்த்துக்கொள்ள உரமாக அவை அமையட்டும்.

11 comments:

 1. தாயை போல பிள்ளை...இல்லை இல்லை...தந்தையை போல் பிள்ளை....சரிதானே...அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு...இதுவும் சரிதானே...உங்க சினிமா ரத்தம் உங்க பொண்ணுக்கும்..வாழ்த்துகள்..இருங்க ..பார்த்துட்டு வர்றேன்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
   பார்த்து விட்டு கருத்தும் சொல்லுங்க...

   Delete
 2. யாரு எடத்ததுன்னு சொல்லாம இருந்திருக்கலாம் :). இப்ப எதுனா கருத்து சொல்லும் முன் - ஒரு சின்ன தயக்கம் - தெரிஞ்சோ தெரியாமலோ மூளையின் பின்னாடி இருந்து லைட்டா எட்டி பாக்கும்... :)

  எனிவே நிச்சயம் பாத்துட்டு சொல்றேன்...

  ReplyDelete
  Replies
  1. அட்டா...கட்டாயமா சொல்லாம இருந்திருக்கணும்.

   இருந்தாலும் குறைகளை சொல்லுங்கள்.
   எனக்கு தோன்றும் குறைகளை...
   பதிவர்களும் சுட்டி காட்டும் போது...
   அவர்களது கருத்தாக கூறி நான் தப்பித்து கொள்வேன்.

   Delete
 3. வளரும் இயக்குனரின் தந்தையா நீங்கள்..? படம் பார்த்தேன் சார்! முதற்கட்ட அட்டெம்டுகளுக்கு நன்றாகவே உள்ளது..
  உங்கள் மகளுக்கு நல்ல கற்பனை வளம் போலும்!

  Xenoglossy, Anablephobia, எல்லாம் தீமுக்கு, ஒரு குறும்படத்துக்கு ரெம்பவே ஸ்ட்ராங்காகப் படுகிறது.. உங்கள் மகள் Night Shyamalan-ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டிருப்பது போல படுகிறது.. அப்படியானால் இதுபோன்ற கதைகளை இன்னும் சிக்கலான திரைக்கதையுடன், கொஞ்சம் கூடுதலான காலத்துடன் எடுக்க ஊக்கப்படுத்துங்கள்..

  டயலாக் எல்லாம் ஷார்ப்பாக இருக்கிறது, ஆனால் டெலிவரி ரொம்ப வீக்காக இருக்கிறது.. காமிரா ஆங்கிள்களில் இன்னும் கவனம் தேவை.. இருந்தாலும் குறைகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. படம் overall சக்சஸ்தான்! தொடர்ந்து முயற்சி செய்யச் சொல்லுங்கள்! :-)
  என்சார்பில் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!!!

  *படத் தயாரிப்பாளர் நீங்களா சார்?

  ReplyDelete
  Replies
  1. அவளது லட்சியம்...குறிக்கோள் அனிமேசன் துறையில் சாதிப்பது.லயன் கிங் படத்தை கணக்கில்லாமல் பார்த்தாள்.
   பிளஸ் டூ முடிக்கும் தறுவாயில்தான் கேட்டேன்.
   “என்னவாகப்போகிறாய்”?
   அனிமேசன் துறையில்தான் சேருவேன் என திடமாக சொல்லி விட்டாள்.

   விஸ்காம் பைனல் இயர் பிராஜக்டுக்காக இப்படத்தை தானே கதை,திரைக்கதை,எடிட்டிங்,
   பின்னணி இசைசேர்ப்பு,ஒலிப்பதிவு அனைத்தையும் தானே மேற்க்கொண்டாள்.

   என்னிடம் முழுப்படத்தை முடித்த பின்புதான் காட்டினாள்.
   கதை முதற் கொண்டு என்னிடம் சொல்லவேயில்லை.
   ஒரு கிரியேட்டராக எனக்கு அதில் வருத்தமே.
   என்னுடைய பங்களிப்பு ஆறாயிரம் ரூபாய் மட்டுமே!

   Delete
  2. @JZ
   வருகைக்கும்...வாழ்த்துக்கும்...விமர்சனத்துக்கும் மிக்க நன்றி..நண்பா.

   Delete
 4. வாழ்த்துக்கள் ............:)
  கண்டிப்பா பார்த்தறோம்

  ReplyDelete
 5. நல்ல முயற்சி !!!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.