Sep 24, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ புலம் பெயர்ந்தவர்களின் வலிகள் \ பாகம் = 02


கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இடம் பெற்ற
‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ படத்தின் மையக்கருத்தாக இருப்பது...
 ‘புலம் பெயர்தலின் வலிகள்’.

 ‘புலம் பெயர்தல்’...
சுயவிருப்பம், பொருளாதாரம், அரசியல்,
உள்நாட்டு-வெளிநாட்டுப்போர்கள், பிரிவினைகள் போன்ற...
பல்வேறு காரணிகளால்  ‘ சமைக்கப்பட்டு ’ திணிக்கப்படுகிறது.
இப்படத்தின் உள்ள  புலம் பெயர்ந்தவர்களின் வலியை...
 ‘புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்’ மட்டுமே நன்கு உணர முடியும்.
எனக்கு  ‘அந்த வரலாற்று சாபம்’ இல்லாததால்... புரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
ஏனெனில்  ‘மத்திய அரசின் பழுத்த பங்கில்’ நாம் இருக்கிறோம்.
இது ஒரு மாதிரியான  ‘இருத்தலியல்’ சூழல் [ Existential Situation ] .

 ‘பெனிஸ்’ என்ற கதாநாயகப்பாத்திரத்தின் பின்னணிக்குரலின் வாயிலாக இப்படம் துவங்குகிறது.
இருப்பினும், கதையில் உலாவும் பல்வேறு கதாபாத்திரங்களின்
‘ பாய்ண்ட் ஆப் வியூ’  மூலமாக  திரைக்கதை இயங்குவது...
இதன் தனிச்சிறப்பு.
இதுவே இத்திரைக்காவியத்தின் ‘ திரைக்கதை Presentation ’

போன பதிவில் நாம் பார்த்த காட்சியில்....
பெனிஸ்ஸின் குரலில் ஒலித்தது இதுதான்.

Granpa often said that the Greek word for
"dream" conceals within the word "belch". 

Initially, I paid no notice as
I could only do these 2 things.

Years after, I realised he was
referring to food and stories.

Both require an essential
ritual in order to be tastier.

That is, the presentation.

முதல் காட்சியின் முடிவில்... 
தொடரும் டைட்டில் காட்சியில்...
அகண்ட வான வெளியில், கோள்களுக்கு மத்தியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடை’ சுழன்று வருகிறது.
அற்புதமான சர்ரியலிசக்காட்சியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடையை’ மட்டும், நினைவில் பத்திரப்படுத்துங்கள்.

காலம் : கி.பி.2003 ; இடம் : ஏதென்ஸ் நகரம்.
படத்தின் நாயகன் பெனிஸ்,  ‘வானவியல்’ பேராசிரியர்.
மாணவர்களுக்கு வகுப்பெடுத்து கொண்டு இருக்கும் போது...
அவனைப்பார்க்க, தாத்தாவின் நண்பர் வருகிறார்.
வந்தவர், பெனிஸ்ஸின் தாத்தா...   ‘முதன் முறையாக’ ஏதென்ஸ் வரவிருப்பதை தெரிவிக்கிறார்.

“ நான் விமான நிலையம் சென்று அவரை அழைத்து வருகிறேன்.
உனது தாத்தாவின் நண்பர்களும் ஒன்று கூடி... அவரை வரவேற்க...
உனது வீட்டிற்கு  வருகிறார்கள்.
நீ எல்லோருக்கும் சமைத்து...உன் தாத்தாவை ஆச்சரியப்படுத்து ” என்கிறார்.

தாத்தா எங்கிருந்து வருகிறார் ?
துருக்கியிலிருக்கும்,
அன்றைய  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ [ Constantinople ] ...
இன்றைய  ‘இஸ்தான்புல்லிருந்து’ [ Istanbul ] ...
கிரேக்க நாட்டிலிருக்கும்,
 'ஏதென்ஸ்' [ Athens ] நகரத்துக்கு  ‘முதன் முறை’ வரவிருக்கிறார்.


பெனிஸ் கல்லூரியை விட்டு  வெளியே வருகிறான்.
கிரேக்க அரசியலின்,
‘பவர் சென்டராக’ விளங்கிய ‘அக்ரொபொலிஸ்’ [ Acropolis ]
கம்பீரமாக வீற்றிருக்கும்...
‘ஏதென்ஸ்’ நகரத்து எழில் மிகு காட்சியை கண் முன் விரிக்கிறார் இயக்குனர்.

*********************************************************************************
  ‘அக்ரொபொலிசை’, தமிழ் சினிமாவில்...
 சிம்ரன்,ஸ்நேகா இடுப்பை அசைப்பதற்கு பின்னணியாக்கி...
கொலை செய்திருப்பார்கள்.
சிம்ரன் \  படம் : 12 பி \ இயக்கம் :  ‘மறைந்த’ ஜீவா
சிநேகா \ படம் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே \ இயக்கம் : வசந்த்


*********************************************************************************


கடந்த பதிவில் இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொண்ட நாம்...
இங்கே, ஏதென்ஸ் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
நமக்குத்தான்  ‘விக்கி பகவான்’ இருக்கிறாரே !.


ஏதென்ஸ்... ‘லாஜிக்கின்’ பிறப்பிடம்.
ஏன்?
எதற்கு?
எப்படி?
என கேட்க கற்பித்த...  ‘தத்துவ ஞானி’ சாக்ரடீஸ் [ Socrates ] அவதரித்த புண்ணிய பூமி.

********************************************************************************
சாக்ரடீஸ் என்றதும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது...
நடிகர் திலகம்தான்.
ராஜாராணி என்ற திரைப்படத்தில் வரும் ஓரங்க நாடகத்தில்,  
‘கலைஞரின்’ சொல்லோவியத்தில்...  
‘நடிகர் திலகம்’ அவர்கள்...சாக்ரடீஸாக வாழ்ந்து காட்டியிருப்பார். 

இக்காட்சி யூ ட்யூப்பில் கிடைக்கவில்லை.
நண்பர்கள் யாராவது முயற்சித்து...யூ ட்யூப்பில் இணைக்கவும்.

*********************************************************************************
பெனிஸ் தாத்தாவை வரவேற்க நாமும் ...அடுத்த பதிவிற்கு செல்வோம். 

 ‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ பட முன்னோட்டம் காணொளியில் காண்க...






2 comments:

  1. இந்திய பிரயாணத்தால் இணைய பக்கம் வருவது குறந்து போனது, இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம். தலைப்பை ஆரம்பத்தில் பார்த்ததும் நானும் ஏதோ ஐஸ்வர்யா ராய் நடித்த மிஸ்ரரிஸ் ஆஃப் ஸ்பைஸ் படம் பத்தியோ என ஜொள் ஒழுக ஓடியாந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கிஷோகர்...தங்கள் இந்திய பயணத்தை பதிவாக்குங்கள்.
      காத்திருக்கிறோம்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.