Sep 9, 2012

Hey Ram - 2000 \ திரை மொழி இலக்கணம் \ ஹேராம்=022

நண்பர்களே...
ஹேராம்=020  ‘வாதமா?பிடிவாதமா?’ பதிவில்...
திரு.ராஜா சுந்தர்ராஜன் அவர்கள் புரிந்த...
கமல் மற்றும் மகேந்திரனுக்கு எதிரான வாதங்களையும்...
நண்பர் கருந்தேள் ராஜேஷின்  ‘ஆமாம்...சாமியையும்’
இடம் பெறச்செய்தேன்.
அந்தப்பதிவில் விவாதம் செய்ய மறுத்திருந்தேன்.
ஏனென்றால் சமீபத்தில்தான்  ‘இயற்கை விஞ்ஞானி’ ஐயா...நம்மாழ்வார் அவர்கள் எழுதியதை படித்திருந்தேன்.
“ விவாதம் செய்யாதீர்கள்...
நண்பர்களை இழந்து விடுவீர்கள் ”

இருந்தாலும் தீவிர சினிமா வேட்கை உடைய இருவர் அதில் இடம் பெற்ற திரை நுட்பங்களை பற்றிய விளக்கம் கேட்டனர்.

///நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.////

சார்... இதைப்பற்றி விளக்க முடியுமா?

எனது விளக்கம் :
 “ இரண்டும் ஒன்றே...
 ‘ஸ்கீரின்ஸ்பேஸ் ஆக்குபைடு’ ரஷ்ய திரை மொழி.
 ‘சைஸ் ஆப் கம்போசிஸேசன்’ ஹாலிவுட் திரை மொழி ”.

///திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.///

எனது விளக்கம் :

முதலில் சினிமா மொழி தெரியாதவர்கள் கமல்,மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களை விமர்சிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

 ‘எனது இலக்கணம்’ என ஒன்றை அவர் அவருக்குள் வைத்துக்கொள்வதில் யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் இலக்கணம் பொதுவானது.
 ‘சினிமாவின் இலக்கணம்’....
 கிரிபித்,ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின்,கோடார்டு என ஜாம்பவான்கள் எழுதியது.
அதில் கை வைக்க முடியாது.

ஏற்க்கெனவே இருக்கின்ற இலக்கணத்தை உடைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால்...
திரு ரா.சு. அவர்கள்  ‘திரை வலது-திரை இடதுக்கு’ அவராக எழுதிய  இலக்கணப்படி ...  ஒரு படம்  எடுத்துக்காட்டி காவியமாக்கட்டும்.
இரு கரம் தட்டி வரவேற்கலாம்.

உலகசினிமா ஜாம்பவான்கள் பலரும் கடைப்பிடிக்கும் சினிமா மொழியின்படி,
எனது விளக்கம்... 
நாம் எழுதும் போதும்,படிக்கும் போதும்  ‘இடதிலிருந்து வலதுக்கு’ இயங்குவோம். 
எனவே நமது சப்-கான்ஸியஸ் மைண்ட் ‘முக்கியவற்றை’ இடதிலும், முக்கியமல்லாதவைகளை வலதிலும் குறித்துக்கொள்ளும்.
[ அரபு,ஜப்பான் போன்ற இடதிலிருந்து வலது பழக்கமுடைய நாட்டவர்களுக்கு எதிர் மறையாக இருக்கும்.]
எனவே படைப்பாளிகள்  ‘திரை வலது-திரை இடதை’ ஹீரோ-வில்லன் என்பதை வைத்து தீர்மானிக்க மாட்டார்கள்.
திரைக்கலையின் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கும் விஷயம் அது.

அவற்றில் முக்கிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்....
காட்சியின் தன்மை...
அடுத்து வரும் காட்சிக்கு தொடர்பு படுத்துவது...
காரெக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
கன்டெண்ட் பாய்ண்ட் ஆப் வியூ...
ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப்  வியூ...
கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ...
*********************************************************************************


Titanic-1997 \ English \ Directed by James Cameron
 ‘கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட்’ டைட்டானிக் படத்தில் வருகிறது.
கப்பலை படைத்தவர்...
 “ இக்கப்பலை கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது ” என கொக்கரிப்பார்.
 ‘‘கடவுள் சிரித்தார்’.

கப்பல் மூழ்கும் போது,  ‘எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிளில்’....
 கடவுளின் பாய்ண்ட் அப் வியூவில் அந்த ஷாட்டை படைத்திருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

*********************************************************************************
இப்படி பல விஷயங்கள் திரை வலது-திரை இடதை தீர்மானிக்கும்.இப்போது உதாரணத்துக்கு ஹேராமுக்குள் நுழைவோம்.
அபயங்கரை திரை இடதிலும்...
ராமை திரை வலதிலும்  ‘எண்ட்ரி’ கொடுத்து கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

ஏன் அப்படி செய்தார்?
 ‘கில்ட்டி கான்சியஸ்ஸில்’ இருக்கும் ராம்...
  ‘தெளிவற்ற மனநிலையில்’ இருப்பதால் திரை வலதிலும்,
சிந்தையிலும்...சித்தாந்தத்திலும் தெளிவாக இருக்கும் அபயங்கரை...
 திரை இடதிலும் இடம் பெறச்செய்தார் இயக்குனர் கமல்.

[ இயக்குனராக மகேந்திரனும்...ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவும் இணைந்து உருவாக்கிய  ‘முள்ளும் மலரும்’ படத்திலும்...
இதே சிச்சுவேஷன்தான்...
இதே நிலைப்பாடுதான்.]

இரு தரப்பு வாதங்களை கேட்ட உங்களுக்கு...
 சினிமா மொழி தெரியாத காரணத்தால் மட்டுமே ஹேராமை புரியாமல் விமர்சிக்கின்றனர் என்ற முடிவு கிடைக்கிறதா!

இனி திரைக்கதையிலிருந்து...
*********************************************************************************

           l edit this paper.
lt has my address on it.

Come and meet me.
We have a lot to do. 

Don't go like this. 

People won't know what you are. 

Good hunting.
************************************************************
 குங்குமத்தை நெற்றியிலிட்டு  ‘ஹிந்து’ என அடையாளப்படுத்தி அனுப்புகிறான் அபயங்கர்.

இனி அடுத்த பதிவில்... ‘ஹாலிவுட் பாலா மேட்டரோடு’  சந்திக்கிறேன்.

18 comments:

 1. "I'm back"

  வாழ்த்துக்கள் அண்ணா.. மேல சொல்ற வார்த்தைய நீங்க சீக்கிரமே சொல்லனும்னு எதிர் பார்க்கிறேன்.. (கமினோ போல ஒரு காவியம் படைப்பீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்).. ஹேராம் பதிவு உண்மையிலே நான் பெரிதாக வாசிபதில்லை அண்ணா.. ஆனா உங்க எழுத்துக்கு என் மனதில் பெரிய சிங்காசனம் இருக்கு.. எனக்கு பார்த்தவுடன் கவர்ந்த மிக குறுகிய எழுத்துக்களில் உங்களிடத்தும் ஒன்று.. என் பொறுத்த வரை நாயகன் (அந்த ஒரு நாயகனை நடு நாயகன் ஆக்கி) துதி பதிவுகள் நான் வாசிப்பதில்லை அண்ணா.. இது மொத்த தமிழ் சினிமாவை மைய படுத்தி எழுதப்பட்டு இருந்தால் கண்டிப்பாக முதல் சீட் எனக்கு தான்..

  இதுல சில பதிவுகள் வாசித்து இருக்கிறேன்.. நீங்க சொல்ற சில பகுதிகள்ல கமல் புகழ்களில் அதை விட சிறப்பாக செய்த பலர் (அதே விடயங்கள்) இருப்பது போல எனக்கு பட்டது (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையின் கீழே நான் இப்போது கூறியது வரும்)..

  அடுத்து இப்போ பெரிய யுத்தமே நிகழ்ந்து வருகிறத நான் பார்க்கிறேன்.. ஆனாலும் அண்ணா.. உங்களை பற்றி (இதை குறித்து) இன்னொரு பதிவரிடம் சாட் பண்ணிய போது கண்டிப்பாக உங்கள் மேல் ஒரு மரியாதையை வந்தே போனது.. சண்டைக்குள் நான் மண்டை போடாத காரணம்.. சில சண்டை ஹீரோ வில்லன் சண்டை போல அல்லாமல் ஹீரோ ஹீரோ சண்டையை இருந்த படியால் நான் நுழையவே இல்லை.. நீங்க அடுத்து எழுத போற பதிவர் கூட எனக்கு பிடிக்கும்..

  அண்ணா உங்க அறிவையும் திறமையும் கமலுக்குள் அடக்காமல் எங்களை போன்றவர்களுக்காகவும் கொஞ்சம் எழுதுங்களேன்.. (கமினோ போல காவியங்கள்) - (இது கண்டிப்பா என்னோட கருத்து மட்டும் தான்.. )

  ReplyDelete
  Replies
  1. தம்பி கமல் எனக்குள்ளும்...நான் கமலுக்குள்ளும் இல்லை.
   ஹேராமை வெளியில் இருந்தே தரிசித்து எழுதுகிறேன்.

   ஹேராமில் குறைகள் இருக்கும் பகுதிக்கு நான் இன்னும் வரவேயில்லை.
   அப்போது எனது விமர்சன நேர்மை புரியப்படும்.

   ஹேராமில் கமல் எழுத்தாளர்,இயக்குனர்,நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து...அதையும் திறம்படச்செய்திருப்பதால் பாராட்டித்தான் தீர வேண்டும்.
   இப்படத்தை சிவபெருமான் படைப்பையே விமர்சித்த ‘நக்கீரனே’ விமர்சித்தாலும் அவருக்கும் என் கதிதான்.

   கமீனோவுக்கே நிச்சயம் நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தேவை பட்டன.
   ஆனால் ‘ஷார்ட் கட்டில்’ புகுந்து சொகுசாக வெளியே வந்து விட்டேன்.
   ஹேராம் பதிவு இவ்வளவு வீர்யமாக நான் எழுதக்காரணம் எதிர்ப்பாளர்கள்தான்.

   ஒன்றை புரிந்து கொண்டேன்.
   எதிர்ப்பு இருந்தால்தான் எழுதவே வருகிறது.

   Delete
 2. Because of you i saw ' hey ram ' once again.

  Every time i felt a new experience and learn something from this movie.

  Thank you so much to make me watch the movie again and again.

  ReplyDelete
  Replies
  1. திரும்ப திரும்ப ஹேராமை பார்க்க வைக்கிறேன் என்பது எனக்கு
   கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.
   நன்றி.

   Delete
 3. அந்தப் பதிவில (20) எழுதியிருந்தப்போ பெரிய குழப்பமாயிருந்திச்சு.. என்னது திரை வலது, இடது? என்று...

  இப்பதான் கொஞ்சம் தெளிவாயிருக்கு. இனிமே இந்த மாதிரி விஷயங்களையும் நோட்டிஸ் பண்ணப் பழகிக்கனும்! :) நன்றி!

  ReplyDelete
 4. நண்பரே...மாஸ்டர்கள் படங்களில் மட்டுமே இந்த ரூல் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்.

  எனது பதிவு... உங்களுக்கு தெளிவு படுத்தியதில் மகிழ்ச்சியே.

  ReplyDelete
 5. அண்ணே நேயர் விருப்பம். விருமாண்டியையும் சேர்த்துக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹேராம் என்ற சிகரத்திலிருந்து பல படிகள் கீழே இறங்கி ‘பாக்ஸ் ஆபிஸ்’ சூத்திரங்களை உள்ளடக்கி எடுத்த படம் விருமாண்டி.
   எல்லோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட எளிய படம்.
   அதை விட உயர்வான படமாக நான் ‘அன்பே சிவத்தை’ கருதுகிறேன்.
   அதை எழுதும் போது எனக்கும்,படிக்கும் போது உங்களுக்கும் சுவாரஸ்யம் இருக்கும்.

   Delete
 6. திரைமொழியின் தொழில்நுட்ப அம்சங்கள் எளிய முறையில் விளக்கும் தங்களின் எழுத்து மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. A good read. keep it up.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

   Delete
 7. I will wait for your analysis of Director Mahendran's movies - Udhiripookal and Mullum Malarum.

  ReplyDelete
  Replies
  1. உதிரி பூக்களுக்கு...ஒரு பதிவு ஏற்கெனவே
   ‘எனது அனுபவமாக ’ ஒரு பதிவு போட்டுள்ளேன்.

   அதே போன்று...
   ‘முள்ளும் மலரும்’ படத்துக்கும் எழுதுவேன்.
   ‘திரை மாமேதைகள்’ மகேந்திரன்,பாலுமகேந்திரா,இளையராஜா என்ற மும்மூர்த்திகள் இணைந்து செய்த காவியம் அல்லவா!

   Delete
 8. நம்மை போன்ற பார்வையாளர்களுக்கு சினிமா நுணுக்கங்கள் தெரியாட்டி ஒண்ணும்மில்லை...ஆனால் ஹேராம் பிரிவியூ ஷோ பார்த்த அன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களே இந்த நுணுக்கங்கள் புரியாமல் பார்த்து தான் அன்று எதிர் விமர்சனம் செய்தார்கள்...

  கமலின் எதிராளிகளுக்கு புரியும் அவரின் சினிமா ஞானம்....உங்கள் ஹேராம் பதிவுகளை படித்தப் பின்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி நண்பரே!

   Delete
 9. அண்ணா...
  தப்பா எடுத்துக்காதிங்க...
  ஒரு விஷயமோ, சம்பவமோ,
  மொழி மற்றும் எழுத்து திறமை உள்ள யார் வேண்டுமானாலும்,
  எந்த விஷயத்தையும் நியாயப்படுத்தலாம்...உருவகப்படுத்தலாம்,
  உங்கள் எழுத்து அருமை...அண்ணா.

  ReplyDelete
 10. நண்பரே...எழுத்து திறமை இருக்கிறது என்பதற்காக இசையையோ...இசை அமைப்பாளர்களையோ விமர்சித்து எழுதினால் அத்தனையும் அபத்த களஞ்சியமாகவே காட்சியளிக்கும்.
  நான் இசை ரசிகன்.
  அந்த திறமையை மட்டும் வைத்து கொண்டு ஒரு இசை படைப்பை விமர்சிக்கலாமா?
  பாராட்டலாம்..அதற்கு மனசு இருந்தால் போதும்.
  குறைகளை கண்டு பிடித்து...விமர்சிக்க இசையில் ஆளுமை தேவை.

  ஹேராமில் குறைகள் இருக்கிறது.சினிமா மொழி தெரிந்தால் மட்டுமே அதை கண்டு பிடிக்க முடியும்.
  எந்த ஒரு காவிய படைப்பிலுமே குறைகள் இருக்கும்.
  ஆனால் இது வரை நான் எழுதிய ‘ஹேராம் பகுதிகளில்’ குறைகள் இல்லை.
  எனவே நான் எழுத முடியவில்லை.
  இனி பின்னால் வரும் பகுதிகளில் குறை இருக்கிறது.
  கட்டாயம்...
  குறை இருக்கும் பகுதியை நான் சுட்டிக்காட்டி...
  விமர்சித்து எழுதுவேன்.
  அது வரை காத்திருக்கவும்.

  ReplyDelete
 11. சார்.. போதும் சார். ரொம்ப போர் அடிக்குது. உலக சினிமாவுக்கு வாங்க.

  நாங்க உங்ககிட்ட எதிர்பாக்குறது கமல் புராணம் அல்ல. உலக சினிமா அறிமுகங்களே. அவர் ஒரு நல்ல படைப்பாளியானலும் கூட, அவரைப்பற்றிய உங்களது நீன்ண்ட்ட்ட்டட தொடர்கள் அலுப்பைத் தவிர வேறு எதையும் தருவதில்லை.

  Please come back.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.