Sep 1, 2012

கமலுக்கு வந்த கோபம்...

நண்பர்களே....
இந்த போஸ்ட் மாடர்ண் உலகில் சகிப்புத்தன்மை வேகமாக குறைந்து வருகிறது.
சமீபத்திய எனது அனுபவங்கள்...இதை நிரூபித்து வருகிறது.

எனது அறுபது வயது நண்பர் ஒருவரை...முப்பது வயது ஆத்திரக்காரன் அடித்தே விட்டான்.
அவர் இந்தியாவில் முதன் முதலாக நியோ ரியலிச பாணியில் படமெடுத்த...திரையுலக மேதை நிமாய் கோஷை ஒளிப்பதிவாளராகப்போட்டு படமெடுத்த மாமேதை.
இயக்குனர் கே.பாலச்சந்தரின் முதல் படமான  ‘நீர்க்குமுழிக்கு’... ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ்தான்.
நாங்கள்  இருவருமே ஒருவருக்கொருவர் கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் சினிமாக்காதலர்கள்.
நாங்கள் காதலிக்காத சினிமாக்காரர்கள் கிடையாது.
அப்படி சிலாகிப்போம்.
என்னைப்போலவே குசும்பன்.
தசாவதாரம் முதல் நாள் இரவுக்காட்சி பார்த்தோம்.
வெளியே வந்ததும் அவர் அடிச்ச கமெண்ட்...
“ அசினா வந்ததும்... கமலோன்னு ஒரு மயக்கம் வருது”

எங்கள் கோபம்...சட்டத்தின் வழியாக வெளியாகும்.
என்ன...கொஞ்சம் லேட்டா...அந்த கோபம் வெளிப்படும்.

கார்த்தி சிதம்பரம் பர்சனலாகத்தெரியும்.
பத்திரிக்கைகளில் தொடர்ந்து கருப்பு கண்ணாடி அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களே வெளியாகி வந்தன.
கருப்புக்கண்ணாடி அணிவதால் வரும் எதிர் விளைவுகளை...
நான் சொன்னதை...  ‘சகிப்புத்தன்மை இருந்ததால்’ ஏற்றுக்கொண்டு...
இப்போது வரும் புகைப்படங்களில்  ‘அப்பாவைப்போல்’ காட்சியளிக்கிறான்.

இருந்தாலும்...சகிப்புத்தன்மை சில சமயங்களில் ஒளிந்து கொள்ளும்.
 ‘ஆதிவாசி’ கோபம் விஸ்வரூபம் எடுக்கும்.
மகாநதி சூட்டிங்...
கமலின் மகளாக...பால்ய வயதுக்கு... ஷோபனா நடித்தாள்.
இளமைப் பருவத்துக்கு... நடிகை சங்கீதா ஒப்பந்தம் செய்யப்பட்டு கிளைமாக்ஸ் காட்சி உட்பட பலகாட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன்.
இடையில் வரும்  ‘கல்கத்தா சோனாக்காச்சி’ காட்சி கடைசியில் எடுக்கப்பட்டது.
கதைப்படி அவள் விபச்சார விடுதியில் ஜட்டி,பிராவோடு படுத்திருக்க வேண்டும்.
அதன் பின் அவளை கமல் கைகளில் ஏந்திய படி ஒடி தப்பிக்க வேண்டும்.
அக்காட்சியில் எனது மகள் நடிக்கமாட்டாள் என தீடிரென்று மறுத்து விட்டார் சங்கீதாவின் தாயார்.
இயக்குனர் சந்தான பாரதியும்,கமலும் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணியும் மறுத்து விட்டார்.
தீடிரென்று கமல் டென்ஷனில் வெடித்து...அத்தனை அமில வார்த்தைகளையும் உமிழ்ந்து...
இறுதியாக  ‘பேக்கப்’ என கத்தியது... அவர் வாழ் நாளில்  ‘முதன் முதலாக’ வெளிப்பட்ட உச்சகட்ட கோபம்.
பின்னர் அதே போல் உருவ ஒற்றுமையுள்ள இன்னொரு பெண்ணை பயன்படுத்தி அக்காட்சியையும்...தூக்கத்தில் உளருகின்ற காட்சியும் எடுக்கப்பட்டது.
படத்தின் இறுதிக்காட்சியில் மட்டும்... ‘சங்கீதா’ மகளாக தோன்றுவார்.



இரண்டாவது கோபம் யூ ட்யூப்பில் இருக்கிறது.
பார்த்துக்கொள்ளுங்கள்.

முகமூடி படம் முதல் காட்சி பார்த்தேன். படம் ஆரம்பித்த அரை மணிநேரத்தில் தூங்கி விட்டேன். படம் பிடிக்கவில்லை என்றால் தூங்குவது எனது பலம். இருந்தாலும்... சமீபத்தில் எனக்கு தூக்கம் கம்மி. என்னை தூங்க வைத்த மிஷ்கினுக்கு... கோடானு கோடி நன்றி.

6 comments:

  1. தெரியாத விஷயம்..பல பல...

    ReplyDelete
  2. பழய கோபம் என்றாலும் மறுபடியும் பார்க்க சுவையாகவே இருந்தது! நல்ல நையாண்டி!

    ReplyDelete
  3. கடைசியில் அந்தக் காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதை சொல்லவே இல்லையே!

    // என்னை தூங்க வைத்த மிஷ்கினுக்கு... கோடானு கோடி நன்றி //

    :-(

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...தவறை திருத்தி... பதிவிலேயே சொல்லி விட்டேன்.

      நன்றி.

      Delete
  4. ‘நீர்க்குமுளிக்கு’- நீர்க் குமிழிக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...தவறை திருத்தி விட்டேன்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.