Sep 6, 2012

Hey Ram \ 2000 \ வாதமா ? பிடிவாதமா ?-ஹேராம்=020

நண்பர்களே...கடந்த பதிவுக்கு முதல் இரண்டு நாள்... ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.
குழம்பி விட்டேன்.
 ‘அவுட்ஸ்டேண்டிங்’ என நான் கருதிய சில பதிவுகளுக்கு பின்னூட்டமே போடாமல் மானசீகமாக‘பேனாவை கீழே வைத்து விட்டு’ சத்தம் இல்லாமல் வந்து விடுவேன்.
 ‘பேனாவை கீழே வைத்தல்’ என்ற சொல்லாடல்  ‘பியூட்டிபுல் மைண்ட்’ படம் பார்த்தவர்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள்.
பார்க்க  வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த எளிய விளக்கம்....

படத்தின்  ‘நிஜ நாயகன்’ பல்கலை கழக பேராசிரியர்.
அவரது சாதனையை மெச்சி சக பேராசிரியர்கள் தங்களது பேனாவை அவர் முன்னால் வைத்து விட்டுப்போவார்கள்.
 ‘ஹாலிவுட் பாலா’ பாணியில் சொன்னால்  ‘கெலிச்சுட்டே வாத்யாரே’.

அதே போன்று  ‘குப்பை’ எனக்கருதும் பதிவுகளுக்கும் ‘சைலண்டா’ நழுவி வந்திருவேன்.

எனவே நீங்க சைலண்டா வந்துட்டு போனது எந்த ரகம்?
இந்தப்பதிவின் பின்னூட்டம் வாயிலாக தெரிந்து கொள்ள ஆவல்.

கடந்த பதிவு பற்றி நண்பர் ராஜேஷ் பேஸ் புக்கில் நடத்திய விவாதம் கீழே காண்க...

கீழே உள்ள வாதத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

“ புகழ்வோம் பழிப்போம்....புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டோய் இவை

என்று திருமாலையே,உம்மை நாங்கள் புகழ்வோம்,பழிப்போம்,பதிப்போம்,மதிக்க மாட்டோம்
இதற்கெல்லாம் கோபப்படாதே என்று சொல்லும் அருமையான வெண்பாதான் எனக்கு வழிகாட்டி”.
என்று  ‘சுஜாதா’ எழுதியதே இனி என்றும் எனக்கு வழிகாட்டி.

முதல் கருத்து ராஜா சுந்தரராஜன் எழுதியது...
 • நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.

  நான் இலக்கண விதிகளை மதிக்காத ஆள் ஒன்றும் இல்லை. ஆனால், அதைக் குறுக்கி, சமைக்கத் தெரிந்தவன்தான் சாப்பாட்டுச் சுவை பற்றிப் பேச வேண்டும் என்பவனும் இல்லை. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு என் கைவசம் சான்றிதழ்கள் எல்லாம் கிடையாது.

  “ஹே ராம்” ஒரு குழப்பமான படம். கமல் அதில் நிரம்ப உள்ளுறைகள் (subtext) வைத்து யாத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் காந்தியைப் புகழ்ந்து assimilate பண்ணுவது என்பது ஆர்.எஸ்.எஸ். பிற்காலத்தில் எடுத்த கொள்கைகளில் ஒன்று. சொல்லப்போனால் இது ஹிந்து தர்மத்தின் சர்வசதாக் கொள்கை (எ.டு. சக்தியை சிவனின் மனைவி என்றது; புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்றது). அதைத்தான் ‘ஹே ராம்’ செய்கிறது. (ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யும்).

  திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.

  ||எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

  உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

  அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)||

  இது என்னுடைய கலைக்கொள்கை. நேசமித்ரன் கவிதைகளுக்காக எழுதியது.

 • Rajesh Da Scorp ஓகே. உங்க நிலைப்பாடு தெளிவா புரியுது. திரை-வலது பற்றிய கருத்து எனக்கு ரொம்பப் புதுசு. அதேபோல, படுபொருள் பற்றிய கருத்து அருமை. ஆனா, நான் ஏன் இந்தக் கேள்வியை உங்க கிட்ட கேட்டேன்னா, இப்போ ஒரு இயக்குநர் இதெல்லாம் நினைச்சே பார்க்காம எடுத்துருக்காருன்னு வெச்சிக்கிட்டா, அதை நாம ‘ஆஹா ஓஹோ’ என்று விளக்கி, அதைப் படிப்பவர்கள் அப்படி எண்ணிக்கொண்டு, ஒரு மோசமான படைப்பு, நல்ல படைப்பு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பல காலத்துக்குப்பிறகு வெளிவந்துவிட்டால்?

  சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது சரி. ஆனால் மோசமான கலைப்படைப்பு என்பது சிறந்ததாக ஆக்கப்பட்டுவிட்டால்?

 • Raja Sundararajan நமக்கு ஓர் அரசியற் சார்பு இருந்தால் ஒழிய (அல்லது அந்த இயக்குநர் பால் என்னென்று விளங்காத ஒரு பக்தி இருந்தால் ஒழிய) ஒரு படத்தை அதன் தகுதிக்கு மீறிப் புகழ மாட்டோம். ஒரு வெள்ளந்தியான மனிதர், எப்போதும், தன் ரசனை சார்ந்தே ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அவருடைய ரசனை நேர்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எனக்கு மிஷ்கின் பால் ஒரு மரியாதை இருந்தது. ("தமிழினி'யில் "அஞ்சாதே" பற்றி ஓஹோ என்று எழுதி இருந்தேன்). ஆனால் "யுத்தம் செய்" படத்தில் அவர் முன்வைத்த தகுதிக் கோட்பாடு அவரிடம் இருந்து என்னை முற்றாக விலக்கிவிட்டது, (மலம் அள்ளுபவன் மகனும் மந்திரம் ஓதுபவன் மகனும் வெறும் 'ஒன்று' அல்லது 'அரை' மதிபெண்ணுக்காக உயர்கல்வி நுழைவில் அடித்துக்கொள்வது நடைமுறை ஆகையால்). அது காரணம் எனது "முகமூடி" விமர்சனம் ஒருதலையானதோ என்று நான் அஞ்சினேன். ஆனால் உங்களைப் போன்ற திரைப்ப்ட ரசனை விற்பன்னர்களும் 'முகமூடி'யைக் கைவிட்டபோது என் விமர்சனம் வெள்ளந்தியானதுதான் என்று தெளிந்தேன். மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும். 'தினத்தந்தி'யில் "முகமூடி" விமர்சனம் எழுதிய ஆள் அப்படிப்பட்டவர்.

 • Rajesh Da Scorp ‎//மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும்// - இதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன். நீங்க சொன்னமாதிரி, இயக்குநர் அல்லது நடிகர்களின் மேல் இருக்கும் அளவுகடந்த பக்தியே சில சராசரி படங்கள் தகுதிக்கு மீறிப் புகழ் பெறுவதன் காரணம் என்பதை நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் அதில் என்ன விஷயம் என்றால், அதுவரை அந்தப் படத்தை விரும்பியவர்களே கூட, இப்படிப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனங்களை படித்து அந்தப் படத்தை வெறுக்க ஆரம்பித்ததும் நடந்திருக்கிறது (நடந்தும் கொண்டிருக்கிறது). பொறுத்திருந்து பார்ப்போம்

9 comments:

 1. நண்பா மற்றவர் பார்வையில் எப்படியோ...என்னைப்பொறுத்தவரையில் “சினிமா மொழி” தெரிந்தவர் தான் அதை பார்க்கவேண்டும்...அல்லது விமர்சனப்படுத்த வேண்டும் என்றால் ஒரு படமும் வெல்லாது...

  சொல்ல வந்த விசயத்தை நச்சென்று சொல்லிச்செல்லும் இயல்பயே சாமானியன் விரும்புகிறான்...நான் அந்த வகையறாவைச்சார்ந்தவன் என்பதினாலோ என்னவோ எனக்கு எதிர்மறையான விமர்சனங்களே(!) தோன்றுகிறது..பொறுத்துக்கொள்ளவும்!

  ReplyDelete
 2. நண்பா...திரைப்படம் பார்க்க ‘சினிமா மொழி’ தெரிந்திருக்க தேவையில்லை.
  ஆனால் விமர்சிக்க அந்தத்தகுதி நிச்சயம் தேவை.
  விமர்சகன் படைப்பாளியை விட ஒரு படி மேல் இருக்க வேண்டும்.
  அவனுக்கு திரைப்பட துறையின் அனைத்து துறைகளிலும் மேதமை இருக்க வேண்டும்.
  ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு படி மேல் இருக்க வேண்டும்.

  உ.ம் உலகின் சிறந்த பத்து இயக்குனர்களில் ஒருவரான ‘த்ரூபோ’ விமர்சகராக இருந்து பின் திரைத்துறைக்கு வந்து ஜெயித்தவர்.

  நான் ‘த்ரூபோவை’ பின்பற்றுபவன்.

  எனது பதிவுகளில் விமர்சனம் என்ற தளத்தில் செயல்பட்டது....
  1 ஹேராம்
  2 கமீனோ... மட்டுமே
  மற்றவையெல்லாம்... ‘நான் பார்த்த படங்களை’ உங்களிடம் அறிமுகம் செய்தேன்.

  ReplyDelete
 3. Sir, Ungaludaiya "Hey Ram" analysis - excellent. thavaramal padithu varugiren.oru request - I would like to you to write about Anbe sivam also

  ReplyDelete
 4. Your "Hey Ram" analysis is excellent . I have been following it right from your I part . I would like you to write about Anbe Sivam. Please.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பரே...

   ஹேராமை முடித்து விட்டு அன்பே சிவம் எழுதுகிறேன்.

   Delete
 5. //திரைப்படம் பார்க்க ‘சினிமா மொழி’ தெரிந்திருக்க தேவையில்லை. ஆனால் விமர்சிக்க அந்தத்தகுதி நிச்சயம் தேவை//

  ரொம்ப சரிண்ணே. நான் சினிமாவை ரொம்ப ஈடுபாடோட பார்ப்பேன். வெறும் படம் 'பார்த்தல்'னு மட்டும் இல்லாம, நல்ல effects உடன் பார்க்கனும்னு, இதுக்காகவே செலவு செஞ்சு நல்ல ஹோம் தியேட்டர் சிஸ்டம் எல்லாம் வாங்கி வீட்டுல அமைச்சு இருக்கேன். ஒவ்வொரு காட்சி அமைப்பும், எனக்கு பிடிக்குது, பிடிக்கலை - அதோடு நிறுத்திக்குவேன். அது சரியா செஞ்சு இருக்காங்களா, இல்லையா அப்படீன்னு எல்லாம் ரொம்ப மண்டைய உடைச்சுக்க மாட்டேன். நீங்க, ராஜேஷ், சுகா, கேபிள் அய்யனார் போன்ற சிலர் எழுதும் விமர்சனங்கள் படிக்கும் போது புது பார்வை கிடைக்குது. "அட ஆமா இல்லே?" அப்படீன்னு நிறைய வியப்புகள் ஏற்படும். மீண்டும் அந்த படங்களை பார்க்கும் போது அது ஒரு தனி அனுபவம்.

  சில நண்பர்களை போல நானும் உங்க "அன்பே சிவம்" பதிவுக்கு காத்திருக்கிறேன். அதையும் எழுதுனதுக்கு அப்புறம் "மகாநதி" ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி கோபி.

   மகாநதியை கட்டாயம் எழுதுவேன்.
   எனது சிறை அனுபவம் கமலின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.
   திரையில் நிஜ சிறை வாழ்க்கையை பதிவு செய்தது கமலே.

   Delete
 6. அண்ணா..
  ஹே ராம் பற்றிய உங்கள் ஆய்வு மிகவும் அருமை...
  தொடர்ந்து படிக்கிறேன்...
  இன்னும் அலசுங்கள்...

  ReplyDelete
 7. அண்ணா..
  ஹே ராம் பற்றிய உங்கள் ஆய்வு மிகவும் அருமை...
  தொடர்ந்து படிக்கிறேன்...
  இன்னும் அலசுங்கள்...

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.