Jun 25, 2012

பாலாஜி சக்திவேலுக்கு பாராட்டு...விஜய்க்கு திட்டு...


பாலாஜி சக்திவேலுக்கு... கோவையில் பாராட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை  நிறைவாக நடந்தது.
அன்றே வழக்கு எண்ணை... சகுனி தியேட்டரை விட்டு விரட்டியதும் நடந்தது.

கவிஞர் தட்சிணாமூர்த்தியும், அவரது சகோதரரும்... இரண்டே இரண்டு பேர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
கோவை போலிஸ் மிகச்சிறப்பாக அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கியது குறிப்பிடத்தக்கது.
பேனர் வைக்கவிடவில்லை.
ஆட்டோவில் விளம்பரம் செய்ய விடவில்லை.
இது போன்ற செலவினங்களை செய்ய விடாமல் பாதுகாத்தனர்.
சகோதரர்கள் சளைக்கவில்லை.
இரண்டு நாள் கண் முழித்து இரவோடு இரவாக போஸ்டரை அவர்களே ஒட்டி தள்ளி விட்டனர்.
நான் அணில் மாதிரி என்னால் முடிந்ததை செய்தேன்.
எனது நண்பர் ஹலோ எப்.எம் பிரபு மூலமாக பாலாஜி சக்திவேல் பேட்டியும்... அதன் அறிவிப்புமாக ஹலோ எப்.எம் அலறியதில்... கொஞ்சம் நேயர்களை அழைத்து வந்தது.
ஒரு வழியாக... ஒரு டீசண்ட் கிரவுட் வந்து விட்டது.

எனது நண்பர் ஆனந்தன் அவர்கள்... முதலில் பேசினார்.
அவரது பேச்சுகளில்... இது மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது.
உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராபர்ட் பிரஸ்ஸானின் Money என்ற திரைப்படத்தின் தரத்தில்...தளத்தில்... இப்படம் இருந்ததை குறிப்பிட்டார்.
இடைவேளைக்குப்பிறகு... ஹிட்ச்ஹாக் பாணியில்... திரில்லர் பண்ணியிருப்பதாக சிலாகித்தார்.
மாமேதை மார்க்சின்...
மனித உறவுகள்...பண உறவுகளகி விட்டன...
புனிதங்கள்... புனிதங்களை இழக்கின்றன...என்ற தத்துவ வரிகளில் மொத்த திரைப்படம் இயங்குவதை விவரித்தார்.
'உங்களுக்கு புகழ் சூட்டுவதோடு ...பொறுப்பையும் தருகிறோம்...
இன்னும் இது போன்ற 25 படங்களை கோவை மக்கள் எதிர்பார்க்கிறோம்.'...
என முடித்தார்.

தொடர்ந்து நண்பர் ஒவியர் ஜீவா பேசினார்.
ஷ்யாம் பெனகல்,மகேந்திரன் படங்களோடு வழக்கு எண்ணை ஒப்பிட்டு பேசினார்.

எழுத்தாளர் பாமரன் அவருக்கே உரிய எள்ளல் நடையோடு பாராட்டியும்....நிறைய பேரை திட்டியும் பேசினார்.
இயக்குனர் விஜயை... ஐ யாம் சாமை... தெய்வத்திருமகளாக... ஜெராக்ஸ் எடுத்தற்கு திட்டி தீர்த்து விட்டார்.
ரோஸி என பெயரிட்டு பாலியல் தொழிலாளியை... வழக்கு என்ணில் காட்டப்பட்டதற்க்கு பாலாஜி சக்திவேலையும் கண்டித்தார்.
ஒரு சிறுபான்மை இனத்தை தொடர்ந்து பாலியல் தொழிலாளியாக
தமிழ் திரையுலகம் சித்தரிக்கும் அவலத்தை சாடினார்.

சென்னை புத்தகக்கண்காட்சியில் உலகசினிமா ஸ்டாலை தூக்க கோடம்பாக்கம் முயற்சி செய்ததை குறிப்பிட்டு பேசினார்.
நிகழ்ச்சி முடிந்ததும்... நான்தான் ஸ்டால் போட்ட ஆசாமி...
என அறிமுகம் செய்து கொண்டதும்...
அட...தோழர்...நீங்களா என ஆச்சரியப்பட்டு...
ஸ்டாலில் கிகுஜிரோவையும்...ஐ யாம் சாமையும் நீங்கள் அடுக்கி வைத்திருந்தால் கோடம்பாக்க ஆசாமிகளுக்கு பொறுக்குமா?
அதான் உங்களை தூக்கிட்டானுங்க...என உண்மையை போட்டுடைத்தார்.

வழக்கறிஞர் பிரபாகரன்... இப்படத்தின் டிவிடியை கொடுங்கள் வீடு..வீடாக கொண்டு சேர்க்கிறேன் என உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
தொடர்ந்து பேராசிரியர் திலிப்குமார்,இயக்குனர்கள் ஸ்டேன்லி,சசி பேசினார்கள்.

ஏற்புரையாக பாலாஜி சக்திவேல் பேசினார்.
இந்த பாராட்டு அனைத்தும் இனிப்பு மாதிரி எடுத்துக்கொள்கிறேன்.
ஆனந்தன் சார் சொன்னது மட்டும்... மருந்து மாதிரி உள்ளுக்குள் என்றும் இருக்கும்.
சங்கர்,லிங்குசாமி போன்ற பட இயக்குனர்கள் உதவியோடு இது போன்ற மக்களுக்கான திரைப்படங்களை தொடர்ந்து தருவேன் என உறுதியளித்தார்.

நிகழ்ச்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தொகுத்து வழங்கினார்.

சனிக்கிழமை பாலாஜி சக்திவேலை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து உரையாடினோம்.
தனது படங்கள் அவார்டை குறி வைத்து எடுக்கப்படுவதல்ல.
பத்து பேர் மட்டும் பார்த்து... பாராட்டு பெறுவதில் தனக்கு விருப்பமில்லை.
மசாலா படம் பார்ப்பவரை... என் பக்கம் திருப்புவதே தனது நோக்கம்.
தரமான விஷயங்களை... எளிமையாக சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றார்.
இருபது லட்சத்தில் கூட நான் படமெடுப்பேன்.
அதற்கான கதை என்னிடம் இருக்கிறது... என நம்பிக்கை நட்சத்திரமாக பேசியது இன்னும் என் மனதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

எல்லோரும் குறையாகச்சொல்லும் கனவுக்காட்சியில் ஜோதியின் வீட்டில் லெனின் புத்தகம் காட்டப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.
தெரிந்தே அதைச்செய்தேன்.
அந்த ஒரு இடம் விட்டால் எனக்கு படத்தில் வேறு இடமேயில்லை.
அஸிஸ்டெண்டுகளிடம் இது குறித்து பல முறை விவாதித்து துணிந்துதான் அந்தக்காட்சியை சொருகினேன் என்றார்.

நான் உடனே...சார் இது குறித்து நானும் ஆனந்தன் சாரும் டிஸ்கஸ் செய்துள்ளோம்....ஒரு படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் உண்டு என கை கொடுத்தேன்.
கனவுக்காட்சியில் பாரின் லொக்கேஷன் போக....
ரசிகர்கள் யூரின் போக... இடமளிக்கும் இயக்குனர்கள் மத்தியில்...
லெனினை காட்ட நினைத்த பாலாஜி சக்திவேல் தனித்து நிற்கிறார்.

அவரை ஒய்வெடுக்க சொல்லி விட்டு நானும் நண்பர்கள் மட்டும் கொஞ்சநேரம் பேசினோம்..
இண்டலக்சுவல் எழுத்தாளர் என தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் எழுத்தாளர்கள்... இப்படத்தை குறை சொல்லி கும்மியடிப்பதை பற்றி பேசினோம்.
நண்பர் ஒருவர் அழகாக விளக்கமளித்தார்.
செல்போன் மூலமாக வக்கிரம் செய்வதை கண்டித்து பாலாஜி சக்திவேல் படமாக்கியுள்ளார்.
பேஸ் புக்கில் வக்கிர சிந்தனையோடு உரையாடிய எழுத்தாளன் இப்படத்தை தூக்கி மிதிக்காமல் என்ன செய்வான்? என கேள்வி எழுப்பினார்.
இந்தக்கேள்வியில் நியாயம் இருக்கிறதா...நண்பர்களே?  

24 comments:

 1. பேஸ் புக்கில் வக்கிர சிந்தனையோடு உரையாடிய எழுத்தாளன் இப்படத்தை தூக்கி மிதிக்காமல் என்ன செய்வான்? என கேள்வி எழுப்பினார்.
  இந்தக்கேள்வியில் நியாயம் இருக்கிறதா...நண்பர்களே? //

  100% நியாயம் இருக்கிறது, அற்புதமான இயக்குனர், அவரின் சரியாக ஓடாத சாமுராய் படமும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம், பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. சாமுராய் பற்றி...பாலாஜி சக்திவேல் ஒரு தகவல் சொன்னார்.

   அந்தப்படத்தில் விக்ரமுக்கு தியாகு என்ற கம்யூனிஸ்ட் போராளி பெயரை சூட்டியிருந்தேன்.
   விக்ரம் அந்தப்பெயரை மாற்ற வேண்டும் என பிடிவாதம் பிடித்தான்.
   அதற்க்கு விக்ரம் சொன்ன காரணம்...நடிகர் தியாக ராஜன் விக்ரமுக்கு மாமா.
   அவரை விக்ரமின் அம்மா தியாகு என்றுதான் அழைப்பாராம்.
   விக்ரமுக்கு மாமாவை அறவே பிடிக்காதாம்.
   அதனால் படத்தில் தான் தியாகு என்றழைக்கபடும்போது மாமா தியாகராஜனின் முகம் நினைவில் வந்து டிஸ்டர்ப் ஆகிறேன் என அடம் பிடித்தான் விக்ரம்....என்றார்.

   கடைசி வரை பாலாஜி சக்திவேல் ஒத்துக்கொள்ளாமல் ஜெயித்திருக்கிறார்.

   Delete
 2. எங்கே உங்கள் மீசையும் தாடியும் காணவில்லை? உங்கள் முகம் அந்த குறுந்தாடியுடன்தான் எனக்கு நினைவிருக்கிறது :-)

  அப்புறம், இந்தப் படம் பிடிக்காது என்று சொல்பவர்கள் பற்றி - ஒரு படைப்பு வெளிவந்தவுடன், அதைப் பாராட்டியே ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா தலைவரே? எந்தக் கலைப்படைப்பையும் பிடிக்கிறது \ பிடிக்கவில்லை என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா? உதாரணத்துக்கு, நீங்கள் பாராட்டும் ஹே ராமை நான் சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையா? வெறுமனே அவதூறு சொன்னால் அது தவறு. ஆனால் காரணத்துடன் ஏன் பிடிக்கவில்லை என்று விளக்கினால், அதுவும் ஒரு விமர்சனம்தானே? என்ன சொல்கிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. ராஜேஷ்...நானோ...நீங்களோ...விமர்சிப்பது வேறு.
   ஆனால் ஒரு புகழ் மிக்க எழுத்தாளர் படத்தை விமர்சிக்கும் போது பொறுப்பு இருக்கிறது.

   சாருவின் புத்தகத்தை... மிஷ்கின் சரோஜோ தேவி புத்தகம் என விமர்சித்தானே...அதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.
   சரிக்கு சரியாக...சாரு விமர்சித்ததும் அத்தகையதே...

   எனக்கு எஸ்.ரா மிகநெருங்கிய நண்பர்.
   அவர் பணியாற்றினார் என்பதற்க்காக அவன் இவன் படத்தை கொண்டாடவில்லை.
   அதன் குறைபாடுகளை சொல்லி மிகக்காட்டமாக விமர்சித்து இருந்தேன்.

   தாடி,மீசையை எடுத்து வயதை குறைக்கும் அல்ப முயற்சிதான் தற்ப்போதைய தோற்றம்.

   Delete
 3. ரொம்ப அழகான விவரிப்பு..
  நேரில் பார்த்தது போல் இருத்து....
  சாரு தான் வித்தியாசமா பேசுறேன்னு நினைச்சுகிட்டு எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லற படத்தை மோசம் என்று சொல்லுவார்..
  .அவர் சொன்னனாலே படம் என்ன ஓடாம போச்சா என்ன..??? ப்ரீயா விடுங்க பாஸ்..சரியான க்ராக் சாரு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி...ராஜ்.

   சினிமா இலக்கணப்படி சாரு வழக்கு எண்ணை விமர்சித்து இருந்தால் வரவேற்று இருக்கலாம்.

   அவர் நந்தலாலா தூக்கிய விதமும் தவறு...
   வழக்கு எண்ணை தாக்கிய விதமும் தவறு.

   Delete
 4. அருமையான படைப்பு

  ReplyDelete
 5. சுவாரசியமான சந்திப்பு போல.. பாலாஜி சக்திவேல் தொடர்ந்தும் தரமான சினிமாக்களை எடுக்க வேண்டி ஆவலுடன் இருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த படம் இன்னும் உயர் தரத்தில் எடுத்து காட்ட வேண்டும்.
   வழக்கு எண்ணை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு அவர் செய்ய வேண்டிய நன்றிக்கடன் இதுதான்.

   Delete
 6. பாலாஜி சக்திவேல் அவர்கள் பாராட்ட வேண்டிய, கொண்டாடப் படவேண்டிய உண்ணத கலைஞன்..அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கலாம்.. கூட்டம் நடத்தியவர்களுக்கு, நன்றியும் பாராட்டும்..

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!
   உங்களையும் அழைத்து...
   கோவை மக்கள் கொண்டாடும் வாய்ப்பை ...வெகு விரைவில் ஏற்படுத்தி தர...
   தாய் மூகாம்பிகை வரம் தர வேண்டும்.

   Delete
 7. ஓர் அழகான சந்திப்பை ரொம்ப நன்றாக விவரித்து பதிவாக வழங்கிய தங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தம்பி...உன் வருகை களிப்பூட்டுகிறது.

   Delete
 8. கலந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தம். பிறிதொரு நிகழ்ச்சிக்கு முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் வேண்டாம்.
   விரைவில் பாலாஜி சக்திவேல் கோவைக்கு மீண்டும் வர இருக்கிறார்.
   அப்போது வாருங்கள்.

   Delete
 9. நேரில் பார்த்தது போல் வர்ணனை .நன்றி

  ReplyDelete
 10. மூன்று மணிநேர நிகழ்ச்சியை ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களோடு இந்நிகழ்ச்சியை கண்டு களித்தது மகிழ்வை தந்தது நண்பரே!

   Delete
 11. உங்களிடம் ஒரு கேள்வி..ஏன் கனவில் அம்பேத்கர் வரவில்லை?

  ReplyDelete
  Replies
  1. இந்தப்படத்தில் கதாநாயகியை கம்யூனிஸ்ட் போரளியின் மகளாக
   காட்ட விரும்பியே லெனினை குறியீடாகப்பயன்படுத்தி உள்ளார்.
   இனி வரும் படங்களில் பொருத்தமான இடத்தில் அம்பேத்காரை நிச்சயம் பயன்படுத்துவார்.
   நீங்கள் பெருமைப்படும் விதத்தில் சரியாக பயன்படுத்துவார்.

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. புத்தக கண்காட்சியில் சினிமா paradyso வும் ,சென்ட்ரல் ஸ்டேஷன் படங்கள் வாங்கினேன். ரொம்ப நாள் பார்க்கணும்னு ஆசைப்பட்ட படம். ரொம்ப நன்றி. அடுத்த வருஷமும் உங்க ஸ்டாலை எதிர்பார்கிறோம்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.