Jun 8, 2012

Hey Ram-பாடலும்...பாடமும்...[2000\ஹேராம்=008]


இந்திய திரைப்படங்களில் பாடல் காட்சிகள் தவிர்க்க முடியாத பாக்டீரியா.
இந்த வேதியியலை மாற்ற வேண்டும் என்ற ஆவலை...
 தனது மூன்று படங்களில்...செயல்படுத்தினார்.
1.கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு[தயாரிப்பு]
2.குருதிப்புனல்,
3.உன்னைப்போல் ஒருவன்

வர்த்தக சினிமாவில் கூட பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்வார்.
ஹேராமில் பாடல்கள்... படத்தின் மையக்கருத்தை வலியுறுத்துவதாக அமைத்துள்ளார்.


இப்பாடலில் வாலியின் வரிகள் கமலுடன் கை கோர்ப்பதை பாருங்கள்....
ராமரானாலும்...
பாபரானாலும்...
ரூட்டு ஒண்ணுதான்...
கேட்டு ஒண்ணுதான்-சிநேகிதா!
என்ற வரிகளை அம்ஜத் பாடுவதில் அர்த்தம் விரிவடைகிறது.

ஆரியர் வழி வந்த ராமரும்....இஸ்லாமியர் வழி வந்த பாபரும்...
கைபர் கணவாய் வழியாக... இந்தியாவிற்க்குள் வந்த வந்தேறிகள்...
என்ற வரலாற்றை...
ரூட்டு ஒண்ணுதான் என்ற வரிகளுக்குள் பொதிந்து வைத்திருப்பதை கண்டு வியக்கலாம்.

பாபர் மஸ்ஜித் என்றும்...ராம ஜென்ம பூமியென்றும்....ஒரே இடத்திற்க்குள்  அடைந்து கிடப்பதை....கேட்டு ஒண்ணுதான் என மொழி பெயர்கிறார் வாலி.

இதற்க்கு பின்னால் வரும் அனைத்து வரிகளுக்கும் அர்த்தம்...
எல்.கே.ஜி குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

உள்ளதை சொல்வபவர்...சொன்னதை செய்பவர் நாமே...என்ற வரிகளை படமாக்கும் போது...பார், மேசை மேல் ஏற முடியாத
சிந்தி லால்வானியை...முஸ்லீம் அம்ஜத்தும்...அய்யங்கார் ராமும் தூக்கி விடுகின்றனர்.
இயலாதவர்களை... இயன்றவர்கள் தூக்கி விட வேண்டும் என்ற செய்தியாகத்தானே இருக்க முடியும!

அம்ஜத்தும்,ராமும் வாளை எடுத்துக்கொண்டு சண்டையிடும்போது... குழந்தைகள் கை தட்டி சிரிக்கிறார்கள்.
மதங்களுக்கிடையே சண்டையிடுவது சிறுபிள்ளைத்தனமானது என்ற உண்மையை உணர்கிறோம்.
ஒரு பொருட் பன் மொழியாக... மீண்டும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
மூவரும் த்ரீ மஸ்கட்டியர்ஸ் போல் கோமாளித்தனமாக சண்டைபோடுகிறார்கள்.
மதவாதிகள் போடும் சண்டை அத்தனையும்
கோமாளித்தனமானது என்பதை மீண்டும் உணர்கிறோம்.

சண்டைக்கு முடிவாக மூவரும் தோளிலிருக்கும் துண்டை கழட்டி ஒன்றாக கோர்த்து ரவுண்டு கட்டி ஆடுகிறார்கள்.
நட்பு ஒன்றால்தான் மத நல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக... ஆடியே.... காட்டுகிறார்.

பாடல் முடிந்த பிறகு மூவரும் தமது கடவுள் பெயரைச்சொல்லிக்கொண்டு நீச்சல் குளத்தில் குதிக்கின்றனர்.

அனைவரும் கடவுள்...நம்பிக்கைகளை வச்சுக்கங்க....
ஆனால்...அதை அவரவர்களுக்குள் வச்சுகிட்டு....
நட்பு என்ற வட்டத்துக்குள் வந்து விடுங்கள்..
அங்கே... களிப்பும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கும்.
இதுவே பாடலின் பைனல் பஞ்ச்.

இப்பாடலின் நடுவில்... அவ்வப்போது வீலர் என்ற வெள்ளைக்காரன் போட்டோ எடுப்பது போல் குறுக்கிடுகிறான்.
பாடல் தடைபடுகிறது.
இக்குறியீட்டை ஸ்கிரிப்டிலேயே எழுதியிருக்கிறார்.

இந்துவும்... முஸ்லீமும் ஒற்றுமையாக இருப்பது வெள்ளைக்காரனுக்கு பிடிக்காது.
அன்றும்...இன்றும்...என்றும்.
அந்த ஒற்றுமையை குலைப்பதில் அவன் என்றுமே மும்முரமாக இருந்தான் என்பதைத்தான்... குறியீடாக்கி உள்ளாரோ.

எனக்கு தெரிந்த ஒரு குறியீட்டை....
சொல்லாமல் பதுக்கி வைத்துள்ளேன்...கண்டு பிடியுங்கள்.
கண்டுபிடித்து விட்டால்... நீங்கள்தான் எம்.ஜி.யார்.
நான் என்.எஸ்.கே.

9 comments:

 1. நண்பரே,
  அருமையான விளக்கங்கள்...ஒரு பாடலில் இத்தனை அர்த்தங்களா...??? ரொம்ப அழகாய் புரியவைத்து விட்டீர்கள்..
  அந்த குறியீட்டையும் நீங்களே சிக்கிரம் சொல்லி விடுங்கள்....சஸ்பென்ஸ் தாங்க வில்லை..

  ReplyDelete
 2. ஸாரி...நண்பா...காத்திருங்கள்.
  நமது நண்பர்கள் கண்டு பிடிக்கிறார்களா என பார்ப்போம்.

  ReplyDelete
 3. வணக்கம் நண்பரே

  ம்... நல்லாத்தான் சொல்றீக விளக்கம்

  ReplyDelete
 4. பாராட்டுக்கு நன்றி...நண்பரே!

  ReplyDelete
 5. அருமை நல்ல விளக்கம்...படத்திலும் பல சிம்போல்கள் உள்ளன படத்தின் இறுதியில் ஹேராம் ராம் பாடலின் இறுதியில் காந்தியின் உருவத்தை வரைந்த யன்னலைத்திறப்பார்கள் அதிலும் அர்த்தம் இருக்கின்றது சுருக்கமாக சொனால் "பாரதத்தின் விடியல் காந்தியினூடகத்தான்" இது எனக்கு புரிந்த அர்த்தம்

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே!
   ஆனால் இது புரியாத காங்கிரஸ் ஜந்துக்கள்...
   காந்தியை கேவலப்படுத்தி ஹேராம் எடுக்கப்பட்டுள்ளது என போராட்டம் நடத்தி வெறியாட்டம் போட்டார்கள்.

   Delete
 6. மாப்ள உம்ம அளவுக்கு எனக்கு அறிவு இல்லய்யா!~

  ReplyDelete
  Replies
  1. மாப்ள...நீ சொல்வது உண்மையில்லை.
   உன்னை மாதிரி அறிவாளிகள்
   உலகசினிமா ஏரியாவிற்குள் வருவதில்லை.
   அதனால் என்னை மாதிரி இலுப்பை பூவெல்லாம்... சர்க்கரையாக தெரிகிறோம்.

   Delete
 7. அய்யயோ பாஸு உங்களை சாதரணமா நினைச்சுட்டேனே

  கலக்கிட்டீங்க போங்க

  இல்லாதவங்க இருக்கிறவங்க இதை தான் நானும் யோசிச்சேன்

  இனி உங்க கிட்ட சந்தேகம் கேட்க மாட்டேன் எல்லா கட்டுரையும் படிச்சு முடிச்சுட்டு கடைசியா கேட்கிறேன்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.