Jun 15, 2012

Hey Ram-மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன? [2000\ஹேராம்=010]


கல்கத்தா கலவரத்தின் விதையை தூவிய அதிகார வெள்ளை வர்க்கத்தின் மையம்... விக்டோரியா மெமோரியல்.
அதை சைலண்ட் ஷாட்டில் காட்டியிருப்பார் கமல்.
விக்டோரியா மெமோரியல்=கிழக்கிந்திய கம்பெனி+பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சாம்ராஜ்யம் ஆகியவைகளின் குறியீடு

இந்த புயலை உருவாக்கிய இடம் இதுதான்...இங்கேதான் இந்த வெள்ளையர்கள் அமைதியாக காய் நகர்த்தினர் என்று இதை கொள்ள வேண்டும்.
கல்கத்தா கலவரத்தில்... இந்து-முஸ்லீம் மட்டும் அல்ல...மறைந்திருந்து கலவரத்தை தூண்டிய வெள்ளையரையும் கொண்டு வந்து...
டிரை ஆங்கிள் பண்ணிய வித்தை புரியாத ஜந்துக்கள்...
நாலே... நாலு உலகசினிமாவை பார்த்து விட்டு தன்னை ஜாம்பவன்கள் என எண்ணிக்கொள்ளும் தவளைகள்
ஹேராமை தவறாக விமர்சிக்கின்றன.

இனி வரும் காட்சிகளில் நடிகர்,இயக்குனர்,படைப்பாளி என மூன்று ஸ்தானங்களில் தனது உச்சபட்ச ஆளுமையை கமல் நிரூபித்த காட்சிகள். கவனமாக பார்க்க வேண்டிய காட்சிகள் இவை.

கூர்க்காவிடம் லக்கேஜை பத்திரமாக வீட்டிற்க்கு கொண்டு வா எனச்சொல்லி விட்டு லிப்டுக்குள் நுழைவான் சாகேத்ராம்.
அப்போது முதிய தம்பதியினர் அவசரம்..அவசரமாக உள்ளே நுழைந்து லிப்டில் ஏறிக்கொள்வர்.
அவர்கள் கையிலும்..பையிலும் பழங்கள் வாங்கி வந்திருப்பதை விசுவலாக எஸ்டாபிலிஷ் செய்திருப்பார் இயக்குனர்.
தொடர்ந்த அவர்களது உரையாடலில் பந்த் குறித்த மத்திய தர வர்க்கத்து பார்வையினை உணர முடியும்.
அவர்கள் விடை பெற்றுச்செல்லும் போது...தவறி விழுந்த ஆரஞ்சை கமல் தூக்கி எறிய பெங்காலி முதியவர் காட்ச் பிடிப்பார்.
திரைக்கலையில் இது போன்று காட்சிஅமைப்பது நுவான்ஸ்[Nuance] என்றழைப்பார்கள்.
காட்சிகளில் இப்படி நுவான்சை நுழைப்பது கமலுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
பந்த் அன்றும் சில கடைகள் திறந்திருக்கின்றன...என்பதை வெளிப்படுத்த மட்டும் இக்காட்சி இல்லை என்பதை பின்னால் நாம் காணவிருக்கிறோம்.
சாகேத்ராமை புரட்டி போட்ட காட்சியை அடுத்த பதிவில் காண்போம்.6 comments:

 1. காட்சிகளில் நீங்கள் காட்டும் கூறிய பார்வையும் உள்ளார்ந்த அர்த்தங்களும் பிரமிக்க வைக்கின்றது..

  ReplyDelete
 2. " உன்னைப் போல் ஒருவன் " இதில் தீவிரவாதியின் தோற்றத்தில் உள்ள சாதாரண குடும்பத்தலைவர் என்பதை காய்கறிகள் வாங்கிக் கொண்டு படியேறி செல்லும் காட்சியில் விளங்கிக் கொள்ள முடிவதில்லை பின்னால் வரும் போன் கால் காட்சியில் உணர வைக்கிறார். இது [Nuance]என்பது சரியா ?

  ReplyDelete
 3. நல்ல அலசல் .அழகு

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!பாராட்டுக்கு நன்றி.

   Delete

Note: Only a member of this blog may post a comment.