Jun 19, 2012

Hey Ram-ஊடல் வரும் முன்னே... [2000\ஹேராம்=012]


அரேஞ்ச்டு மேரேஜ் மனைவியை விட... காதல் மனைவி சம்திங் ஸ்பெஷலாகத்தான் இருப்பார்கள்.
அவர்களுக்குள் இருக்கும் காதலில் கட்டாயம் தெய்வீகம் வந்து விடும்.
அதே போல் அவர்களுக்குள் இருக்கும் காதலும்...காமமும்...பவர்புல்லாக இருக்குமாம்.
அதுவும் ஊடலுக்கு பின் வரும் கூடல் இருக்கிறதே...
அதற்க்கு இரவு...பகல்,பெட்ரூம்-வரண்டா எதுவும் தெரியாது.

இங்கே ஊடலுக்கு காரணமாக தந்தியை வைத்து விட்டார் கமல்.
                                           திரைக்கதையிலிருந்து
அபர்னா : உங்கப்பாகிட்டேர்ந்து தந்தி வந்திருக்கு.

ராம் தந்தியைப்பற்றிய கவலையில்லாமல்,துப்பாக்கியை கையிலெடுத்து,அதில் தோட்டா இருக்கிறதா என்று பார்க்கிறான்.
ராம் : ஹா...ஹா...
[சிரிக்கிறான்]


அபர்னா : படிச்சு...
[ராமின் கவனம் தன் பேச்சில் இல்லாதது உணர்ந்து நிறுத்தி விடுகிறாள்]


ராம் : காலித்துப்பாக்கி...காலணாவுக்கு பிரயோஜனமில்ல...
இதை விட சமயக்கரண்டியே தேவலை.
புல்லட்ஸ் எங்கே?


அபர்னா : பீரோவில் இருக்கு...


ராம் : வெரி க்ளவர்....
துப்பாக்கியை சோபாவில் வைத்து அதிருப்தியாக தலையை அசைக்கிறான்.


அபர்னா :[தந்தியைக்காட்டி] தந்தி...


ராம் : அதான் படிச்சிருப்பியே....
என்னன்னு சொல்லு.


அபர்னா : டெலகிராம்ங்கறதுனாலே படிச்சேன்.
ஐ யாம் ஸாரி


ராம் : டோண்ட் பி ஸ்டுப்பிட்.
என்ன பாதர் ஸீரியஸ்...அவ்வளவுதானே?


அபர்னா : திஸ் ஈஸ் மோர் சீரியஸ்.
[தந்தியை எடுத்து அவன் கையில் திணிக்கிறாள்]
                                                             
ராம் : அய்யய்யோ வைகுண்டத்துக்கே போயிட்டாரா? 
                                                              *************************
இங்கே டயலாக்கின் மூலமாக துப்பாக்கியில் குண்டு இல்லை என எஸ்டாபிலிஷ் செய்கிறார்.
பின்னால் வரும் காட்சியில் துப்பாக்கியில் குண்டு இல்லாததை வைத்தே...
சாகேத்ராம் உயிர் பிழைக்கமுடிகிறது.
காலணாவுக்கு பிரயோஜனமில்லாத துப்பாக்கியை....உயிர் காக்கும் கருவியாக்கி முரண்சுவை [Irony] ஊட்டியிருப்பதை உணர முடிகிறது அல்லவா!
அதனால்தான்... இந்தக்காட்சியில் டயலாக்கின் மூலமாக...
நேரேட்டிவ் லிங்கேஜ் கொடுக்கிறார்.

அதே சமயத்தில் காலி துப்பாக்கியை வைத்திருந்த அபர்னாவை...
தந்தியை படித்ததற்காக மன்னிப்பு கேட்கும் உயர் நாகரீகம் படைத்தவராகவும் எஸ்டாபிலிஷ் செய்கிறார்.
ஆபத்து விளைவிப்பவர்களை கூட தாக்கும் எண்ணம் இல்லாத சாப்ட் நேச்சர் காரெக்டராக அபர்னா....
ஆபத்து விளைவித்தவர்களை பழி வாங்கும் காரெக்டராக சாகேத்ராம்....
ஆபத்து வந்தால் கூட துப்பாக்கிக்கு மார்பை காட்டும் குணவானாக அம்ஜத்தையும் படைத்ததில் முரண்சுவை இருக்கிறது.


என்ன பாதர் ஸீரீயஸ்...அவ்வளவுதானே?
என்ற ஒரு வரி டயலாக்கின் மூலமாக தகப்பன்-மகன் உறவை
போட்டுடைத்து....
அய்யய்யோ... வைகுண்டத்துக்கே போய்ட்டாரா?
என்ற டயலாக் டெலிவரி மூலம் நடிகர் கமல் தரும் அர்த்தமே அலாதி.
இங்கே...ரஷ்ய பார்மலிஸ்ட் மைக்கேல் பக்தின் சொல்வதை நினைவு கூறலாம்.
'எழுதப்பட்ட மொழியை விட...பேசப்படுகிற மொழியில் சக்தி அதிகமாக இயங்கும்' என்கிறார்.
பேசப்படும்போது... அதில் இருக்கும் எமோஷன் ஆயிரம் அர்த்தங்களை ஜெனரேட் செய்யும்.
அதை எழுத்தில் முழுமையாக கொண்டு வர முடியாது.

அதே சமயத்தில் எழுத்தில் இருக்கும் அடர்த்தியை...பேச்சில் கொண்டு வர முடியாத சூழலும் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.

இந்தக்காட்சியை அடுத்த பதிவிலும் தொடருவோம்.  
இக்காட்சியின் காணொளி காண்க...

5 comments:

 1. எமோசன்ஸ் பத்தி சொன்னீர்கள்... பேசாமலே சைகை,பாடி லாங்குவேஜ், எக்ஸ்ப்ரசன்ஸ் கமலின் ஸ்பெசாலிட்டி எல்லாபடங்களிலுமே காணலாம். நாயகனில் மகன் இழப்புக்கு அவரின் அழுகை-பெர்பார்மென்ஸ் போல யாரும் கொடுக்கவில்லை என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நாயகனில் அந்த காட்சியில் பேசுவதற்காக பாலகுமரன் வசனம் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்தார்.
   சூட்டிங் ஸ்பாட்டில் அவரும் இருந்தார்.
   இவ்வளவு பெரிய துக்கம் நடந்திருக்கையில் ஒருவன் வசனம் பேசிக்கொண்டிருந்தால் நல்லாயிருக்குமா என கமல் கேட்க பாலகுமாரனும் அதை ஆமோதித்திருக்கிறார்.
   என்ன செய்யலாம் என மணியும் கேட்க கமல்... நான் ஒண்னு பன்றேன்...பிடிச்சிருக்கா..பாருங்க...என அந்த சீனை நடித்து காண்பித்தார்.
   மயில் அகவியதை போல் ஒரு பிளிறல்... அந்த அழுகையில் கொண்டு வந்தார் கமல்.
   அதுவே அப்ரூவ் ஆகி ...கமலுக்கு தேசிய சிறந்த நடிகர் பட்டத்தை மீண்டும் பெற்று தந்தது.

   Delete
 2. ஹா ஹா ஹா......செம காமெடி! உங்களுக்கு நல்ல ஹியுமர் சென்ஸ் பாஸ்!

  ReplyDelete
 3. என்ன நண்பரே, அடுத்த பதிவிற்காக பலர் காத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா? இல்லை சிலரின் கமெண்ட்டுகள் உங்கள் வேகத்தைக் குறைத்து விட்டதா? என்று அடுத்த பதிவு?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!
   இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
   நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை,சனிக்கிழமை அவருடன் பிரத்யேக சந்திப்பு என அந்த ஹேங்ஒவரிலிருந்து விடுபடவில்லை.
   இன்று கட்டாயம் எழுதி விடுகிறேன்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.