Aug 11, 2012

Hey Ram \ 2000 \ கேள்வியும்...பதிலும்...வன்முறையே \ ஹேராம் =018


திரைப்படக்கலை உருவான பிறகு... ஏனைய கலைகளை பின்னுக்கு தள்ளி தனித்த பாதையில் இன்றும் பீடு நடை போட்டு வருகிறது.
திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த ரஷ்ய மாமேதைகளுள் முக்கிய ஒருவரான ‘ஐஸன்ஸ்டைன்’ வகுத்த எடிட்டிங் இலக்கணம் இது....
  'A' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும்,
 'B' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும் தொகுக்கும் போது...
 'C' என்ற புதிய அர்த்தம் உருவாகும்.

ஹேராமில், மனிதனாக இருந்த சாகேத் ராம் மிருகமாக மாறி அலறுவது ஒரு ஷாட்.
இஸ்லாமிய மதச்சின்னங்கள் இருக்கும் பகுதி...தீப்பற்றி எரிவது ஒரு ஷாட்.
பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சல்...இப்போது தீயாக பற்றி எரிகிறது என்ற  ‘காத்திரமான உரை’ பார்வையாளன் மனதில் எழுதப்படுகிறது. ‘கன்சப்சுவல் பார்ம் கட்டிங்’ [ Conceptual Form Cutting ] என்ற திரைக்கலை தொகுப்பின் உத்தியை பயன் படுத்தி இக்காட்சியை துவங்கிய...
 கமல் படைப்பாளியா?... ‘பீஸா’?
நீங்களே தீர்ப்பெழுதி கொள்ளுங்கள்.

தனி மனிதர்கள்... இன,மத வாதத்தை பற்ற வைத்து  ‘மாஸ் வயலன்சை’ எளிதில் உருவாக்க முடியும்.
ஆனால்  ‘பற்றியெறியும் மாஸ் வயலன்சை’ அதை உருவாக்கிய தனி மனிதர்களாலேயே நிறுத்த முடியாது.
அது,அதற்குறிய பேரழிவை ஏற்படுத்தி விட்டுத்தான் அடங்கும்.

[ ஒரு  ‘ஸ்மால் ஸ்டேட்’ திட்டமிட்டு உருவாக்கிய  ‘முள்ளி வாய்க்கால் மாஸ் வயலன்சை’ அனைத்து உலக நாடுகள் அடங்கிய  ‘ஐக்கிய நாட்டின் மகா சபையே’ நிறுத்த முடியவில்லை ]

இப்போது,  ‘ஹேராமில்’ இடம் பெற்ற  ‘பதிலடி வன்முறை’ காட்சியை ஆராய்வோம்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்...  ‘ரியாக்‌ஷனில்’ இறங்கும் போது விளைவுகள் கடுமையாக இருக்கிறது.
வன்முறையை தூண்டி விட்டவர்களும்,அதை செயல்படுத்திய
காரணகர்த்தாக்களும்...  ‘பதிலடியாக’எழும் வன்முறையில் சிக்கி கொள்வதில்லை.
மாறாக அப்பாவி மக்கள் சிக்கி கொண்டு பலியாகிறார்கள்.

இந்தக்கொடூர உண்மையை... ஹேராமில் படம் பிடித்து காட்டி உள்ளார் கமல்.
‘ஒரே ஒரு  கத்தியை வைத்து உருவான வன்முறையை’ பார்வையாளருக்கு காட்டிய படைப்பாளி கமல்...
‘பதிலடியாக உருவான மகா வன்முறை’ காட்சியில்,
திரண்டிருக்கும் சீக்கிய மக்களின் கைகளில் நீண்ட நெடிய வாள்கள் அணி வகுத்திருப்பதை காட்டி உள்ளார்.
அவர்களிடம் சிக்கி கதறும்  ‘அப்பாவி இஸ்லாமிய பெரியவரின்’ கதறலிலும் இக்கருத்தை பொதிந்திருக்கிறார்  ‘வசனகர்த்தா’ கமல்.

We have paid with enough lives!
Please! Don't kill us!

 ‘பதிலடி வன்முறை’... ‘இஸ்லாமியச்சிறுவனைக்கூட’ தீக்கிரையாக்கியதை...
 மிகுந்த சமூக பொறுப்புணர்வுடன் படமாக்கிய கமலை போற்ற வேண்டாம்...
தூற்றாமலிருக்கலாம் அல்லவா...

கண் முன் நடக்கும் கொடூரங்களை...  ‘கண்டும்...காணாதது’ போல்...
ராம் இயங்குவதை தத்ரூபமாக காட்டி...  ‘முப்பரிமாணத்திலும்’ ஜொலிக்கிறார் கமல்.


ராமின் இலக்கு... மனைவியை பலவந்தப்படுத்திக்கொல்ல தூண்டுகோலாக செயல்பட்ட அல்தாப்பே...
தப்பி ஒடும் கும்பலில்,  ‘அல்தாப்பை’ மட்டும் முதலில் குறி பார்க்கிறது ராமின் துப்பாக்கி.
மற்றவர்கள் உயிரை பறிக்கும் போது,
 ‘ மனிதத்தன்மையே இல்லாமல் செயல் படும் மிருகம்...
 தன்னுயிருக்கு ஆபத்து வரும் போது எவ்வளவு கோழையாக....
கேவலமாக கீழிறங்குவான் ’
என்பதை அல்தாப்பின் வசனம் மூலம் தெளிவாக்குகிறார் கமல்.

No sir..! No..!
Forgive me sir!

l accept.
lt's the situation!

lt's driving everyone crazy.
l wasn't the only one!

The others were
involved too!

Forgive me sir! No sir! 

ராமின்,  ‘கொதிக்கின்ற உள்ளம் போல்’ துடிக்கும் துப்பாக்கி...
அல்தாப்பின் உயிரை குடிக்கிறது.
அப்போதிருந்த பதட்டத்தில், மற்றொரு  ‘அப்பாவி இஸ்லாமியப்பெரியவரை’ சுட்டுக்கொன்று விடுகிறான் ராம் .
காரணமேயில்லாமல் ஒரு அப்பாவி உயிரை பறித்த குற்ற உணர்வில் ராம் பாதிக்கப்பட்டு இயங்குவதை ஹேராமில் தொடர்ச்சியாக காணவிருக்கிறோம்..

மன வளர்ச்சியில்லாத ஒரு சிறுவன்...மற்றொரு இஸ்லாமியப்பெரியவரை சரமாரியாக கத்தியால் குத்துகிறான்.
துப்பாக்கியோடு வரும் ராமை பார்த்ததும்...
கோழையாகி இப்போது ‘முஸ்லீம்’ போல்  ‘தெளிவாக’ நடிக்கிறான்.
உயிருக்கு பயந்து அபயக்குரலெழுப்பும் இவனையும்...
அல்தாப்பையும் இணையாக்குகிறார்  ‘படைப்பாளி’ கமல்.

ராம் வானத்தில் சுட்டு எச்சரித்ததும் தப்பி ஒடுகிறான்.
குத்துபட்ட  ‘இஸ்லாமிய முதியவர்’...
 ‘ராம்- காப்பாற்ற வந்தவன்’ என எண்ணி நன்றி கூறும் பாங்கை வைத்து....
பெரியவர்,  ‘பார்வையற்றவர்’ என நாம் புரிந்து கொள்கிறோம்.
அவரையும் குறி வைத்து சுடும்  'மிருகமாக' ராம் இப்போது இருக்கிறான்.
சுடுகிறான்.
 குண்டு இல்லாததால்’கிளிக்’ என அமைதி காக்கிறது துப்பாக்கி .
குண்டை நிரப்பி,மீண்டும் சுட எத்தனிக்கையில்...துப்பாக்கிக்கு வேலை இல்லை.
தானாகவே உயிரை விட்டு விடுகிறார்  ‘முஸ்லீம் முதியவர்’.

வீட்டிற்குள்ளிருந்து வரும் சிறுமியின் குரல்... ராமின் கவனத்தை கலைக்கிறது.
 ‘பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமி’....கையில்  ‘மரப்பாச்சி பொம்மையை’ வைத்து நீட்டிக்கொண்டு...ஆதரவுக்கரம் நாடி...அபயக்குரலெழுப்பி அலைகிறாள்.
அலை பாயும் கரங்களுக்குள் சிக்காமல்... ராம் அலை பாய்கிறான்.

 ‘பார்வையற்ற இஸ்லாமிய சிறுமியின்’ கையில் இருக்கும்
‘மரப்பாச்சி பொம்மை’...
அம்ஜத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.
இங்கே  ‘அம்ஜத்தின் டயலாக்’ கனோட்டேஷன் ஆகிறது.

அம்ஜத் : 

 கிரைஸ்ட் பொறக்குறதுக்கு பல 1000 வருஷம் முன்னாலே...
'சீவேஜ் சிஸ்டம்' வேணும்னு நெனச்ச ‘சிவிலைசேஷன்’.


கொழந்தைக்கு வெளையாட பொம்மை வேணும்னு நெனச்ச சிவிலைசேஷன்.

நம்மள மாதிரி பெரியவங்க வெளயாட...
ஆளுக்கொரு சாமி வேணும்னு நெனக்கிற சிவிலைசேஷன் இல்லே...

ஆரியர்களோ...இஸ்லாமியர்களோ...கிருத்துவர்களோ...
வந்தார்களை எல்லாம் வாழ வைத்த சிவிலைசேஷன்.
குழந்தைகளுக்கு விளையாட பொம்மை கண்டு பிடித்த சிவிலைசேஷன்...
மதத்தின் பெயரால், குழந்தைகள் உயிரைக்கூட பறிக்கும் மிருகமாக மாறி விட்ட சிவிலைசேஷன்....
எங்கே போயிற்று நமது சிவிலைசேஷன்?
கேள்வி எழுப்பிய...  
‘ரௌத்திரன் கமல்தான்...கமல் மட்டும்தான்’.
 
மிருகத்தன்மையிலிருந்து... மனிதத்தன்மைக்கு... ராம் மீள்கின்ற... இக்காட்சிக்கு இணையாக ஒரு காட்சியை  ‘உலக சினிமாவில்’ சொல்ல முடியுமா?
சவால் விடுகிறேன்.
 ‘ஆயிரம் சாருக்கள்’ அணி வகுத்து வந்து... பாயிரம் பாடினாலும்...
 சந்திக்க தயாராய் இருக்கிறேன்.

ஹேராமின் அடுத்தப்பதிவில் இன்னும் சூடேற்றுவேன்.
காத்திருங்கள்.

இக்காட்சியின் மாட்சி காண... காணொளி காண்க...

        

28 comments:

 1. கமல்கூட இவ்வளவு தூரம் இந்த படத்தை ஆராய்ந்திருப்பாரா என்பது சந்தேகமே...

  ReplyDelete
  Replies
  1. ஒரு படைப்பை...படைப்பாளி பார்க்காத கோணத்தில் கூட பார்க்கும் சுதந்திரம் விமர்சகனுக்கு உண்டு.

   ஆனால் கமல் போன்ற மேதைகள் படைப்பில்...அப்படி விமர்சிக்க வாய்ப்பிருக்காது.
   காரணம்..ஒரு ஷாட்டைக்கூட 360 டிகிரி கோணத்தில் ஆய்வு செய்தே...வைப்பார்.

   தங்கள் பின்னூட்டம் மூலமாக இக்கருத்தை எழுத வைத்ததற்கு நன்றி.

   Delete
  2. எனக்கு கூட இதே சந்தேகம்தான். நம்ம உலக ரசிகர் இந்த படத்த அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேயறாறு.. ஒருவேளை இந்த படத்த ஓட விடாமல் செய்த நம்மதான் முட்டாள்களோ?

   Delete
 2. தொடர்ச்சியான நல்ல அலசல்கள்!
  ஆனால் அந்த அப்பாவி இஸ்லாம்முதியவர் தன்னால் கொல்லப்பட்டதைக் கண்டவுடனே குற்றவுணர்ச்சியில் மனம் மாறியிருக்கலாமே.. ஏன் சிறுமியைக் காணும் வரை கொலைவெறியுடன் திரிய வேண்டும்??

  ReplyDelete
  Replies
  1. தனது மனைவியை பறி கொடுத்த வேகத்தில் ‘கொலை வெறி’ கிளம்புகிறது சாகேத்ராமிற்கு.
   அல்தாப்,அப்பாவி பெரியவர்,பார்வையற்ற முதியவர் எல்லோரையும் பழி வாங்கினாலும் அடங்காத ராம்...கையில் ‘மரப்பாச்சி பொம்மை’ வைத்திருந்த பார்வையற்ற சிறுமியை பார்த்து
   ‘சிவிலைசேஷனாக’மாறுகிறான்.
   பண்டைய நாகரீகத்தை தோண்டி ஆராயும் ‘பழைய சாகேத் ராம்’ உயிர்தெழுகிறான்.

   மிக அற்புதமான கேள்வியை பின்னூட்டம் மூலம் எழுப்பிய நண்பர் ஜே.இஸட்டிற்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 3. ஹே ராம் தொடரில் இதுவரை நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பாகம் இதுவே... உணர்ச்சிகளை எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். அடுத்தடுத்த பாகங்களை விரைவில் வெளியிடவும்.

  கமல் பீஸ் தான்... தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் :-)

  ReplyDelete
  Replies
  1. இந்தப்பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் அனைத்துமே ‘மாஸ்டர்பீஸாக’ வருகிறது.

   நன்றி நண்பரே...

   Delete
 4. அண்ணே கலக்கல்.

  ஹே ராம் ஒரு அற்புதமான திரைப் படம்னா, உங்க பதிவு நிஜம்மாவே எனக்கு ஒரு அற்புதமான திரைப் பாடம். இனி இது போன்ற மகத்தான படைப்புக்களை உங்களை போல பன்முக கோணத்தில் பார்க்க பழகுகிறேன்.

  விடாம கடைசி வரைக்கும் 'சாரு' பிழிங்கன்னே. 'எல்லாம்' நசுங்கிடனும். இனி எவனும் 'குரைக்கவே' கூடாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபி...

   நமக்கு வாய்த்த எதிரிகள்... மிகவும் திறமைசாலிகள்.
   எனவே பூந்து விளையாடலாம்.

   Delete
 5. செம செம செம......கமல் தமிழ் சினிமாவில் அற்புதம்... அதுவும் பல வருடங்கள் முன்னாலே நிகழ்ந்து விட்ட மகா அற்புதம்...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...
   ஒரு பின்னூட்டத்தின் மூலமாக...ஒரு பிரபல பதிவுக்கு தாங்கள் எழுதிய தீர்ப்பை ரசித்து கொண்டே இருக்கிறேன்.
   சூப்பர்...

   Delete
 6. "மாஸ் வயலன்ஸ்" தொடர்பில் நாங்கள் அறிந்த , அனுபவித்த உதாரணம் மூலம் விளக்கியது எளிமை. உங்களது பதிவில் அனேக இடங்களில் சில தொழினுட்ப வார்த்தை பிரயோகங்கள் ( டெக்னிகல் டேர்ம்ஸ்0 வருவதனால் அதனை இது போன்ற எளிமையான தொனியில் விளக்குவது, என் போன்ற பாமரனுக்கு நன்மை பயக்கும்.

  யார் என்ன சொன்னாலும், கமல் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வி உள்ளே எழுந்தாலும் , என்னமோ கமலை விட்டுக்கொடுக்க முடியவில்லை, காரணம் என்னமோ தெரியாது. ஒருவேளை அந்த என்னமோக்களை தான் இந்த தொடரின் மூலம் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. சினிமா தொழில் நுட்ப பிரயோகங்களை முடிந்த வரை எளிமைப்படுத்தி சொல்ல முயற்சிக்கிறேன்.

   கமலின் சமூக அக்கறையை... அவரது படைப்புகளில் மட்டுமே காண முடியும்.
   இதற்காக மேடையேறி முழங்க வேண்டியதில்லை.
   படைப்பில்...பேசினாலே போதும்.
   விஸ்வரூபத்திலும்...பேசியிருப்பார்.
   கலைக்கண்ணோடு காண்பவர்களுக்கு மட்டுமே புலப்படும்...அச்செய்தி.
   நன்றி கிஷோகர்.

   Delete
 7. அனுபவிச்சு எழுதிறீங்க தல. நான் வலைப்பூவின் மிகப் புதிய அங்கத்துவர். இந்திய புத்தகங்கள் 500,1000 ரூபாவாகவும் விகடன்,உயிர்மை 120ரூபாவாக விற்கப்படும் யாழ்ப்பாணத்தில் இருந்தபடி தங்களைப் போன்ற வலைப்பதிவுகளை இலவசமாக பார்த்து சினிமா மற்றும் இதர விடயங்களின் உன்னதமான விடயங்களை அறிவதில் மகிழ்ச்சி. அப்புறம் ஹேராம் படத்தை பதின்ம வயசுகளில் அதில் வரும் கிஸ் சீனுக்காக பார்த்த ஞாபகம்.தற்போது 20ல் இருக்கும் என்னை மறுபடியும் பார்க்க வைத்துவிட்டீர்கள் வேறு ரசனையுடன்.. நான் எப்போதும் கமல் ரசிகன்தான் சுட்டு சுட்டு படம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் உலக சினிமா ரசனைக்கு என்னை மாற்றியவர்.அதை விட முக்கியம் சினிமாவின் மிகப் பெரிய ரசிகர் அவர். அன்பே சிவம் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க கேட்போம்.

  ReplyDelete
  Replies
  1. அன்பே சிவம் பற்றி நிச்சயம் எழுதுவேன்.

   தமிழகத்தில் 17 ரூபாய்க்கு விற்கப்படும் விகடன்,யாழ்ப்பாணத்தில் 120 ரூபாயா?
   தமிழர்கள் வாழும் பகுதிகளில் சுபிட்சம் நிலவுகிறது...என ஒரு கோஷ்டி பரப்புரை செய்து வருகிறது.
   அது எப்பேர்பட்ட ‘பொய் பரப்புரை’ என... உங்கள் பின்னூட்டம் சொல்கிறது.
   விடிவும் வரும்...முடிவும் வரும்...
   காத்திருப்போம்.

   Delete
  2. அத விடுங்க அண்ணே சுஜாதாட புக்ஸ் விலை கேட்டா அபிடியே ஷாக் ஆகிடுவிங்க

   Delete
 8. ஒவ்வொரு பிரேமும் கண்முன்னால் வைக்கிறீர்கள் விரிவான விளக்கங்களுடன்!!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி...நண்பரே!
   பேஸ்புக்கில் கூட என்னை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு...நெஞ்சார்ந்த நன்றியை இங்கே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

   Delete
 9. இவ்ளோ மேட்டர் இருக்கா...ரீல் தேய தேய பார்த்தாலும் நமக்கு இந்த அளவுக்கு புரியாது..வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. ‘அடக்கமே’...உன் பெயர்தான் கோவைநேரம் ஜீவாவா!

   Delete
 10. சம்மந்தமில்லாத ஒரு விடயத்தை இங்கு பதிகின்றேன். ஒரு காமெடி பீஸின் லேட்டஸ்ட் உளறல்.
  "சமீபத்தில் நான் படித்த wolf totem நாவல் என் எழுத்தைப் பற்றிய என்னுடைய மேற்கண்ட மதிப்பீட்டை உறுதிப் படுத்துகிறது. மேன் ஏஷியன் புக்கர் பரிசு பெற்று 2 கோடி பிரதிகள் விற்றிருக்கும் இந்த நாவலை விட பல மடங்கு உயர்வானது எக்ஸைல். "
  "Transgressive writing-ஐப் பொறுத்தவரை சர்வதேச அளவில் சுவாரசியமாகவும் தரமாகவும் எழுதக் கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டு பேர். ஒருவர், Cristina Peri Rossi. இன்னொருவர், அடியேன். இதை நீங்களே மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்."
  இவர் உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிகிறாரா

  ReplyDelete
 11. ‘ஆயிரம் சாருக்கள்’ அணி வகுத்து வந்து... பாயிரம் பாடினாலும்...
  சந்திக்க தயாராய் இருக்கிறேன்.

  சம்மந்தமில்லாத ஒரு விடயத்தை இங்கு பதிகின்றேன். ஒரு காமெடி பீஸின் லேட்டஸ்ட் உளறல்.
  "சமீபத்தில் நான் படித்த wolf totem நாவல் என் எழுத்தைப் பற்றிய என்னுடைய மேற்கண்ட மதிப்பீட்டை உறுதிப் படுத்துகிறது. மேன் ஏஷியன் புக்கர் பரிசு பெற்று 2 கோடி பிரதிகள் விற்றிருக்கும் இந்த நாவலை விட பல மடங்கு உயர்வானது எக்ஸைல். "
  "Transgressive writing-ஐப் பொறுத்தவரை சர்வதேச அளவில் சுவாரசியமாகவும் தரமாகவும் எழுதக் கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டு பேர். ஒருவர், Cristina Peri Rossi. இன்னொருவர், அடியேன். இதை நீங்களே மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்."
  இவர் உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிகிறாரா ?
  இந்த லூசு சாருவின் புலம்பலுக்கு பக்க பாட்டு பாட சாருவின் அல்லக்கைகளான பிச்சைக்காரனும் நம்ம கருந்தேளும் என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை

  ReplyDelete
 12. vanakkam ,nenga puthuputhu arthangal puthiya thalimurai tvla vara oru news show.atthula sonnaga americans ellam velli ulagathai pathitheriyathavanga pannam panam endru alairavanga.americans pala peru psycho endru sonnargal irandu periaver.indians elloram ariaamayile irukkagala athula americans vida indians parava illai endru sonnargale.intha show americavala sikh oru americanla suttu kollapatathale pesamattathu

  ReplyDelete
 13. இந்த தொடர் முடிந்ததும் சிறு புத்தகமாக போடுங்கள்

  ReplyDelete
 14. There will be one particular shot in this movie(after the riot when Kamal would have taken many Muslim lives), where Kamal walks past an elephant whose mahout would have been killed in the riot..the elephant will be out of any control....பாகன் இல்லாத யானையை போன்று மக்கள் 'மதம் பிடித்து' அலைகின்றனர் என்பதை காட்சி படுத்தி இருப்பார் இயக்குநர் கமல்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.