Nov 21, 2012

மணிரத்னம் V \ S கோவைத்தம்பி...யார் சரி ?

நண்பர்களே...
 ' CONVERSATION WITH MANI RATHNAM' என்ற நூலை...
திரு.பரத்வாஜ் ரங்கன் [ஹிந்து பத்திரிக்கையாளர்] உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.
திரு. மணிரத்னத்தை பேட்டி கண்டு...அவரது படைப்புகளை பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதியிருக்கிறார் நூலின் ஆசிரியர்..


வந்தது வினை...எதிர்வினை.
இந்த மாதம்...தயாரிப்பாளர்கள் V \ S படைப்பாளிகள் மாதம் போல் இருக்கிறது.
திரு.முக்தா சீனிவாசனின் தொடர்ச்சியாக கோவைத்தம்பி பொங்கியிருக்கிறார்.
தினத்தந்தியில் [ 20 - 11 - 2012 ] அவரது அறிக்கை வெளி வந்திருக்கிறது.

கோவைத்தம்பியின் அறிக்கையிலிருந்து....
"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. 
அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 
28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். 

எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். 
அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். 

சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. 
என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். 
ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," .\\\ சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது \\\ கோவைத்தம்பியின் இவ்வரிகளை...மவுன ராகம், நாயகன்,அஞ்சலி, இதயத்தை திருடாதே, தளபதி,ரோஜா, பம்பாய், அலைபாயுதே,உயிரே, குரு, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள்...
 “அடங்கப்பா...இது உலக காமெடிடா” என சிரித்து கும்மாளமிட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கிறதாம். 

\\\ அந்த காலகட்டத்தில், 
தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது \\\

மணிரத்னத்துக்கு இதயக்கோயில் நாலாவது படம். 
1 பல்லவி அனுபல்லவி [ கன்னடம் ]
2 உணரு [ மலையாளம் ]
3 பகல் நிலவு [ தமிழ் ]
தனது முதல் தமிழ் படமான பகல் நிலவு படத்திலேயே தனி முத்திரை பதித்து
தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர்.
கோவைத்தம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
கோவைத்தம்பி தான்தான் தமிழ்நாடு என்ற நினைப்பில் வாழ்கிறார் போலும்.

\\\ திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது \\\


மணிரத்னம் படைப்பிலேயே மாஸ்டர்பீஸ் இருவர்தான்.

உலகசினிமா ரசிகர்களும், சினிமா மொழி தெரிந்த திராவிட இயக்க பற்றாளர்களும் இருவர் படத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
திராவிட இயக்கதின் இரண்டு தலைவர்களின் நட்பையும், அதையொட்டிய வாழ்க்கையையும் பதிவு செய்த படம் இருவர்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் லோகோவை  அதிமுக வண்ணத்தில் காட்டி காசு பார்த்தவ்ர் என உங்களைத்தான் கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
திராவிட இயக்கத்தலைவர்களில் ஒருவர்  வரலாற்றையாவது  படமாக்கியிருந்தீர்கள் என்றால்...
அந்த நன்றிக்கடனுக்காக இக்கட்டுரையையே எழுதி இருக்க மாட்டேன்.

சர்ச்சைக்குறிய இதயக்கோயில் படம் பற்றி நான் கேள்விப்பட்ட
சில விவரங்களை கூறுகிறேன்.
இதயக்கோயில் படத்திற்கு கதை தயார் செய்து விட்டு...
அக்கதையை திரைக்கதையாக்கி இயக்க   ‘வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு’ வலை வீசி தேடினார்கள்.
அதில் ஒருவர் பாண்டியராஜன்.
பாண்டியராஜன்  ‘கன்னிராசி’ என்ற படத்தில் அறிமுக இயக்குனராக ஜெயித்த நேரம்.
கோவைத்தம்பி அதிமுகவில் செல்வாக்கோடு இருந்ததால்...
அவரது பட இயக்குனர்கள் அனைவரையும்  ‘படுத்துவார்’ என கோடம்பாக்கம் முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவரது படங்களை இயக்கியதில்...
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் [ பயணங்கள் முடிவதில்லை,நான் பாடும் பாடல்],
இயக்குனர் மணிவண்ணன் [இளமைக்காலங்கள்] முக்கியமானவர்கள்.

கோவைத்தம்பியின் வீர தீர பராக்கிரமங்கள் தமிழ்த்திரையுலகில் எல்லோருக்கும் தெரியும்.
பாண்டியராஜனுக்கு தெரியாதா ?...அவர் சிக்கவில்லை.
மணிரத்னம் மாட்டினார்... ‘அடி மாட்டு ’ சம்பளத்தில்.
கொத்தடிமையாகத்தான் மணிரத்னம் இதயக்கோயிலில் பணியாற்றினார்.

உச்ச கட்ட அராஜகம் ஒன்றை...இதயக்கோயில்  படம் வெளியான பிறகு கோவைத்தம்பி நடத்தி காட்டினார்.
படம் தியேட்டரில் வெளியான பிறகு கவுண்டமணி - செந்தில் காமெடியை மணிரத்னத்துக்கு தெரியாமல் ஷூட் செய்து இணைத்து விட்டார்.
பட விளம்பரத்திலும் கவுண்ட மணி- செந்தில் காமெடியை பிரதானப்படுத்தினார்.
ஒரு படத்தில் இயக்குனருக்கு தெரியாமல்  ‘ஒரு பிரேமை’ கூட நீக்கவோ சேர்க்கவோ எவனுக்கும் உரிமை கிடையாது....படத்தயாரிப்பாளர் உட்பட.
இந்த நியாய தர்மம் எல்லாம் ‘பிச்சைக்காரன்களுக்கு’ தெரியாது.

இப்போது கூட நீங்கள் அப்படத்தை பார்க்கும் போது...
கவுண்ட மணி  ‘காமெடி டிராக்’...
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட  ‘டெக்னிக்கல் தரம்’
படு மோசமாக இருப்பதை உணரலாம்.

கோவைத்தம்பி வீழ்ந்ததுக்கு காரணம் மணிரத்னம் இல்லை.
அவரது செயல்பாடுகள்தான்.
அவரது படங்களில் முதுகெலும்பாக இருந்த இளையராஜாவை புறக்கணித்தார்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியின் எந்தப்படமும் வெற்றிகரமாக ஓடவில்லை.
எல்லாமே அடிதான்.

ஒரு தயாரிப்பாளராக... திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு
அவர் தயாரித்த படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடின.

படம் ஓடியதே தன்னால்தான் என்ற மண்டைக்கனம் யாருக்கு வருகிறோதோ அவர்கள் அத்தனை பேரும் ‘தொலைந்து போவார்கள்’ .
இந்த விதி,  தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும்.


கோவைத்தம்பிக்கு மரண அடி கொடுத்தது மணிரத்னம் அல்ல... புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.யார் அவர்கள்தானாம்.
தனது கட்சியில் இருக்கும் நபர்கள் அராஜகம் செய்தால்...
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும்  ‘காயடித்து’ விடுவாராம்.
கோவைத்தம்பிக்கும்  ‘அது’ நடந்ததாம்..
ஒரு பிரபல தியேட்டரை வாங்க அதன் உரிமையாளரை உருட்டி மிரட்டினாராம் கோவைத்தம்பி.
தியேட்டர் அதிபர் புரட்சித்தலைவரிடம் அடைக்கலம் போனாராம்.
எம்ஜியார்... கோவைத்தம்பியை அழைத்து நைசாக விசாரித்தாராம்.

“என்ன விலைக்கு வாங்கலாம் ? ”

“ பணத்தை என்னிடம் கொடு...
நானே அந்த தியேட்டரை வாங்கித்தருகிறேன் ” .

பணத்தை கொடுத்து காத்திருந்தாராம் கோவைத்தம்பி.
எந்த தகவலும் வராததால்...
நேரடியாக போய் கேட்டாராம்  கோவைத்தம்பி .
எம்ஜியார்... திருப்பி கேட்டாராம்...
எந்த பணம் ? எந்த தியேட்டர் ?
தியேட்டர்காரருக்கு பிரசனை தீர்ந்தது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் பாணியே தனிதான்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இதயக்கோயில் பாடலை காணொளியில் காண்க...
17 comments:

 1. கோவைத்தம்பியின் அராஜகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அவரது அராஜகத்தை கண்டும்...கேட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள் கோவைவாசிகள்.
   புரட்சித்தலைவர் அவரது கொட்டத்தை அடக்கிய பின் அடங்கி கிடந்தார்.
   இப்போது மெல்ல ஆட ஆரம்பித்து இருக்கிறார்.

   வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 2. அருமையான பதிவு..எவ்வளவு தகவல்கள்..இயக்குனர்கள், கலைஞர்களின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் என்றுமே போராட்டம்தான் அண்ணா..ரொம்ப நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்கார் ரவிச்சந்திரன்,சவுத்ரி போன்ற தயாரிப்பாளர்கள் அமைவது வரம்.
   இவரைப்போல அமைவது சாபம்.

   நன்றி குமரா.

   Delete
 3. பதிவர் பிச்சைகாரன் போன்ற காமெடி பீசுகளின் கதைக்கெல்லாம் பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
  (வெறி குட்டி ஒன்றின் அல்லக்கையான அவர் அந்த வெறி குட்டிக்கு ஜால்ரா போடுவதையே வாழ்க்கையாக கொண்டவர். )

  ReplyDelete
  Replies
  1. மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
   அவரை பற்றி அபாண்டமாக தாக்கி கோவைத்தம்பி எழுதியதால்...
   எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன்.
   அவ்வளவே.

   இன்னும் சில உண்மைகள் இருக்கிறது.
   அவற்றை எழுதுவது நாகரிகமாகாது.

   வெ.கு.ஜால்ராக்களின் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியுமா என்ன !

   Delete
 4. என்னவோ போங்க.. இப்படி அடிச்சுக்கறாங்க!!

  ReplyDelete
  Replies
  1. என்ன இவ்வளவு சலிப்பாயிட்டீங்க...

   இன்னும் வருவாங்க...பார்த்துகிட்டே இருங்க...

   Delete
 5. enna unmai? aaramba kaalaththil manirathnam padangalin footage palamadangu engira unmaiya? aascar ravichandran varama? siripputhaan varukirathu.ip pathivai manirathnam padiththaalum sirikkaththaan seivaar.

  ReplyDelete
  Replies
  1. இப்பின்னுட்டத்தை படித்தால் சிப்பு வருகிறது...சிப்பு.
   ஹேஹ்ஹே.

   Delete
 6. "இதயகோயில்" மணிரத்னத்தின் 4-வது படம் என்றாலும் "மௌனராகம்" வெளிவந்த பின் தான் "பகல்நிலவு" அவர் இயக்கிய படம் என பரவலாக தெரிய ஆரம்பித்தது. அந்த கால கட்டத்தில் மைக் மோகனுக்கு "பயணங்கள் முடிவதில்லை", "உதயகீதம்", படங்களைத் தொடர்ந்து "இதயகோயில்"- லும் அவருக்கு ஜாக்பாட். மூன்று படங்களும் கோவைத்தம்பி தயாரித்தது என நினைக்கிறேன். மைக் மோகனும் மைக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "நான் பாடும் பாடல்", "இளமை காலங்கள்", "பாடு நிலாவே", "குங்குமச்சிமிழ்", "ஓ மானே மானே" என பல வெற்றிப் படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
  இப்படங்களின் வெற்றிக்கு இன்று வரை காரணம் இரண்டே பேர் தான். இளையராஜா & SPB.
  So, இதயகோயிலுக்காக மணிரத்னமும் கோவைத் தம்பியும் அடித்துக் கொள்வதில் அர்த்தமே இல்லை. மணிரத்னம் இந்திய சினிமாவில் ஒரு trend setter என்பதில் சந்தேகமே இல்லை. But, 1985-ல் தமிழ் சினிமாவில் ஒரு musical subject-ற்கு கோவைதம்பியையும், மோகனையும் விட்டால் வளர்ந்து வரும் ஒரு இயக்குனருக்கு வேறு ஆள் இல்லை.. அப்போ மூடிக் கொண்டிருந்த அறிவுஜீவி இயக்குனர் இப்போ மட்டும் வாயைத் திறந்தது ஏனோ?!
  நான் கோவைத்தம்பியை support செய்யவில்லை, மணிரத்னம் இப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை என்பது மட்டுமே என் கருத்து.
  பி.கு.:
  "ஓ மானே மானே" படத்தில் "பொன்மானை தேடுதே" என்ற அருமையான பாடலை மோகனுக்காகப் பின்னணி பாடியவர் கமல்ஹாசன் !!
  "பயணங்கள் முடிவதில்லை" படத்திற்காக மோகனுக்கு "சிறந்த நடிகர்" பிலிம் பேர் விருது கிடைத்தது என்பது நம்ப இயலாத உண்மை...!!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே பல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
   நன்றி.

   \\\ மைக் மோகனும் மைக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "நான் பாடும் பாடல்", "இளமை காலங்கள்", "பாடு நிலாவே", "குங்குமச்சிமிழ்", "ஓ மானே மானே" என பல வெற்றிப் படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
   இப்படங்களின் வெற்றிக்கு இன்று வரை காரணம் இரண்டே பேர் தான். இளையராஜா & SPB. \\\

   தாங்கள் கூறிய கருத்தின் பேரில்...எனது கருத்தை சொல்ல அனுமதியுங்கள்.
   ஒரு படத்தின் வெற்றிக்கு முழு முதற் காரணம் இயக்குனர் மட்டுமே...
   மற்றவர்கள் அவருக்கு பின்னால் அணி வகுப்பவர்களே.
   மேற் கூறிய படங்களில் இயக்குனர்கள் பணி சிறப்பாக இருந்ததால்தான் இசையமைப்பாளரும் ,பாடகரும் சோபிக்க முடிந்தது.
   இயக்குனர் சொதப்பினால், இசையமைப்பாளரும்...பாடகரும் படத்தை தூக்கி நிறுத்த முடியாது.
   உதாரணத்திற்கு, இளையராஜாவின் சொந்தப்படங்களே இருக்கிறது.
   பாவலர் கிரியேஷன் தயாரித்த...ஆனந்தகும்மி,கீதாஞ்சலி.
   இப்படங்களின் பாடல்கள் அட்டகாசமாக இருக்கும்.
   இயக்குனரின் சொதப்பலால் இப்படங்கள் பப்படங்களாகிப்போனது.

   நீங்கள் குறிப்பிட்ட இளமைக்காலங்கள் படத்தைப்பற்றி முக்கியமான தகவல்.
   இப்படம் கோவைத்தம்பி தாயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்து எல்லாப்பாடல்களும் தயார் ஆகி விட்ட நிலையில் கோவைத்தம்பி குடுத்த குடைச்சலில் ஆர்.சுந்தர்ராஜன் வெளியேறி விட்டார்.
   அந்த இடத்திற்கு மணிவண்ணன் வந்தார்.
   ராஜாவின் பாடல்களுக்கு ஏற்ற்வாறு கதை எழுதி திரைக்கதை அமைத்து வெற்றி படமாக ஆக்கி காட்டினார் மணிவண்ணன்.

   ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்பு இயக்குனரே.

   Delete
 7. உலக சினிமா ரசிகனுக்கு, உங்களுக்கும் எனக்கும் சில கருத்துமோதல்கள், உரசல்கள் இருந்தாலும் நீங்கள் இப்போது மணிரத்னம் பற்றி எழுதி இருக்கும் கருத்துக்கு முதலில் ஒரு பெரிய சபாஷ். நிறைய பேர் மணிரத்தினத்தை இணையத்தில் காட்டமாக விமர்சிப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா இப்போது வந்திருக்கும் இடத்தை முதலில் அடையாளம் காட்டியவரே இப்போது பலவிதமான விமர்சங்களுக்கு ஆளாகி இருக்கும் மணிரத்னம்தான். எப்படி பராசக்தி, பதினாறு வயதினிலே படங்கள் தமிழ் திரையின் போக்கை மாற்றினவோ அதே போல நாயகன் தமிழ் சினிமாவின் ஒரு மகா பெரிய மைல் கல். நாயகன் வருகைக்கு பிறகே தமிழ் சினிமாவின் நாடகத்தனமான பாணி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இயல்பான காட்சி அமைப்புகளும் வசனங்களும் வர ஆரம்பித்தன. நீங்கள் சொல்லி இருக்கும் கோவை தம்பி பற்றிய செய்திகளுக்கு நன்றி. இவரை யாரென்றே தற்போது யாருக்கும் தெரியாத இந்த வேளையில் இவர் இந்தியாவே ஆராவாரமாக எதிர் பார்க்கும் மணிரத்னத்தை விமர்சிப்பது வேடிக்கைதான். நல்ல வேளையாக உங்களை போன்ற சிலராவது உண்மையை எழுதுவது ஆரோக்கியமான விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. திரு.காரிகன் அவர்களே...
   தங்கள் வருகைக்கு நன்றி.
   கருத்து மோதலை மறந்து தாங்கள் பின்னூட்டமிட்டது...
   எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

   என் பதிவில் மாற்றுக்கருத்து இருப்பின் நீங்கள் பின்னுட்டமிடுங்கள்.
   வரவேற்கிறேன்.

   Delete
 8. நண்பரே...இது புலனாய்வுச்செய்தி இல்லை.
  எண்பதுகளில் கோடம்பாக்கத்தில் தொடர்புடைய அனைவருக்கும் இச்சம்பவங்கள் நன்கு தெரியும்.

  ReplyDelete
 9. உலக சினிமா ரசிகருக்கு, நான் எப்போதுமே கருத்துக்களோடு மோதுபவனே தவிர ஆட்களோடு கிடையாது. எனக்கும் உங்களுக்கும் ஒரு கருத்து உரசலே தவிர உங்களை நான் என்றைக்கும் என் எதிரியாக கருதியது கிடையாது. நான் உங்களின் எல்லா பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவன். எனவேதான் தற்போது நீங்கள் எழுதி இருக்கும் மணி ரத்னம் பற்றிய பதிவுக்கு நான் பின்னூட்டம் போட்டேன். சிவாஜிக்குக்கு பிறகு தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட வேறு ஒருவர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதை நான் எப்பொழுதுமே மறுக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பல சமயங்களில் நாம் ஒரே கருத்தையே பிரதிபலிக்கின்றோம். இதை நான் எழுதுவது கூட என்னுடைய கருத்தை நீங்கள் வெளியிட்ட அந்த உயர்ந்த மனோபாவத்துக்காக. (என் கருத்தை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.) உலக சினிமா ரசிகரும் காரிகனும் நண்பர்களாக இருப்பதில் எந்த வித பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மீண்டும் நன்றிகள் உங்களுக்கு.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.