Nov 17, 2012

பிரச்சனையில் சிக்காமல் படமெடுப்பது எப்படி ?நண்பர்களே...
ஒரு புதிய திரைப்படம் எடுக்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.
கதை விவாதத்தில் பங்கெடுக்க என்னையும் அழைத்தார்கள்.
அதன் நேரடி ஒளிபரப்பு இதோ...

இயக்குனர் : படத்தோட ஹீரோ நம்ம இந்திய உளவுத்துறையில முக்கிய பதவியில இருக்காரு.

உதவியாளர் 1 : வேணாம் சார்...
பிரச்சனையாயிரும்.

இயக்குனர் : என்ன பிரச்சனை வரும் ?

உதவி 1: உளவுத்துறை, ராணுவம், போலிஸ் இதுல எதை படத்துல காட்டுனாலும்...
எங்க இன உணர்வை  பாதிக்கும்னு ஒரு அமைப்பு சொல்லியிருக்கு.

இயக்குனர் : அப்ப வேணாம்...
ஹீரோ கலெக்டர்.

உதவி 2 : ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சங்கம் இருக்கு.
அவங்க எதிர்ப்பாங்க.

இயக்குனர் : சங்கமே இல்லாத துறையிருக்கா?.

உதவி 2 : இந்தியாவிலயே இல்ல.

இயக்குனர் : அப்ப ஹீரோவை பிச்சைக்கரனா ஆக்கிரட்டுமா ?

உதவி 3 : சார்...அவங்களுக்கும் சங்கம் இருக்கு.
ரொம்ப ஸ்டாராங்க்.

இயக்குனர் : என் ஹீரோ வேலை வெட்டி இல்லாதவன்.

உதவி 1, 2, 3 : சூப்பர்.

நான் : பெரும்பாலும் எல்லா தமிழ் சினிமாவிலேயும் ஹீரோ வே.வெ இல்லாமதானே வராங்க.

இயக்குனர் : வேலை வெட்டி இல்லா ஹீரோ...வேலைக்கு போற பெண்ணை காதலிக்கிறான்.

உதவி 1, 2, 3 : சூப்பரோ சூப்பர்.

நான் : புதுசா ஏதாவது டிரை பண்ணலாமே !

இயக்குனர் : சார்...எங்க நெலமை தெரியாம பேசாதீங்க...
ஜாதி பேரை யூஸ் பண்ண முடியாது.
மதம் மூச்சு விட முடியாது.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூட கோபால் பல்பொடி இருப்பதை வேணா காட்டலாம்.
கோபமா பேசற மனுசனை காட்ட முடியாது.
ஜாதி,மதம் எல்லா அமைப்பும் கியூ கட்டி வந்து அடிக்கும்.
ஆப்கான் தீவிரவாதி என்ன...டீ விக்கிறவாதியை பத்தி கூட படம் பண்ண முடியாது.
அடப்போங்க சார்...
எங்க தலையெழுத்து இனி இப்படித்தான் படம் பண்ணனும்...
இருந்தாலும் நீங்க சொல்லீட்டீங்க...
புதுசா டிரை பண்றேன்.
வேலைக்கு போற பொண்ணு ...வேலை வெட்டி இல்லாத பையனை காதலிக்கிறா !
நான், உதவி 1, 2, 3 : பிரமாதம்.

13 comments:

 1. வேலைவெட்டி இல்லாதவனைக் காதலிப்பதாகச் சொல்வது வேலைக்குப் போகும் பெண்களைக் கேவலப்படுத்துவது போல் ஆகாதா? இந்தக் கருத்திற்கே எதிர்ப்பு தெரிவித்து மகளிரணித் தொண்டர்கள்..ஆர்ப்பாட்டத்திற்கு ரெடியாம்!

  ReplyDelete
  Replies
  1. சரிதான் அதுக்கும் பிரச்சனையா !
   ‘அப்போ ஒரு ஆண்...ஒரு பெண்ணை காதலிக்கிறான்’...
   இந்த ஐடியா புதுசா இருக்கும்னு நெனைக்கிறேன்.

   Delete
  2. //அப்போ ஒரு ஆண்...ஒரு பெண்ணை காதலிக்கிறான்’...
   இந்த ஐடியா புதுசா இருக்கும்னு நெனைக்கிறேன்.//

   ஆஹா..பிரம்மாதம்..பிரம்மாதம்.கதை..கதை! இன்னும் எழுதுங்க பாஸ். நடுநடுல்ல பஞ்ச் டயலாக்கையும் போட்டுக்கோங்க.

   (குணா ஸ்டைல்லயே படிச்சிக்கோங்க!)

   Delete
 2. நல்ல சிந்தனை,,ஆழ்ந்த கருத்துக்கள்...அற்புதமான பதிவு...(வேற வழி??)

  ReplyDelete
 3. #டவுட்டு
  அது எப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கலாம் என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் சங்கம் சண்டைக்கு வராதா?

  ReplyDelete
  Replies
  1. இந்த கான்செப்டுக்கும் சண்டை வருமா !
   மாத்திருவோம்.

   செவ்வாய் கிரக ஆண்...புதன் கிரக பெண்ணை காதலிக்கிறான்.
   இந்தக்காதலை இரண்டு கிரகத்திலுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
   எவ்வாறு காதலர்கள் இணைந்தனர் ? என்பதே படம்.

   இது ஓகேவா ?

   Delete
  2. //செவ்வாய் கிரக ஆண்...புதன் கிரக பெண்ணை காதலிக்கிறான்.
   இந்தக்காதலை இரண்டு கிரகத்திலுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
   எவ்வாறு காதலர்கள் இணைந்தனர் ? என்பதே படம்.

   இது ஓகேவா ?//

   இரண்டு கிரகத்திற்கு இடையே பகைமூட்டுவது போல உங்கள் படம் உள்ளது என்று அவர்கள் சண்டைக்கு வரமாட்டார்களா ? :)

   சரி அவர்களுக்கு எப்படி பெயர் வைப்பீர்கள் ? அவர்கள் எந்த மதத்தவர் என்று பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியாதா ?:)

   Delete
  3. ///இரண்டு கிரகத்திற்கு இடையே பகைமூட்டுவது போல உங்கள் படம் உள்ளது என்று அவர்கள் சண்டைக்கு வரமாட்டார்களா ? ///

   சண்டைக்கு வர மாட்டார்கள்.
   ஹாலிவுட்காரர்கள் அவர்களை மோசமாக சித்தரித்து எடுத்த ஏலியன்,பிரிடேட்டர் வகையறா படங்களூக்கே அவர்கள் கோபப்படவில்லை.

   ///சரி அவர்களுக்கு எப்படி பெயர் வைப்பீர்கள் ? அவர்கள் எந்த மதத்தவர் என்று பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியாதா ? ///

   கதாநாயகன் பெயர் 12345.
   கதாநாயகி பெயர் 54321.
   இந்த பெயருக்கு ஜாதி, மதம் பிரச்சனை வராது என நம்புகிறேன்.

   Delete
  4. //சண்டைக்கு வர மாட்டார்கள்.
   ஹாலிவுட்காரர்கள் அவர்களை மோசமாக சித்தரித்து எடுத்த ஏலியன்,பிரிடேட்டர் வகையறா படங்களூக்கே அவர்கள் கோபப்படவில்லை.//

   ஒருமுறை இருமுறை பொறுத்தோம் இனியும் பொறுக்கமாட்டோம் என்று பொங்கி எழ மாட்டார்களா ?

   //கதாநாயகன் பெயர் 12345.
   கதாநாயகி பெயர் 54321.
   இந்த பெயருக்கு ஜாதி, மதம் பிரச்சனை வராது என நம்புகிறேன்.//
   ம்ம்ம் இது சரி. இதற்க்கு எதிர்ப்பு வராது என்றே நானும் நம்புகிறேன்

   Delete
 4. ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
  இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

  ReplyDelete
 5. நல்ல கருத்துக்கள் பதிவுக்கு நன்றி....

  ReplyDelete
 6. //செவ்வாய் கிரக ஆண்...புதன் கிரக பெண்ணை காதலிக்கிறான்.
  இந்தக்காதலை இரண்டு கிரகத்திலுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
  எவ்வாறு காதலர்கள் இணைந்தனர் ? என்பதே படம்.//

  புரொடியூசர் "புக்தா லீனிவாசன்" இருபத்தியைந்து வருடங்களுக்கு பிறகு பட்ஜெட்டை அதிகப்படுத்திவிட்டதாக சொல்வார். பரவாயில்லையா??

  ReplyDelete
  Replies
  1. நல்ல படம் எடுத்தாலும்...நாலு பேர்கிட்ட திட்டு வாங்கத்தான் செய்யணும்.

   Delete

Note: Only a member of this blog may post a comment.