Oct 26, 2011

ஏழாம் அறிவை காப்பியடிக்கலாம் வாங்க....

 “ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி கொடுக்க ஹாலிவுட்டே பரபரப்பாகி சுறுசுறுப்பாகி விட்டார்கள்.

மெமண்டோ,இன்சப்ஷன் போன்ற வெற்றி படங்களை தந்த கிறிஸ்டோபர் நோலன் டீம்...

இன்சப்ஷன் ஹிட்டை தூக்கி சாப்பிட மாதிரி மெகா ஹிட் கான்சப்ட் பிடிச்சுட்டேன் என நோலன் கொக்கரிக்க
 “சார்...இந்த படத்துலயும் கனவு வருதா....
ஏன்னா...இன்சப்ஷன் நடிச்சதுல இருந்து எது கனவு?எது நிஜம்? புரியாம தவிக்கிறேன்.
இண்ணைக்கு காலையில கக்கா போகும் போது கூட அந்த கன்ப்யூசன் வந்திருச்சி...
கனவுல போறமா?நிஜத்துல போறமான்னு?
அப்புறம் சக்கரம் விட்டு கண்டு பிடிச்சேன்” என டிக்காப்ரியா பரிதாபமாக உரைக்கிறார்.

 “சார்...கவலையை உடுங்க...
எங்க ஊர் தக்காளி ஹன்சிகாதான் உங்க ஜோடி....
கேட் வின்ஸ்லேட்டையே உஷார் பண்ண பார்ட்டி நீங்க...
ஹன்சிகா உங்களுக்கு ஜூஜூபி மேட்டரு”என சந்தானம் கலாய்க்கிறார்.

டிக்காப்ரியா சந்தானத்தை பார்த்து மேலும் கலவரமாகிறார்.

“சார்...சமீப தமிழ் படங்கள் எல்லாத்தையும் பாத்தேன்.
 படத்துல கதை இருக்கோ இல்லியோ....
 இவர் இருக்காரு...
படம் பூரா ஹீரோ கூட வந்து எல்லாரையும் கலாய்ப்பாரு...
இண்ணைக்கு வெள்ளிக்கிழமைன்னு இவர் டயலாக் சொன்னாக்கூட அந்த ஊர் ஜனங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க ”
என டிக்காப்ரியாவை தெளிவாக்குகிறார் நோலன்.

“சார்...நேற்று வரைக்கும் நீங்க ஹாலிவுட் ஸ்டார்.
இண்ணையிலயிருந்து நீங்க ‘மெர்க்குரிஸ்டார் டிக்கா காந்த்’
அப்புறமா உங்க ரசிகர்களை வச்சு நற்பணி மன்றம் திறந்து தையல் மிசினெல்லாம் கொடுக்கணும்.
அப்பதான் ஸ்ட்ரெயிட்டா ஒயிட் ஹவுஸ் போக முடியும்” என டிக்காப்ரியாவை மேலும் டெரராக்குகிறார் சந்தானம்.

“நான் எதுக்கு ஒயிட் ஹவுஸ் போகணும்?”என டிக்காப்ரியா மெர்சலாகி...மெமரி லாசாகி.... “அபிராமி....அபிராமி” என குணாவாகிறார்.

டைட்டானிக்,அவதார் வெற்றி படைப்புகளை தந்த ஜேம்ஸ் கேமரூன் டீம்...

டாம் க்ரூசை பார்த்து “ஒப்பனிங் சீன்ல 100 ஹெலிகாப்டர்ல வந்து இறங்குறீங்க”என ஷாக் கொடுக்கிறார் கேமரூன்.

 “நான் எப்படி ஒரே நேரத்துல 100 ஹெலிகாப்டர்ல வந்து எறங்க முடியும்?”என  டாம் க்ரூஸ் ஜெர்க்காக....
 “டாம்... ஒயிட்& ஒயிட்ல கறுப்பு கூலிங்கிளாஸ் போட்டு லாங் கோட்டு பறக்க  ஒரு ஹெலிகாப்டர்ல இறங்கி ஸ்டைலா லாங் வாக் வற்றீங்க....
பின்னாடி 99 ஹெலிகாப்டர்ல 99 பாடிகார்ட்ஸ் ஃபுல் பிளாக சூட்ல....
 கருப்பு கூலிங் கிளாஸ்ல....
வற்றாங்க...
ஃபுல் ஷாட் ஸ்லோ மோசன்தான்
ரீ ரிகார்டிங் யுவன் சங்கர் ராஜா போடறார்.இந்த மியுசிக்ல அவர் எக்ஸ்பர்ட்.
டொய்ங்...டொய்ங்னு....அலற வைப்பாரு.
அப்புறம், நான் தனி மரம் இல்ல....
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு...
இரண்டு ஏக்கர் வாழை மரம்....
மூணு ஏக்கர் முந்திரின்னு பஞ்ச் டயலாக் பேஸ்ணும்”என கேமரூன்மூச்சு வாங்க டாம் மயக்கமாகிறார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பொங்குகிறார்.

“என் இனிய இங்கிலீஷ் மக்களே!
ஜூராசிக் பார்க்கில் டைனசரை காட்டி பயமுறுத்திய இந்த ஸ்பீல்பெர்க்
கவுபாய் மன்னன் கிளீண்ட் ஈஸ்ட்வுட் கை பிடித்து வருகிறேன்.
துப்பாக்கி பிடித்த கையில் தொரட்டி கொடுக்கப்போகிறேன்.
அந்தக்கரிசக் காட்டின் கந்தக வாசத்தை பாசத்தோடு பறிமாறப்போகிறேன்....கட்..கட்
 யாருப்பா.... கேமரா பீல்டுக்குள்ளே....

அய்யா...அய்யா....எஞ்சாமி.....நா...நல்லா வேசம் கட்டுவேய்யா....
எங்கூர்ல ஒரு பய கூப்பிட மாட்டேங்கான்.
அய்யா...வெள்ளச்சாமி....
நீயாவது ஒரு வேசம் கொடு அய்யா...

ஒரு நாளைக்கு மூணு வேளை சோறு போட்டு முப்பது ரூவா சம்பளம்..... ஒகேவா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குவிண்டின் டொரண்டிணோ ஆபிஸ் வாசலில்....
பரிதாபமாக டாம் ஹேங்சும்,பிராட்பிட்டும்.....
டாம் ஹேங்க்ஸ்: என்னை டைரக்டர் ஒரு வருசத்துக்கு குளிக்ககூடாது...
நோ சேவிங்,நோ கட்டிங்ன்னு சொல்லிட்டாரு....
இதாவது பரவாயில்ல ...
மொத்த படத்துக்கும் ஒரே ஒரு டயலாக்தான்...
அகம்பாவம் பிடிச்ச சாமி.

பிராட்பிட்: டேய்... அது அகம்பாவம் பிடிச்ச சாமியில்லடா....
அகம் பிரம்மாஸ்மி.

டாம் ஹேங்க்ஸ்: டேய்...டேய்... நீ அந்த டயலாக்கை சூப்பரா சொல்லுற!
பேசாம என் ரோலை நீஎடுத்துக்கோ....
உன் ரோலை நான் பண்ணுறேன்...ப்ளீஸ்டா...

பிராட்பிட்: என் ரோலா...[மாட்னடா மவனே]
செம்மண் தரையில தலையை தேச்சு முடியை செம்பட்டையாக்கணும்...
டெய்லி தார்ல பல்லை விளக்கி பல்லை கருப்பாக்கணும்....
ரெண்டு கண்ணையும் ஒண்ணரைக்கண்ணா காட்ட பிராக்டிஸ் பண்ணணும்...அப்புறம்...
டேய்...டேய்..எங்க ஒடுற....இருடி....தப்பிக்க மட்டும் முடியாது.

22 comments:

 1. “ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
  ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி-இது தான் உலக காமேடி

  ReplyDelete
 2. தலைவா..என்ன சொலறதுன்னே தெரில..யோசிச்சு அப்பிறமா சொல்லுறேன்..

  ReplyDelete
 3. எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. மக்கா முருகதாஸின் வாய், கொஞ்சம் நீண்டுதான் விட்டது. 7ம் அறிவு, மரண மொக்கையாமே? உங்கள் கொள்கையை விட்டுவிட்டு, முக்கிய ஓட்டைகளைப் பற்றி எழுதலாமல்லவா? :-)

  ReplyDelete
 5. விகடன் கின்ஸி மேட்டர் படிச்சா மாதிரி இருக்கு...

  ReplyDelete
 6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!இருந்தாலும் மாப்ள இந்த பிக்காரி பசங்க தான் இன்னிக்கி தமிழ் பீல்ட வாழ வைக்கிராங்கலாமே...ஹிஹி...என்னத்த சொல்றது காலக்கொடுமை என்பதை தவிர!

  ReplyDelete
 7. முருகதாஸ் அதிகமாகப் பேசியபோதே உறுத்தியது!
  டிரெய்லர் பார்த்தபோது பயமா இருந்திச்சு!
  ஆக....அவ்வளவுதானா?

  ReplyDelete
 8. \\ஹாலிவுட்டே பரபரப்பாகி சுறுசுறுப்பாகி விட்டார்கள்.\\
  என்ன வாக்கியம் இது?

  ReplyDelete
 9. @எனக்கு பிடித்தது
  //“ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
  ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி-இது தான் உலக காமேடி//
  தொடர் வெற்றி எப்பேர்பட்ட ஜாம்பவானையும் வீழ்த்தி விடும்.முருகதாஸ் விலக்கல்ல.

  ReplyDelete
 10. @குமரன்
  //என்ன சொலறதுன்னே தெரில..யோசிச்சு அப்பிறமா சொல்லுறேன்..//
  பின்னூட்டம் போட இவ்வளவு யோசிக்கிறீங்க குமரன்...
  முருகதாஸ் கதைக்காக யோசிக்கவேயில்லை.

  நன்றி...தங்கள் வருகைக்கும்... வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 11. @கருந்தேள் கண்ணாயிரம்
  //மக்கா முருகதாஸின் வாய், கொஞ்சம் நீண்டுதான் விட்டது. 7ம் அறிவு, மரண மொக்கையாமே? உங்கள் கொள்கையை விட்டுவிட்டு, முக்கிய ஓட்டைகளைப் பற்றி எழுதலாமல்லவா? :-)//
  நண்பரே!மொத்த படமே பெரிய ஒட்டை.
  தேர்தலில் திமுகவுக்கு கொடுத்த தீர்ப்பை...
  மக்கள் ஏழாம் அறிவுக்கும் எழுதி விட்டார்கள்.

  ReplyDelete
 12. @பிலாசபி பிரபாகரன்
  //விகடன் கின்ஸி மேட்டர் படிச்சா மாதிரி இருக்கு...//
  தீபாவளி ஸ்பெசலாக நகைச்சுவையாக எழுத முயற்ச்சித்தேன்.
  அவ்வளவாக எனக்கு இந்த ஸ்டைல் வரவில்லை.

  ReplyDelete
 13. @விக்கியுலகம்
  //இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!இருந்தாலும் மாப்ள இந்த பிக்காரி பசங்க தான் இன்னிக்கி தமிழ் பீல்ட வாழ வைக்கிராங்கலாமே...ஹிஹி...என்னத்த சொல்றது காலக்கொடுமை என்பதை தவிர!//
  எனக்கு வாழ்த்து...முருகதாசுக்கு அர்ச்சனையா!
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. @ஜீ
  //முருகதாஸ் அதிகமாகப் பேசியபோதே உறுத்தியது!
  டிரெய்லர் பார்த்தபோது பயமா இருந்திச்சு!
  ஆக....அவ்வளவுதானா?//
  ஏழாம் அறிவு கதம்...கதம்.
  இந்த தோல்வி முருகதாசுக்கும் சூர்யாவுக்கும் கட்டாயம் தேவை.

  ReplyDelete
 15. @அனானிமஸ்
  >>>>ஹாலிவுட்டே பரபரப்பாகி சுறுசுறுப்பாகி விட்டார்கள்.<<<<
  //என்ன வாக்கியம் இது?//
  தமிழ் வாக்கியம்தான் அனானி நண்பரே!

  ReplyDelete
 16. >>“ஏழாம் அறிவு படத்தை பார்த்து....
  ஹாலிவுட்காரர்கள் வேண்டுமானால் காப்பியடித்துக்கொள்ளலாம் ”என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

  ஹா ஹா காமெடி


  உங்க கலாய்ப்புகள் அருமை

  ReplyDelete
 17. @சி.பி.செந்தில் குமார்
  நண்பரே! பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 18. உங்க அருமையான கற்பனை சக்தியை இந்தாளுக்காக இவ்வளவு வீணாக்கியிருக்கிறீர்களே என்று நினைத்தால் கவலையாய் இருக்குது...

  ReplyDelete
 19. கருந்தேளனின் வாசகர்களே ,சினிமாவில் நடக்கும் காப்பியடிக்கும் துரோகத்தைக்கண்டு பொருக்காமல் ,INTERNATIONAL CRIMINAL கருந்தேளனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களே. குற்றமே செய்யாமல் இருக்கும் அவதார புருசனா இந்த கருந்தேலன். இவன் திருட்டு டிவிடில் படம் பார்க்காதவனா, நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்க்காதவனா. இவன். தன்னை எவனாவது திட்டி எழுதிவிடுவான் என்று பயந்து சைபர் கிரைம் ,பாப்பா கிரைம் என்று புருடாவிட்டும் இவர் பல படங்கள் மீது கேசு போட்டு விட்டேன் என்று காமடி புருடாவுட்டுக்கொண்டும் திரியிறாண். எவன் எது சொன்னாலும் நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல் இல்லாமல்.சுயமாக சிந்திக்கவும் .தமிழக நீதிமன்றங்களில் இன்னும் விசாரிக்காத கேசுகள் ஓரு கோடிக்கு மேல். போலிஸ் ஸ்டசனில் கமிசன் வெட்டாமல் எந்த கேசையும் தொட்டுக்கூடபார்க் மாட்டார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களூக்கு இந்த கருந்தேள்ன் போன்ற காமடி பீஸ்சுக்கு பதி சோல்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிறாமல்.நாட்டின் முக்கிய பிரச்சனகளுக்கு உங்களது ஆதரவை நீட்டுங்கள். சினிமாவ உங்களுக்கு முக்கியாம். அது நல்லா இருந்தால் ஓடும் நல்லா இல்லை என்றால் ஓடாது. சினிமா என்பது ஆர்ட் அல்ல சினிமாவில் புதுசு என்று எதுவும் கிடையாது .சினிமா என்பது கிராப்ட். வெட்டி ஒட்டறரது தா.அதைப்பத்தி ஆராய்ச்சி தேவையில்லை. பொலப்ப் பாருங்க

  ReplyDelete
 20. @ஷர்மி
  //உங்க அருமையான கற்பனை சக்தியை இந்தாளுக்காக இவ்வளவு வீணாக்கியிருக்கிறீர்களே என்று நினைத்தால் கவலையாய் இருக்குது...//
  அன்புச்சகோதரியே...
  முருகதாசின் ஆணவப்பேட்டியை பரவலாக எடுத்து செல்லவே இபதிவு எழுதினேன்.
  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. எம்சிசி.கிருஷ்ணா
  உங்கள் பின்னூட்டம் மிகவும் அறுவருக்கத்தக்கதாக உள்ளது.
  தங்களது பிரச்சனைக்கு எனது நண்பர் மனநலமருத்துவர் திரு.வெள்ளைச்சாமியை அணுகவும்.தீர்வு கிடைக்கும்

  ReplyDelete
 22. வணக்கம் அண்ணே,
  முருகதாஸின் ஒரு வசனத்தை வைத்து ஒட்டு மொத்த ஹாலிவூட் பட தொகுப்பாளர்களின் மன உணர்வுகளையும் ஒன்றினைத்து செம கலக்கலா எழுதியிருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.