Jun 15, 2013

மூன்று ஓட்டங்களில் எது நிஜம் ?


நண்பர்களே...
‘ரன் லோலா ரன்’ ஆய்வை, லோலாவோடு ஓடி செய்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த உற்சாகத்தில்... இப்பணியை எளிதாக செய்து முடித்து விட்டேன்.

RUN LOLA RUN \ 1998 \ German \ Directed by TOM TYKWER \ Part - 5 [ Final ] . சிட்பீல்டு வகுத்த  ‘திரை இலக்கணத்தை’ குழி தோண்டி புதைத்து சமாதியாக்கி ஒரு பொக்கே வைத்தார் இயக்குனர் டாம் டிக்கர்.
பொக்கேயின் பெயர் ‘ரன் லோலா ரன்’. 

“ Every Second We Ripe and Ripe. 
   Every Hour by Hour We Rot and Rot ” = ஷேக்ஸ்பியர்.

அதற்குள் எதை சாதித்து விடப்போகிறோம் ?

நாம் இது வரை பார்த்தது ‘ரன் லோலா ரன்’ ஆரம்பப்பகுதி.
ஏனைய பகுதிகளை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிளைமாக்ஸ் பகுதியை மட்டும், விளக்க அனுமதியுங்கள்.
_________________________________________________________________________________

லோலாவின் முதல் ஓட்டத்தில் தந்தையிடம் பணம் கிடைக்கவில்லை.
வெறுங்கையாகத்தான் ஓடி வருகிறாள் லோலா.
மணி 12 ஆகி விட்டது.
லோலா வராததால் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க கிளம்பி விட்டான் மானி.
அவனோடு சேர்ந்து, தாமதமாக வந்து சேர்ந்த லோலாவும் கொள்ளையில் பங்கு பெறத்தொடங்குகிறாள்.

கொள்ளையடித்த பணத்தோடு தப்பிச்செல்கையில் போலிஸ் சுற்றி வளைக்கிறது.
அதில் ஒரு போலிஸ் இளைஞன்,
 ‘பதட்டத்தில்’ லோலாவை சுட்டு விடுகிறான்.
நிகழ் காலம் = லோலா சாய்கிறாள்.


பிளாஷ்பார்வேர்டு காட்சி விரிகிறது.

லோலாவும் மானியும் படுக்கையில் காதல் மொழி பேசுகிறார்கள்.

லோலா : மானி...நீ என்ன லவ் பண்றியா ?

மானி : கண்டிப்பா, நான் பண்றேன்.

லோலா : எப்படி ஷ்யூரா சொல்ற ?

மானி : ஐ டோண்ட் நோ...ஆனா பண்றேன்.

இவ்வாறாக இருவரும் காதலை மையமாக வைத்து தொடர்ந்து உரையாடுகிறார்கள்.
இறுதியாக...

லோலா : இப்ப உன் மனசு என்ன நெனக்குது ?

மானி : இதை விட யாரும் முட்டாள்தனமான கேள்வி கேட்க முடியாதுன்னு...

லோலா : என்னை நீ சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கிற.

மானி : லோலா, உனக்கு என்ன ஆச்சு ?

[ இடைவெளி விட்டு ]

என்னை விட்டு பிரிஞ்சு போகணுமா ?

லோலா : எனக்குத்தெரியாது நான் ஒரு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன்.

பிளாஷ்பார்வேர்டு  முடிவுறுகிறது.

நிகழ் காலம் = குண்டடிபட்டு விழுந்து கிடக்கும் லோலா தனக்குள் சொல்கிறாள்.
 “ ஆனா, மாட்டேன்.
உன்னை விட்டு பிரிய மாட்டேன்.
ஸ்டாப்.

இக்காட்சியின் காணொளி காண்க..._________________________________________________________________________________

முதல் நிகழ்வை மாற்றி அமைக்க விரும்புகிறாள்.
காதலனை பிரிந்து இறக்க விரும்பவில்லை லோலா.
எனவே ‘பிராபப்லிட்டியாக ’...
இரண்டாவது ஓட்டம் ஆரம்பிக்கிறது.

படிக்கட்டில் உருண்டு... அடிபட்டதால்... நொண்டியபடி சிறிது தூரம் ஓடும் நிலைக்கு ஆளாகிறாள் லோலா.
எனவே, இதன் பின்னர் மொத்த நிகழ்வுமே  ‘ஒரு நொடி’ பிந்துகிறது.
ஓட்டத்தின் இறுதியில்,
தந்தை வேலை பார்க்கும் வங்கியில் கொள்ளையடித்த பணத்துடன் வந்து சேருகிறாள் லோலா.
துப்பாக்கியுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நோக்கி நகரும் மானியை...
“ மானி”... என கூச்சலிட்டு கத்தி தடுத்து நிறுத்தி விடுகிறாள்.
லோலாவை திரும்பிப்பார்க்கிறான் மானி.
அவளை நோக்கி வரும் போது, மரணம் அவனை நோக்கி வருகிறது.
எதிர்பாராதவிதமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்து மோதுகிறது.

நிகழ் காலம் = மானி நடு ரோட்டில் சாய்கிறான்.
ரத்தம் தோய்ந்த மானியின் முகத்தை இரு கைகளாலும் ஏந்துகிறாள் லோலா.


 பிளாஷ்பார்வேர்டு விரிகிறது.

காதலர்கள் படுக்கையில் பேசுகிறார்கள்.

மானி : நான் செத்து போய்ட்டா என்ன செய்வ ?

லோலா : நான் ஒன்ன சாக விட மாட்டேன்.

மானி : சரி...நல்லது.

[ இடைவெளி விட்டு ]

எனக்கு உடம்பு சரியில்லன்னா...

லோலா : நான் ஒரு வழிய கண்டுபிடிப்பேன்.

மானி : நான் கோமால இருந்து...
டாக்டர்  ‘இன்னும் ஒரு நாள்தான்னு’ சொன்னா ?  

லோலா : நான் உன்னை கடல்ல வீசி விடுவேன்.
ஷாக் தெரபி.

இவ்வாறாக, காதலர்கள் உரையாடல் ‘ மரணத்தை’ மையமாக வைத்து அமைகிறது.
இறுதியாக...

லோலா : மானி...

மானி : என்ன ?

லோலா : நீ இன்னும் சாகல இல்லயா ?

பிளாஷ்பார்வேர்டு  முடிவுறுகிறது.

ரத்தம் தோய்ந்த மானியின் முகத்தை ஏந்திய லோலாவின் கரங்கள் 
‘ரிவர்ஸ்சில்’ விலகுகிறது.

நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மானி ‘நோ’ எனச்சொல்கிறான்.

இக்காட்சியின் காணொளி காண்க...


_________________________________________________________________________________

காதலன் இறந்து போவதை விரும்பவில்லை லோலா.
திரும்பவும் ‘நிகழ்வை’ மாற்றி அமைக்கிறாள்.

எனவே, நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மானி  ‘நோ’ எனச்சொல்லுகிறான்.

மூன்றாவது ஓட்டம் பிராபப்பிலிட்டியாக ஆரம்பிக்கிறது.

இரண்டாம் ஓட்டத்தை  துவங்கிய அதே நேரத்தில்...அதே நொடியில்... மூன்றாவது ஓட்டத்தை ஆரம்பிக்கிறாள் லோலா.
ஆனால், லோலா படிக்கட்டில் நாயைத்தாண்டி ஓடுவது...
லொகேஷன்கள் மிஸ்ஸிங்...என  நிகழ்வுகள் அனைத்தும்  லோலா
‘சில நொடிகள் முந்துவதை’ துரிதப்படுத்துகிறது.

லொக்கேஷன் மிஸ்ஸிங் = ஸ்பைரல் படிக்கட்டு ஒரே ஒரு சுற்றாக குறைக்கப்படுவது...
முதல் & இரண்டாம் ஓட்டத்தில் லோலா ஏறி ஓடும் நடைபாதை மேம்பாலம் மூன்றாம் ஓட்டத்தில் இல்லை.

தந்தையும், மேயரும்  காரில் ஏறிப்போய் விடுகின்றனர்.
லோலா தந்தையை சந்திக்கவே முடியவில்லை.
எனவே,ஒரு கிளப்பில்  ‘சூதாடி’ ...
வேண்டிய பணத்திற்கு மேலாக சம்பாதிக்கிறாள் லோலா.

சைக்கிளை விலைக்கு வாங்கி,
உலகம் பிறந்தது எனக்காக...
   ஓடும் நதிகளும் எனக்காக...”
பாடிக்கொண்டே ஓட்டி வருகிறான்  ‘குப்பை பொறுக்கி’.


அப்போது வசமாக மானியிடம் சிக்குகிறான்.
துப்பாக்கி முனையில் அவனிடமிருந்து பணத்தை கைப்பற்றுகிறான் மானி.
இருந்தாலும் மானியிடமிருந்து ‘கை மாத்தாக’ துப்பாக்கியை
கெஞ்சிப்பெற்றுக்கொண்டு...
“ மாமா...டவுசர் கயண்டுச்சே...
   ஆமா...டவுசர் அவுந்துச்சே...” 
எனப்பாடிக்கொண்டு  போகிறான் ‘குப்பைப்பொறுக்கி’.

ஒப்பந்தப்படி சரியான நேரத்திற்கு,
மாபியா கும்பலிடம் பணத்தை ஓப்படைத்து விட்டு வருகிறான் மானி.
முன்னரே வந்து காத்திருக்கும் லோலாவை சந்திக்கிறான் மானி.

மானி : ஹே...

என்னாச்சு ஒனக்கு ? 
நீ ஓடியா வந்த ? 

கவலப்படாதே...எல்லாம் சரியாயிடுச்சு...

கமான்.

இடைவெளி விட்டு...இடைவெளி விட்டு... மானி மட்டுமே பேசுகிறான்.


இறுதியில் காதலர்கள் ஜோடியாக கை கோர்த்துக்கொண்டு நடக்கிறார்கள்.
லோலாவின் கையில் இருக்கும் பையை பார்த்து கேட்கிறான் மானி .

மானி : “ இந்தப்பையில் என்ன இருக்கு ? ” 

இப்போது அவர்கள் கையில் காசு, பணம், துட்டு, Money, Money
நெறைய இருக்கிறது.
லோலாவின் இதழில் சிறு புன்னகை பரவ...
இந்த இமைஜை ‘ப்ரீஸ்’ செய்து படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர்.
சுபம்.

இக்காட்சியின் காணொளி காண்க...


_________________________________________________________________________________

[ 1 ] மூன்றாவது ஓட்ட முடிவில் அனைத்துமே சுபமாக இருக்கிறது.
பார்வையாளர்களுக்கும் இந்த முடிவு இதமானதாக இருக்கும்.
பின்னணி இசையை மூன்றாவது ஓட்டத்தில்,
இந்திய கிளாசிகல் இசையில் அமைத்து இருப்பது செவிக்கு சுகமாக இருக்கிறது.
How The World is...என்ற விளைவை விட,
How The World can be... என்ற முடிவு சுகமானதாக இருக்கும்.
எல்லா இலக்கியங்களும் இப்படித்தான் இயங்குகிறது. 

[ 2 ] மூன்று ஓட்டங்களிலும்  'டெஸ்டினியோடு' [ Destiny ] போராடி 
‘காதல்’ மட்டுமே இயங்குகிறது....வெல்கிறது.

இப்படத்தில் காதலர்களை சேர்த்து வைக்க,
‘பிராபப்பிலிட்டி தியரியும்’ [ Probability Theory ] இயங்குகிறது.

காதல் ‘டெஸ்டினியை’ மாற்றி விடுகிறது.

[ 3 ] மூன்று ஓட்டங்களில் எது நிஜம்? என்ற கேள்வியை பார்வையாளர்கள் எழுப்பினால்...
எதுவுமே நிஜமில்லை என்பதே... நிஜம்.

[ 4 ] இயக்குனர்...பார்வையாளரிடம் நேரிடையாக தனது கருத்தாக்கத்தை
முன் வைக்கிறார்.
காரெக்டர் வழியாக பேசவில்லை.
எந்த காரெக்டருடனும்... பார்வையாளர்கள் ‘ஐடெண்டிபை’ ஆக முடியாது.
 'Emotional Distance' இருக்கிறது. 

சூது கவ்வும்’ படத்தில்  'Parody' வழியாக... 
' Emotional Distance ' போக்கு இருக்கிறது.

[ 5 ] ‘ ரன் லோலா ரன் ’  போஸ்ட் மாடர்ன் பிலிம்.
ஆனால், முற்போக்கு மார்க்சிய சித்தாந்தத்துக்கு எதிராக இயங்குகிற  படம்.
ஏனென்றால் இப்படம்,
சமூக இயலில் இருக்கிற மர்ம முடிச்சுகளை 
அறிவதற்கான ‘தர்க்கவாதத்தை’ [ Logic ] மொண்ணையாக்கி விடுகிறது.
‘மனித ஊக்கம்’ [ Human Volition ] என்பதே இல்லாமல் போய் விடுகிறது.

இந்த ஆபத்தை தமிழில் ‘சூது கவ்வும்’ படமும் விளைவித்திருக்கிறது.

உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக இருக்கும் இப்படம், 
நல்ல படம்தான்...
ஆனால் இதில் இருக்கும் கருத்தாக்கம் ???

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.      

10 comments:

 1. படம் பார்த்த திருப்தி... நிறைவான முடிவு...

  இவ்வளவு நுணுக்கமான விளக்கத்திற்கு, அலசலுக்கு, பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல ... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொல்ல வேண்டும் இருவருக்கு...

   ஒன்று உங்களுக்கு...மற்றொன்று இறைவனுக்கு.

   Delete
 2. Replies
  1. எல்லாப்புகழும் டாம் டிக்கருக்கே.

   Delete
 3. ஒரு சாயல்லே "sliding doors" தெரியுதே??

  ReplyDelete
  Replies
  1. மாட்டிக்கிட்டிங்களா...
   நீங்க இந்தத்தொடரை தொடர்ந்து படிக்கவில்லை என்பது வெளிப்பட்டு விட்டது.

   இதற்கு தக்க தண்டனையை...நீங்களே சொல்லுங்கள்.

   Delete
  2. அய்யய்யோ, நானே மாட்டிகிட்டேனா?

   தண்டனை- இன்னைக்கே மற்ற பதிவுகளையும் படிச்சுடறேன் ;-)

   Delete
 4. கூட "Butterfly Effect" உம்..

  ReplyDelete
  Replies
  1. நான் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை.

   Delete
  2. நிச்சயம் பாருங்கள்..இந்த வகை திரைக்கதை உத்தியில் நான் பார்த்த முதல் படம்.. கேயாஸ் தியரியை மையமாக வைத்து வந்த படம். ஆஷ்டன் குச்சருக்கு பெயர் வாங்கித்தந்த (?!!) படம்..

   Delete

Note: Only a member of this blog may post a comment.