Jan 22, 2014

கிம்-கி-துக் டொக்காகி விட்டாரா ?


நண்பர்களே...
கேரள திரைப்படவிழாவிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
மற்ற விழாக்களில் காணக்கிடைக்காத சில அரிய உலக சினிமாக்கள் கே.தி.விழாவில் மட்டுமே காணக்கிடைக்கும்.
அவற்றில் ஒன்றுதான் ‘மொபியஸ்’
கிம்-கி-துக்கின் லேட்டஸ்ட் திரைப்படம் இதுதான்.
தென் கொரியாவிலேயே தடை செய்யப்பட்ட படம்.

Moebius | 2013 | South Korea | Directed by : Kim-ki-duk.



கிம்-கி-துக்தான் கேரளாவின் ‘சூப்பர் ஸ்டார்’.
'God's Own Country'  என்றிருப்பதை, 'Kim-ki-duk Own Country '  என மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது.
தற்போதைய நிலவரப்படி,
அங்கிங்கெனாதபடி கேரளாவெங்கும் நிறைந்து இருப்பது கிம்-கி-துக்.



கேரள திரைப்பட நிறைவு விழாவிற்கு வருகை தந்த கிம்-கி-துக்கை கொண்டாடி விட்டது கேரளா.
பத்திரிக்கை, டிவி எல்லாம் கிம்-கி-துக் மயம்.

கிம்-கி-துக் படத்தை பார்த்தே ஆக வேண்டிய  ‘கட்டாய ஜூரம்’ பரவி விட்டது.
இரண்டு மணி நேரம் க்யூவில் நின்று,
ரிசர்வ் பண்ணி விட்டேன்.
இருந்தும், காலை 11.00 மணி படத்துக்கு,
10.30க்கே ஆஜராகி விட்டேன்.
ரிசர்வேஷனாவது...மண்ணாவது...கி.கி.து ரசிகர்கள் மொத்த தியேட்டரை கைப்பற்றி விட்டார்கள்.
கடைசியில் ஒரு படிக்கட்டில் சிறிய இடம்,
‘இட ஒதுக்கீட்டில்’ கிடைத்தது.

அப்படியே ரஜினி பட ஆரவாரம்.
பாலபிஷேகம், கற்பூர ஆரத்தி மட்டும்தான் இல்லை.
ஷாட் பை ஷாட் கை தட்டினார்கள்.
ரஜினி படத்தில் கூட இடைவேளையில் இத்தகைய ஆரவாரம் ஒய்ந்து விடும்
கி.கி.து ரசிகர்கள் இறுதி வரை ஒயவில்லை.
வணிக சினிமா ரசிகர்களை மிஞ்சி விட்டார்கள் கி.கி.து ரசிகர்கள்.

[இத்தகைய வரவேற்பை  ‘இரானிய புரட்சி இயக்குனர்’ ஜாபர் பனாஹிக்கும் வழங்கினார்கள் கேரள ரசிகர்கள் ]

 ‘கலாச்சார காவலர்கள்’ யாரேனும் இப்பதிவை படித்துக்கொண்டு இருந்தால்
இந்த இடத்தில் விலகுவது உத்தமம்.

ஒரு பெண், தன் கணவன் ‘பரஸ்த்ரீயுடன்’ உறவு கொள்வதை கண்ணால் பார்த்து விடுகிறாள்.
அவளது மகனும் இக்காட்சியை இலவசமாக பார்த்து விடுகிறான்.
நீதி கேட்டு நெடும் பயணம் போகவில்லை கொரியன் கண்ணகி.
கத்தியுடன் கணவன் படுக்கை அறைக்குள் போய் காய்கறியை நறுக்குவது போல் ஆண்குறியை அறுக்க முனைகிறாள்.
கணவன் போராடி  ‘காப்பாற்றிக்கொள்கிறான்’.


வெறி தணியாமல் மகன் படுக்கை அறைக்குள் எட்டி பார்க்கறாள்.
ஆழ்ந்த நித்திரை.
கர...கர...கர..கர...
துண்டாக்கி விடுகிறாள்.
மகன் அலறல் கேட்டு தகப்பன் ஓடி வருகிறான்.
அடிக்கிறான்.
இன்னும் வெறியாகி ‘கடித்து மென்னு முழுங்கி விடுகிறாள்’.


இன்னும் இருக்கிறீர்களா!
உங்கள் மன தைரியத்தை பாராட்டி...
தகப்பன் ஆண் குறியை தரவா?
அறுக்க வேண்டாம்...அவனே அறுத்து தருகிறான்.
 ‘அப்படியே சாப்பிடலாம்’.

படம் முழுக்க ஏகப்பட்ட ஆண்குறிகள் அறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.
அத்தனையும் ஆண் குறி ‘குறியீடு’...விளக்கணுமா?

ஆண்குறி இல்லாவிட்டாலும் ‘உச்ச கட்ட இன்பம்’ அடையும் வழியை ‘இணையம்’ கற்றுக்கொடுக்கிறது.
அதில் ஒரு வழி...
சிக்கிமுக்கி  கல்லை எடுத்து உடம்பில் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து தேய்க்க வேண்டும்.
வலியும், ரத்தமும் இணைந்து பிறக்கும்.
உச்சக்கட்டமாக ‘பேரின்பமும்’...பேரின்ப எல்லையில் விந்துவும் வருகிறது.
அல்லாத்தையும் ஒண்ணு விடாம...விலாவாரியா காட்றார் கிம்-கி-துக்.

யாருக்காவது சந்தேகமோ...விருப்பமோ இருந்தால் ‘பாத்ரூமில் பரிட்சித்து பார்க்கவும்’.

இன்னொரு வழி...
அதற்கு கத்தி வேண்டும்.
கத்தியை எடுத்து...
வேண்டாம் நீங்களே படம் பார்த்து  ‘முயற்சித்துப்பாருங்கள்’.

வன்முறையின் அளவை காட்சிக்கு காட்சி அதிகரித்துக்கொண்டே போகிறார் கிம்-கி-துக்.
ஏன்?
கலாச்சார சீரழிவு குடும்ப உறவுகளை குலைத்து விடும்.
காலம் காலமாய் வளர்த்தெடுக்கப்பட்ட தாய்,தகப்பன், மகன்,மகள் என்ற உறவுகள் அழிக்கப்படும்....ஒழிக்கப்படும் என் எச்சரிக்கிறார் கிம் கி துக்.
எச்சரிப்பதோடு நின்று விடவில்லை...
தீர்வையும் சொல்லி இருக்கிறார்  கிம் கி துக்.



கிம்- கி-துக்கின் முந்தைய படைப்பான ‘பியாட்டாவின்’ நீட்சியாகவே இப்படமும் அமைந்தது...
சற்றல்ல...ரொம்பவே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 ‘கிம்-கி-துக் டொக்காகி விட்டாரா?’ என்ற கேள்வி எழுகிறது.



வழக்கமாக கிம்-கி-துக்கின் படங்களில் வசனம் ‘மன்மோகன் சிங்’ எழுதியது போலவே இருக்கும்.
இந்தப்படத்தில்,
சாதனைகளே இல்லாத காங்கிரஸ் ஆட்சி போல...
வசனங்களே இல்லை.

படம் முடிந்ததும்,
அவசரம் அவசரமாக டாய்லெட்டுக்கு ஓடினேன்.
அப்பாடி...இருக்கு!

‘கிம்-கி-துக்கின் ரசிகர்களுக்கு’  ‘செல்ல எச்சரிக்கை’!
“பத்திரமா பாத்துக்கங்க”