Feb 22, 2011

Love In Time Of Cholera-காமத்தில் தோய்த்த காதல் கவிதை

காதல் என்பது எப்போ வருவேன்...எப்படி வருவேன் என்று ரஜினி மாதிரி சொல்லிகிட்டு இருக்காது.வரும்..புயல் மாதிரி தாக்கும்.காதல் சுனாமியில் சிக்கி சீரழிந்தவனின் வரலாறுதான் லவ் இன் டைம் ஆப் காலரா.

நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் படைப்பில் உருவான காவியம் இது.மேஜிகல் ரியலிசம் பாணியில் தனது படைப்புகளை உருவாக்கி புகழ் பெற்ற இவர் கொலம்பியா நாட்டின் மைந்தன்.


இக்காவியத்தை திரையில் ஒவியமாக்கியவர் ஹாலிவுட்டில் புகழ் பெற்ற இயக்குனர் மைக் நியுவல்.

முக்கோண காதல் காவியங்களில் மாஸ்டர்பீஸ் காஸாபிளாங்கா.இப்படத்தையும் இந்த வரிசையில் கொண்டாடலாம்.

முதுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு டாக்டரின் மரணத்தில் துவங்குகிறது படம்.அவரது காதல் மனைவி தனது வாரிசுகளோடு தனது கணவரது இறுதி சடங்குகளை நிறைவாக செய்து விட்டு உறவுகளை அனுப்பிவிட்டு தனிமையில் இனிமை காண தனது இல்லம் வருகையில் காத்திருக்கிறார் ஒருவர்.தோற்றத்தில் முதுமை...குரலில் இளமை.கண்களில் காதல் நிரம்பி வழிய, கண்ணே...உன்னைக்கண்டதும் தோன்றிய நம் காதலின் வயசு..

51 ஆண்டுகள்....

9 மாதம்....

4 நாட்கள்....

கோபத்தில் கொந்தளிக்கிறாள்....என் வாழ்நாள் முழுக்க என் கண்ணெதிரில் வராதே..பிளாரெண்டிநோ....

இங்கிருந்து பிளாஷ் பேக்கில் பயணிக்கிறது படம்.

பெர்மினா தாஸா...புலம் பெயர்ந்து வந்த புயல்.வந்த அன்றே பிளாரெண்டிநோவை தாக்கிவிடுகிறாள்.காதல் நோய் வயப்பட்டு பிளாரெண்டிநோ தவிப்பதில் நாமும் பங்கெடுப்பதை தவிற்க்கமுடியாது.வழக்கம்போல் காதலுக்கு வில்லன் பெர்மினாவின் பணக்கார தந்தை.ஆனால் பிளாரெண்டிநோவின் தாயார் மகனின் காதலுக்கு உரம் போடுகிறார்.காதலுக்கு ஆதரவான இவரது வார்த்தைகள் அனைத்தும் திருக்குறளின் காமத்துப்பால்.இந்த வேடத்தை மிகச்சிறப்பாக செய்து நம்மை கவர்பவர் செண்ட்ரல் ஸ்டேசனில் ஏமாற்றுக்கார பா[ர்]ட்டியாக நடித்து நம்மை கொள்ளை கொண்ட Fernanda Montenegro.


முக்கோணத்தில் ஒரு கோணமாக வந்து விடுகிறார் டாக்டர்.

காதல் ரேஸில் ஜெயித்து பெர்மினா கரம் பிடிக்கிறார்.இருந்தும் காத்திருக்கிறார் பிளாரெண்டிநோ

51 வருடம்

9 மாதம்

4 நாட்கள்

காதல் நோய்க்கு மருந்தாக பிளாரெண்டிநோ உடல் உறவு கொண்ட பெண்களின் எண்ணிக்கை 622.இதுதான் மேஜிகல் ரியலிசம்.

காத்திருந்த காதல் கூடியதா????????

விடை படத்தில்.

இப்படத்தை இது வரை கவுதம் மேனன் பார்க்காதது இப்படம் செய்த புண்ணியம்.

இப்படத்திற்க்கு அற்ப்புதமான விமர்சனம் நண்பர் கீதப்பிரியன் எழுதியுள்ளார்.அதையும் தவறாமல் படிக்கவும்.
http://geethappriyan.blogspot.com/2010/03/200718love-in-time-of-cholera.html

14 comments:

 1. ரொம்ப நல்ல படம் நண்பரே
  அண்டோனினாவாக வந்த ஜேவியர் பர்டம் கலக்கியிருப்பார்.ஹேராம் கமல்ஹாசன் போல கெட்டப்புகளை சடார் சடாரென மாற்றுவார்.
  http://geethappriyan.blogspot.com/2010/03/200718love-in-time-of-cholera.html
  நானும் இதை சிலாகித்து எழுதியிருக்கிறேன்

  ReplyDelete
 2. //இப்படத்தை இது வரை கவுதம் மேனன் பார்க்காதது இப்படம் செய்த புண்ணியம். //
  ஹாஹாஹா செம

  ReplyDelete
 3. //அது பிளாரெண்டிநோ தான் நான் ஆண்டனீனோ என எழுதிவிட்டேன்.மன்னிக்க

  ReplyDelete
 4. //இப்படத்தை இது வரை கவுதம் மேனன் பார்க்காதது இப்படம் செய்த புண்ணியம். //

  ஹாஹா,எல்லோரும் கொலை வெறில இருக்கீங்க போல இருக்கு. :)
  நல்ல வேளை படம் இன்னும் பார்கல.
  முக்கோணக் காதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானதாகவே இருக்கும்.Casablanca பார்த்திருக்கிறேன் என்றாலும்,அது என்னை அவ்வளவாக கவரவில்லை.என்னைப் பொறுத்தவரை அது overrated.முக்கோணக் காதல் கதைகள்ல என்னை பொறுத்தவரை கொரியா படமான The Classic நிச்சயம் ஒரு முக்கிய இடம் பெறும்.முடிஞ்சா பாருங்க.உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

  ReplyDelete
 5. //இப்படத்தை இது வரை கவுதம் மேனன் பார்க்காதது இப்படம் செய்த புண்ணியம்.// அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டீர்களோ?


  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  ReplyDelete
 6. நண்பரே!ஜேவியர் பார்டம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வயதிற்கேற்ப உடல் மொழியில் அசத்தியிருப்பார்.நாயகன் படத்தில் கமலும் இத்தகைய பாணியை அருமையாக செய்திருப்பார்.நீங்கள் இப்படத்திற்க்கு எழுதியது தெரியாது.தெரிந்திருந்தால் திருப்பதிக்கே வந்து லட்டு விற்றிருக்க மாட்டேன்.

  ReplyDelete
 7. நண்பரே இலுமி!கட்டாயம் ந.நி.நாய்கள் பாருங்கள்.திரில்லர் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்க்கான படம் அது.எப்படி எடுக்க வேண்டும் என்பதற்க்கான இலக்கணத்துடன் வந்த படம் ஹிட்ச்ஹாக்கின் சைக்கோ.இதை அப்படியே தழுவி பாலுமகேந்திரா மூடுபனி என்ற அற்ப்புதத்தை படைத்தார்.காஸாபிளாங்கா பற்றி பதிவு எழுதுகிறேன்.ஆனால் உங்களுக்கு பிடிக்காமல் போனது ஆய்வுக்குறிய ஆச்சரியம்.

  ReplyDelete
 8. நன்றி கிங் விஸ்வா.கவுதம் மேனன் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.அவரது விண்ணைத்தாண்டி வருவாயா நான் மிகவும் ரசித்த படம்.வாரணம் ஆயிரம் படத்தில் தந்தைக்கு ஆரத்தி காட்டிவிட்டு இப்படத்தில் மலத்தை அபிசேகம் செய்திருக்கிறார் திருவாளர் மேனன்.

  ReplyDelete
 9. //நண்பரே!ஜேவியர் பார்டம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வயதிற்கேற்ப உடல் மொழியில் அசத்தியிருப்பார்.நாயகன் படத்தில் கமலும் இத்தகைய பாணியை அருமையாக செய்திருப்பார்.நீங்கள் இப்படத்திற்க்கு எழுதியது தெரியாது.தெரிந்திருந்தால் திருப்பதிக்கே வந்து லட்டு விற்றிருக்க மாட்டேன். //
  தலைவ்ரே ரொம்ப ஓவர்.
  நல்ல படத்தை எத்தனை பேர் பார்ட்துவிட்டு எழுதினாலுமே தகும்.

  ReplyDelete
 10. //வாரணம் ஆயிரம் படத்தில் தந்தைக்கு ஆரத்தி காட்டிவிட்டு இப்படத்தில் மலத்தை அபிசேகம் செய்திருக்கிறார் திருவாளர் மேனன். //
  இதே தான் நான் நினைத்தேன்,நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

  ReplyDelete
 11. நினைத்துப்பாருங்கள்.
  எதாவது ஒரு மகன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ இதை கேட்டாலோ அல்லது பயந்தாலுமே கூட ஆபத்துதான்.ஒரு தகப்பனால் மகளை தான் ஒரு வயதுக்கு மேல் கொஞ்ச முடியாது,மகன் தோளிலாவது கைபோட்டுக்கொள்ளலாம்.சேரன்,ராஜ்கிரன் போல ஒரே சைக்கிளில் இருவர் பெடல் போட்டு ஓட்டலாம்.இது போல ஒரு நாரத்தனமான ஒரு உறவை காட்சிப்படுத்தியதின் மூலம் இன்றைய தேதியில் அப்பா மகன் உறவு பலப்படுமா?இப்போதே அநேகம் மகன்கள் அப்பனை டேய் அப்பா[விவேக் ,தனுஷ் கருணாஸ் புண்ணியம்]ஓத்தா அப்பா என்கினான்கள்,இதைப்பார்த்தால் டேய் உங்கப்பா என்னை மேட்டர்செய்யறாமாதிரி பாக்கறாண்டா என்பார்கள்.

  ReplyDelete
 12. நம்மவர்கள் இப்படத்திற்க்கு சரியான மரண தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.உங்கள் அனுமதியில்லாமல் உரிமையோடு நீங்கள் எழுதிய விமர்சனத்திற்க்கு லிங்க் கொடுத்துள்ளேன்,நன்றி கீதப்பிரியன்.

  ReplyDelete
 13. ///குடும்பத்தோடு வராதீர்கள் என்று ஆண்மையுடன் விளம்பரம் செய்து விட்டு இந்தப்படம் வந்திருந்தால் அந்த ஒரு விசயத்துக்காக பாரட்டியிருக்கலாம்.இந்தப்படத்தை புனிதப்படுத்தினால் கற்க்காலத்துக்கு போய்விடுவோம்.உங்கள் விமர்சனத்திறமையை பூக்கடைக்கு பயன்படுத்துங்கள்.சாக்கடைக்கு வேண்டாம்///

  ஒரு உலக சினிமா ரசிகனாக இருந்து கொண்டு நீங்கள் இதைப் பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. ஆங்கிலப்படத்தில் இப்படியொரு காட்சி வந்தால் ரசிப்பீர்கள், தமிழில் வந்தால்??? என்ன ஒரு முரண்???

  ReplyDelete
 14. hello friend..

  i am too a cinephile in coimbatore
  and used to buy DVDs in hollywood dvd shoppe..

  your blog is very nice..contains meticulous introductory notes to important movies...

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.