Jul 25, 2011

GodFather- 3 [1990] கொண்டாட்டத்தின் முடிவு மரணம்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் வெற்றிகரமாக திரையிட்டு விட்டோம்.
நிகழ்ச்சியை ஹிந்து பத்திரிக்கை மிக விரிவாக விமர்சனமும்...செய்தியும் வெளியிட்டது.
அப்படியிருந்தும் கூட்டம் முப்பது பேரை தாண்டவில்லை.
கூட்டம் குறைவாக இருந்தாலும் நிறைவான கூட்டம்.
ஒவ்வொருவரும் காட்பாதரை பத்து தடவைக்கு மேல் படித்தவர்கள்...பார்த்தவர்கள்.

காட்பாதர் மூன்று பாகத்தையும் எடுத்த விதம் பற்றி கொப்பல்லோ,மரியோ புஸோ,அல்பசினோ.தயாரிப்பாளர்,எடிட்டர் என சகல ஜாம்பவான்களின் பேட்டி அடங்கிய ஆவணப்படமும் திரையிட்டோம்.
படத்தின் சுவையை இது மேலும் கூட்டியது.

 “காட்பாதரை மூன்று நாளாக திரையிடுகிறீர்கள்.....
தமிழகத்தின் காட்பாதர் கலைஞர் வேறு கோவையில் பொதுக்குழு கூட்டுகிறார்......
இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?” என நண்பர் கேட்டார்.
இது தற்ச்செயலாக நிகழ்ந்தது.அவ்வளவே...
ஆனால் காட்பாதர் மூன்று பாகத்தையும் திரையிட சரியான இடம்
திமுக பொதுக்குழுதான்.

 காட்பாதர் மூன்றாம் பாகத்தில் கொப்பல்லோ வாட்டிகனை வாட்டியிருக்கிறார்
பொதுவாக மூன்று பாகத்திலுமே மதத்தை காயடித்திருப்பார்.
இதில் நேரடியாக வாட்டிகன் ஊழலை முதன்மை படுத்தியிருக்கிறார்.
தீய சக்திகள்தான் வாட்டிகனையும் ஆளமுடியும் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

கெட்டவன் நல்லவனாக வாழ விரும்புவதை நிழல் உலகம் என்றுமே விரும்பாது.
'திருந்துபவனை தீர்த்து விடு' இதுவே அவர்களது தாரக மந்திரம்.

நிழல் உலக நரியாக இப்பாகத்தில் எலிவாலா என்ற பழைய பெருச்சாளியை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரம் முதல் இரண்டு பாகத்தில் வராதது.
இக்கதாபாத்திரத்தின் தன்மையை எலிவாலாவை போட்டதிலேயே ஆடியன்சுக்கு விளக்கி விடுகிறார் கொப்பல்லோ.
ஏனென்றால் எலிவாலாவின் இமேஜ் அப்படி.
குட் பேட் அக்ளியில்..... அக்ளியாக தோன்றி தூள் கிளப்பியவறாயிற்றே!!!!!!!.

ஒரு மனிதன் செய்த தவறுகளுக்கு தன் வாழ்நாளிலேயே தண்டனை  பெறுவான் என்ற நீதி மூன்றாம் பாகத்தில்தான் சொல்லப்படுகிறது.
எனவே மூன்றாம் பாகம் மற்ற இரண்டைப்போல வெற்றி பெறவில்லை அநீதீதான் வெற்றி பெறும் என்பது இன்றைய பாக்ஸ் ஆபிஸ் சூத்திரம்.

படத்தின் இறுதிக்காட்சி வசனமே இல்லாத கவிதை.
இது எனக்கு ஏற்ப்படுத்திய அதிர்வுகள் எனக்கே எனக்கானவை .[இதை பதிவிட மாட்டேன் என்று கொப்பல்லோ மீது சத்தியம் செய்திருக்கிறேன்]
இக்காட்சி தனிப்பட்ட வரம்.....
மூன்று பாகத்தையும் பார்த்தவர்களுக்கு கொப்பல்லோ வழங்கும் ஸ்பெசல் கிப்ட்.

இப்படத்தில் மூன்று பேர் மிக அருமையாக நடித்து உள்ளனர்.
அவர்கள் யாரென்றால்....
ஒன்று அல்பசினோ....

இரண்டாவது அல்பசினோ....


மூன்றாவது அல்பசினோ.


கீழே உள்ள புகைப்படத்தில் வரும் காட்சி மணிரத்தினத்தின் ஒரு படத்தில் இடம் பெறுகிறது.அந்தப்படம் எது?

42 comments:

  1. நீங்க திரையிட்ட அனுபவங்களை குறித்து தனியாக பதிவிட வேண்டும்.

    எனக்கு முதலிரண்டு பாகம் அளவிற்கு மூன்றாவது பிடிக்கவில்லை.....சட்ட்று அசுவாரசியமாக இருந்ததாகவே எனக்குப்பட்டது

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மாப்பிள நல்ல விசயத்துக்கு கூட்டம் வராதையா..  இந்த நிகழ்சியால்  பொருலாதார பாதிப்படைந்தீர்களா..!?

    இப்ப எங்கள் சமூகம் TV நாடகங்களுக்கு பின்னால்தான் அலைகிறார்கள்.. அன்மையில் எங்கள் குடும்பத்தை ஒரு நன்பர் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.. வந்தவர்களுடன் அளவளாவுவோம்..!? என்ற அடிப்படை பண்பு கூட இல்லாமல் குடும்பமே  நாடகம் பார்க்கிறது.. 
    அட ஆண்கள் கூட நாடகத்தில மூழ்கிக்கிடக்கிறார்கள்.. நல்ல சினிமாவை ரசிக்கத்தெரியாத இவர்களை நம்பி பணத்தை இறைக்காதீர்கள்...

    மாப்பிள கலைஞர் திட்டமிட்டே பொதுக்குழுவை கோவையில் திட்டமிட்டு கூட்டி சதி செய்துவிட்டார் இது கண்டிக்க வேண்டிய ஒரு விடயமே என்பதில் சந்தேகமேயில்லை..!?
    காட்டான் குழ போட்டான்...

    பின்குறிப்பு:-காட்டான் எப்படி குழ போடுவான்னு எனது பிளாக்கிள் யூரீப்பில் வீடியோ போட்டுள்ளேன் நேரமிருந்தால் பாருங்கோ...

    ReplyDelete
  3. நண்பா கலக்கலா விளக்கி இருக்கீங்க....நானும் மூன்றும் பார்த்தேன் என்ன சொல்ல தெரியவில்லை!

    ReplyDelete
  4. நிகழ்ச்சி நல்லபடியாக நடந்ததில் சந்தோசம்..முப்பது பேர் என்பது குறைவு தான்.

    --செங்கோவி

    ReplyDelete
  5. That 'MONEY' Ratnam Film is NAYAGAN! Kamal copied AL Pacion's action very well!!!

    ReplyDelete
  6. the best scene in godfather 3 is .. when micheal corleone leaves his mafia empire to sonny's son ... al will show the pain n agony in his eyes when his sista drags him outta tha door !! best scene ...

    ReplyDelete
  7. @கொழந்த
    //நீங்க திரையிட்ட அனுபவங்களை குறித்து தனியாக பதிவிட வேண்டும்.

    எனக்கு முதலிரண்டு பாகம் அளவிற்கு மூன்றாவது பிடிக்கவில்லை.....சட்ட்று அசுவாரசியமாக இருந்ததாகவே எனக்குப்பட்டது//

    பதிவிடுகிற அளவுக்கு சுவாரஸ்யமான அனுபவம் எதுவும் கிக்கவில் நண்பரே!

    மூன்றாவது பாகத்தின் சுவாரஸ்யம் குறைந்ததற்கு காரணம் அல்பசினோ காரக்டர்தான்.
    முதலிரண்டு பாகத்திலும் அந்த காரெக்டர் பவர் செண்டராக உருவெடுப்பதும்...பவரை கைப்பற்றியபின் தக்க வைத்துக்கொள்ள செய்யும் தகிடுதத்தங்கள் ரசிகனை சுவாரஸ்யப்படுத்தியது.
    மூன்றாம் பாகத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடுவதும்,
    உடலாலும்...மனதாலும் தளர்ந்து உருக்குலைந்து போவது அல்பசினோ மட்டுமல்ல...ரசிகனையும் அந்த உணர்வில் பங்கெடுக்கச்செய்கிறார் கொப்பல்லோ.
    தெரிந்தே ரசிகனுக்கு அசுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளார் கொப்பல்லோ.

    ReplyDelete
  8. @காட்டான்
    //வாழ்த்துக்கள் மாப்பிள நல்ல விசயத்துக்கு கூட்டம் வராதையா.. இந்த நிகழ்சியால் பொருலாதார பாதிப்படைந்தீர்களா..!?//

    வணக்கம் நண்பா...நான் எதிர்பார்த்தது நூறு பேரைத்தான்.
    செலவு அதிகம் ஆகவில்லை .
    மண்டபம் நண்பர் இலவசமாககொடுத்தார்.
    எல்சிடி புரொஜக்டர் நண்பர் ஒருவர் மிக மிக குறைந்த வாடகைக்கு கொடுத்தார்.
    குறைந்த செலவில் மிக அதிகமான புகழை அடைந்தேன்..அதுதான் உண்மை.

    ReplyDelete
  9. காட்டான்

    //இப்ப எங்கள் சமூகம் TV நாடகங்களுக்கு பின்னால்தான் அலைகிறார்கள்.. அன்மையில் எங்கள் குடும்பத்தை ஒரு நன்பர் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.. வந்தவர்களுடன் அளவளாவுவோம்..!? என்ற அடிப்படை பண்பு கூட இல்லாமல் குடும்பமே நாடகம் பார்க்கிறது..
    அட ஆண்கள் கூட நாடகத்தில மூழ்கிக்கிடக்கிறார்கள்.. நல்ல சினிமாவை ரசிக்கத்தெரியாத இவர்களை நம்பி பணத்தை இறைக்காதீர்கள்...//

    டிவி சீரியலின் ஆதிக்கத்தை எதிர்த்து சினிமாவே போராடி தோற்று வருகிறது.நாம் தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  10. @காட்டான்

    //மாப்பிள கலைஞர் திட்டமிட்டே பொதுக்குழுவை கோவையில் திட்டமிட்டு கூட்டி சதி செய்துவிட்டார் இது கண்டிக்க வேண்டிய ஒரு விடயமே என்பதில் சந்தேகமேயில்லை..!?//

    கூட்டம் வராததற்க்கு கலைஞர் காரணம் அல்ல...பொதுவாகவே பிலிம் சொசைட்டியில் படம் போட்டால் கூட்டம் வருவதில்லை.எங்களுக்கு நூறு பேர் வந்தாலே ‘வெள்ளம்’.

    ReplyDelete
  11. @விக்கியுலகம்

    நண்பா... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. @செங்கோவி

    //நிகழ்ச்சி நல்லபடியாக நடந்ததில் சந்தோசம்..முப்பது பேர் என்பது குறைவு தான்.//

    நண்பரே!
    தங்களின் ஆறுதல் மருந்தாக இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  13. @தமிழன்
    //That 'MONEY' Ratnam Film is NAYAGAN! Kamal copied AL Pacion's action very well!!!//

    இந்தப்படம் நாயகன் வெளியான பிறகு வெளிவந்தது.சரியான விடை சாருக்கான் நடித்த உயிரே.
    மனிஷாகொய்ராலா அழும்போது சத்தம் வராது.வாயை 'ஒ'வென்று பிளந்து கதற முயற்ச்சிப்பாள்.
    இந்தக்காட்சி அல்பசினோ... மகள் சுடப்பட்டு இறந்தவுடன் கதறுகின்ற காட்சியின் ஜெராக்ஸ்.

    ReplyDelete
  14. @பெல்பாட்டம் முதலாளி

    //the best scene in godfather 3 is .. when micheal corleone leaves his mafia empire to sonny's son ... al will show the pain n agony in his eyes when his sista drags him outta tha door !! best scene ...//

    முதலாளி...தாங்கள் ரசித்த காட்சி உலகமே ரசித்த காட்சி.
    தங்கள் வருகைக்கும் கருத்தை பகிர்ந்ததற்க்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. ஆகஸ்ட் மாதம் 5 கோவை வருகிறேன் , முதல் வேலை உங்களை சந்திப்பதே.. நல்ல டி விடி யாக எடுத்து வையுங்கள்

    ReplyDelete
  16. காட்பாதர் மூன்றாம் பாகம் பார்த்த அந்த முப்பது பேரில் நானும் ஒருவன். தங்களை அடையாளம் கண்டு கொண்டேன். படம் முடிய நேரமாகி விட்டதால்,நீங்கள் புறப்படும்போது தொந்தரவு செய்ய விரும்பாததால் பேச முடியவில்லை.விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  17. விக்கி7/26/2011 11:58 AM

    Apu trilogy Remastered print உங்ககிட்ட இருக்குன்னு தி ஹிந்துவில் போட்டிருந்தனர்.உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.அதை வாங்க வேண்டும்.

    ReplyDelete
  18. @சி.பி.செந்தில்குமார்
    ஸாரி சிபி...
    ஆகஸ்ட் 2ம்தேதியிலிருந்து 6ம்தேதி வரை சென்னையில் இருப்பேன்.நாம் வெகு விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  19. @ராஜூ

    //காட்பாதர் மூன்றாம் பாகம் பார்த்த அந்த முப்பது பேரில் நானும் ஒருவன். தங்களை அடையாளம் கண்டு கொண்டேன். படம் முடிய நேரமாகி விட்டதால்,நீங்கள் புறப்படும்போது தொந்தரவு செய்ய விரும்பாததால் பேச முடியவில்லை.விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.//

    உங்களை சந்திக்க நானும் ஆவலாயிருக்கிறேன்

    ReplyDelete
  20. @விக்கி
    நண்பரே என்னுடைய மின்னஞ்சல் முகவரி...
    sppbhaskaran@gmail.com

    ReplyDelete
  21. அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போய் பெரிய திரையில் ஒரு காவியத்தை பார்க்க தவறிவிட்டேன். எனக்கு மூன்றாவது பாகமும் பிடித்த ஒன்றே. மற்ற இரு படங்களையும் விட இதில் அல் பாசினோ கலக்கி இருப்பார். அதுவும் அவருக்கு முதல் முறை அட்டாக் வரும் போது ஒரு நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நமக்கே பதற்றம் வந்துவிடும்.

    ஏன் ஆஸ்கார் அவருக்கு தரவில்லை என எழுதுவேன் என சொன்னீர்கள். அதையும் பதிவிடுங்கள் அண்ணா...

    ReplyDelete
  22. @கனகு

    //அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போய் பெரிய திரையில் ஒரு காவியத்தை பார்க்க தவறிவிட்டேன். எனக்கு மூன்றாவது பாகமும் பிடித்த ஒன்றே. மற்ற இரு படங்களையும் விட இதில் அல் பாசினோ கலக்கி இருப்பார். அதுவும் அவருக்கு முதல் முறை அட்டாக் வரும் போது ஒரு நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நமக்கே பதற்றம் வந்துவிடும்.//

    மூன்றாவது பாகத்தில் முழுக்க அல்பசினோ ராஜ்ஜியம்தான்.நவரசங்களும் வெளிப்படும் காட்சிகள் எத்தனை...எத்தனை!

    ReplyDelete
  23. @கனகு
    //ஏன் ஆஸ்கார் அவருக்கு தரவில்லை என எழுதுவேன் என சொன்னீர்கள். அதையும் பதிவிடுங்கள் அண்ணா...//

    காட்பாதர் இரண்டாம் பாகத்திலேயே அவருக்கு தர ஆஸ்கார் கமிட்டியிலேயே எதிர்ப்பு பலமாக இருந்தது.
    அவரது நடிப்புக்காக...எதிர்ப்பு எழவில்லை.
    கதாபாத்திரத்தின் தன்மை கருதி அல்பசினோவுக்கு கொடுக்கவேண்டாம் என முடிவு செய்தார்களாம்.
    காட்பாதரின் வெற்றி அமெரிக்காவை நடுங்க வைத்து விட்டது.
    அல்பசினோவுக்கு அவார்டு கொடுத்தால் காட்பாதர் காரெக்டரை அப்ரூவ் செய்த்தாகி விடும் என அஞ்சியிருக்கிறார்கள்.

    மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
    ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம்.

    ReplyDelete
  24. வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு உங்கள் அனுபவங்கள் !

    ReplyDelete
  25. அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் பழைய இடுகையினைப் படித்து விட்டு வந்தேன், நான் ரொம்ப லேட் ஆக வந்திட்டேன், மன்னிக்கவும். வெற்றிகராமக ஒரு படத்தினைத் திரையிட்டிருக்கிறீங்க.
    படம் திரையிட்ட விதம் பற்றியும், படம் பற்றியும் ஒப்பீட்டு விமர்சனத்தைச் சமகால அரசியலுடன் இணைத்து நையாண்டி செய்து வழங்கியிருந்தமை இப் பதிவிற்கு மேலும் சிறப்பளிக்கிறது.

    தங்களின் அடுத்த முயற்சிக்கு நிச்சயம் பேராதரவு கிடைக்க வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  26. @ஹேமா

    //வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு
    உங்கள் அனுபவங்கள் !//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. @நிரூபன்

    //அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் பழைய இடுகையினைப் படித்து விட்டு வந்தேன், நான் ரொம்ப லேட் ஆக வந்திட்டேன், மன்னிக்கவும். வெற்றிகராமக ஒரு படத்தினைத் திரையிட்டிருக்கிறீங்க.
    படம் திரையிட்ட விதம் பற்றியும், படம் பற்றியும் ஒப்பீட்டு விமர்சனத்தைச் சமகால அரசியலுடன் இணைத்து நையாண்டி செய்து வழங்கியிருந்தமை இப் பதிவிற்கு மேலும் சிறப்பளிக்கிறது.

    தங்களின் அடுத்த முயற்சிக்கு நிச்சயம் பேராதரவு கிடைக்க வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.//

    சகோதரா...
    வருகைக்கும்...பாராட்டுக்கும்...நல்லாதரவுக்கும் நன்றி...

    ReplyDelete
  28. சந்திரன்7/27/2011 7:37 PM

    காட்பாதரையும் ரசிக்காத சில ஜென்மங்கள் இங்கே உண்டு என்பதே சில மொக்கை வலைபூக்கள் மூலம் அறிந்து கொண்டேன்(அதுக வேட்டைக்காரன் பாக்குற க்ரூப்புன்னு சி பி ஐ தகவல்கள் தெரிவிக்கிறது!!)இந்த மூன்று படங்களும் போர் என சொல்பவர்கள் ரசனை கெட்டவர்கள்

    ReplyDelete
  29. என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங்களே..எப்போன்னு தேதி சொல்லவே இல்லையே ...மிஸ் பண்ணிட்டேனே...

    ReplyDelete
  30. @கோவை நேரம்

    //என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங்களே..எப்போன்னு தேதி சொல்லவே இல்லையே ...மிஸ் பண்ணிட்டேனே...//

    அடடா!நான் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப மறந்து விட்டேன்.ஸாரி.அடுத்த தடவை மிஸ் பண்ணமாட்டேன்.

    ReplyDelete
  31. @விடிவெள்ளி
    வருகைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  32. @World cinema Fan: //காட்பாதர் இரண்டாம் பாகத்திலேயே அவருக்கு தர ஆஸ்கார் கமிட்டியிலேயே எதிர்ப்பு பலமாக இருந்தது.
    அவரது நடிப்புக்காக...எதிர்ப்பு எழவில்லை.
    கதாபாத்திரத்தின் தன்மை கருதி அல்பசினோவுக்கு கொடுக்கவேண்டாம் என முடிவு செய்தார்களாம்.
    காட்பாதரின் வெற்றி அமெரிக்காவை நடுங்க வைத்து விட்டது.
    அல்பசினோவுக்கு அவார்டு கொடுத்தால் காட்பாதர் காரெக்டரை அப்ரூவ் செய்த்தாகி விடும் என அஞ்சியிருக்கிறார்கள்.

    மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
    ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம்.
    //

    Thats why IMDB rated First part as 2 in Top 250 :(

    ReplyDelete
  33. ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..


    பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  34. /*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
    ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம். */

    :( :( வருத்தமளிக்க கூடியது :(

    ReplyDelete
  35. @gnans
    //Thats why IMDB rated First part as 2 in
    Top 250//

    IMDB ரேட்டிங்...
    உலகமெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள்... வாக்களிப்பதால் கிடைக்கும் அந்தஸ்து.

    ReplyDelete
  36. @இந்திரா
    //ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..


    பகிர்வுக்கு நன்றி நண்பரே..//

    அத்தி பூத்த வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  37. @கனகு
    /*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
    ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம். */

    //:( :( வருத்தமளிக்க கூடியது :(//

    உலகெங்கிலும் ரசிகர்கள் அடைந்த வருத்தம்தான்...
    அல்பசினோ என்ற மகா கலைஞனுக்கு....
    கிடைத்த மிகப்பெரிய விருது.

    ReplyDelete
  38. but top250 movies case is different-"For this top 250, only votes from regular voters are considered.". We do not know who are regular users.There are possibilities to change the positions..

    ReplyDelete
  39. நான் இன்னும் பதிவை முழுதாக படிக்கவில்லை.படம் பார்த்தப்பிறகு Reply செய்கிறேன்.நன்றி

    ReplyDelete
  40. உடலாலும்...மனதாலும் தளர்ந்து உருக்குலைந்து போவது அல்பசினோ மட்டுமல்ல...ரசிகனையும் அந்த உணர்வில் பங்கெடுக்கச்செய்கிறார் கொப்பல்லோ.
    தெரிந்தே ரசிகனுக்கு அசுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளார் கொப்பல்லோ.

    I agree with you

    ReplyDelete
  41. See the The GodFather all parts here:

    1. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-1972.html

    2. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-part-ii-1974.html

    3. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-part-iii-1990.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.